Monday 19 April 2010

ஒரு சமூக வழக்காறாகியிருக்கின்ற குறுந் தகவல் பரிமாற்றம் - ஆய்வு

தே.தேவானந்த்,M.A

உலகில் 31% மேற்பட்ட மக்கள் தொகையினர் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று செல்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் தொகையினர் உலகளாவிய ரீதியில் செல்பேசிகளை உபயோகிக் கிறார்கள்.

கைத்தொலைபேசிகள் வெறுமனே அழைப்புக்களுக்கும் உரையாடல் களுக்கும் மட்டுமல்லாமல் குறுந்தகவல்களை தட்டச்சு செய்து பிறிதொரு செல்பேசிக்கு அனுப்புவதற்கும் பயன்படுகிறது. இதைவிட வானொலி, வீடியோ மற்றும் போட்டோ பதிவுகளுடனும் குரல் பதிவு வசதிகளுடனும் இணைய இணைப்பு வசதிகளுடனும் (3G) மூன்றாவது தலைமுறை செல்பேசிகள் வந்துவிட்டன.

குறுந்தகவல் அனுப்புதல் SMS என்று அழைக்கப்படுகிறது. இதன் விரிவாக்கம் Short message services . தற்போது இந்த வசதி, அழைப்புக்களுக்கு நிகராக ஒருவருடன் தொடர்பு கொள்வதற்குப் பயன்படுகிறது.

இன்று இளையோர் மத்தியில் மிகப் பிரபல்யமான பழக்கமாக அல்லது வழக்காறாக இந்தக் குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் மாறிவருகிறது. குரல்வழித் தொடர்பைவிட குறுந்தகவல் தொடர்பு அதிக விருப்புக் குரியதாக வளர்ந்து வருவதை ஆய்வுகள் பல சுட்டிக்காட்டுகின்றன.


தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக விரைவாக வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இந்தியா திகழ்கின்றது. இந்நாட்டில் மக்கள் தொகை மிக விரைவாக வளர்கின்றமை தொலைத்தொடர்பு வலையமைப்பு வளர்ச் சிக்கு உதவி புரிகின்றது.



இந்தியாவில் செல்பேசி வளர்ச்சியை 2000 ஆண்டில் இருந்து இனங் காண முடியும். 2008 தரவுகளின்படி 245 மில்லியன் செல்பேசிகள் பாவனையில் உள்ளன. ஆண்டுக்கு 72 மில்லியன் செல்பேசிகள் புதிதாக இந்தத் தொகையுடன் சேர்ந்து கொள்கின்றன.



செல்பேசி என்ற பெயர் பிராந்திய ரீதியாக வௌ;வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகின்றது. ‘Cell phone’, ‘Mobile phone’, ‘Hand phone’ போன்ற பெயர்கள் பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்காவில் ‘ஊநடட phழநெ’ என்ற பெயர் வழக்கில் இருப்பதையும் இந்தியாவில் கைபேசி (Hand phone) என்ற பெயர் பொது வழக்கில் இருப்பதையும் காண முடிகிறது.



உயர் தொழில்நுட்ப வசதியுடைய செல்பேசிகள் குரல் ஒலியை மட்டும் பரிமாறிக் கொள்பவை அல்ல. அவை குறுந்தகவல்கள், வீடியோ, இசை, போட்டோ போன் றவற்றையும் பரிமாறிக்கொள்ளும் ஆற்றலுள்ளவை யாக உள்ளன. மைக், கேமெரா, இன்டர்நெட் வசதி கள் இதற்குத் துணைபுரிகின்றன. சில நாடுகளில் குறிப்பாகத் தாய்வான், கொரியா நாடுகளில் செல் பேசிகள் 100 விழுக்காட்டிற்கும் மேல் மக்கள் மத்தி யில் பிரபல்யமாகி இருக்கின்றன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்பேசிகளை வைத்திருப்பது அங்கு ஒன்றும் புதிதல்ல.



Cameron (2005) என்பவர் ஆஸ்திரேலிய பல் கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வு 100 விழுக்காடு செல்பேசிகளைக் கொண்டுள்ளதை உறுதிசெல்கின்றது.



செல்பேசி எப்போதும் எம்மோடு இருக்கின்ற, எமது வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு பொரு ளாக இன்று மாறிவிட்டது.



வீட்டில் இருந்து வெளியேறும் போது செல்பேசி இல்லாமல் புறப்பட முடியாது. வீட்டுச் சாவி மற்றும் காசுப் பை என்பவற்றோடு செல்பேசியும் மறக்காமல் எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய பொரு ளாக மாறிவிட்டது.



மனிதன் இன்று செல்பேசியை நம்பியே தனது ஞாபகங்களைச் சரிபார்த்துக் கொள்கிறார்கள். முக் கியமான தினங்களை நினைவூட்டிக் கொள்கிறான். ஒருவருடனான சந்திப்பையும் செல்பேசியே நினை வூட்டுகிறது. தொடர்பு விவரங்களுக்கும் செல் பேசியை நம்பியே இப்போது மனிதன் வாழ்கிறான்.



மனிதன் மெதுவாக செல்பேசி தொழில்நுட்பத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்கிறான். உணர்வு ரீதி யான, தனிப்பட்ட மற்றும் தொழில்சார் தகவல்களை செல்பேசியை நம்பியே பரிமாறிக் கொள்கிறான். பாது காப்பு தகவல்கள்கூட செல்பேசியை நம்பியே காணப் படுகின்றன. ஏ.டி.எம். அட்டையின் கடவுச்சொல்லை செல்பேசியில் பதிவு செய்து வைத்தே நினைவூட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு பல்வேறு விடங்களுக் கும் செல்பேசியை நம்பி வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இனங்காண முடியும்.



இன்று செல்பேசிகளுக்கு ‘சிக்னல்’ கிடைக்காத பகுதியை கருப்புப் புள்ளி (Black spots) என்று அடை யாளப்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது ‘dead zones’ - இறந்த பகுதியென்று குறிப்பிடுகிறார்கள்.



Levinson(2004) என்ற ஆய்வாளர் இப்படிக் குறிப் பிடுகின்றார், “சில தகவல் ஊடகங்களுக்குச் செல்பேசிப் பாவனையாளர்கள் அவசியம் தேவை யாக உள்ளனர்”. செல்பேசி, மக்கள் மத்தியில் தொடர்பு அற்ற நிலைமையை இல்லாது செய்வதா கவும் பாவனையாளரை வீட்டில் இருந்தும் அலுவல கத்தில் இருந்தும் இலகுவாக வெளியில் கொண்டு வந்து பரந்த உலகில் கால் பதிக்க விடுவதாகவும் அவர் மேலும் சொல்கிறார்.



இன்னுமொன்றையும் Levison குறிப்பிடுகின்றார், நடந்துகொண்டே இன்னொருவருடன் பேசுகின்ற வாய்ப்பை செல்பேசி வழங்குகின்றது, நடந்து கொண்டே பேசுவதென்பது மனிதர்களுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.



கையில் எடுத்துச் செல்லக் கூடிய மடிக் கணினி, இசை கேள் கருவி, வானொலி, கேமெரா, விளை யாட்டு



போன்ற அனைத்து வசதிகளையும் செல்பேசி தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

2006இல் செல்பேசி உற்பத்தியாளர்களை நோக்கியா (Nokia) டிஜிட்டல் கேமெரா, MP3 இசைக் கருவிகளைக் கொண்ட செல்பேசிகளை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய வழங்குநராகத் திகழ்ந்திருக் கின்றது.



வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற நாடுகளில் இணையச் சேவையை செல்பேசிகளில் பெறும் வாய்புள்ளது. தனிப்பட்ட கணினிகளில் இந்தச் சேவையைப் பெறுவதுடன் ஒப்பிடும்போது செல்பேசி யில் இணைய இணைப்புப் பெறுவது அதிகரித்து வருகின்றது.



குறுந்தகவல் சேவை (SMS)



மிகக் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வழியாக குறுந்தகவல் சேவை காணப்படுகின்றது. குறுந் தகவல் சேவை 160 எழுத்துக்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பும் வசதி கொண்டது. வெறு மொழிகளில் இந்த எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. பல நாடுகளில் குறுந்தகவல் அனுப்புதல் மிகக் குறைந்த செலவுக்குரியதாகவே காணப்படுகின்றது.



குறுந்தகவல்களை ஒரே தடவையில் அல்லது ஒரே நேரத்தில் பல செல்பேசிகளுக்கு அனுப்ப முடியும். அதேவேளை இணையத்திலும் பதிவு செய்து கொள்ள முடியும்.



இன்று முக்கியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக செல்பேசி காணப்படுகின்றது. CNN, BBC போன்ற செய்தி நிறுவனங்கள் தங்கள் சந்தாதாரருக்கு முக்கிய செய்திகளை குறுந்தகவல் களாக அனுப்பி வைக்கின்றன. இது பல ஊடகங் களால் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுகின் றது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற் றும் சமூக நிறுவனங்களும் தமது தகவல்களைக் குறுந்தகவல்களாகப் பரிமாறிக் கொள்கின்றன.



குறுந்தகவல்கள் ஊடாக உண்மையான{ நம்பகத் தன்மையுள்ள தகவல்கள் பரிமாறப்படுவது போன்றே நம்பகத் தன்மையற்ற தகவல்கள் மற்றும் வதந்தி கள் பரிமாறப்படுவதும் அதிகரித்து வருவதைக் காணமுடியும். கேலி அல்லது கிண்டல் செய்கின்ற தகவல்கள் மகிழ்வுக்குரிய தகவல்கள் ஒரு செல் பேசியில் இருந்து இன்னொரு செல்பேசிக்கு அனுப் பப்படுவது அதிகரித்து வருவதையும் அவதானிக் கலாம். ஒரே தகவல் பலருக்குப் பரிமாறப்படுவது முக்கியமான குறுந்தகவல் பரிமாற்றமாகக் காணப் படுகின்றது.



இளையோரும் செல்பேசியும்



செல்பேசியை உபயோகப்படுத்துவது ஒரு சமூகப் பழக்கவழக்கமாகக் கருதப்படுகின்ற நிலைமை இன்று இளையோர் மத்தியில் அதிகரித்து வருகின் றது. பொது இடங்களில், சனக்கூட்டமான இடங் களில், நண்பர்கள் மத்தியில் செல்பேசியைக் காண் பிப்பது ஒரு உயர் சமூக அந்தஸ்து நிலையாக இளை யோரால் கருதப்படுகின்றது.



இளையோர் குறுந்தகவல்களைத் தமது பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதைவிட அதிகமாகத் தமது நண்பர்களுடனேயே பகிர்ந்து கொள்கிறார்கள். நேருக்கு நேரான உரையாடல், செல்பேசி உரையா டல் என்பவற்றுக்கு இணையான இடத்தை இன்று இந்த குறுந்தகவல் பரிமாற்றம் பிடித்துக் கொண் டுள்ளது.



செல்பேசி உபயோகம் இன்று புதிய பழக்கவழக்கங் களையும் விழுமியங்களையும் உருவாக்கி வளர்த்து வருகின்றது.



சமூக வலையில் தம்மை இணைத்துக் கொள்வதற் கான ஒரு கருவியாக செல்பேசியை உபயோகிக் கிறார்கள். செல்பேசி இளம் பெண்களுக்குப் பாது காப்பான ஒரு சூழலை வழங்குவதாக Carroll (2002) தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.



மேலும், செல்பேசி பெற்றோருக்கும் பிள்ளைகளுக் கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிப்பதாக Mathews (2004) தனது ஆய்வில் தெரிவித்திருக் கிறார். Ben-teev (2005) தனது ஆய்வில் செல்பேசி மற்றும் குறுந்தகவல் பரிமாற்றம் என்பன மனோர தியப் பண்புமிக்க தொடர்பாடல்களை ஊக்குவிப்ப தாகக் குறிப்பிடுகிறார்கள்.



காதலர்கள் தங்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் செல்பேசியை ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உரையாடல் மற்றும் குறுந்தகவல்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.



செல்பேசி இடவேறுபாடுகளை இல்லாது செய்து, எப்போதம் எவ்வேளையிலும் உரையாடுவதற்கும் குறுந்தகவல்கள் பரிமாற்றத்திற்கும் வழிவிடுகிறது. இதனால் உறவுகளைப் பேணுவதற்கான வாய்ப்பு கள் அதிகரிக்கின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் இது உதவுகிறது.



இளைஞர்கள் அதிகளவு பணத்தை செல்பேசிக்குப் பயன்படுத்த நேர்வதால் பண நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள். இதனைவிட மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஓட்டும்போது செல்பேசி களைப் பயன்படுத்துகின்ற பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றது. இது அபாயகரமான எதிர்மறையான விளைவுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். Telstra (2004), Thomson (2005) ஆகியோரின் ஆய்வில் 75 விழுக்காடு இளம்வயது ஓட்டுநர்கள் தாம் வாகனம் ஓட்டும்போது செல்பேசியை உபயோகிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.



தென்னாசிய கலாசாரம் வாய்மொழித் தொடர் பாடலை அதிகளவில் கொண்டுள்ளது. நேருக்கு நேரான

உரையாடலை விரும்புகின்ற பழக்கத்தில் கொண்ட ஒரு தொடர்பாடல் பாரம்பரியத்தைக் கொண்டது. இந்தப் பாரம்பரியம் செல்பேசி வருகை யுடன் மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது. இந்தியா போன்ற வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் இளையோர் அதிகளவில் செல்பேசி உபயோகிப்பாளர்களாக காணப்படுகிறார்கள்.



செல்பேசி வைத்திருப்போர் எண்ணிக்கை இந்தியா வில் அதிகரித்து வருகின்றது. தற்போது, தமது தனிமையைப் போக்குவதற்காக பொது இடங் களிலும் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளிலும் பயணிக்கும் போது தமக்கு ஒரு துணையாக செல் பேசியைக் கருதிக் கொள்கிறார்கள். தனிமையைப் போக்குவதற்கு அருகில் உள்ளவருடன் உரையாடு வது என்ற நிலைமாறி செல்பேசியில் பாடல்கேட்டல், விளையாட்டுக்கள் எதையாவது விளையாடுதல் அல்லது குறுந்தகவல்கைள அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்ற நிலைமை ஆசியக் கலாசாரத்தில் அதிகரித்து வருகின்றது எனலாம்.



இந்த அடிப்படையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் அமைந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணவர்கள் மத்தியில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. குறிப் பாக செல்பேசிக@டாகக் குறுந்தகவல் அனுப்பும் பழக்கம் எவ்வாறு ஒரு சமூகப் பழக்கவழக்கமாகக் காணப்படுகின்றது என்பதை இந்த ஆய்வு ஆராய்கிறது.



ஆய்வு முறையியல்



ஒரு சமூக வழக்காகியிருக்கின்ற குறுந்தகவல் பரிமாற்றம் என்ற தலைப்பிலான இவ்வாய்வு, பண்பியல் ஆய்வு முறையூடாக மேற்கொள்ளப்பட ;டிருக்கின்றது.



இதன் முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்படுவது, இளைஞர் மத்தியில் குறுந்தகவல் பரிமாற்றம் ஏன் அதிகரித்திருக்கின்றது, எதற்காக குறுந்தகவலை அவர்கள் விரும்புகிறார்கள், இதனால் ஏற்படுகின்ற பயன்கள் என்ன, எந்த விட யங்கள் குறுந்தகவல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்து கின்றன போன்றனவாகும்.



பண்பியல் முறையிலான பகுப்பாய்வு எண்ணியல் பகுப்பாய்வு முறையில் இருந்து வேறுபட்டது. பண்பியல் முறை எப்போதம் ஏன்? என்ற வினா வுக்கு விடைகாண முற்படுகின்றது. திட்டவட்டமாக வரையறுக்கப்படாத தகவல்கள், நேர்காணல்கள், மின்அஞ்சல்கள், மதிப்பீட்டுப் படிவங்கள், படங்கள், வீடியோ போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்து வதை இந்த ஆய்வுமுறை உள்ளடக்கி உள்ளது. இது இலக்கங்களையோ தரவுகளையோ நம்பியி ருப்பதில்லை. எண்ணியல் ஆய்வு முறையிலேயே இவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.



பண்பியல் ஆய்வு மக்களின் பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், விருப்பங்கள், அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றையும் தனது ஆய்வின் போது சேர்த்துக் கொள்ளும்.



இலக்குக் குழு கலந்துரையாடல்



ஒரே வகையான அனுபவங்கள் மற்றும் பின்புலங் களுடன் உள்ளவர்களை ஒரு குறிப்பிட்ட தலைப் பின் கீழ் உரையாடுவதற்காக ஒன்றிணைத்தவை இலக்குக் குழுக் கலந்துரையாடல் எனக் கருத முடியும். இந்த இலக்குக் குழு ஆண், பெண் பிரதிநிதித்துவத்தையும் வௌ;வேறு வயதுக் குழுவினரையும் உள்ளடக்கிய தனித்துவமான குழுவாக அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

இலக்குக் குழு கலந்துரையாடலினால் ஏற்படக்கூடிய அனுகூலமாகப் பின்வருவனவற்றைக் கருதிக் கொள்ள முடியும்.



1. பல்வேறு வகையான கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாகப் பெற்றுக் கொள்ள முடியும்.



2. ஒரு விடயம் தொடர்பான உள்@ர் நிலைப்பட்ட பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றது.



3. தரவுகள் தொடர்பான அர்த்தப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.



இலக்குக் குழுக் கலந்துரையாடலில் செவிமடுத்தல், ஆழ்மன நினைவுகளைத் தூண்டி உரையாடச் செய்தல் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டுதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டுதல் போன்றன நடைபெறும்.



இதற்கு, குழு அங்கத்தவர்கள் தமக்கு வசதியான ஒரு பொதுத் தொடர்பாடல் மொழியைக் கண்டு கொள்ள வேண்டும். தங்களது தாய்மொழி, அல்லது உள்@ர் மொழியைப் பயன்படுத்துவது பயனுள்ள தாக அமையும். தலைப்புக்கு ஏற்ற பொருத்தமான குழுவைத் தெரிவு செய்தல் இலக்குக் குழுக் கலந் துரையாடல் வெற்றி பெற உதவும்.



இந்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழத்தின் தொடர்பியல் துறை சார்ந்த 22 இளைஞர்கள் 21 - 31 வயதுக்கு இடைப்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று குழுக்களாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஒரு குழுவில் எட்டு அங்கத்தவர் களும் மற்றொரு குழுவில் ஆறு அங்கத்தவர்களும் காணப்பட்டனர்.



தொடர்பாடலுக்கான மொழியாகத் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது. இது உணர்வுகளையும் தகவல் களையும் வெளிப்படுத்த குழு அங்கத்தவர்களுக்கு வசதியாக இருந்தது.

கலந்துரையாடல் மூன்று பிரதான தலைப்புக்களில் ஒழுங்குபடுத்தப்பட்டது.



1. செல்பேசி உபயோகம்



2. குறுந்தகவல் பயன்பாடு



3. குறுந்தகவல் பயன்பாட்டினால் ஏற்பட்ட அனுபவங்கள்



ஒவ்வொரு தலைப்புக்களின் கீழும் ஏலவே திட்ட மிடப்பட்ட கேள்விகளில் இருந்து கலந்துரையாடல் ஆரம்பமாகி பின் புத்தாக்கப் படிமுறை ஊடாக வளர்ந்து சென்றது. கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.



மாணவர்களின் செல்பேசி உபயோகம்



சென்னை போன்ற மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரங்களில் செல்பேசி முக்கியமான தொடர் பாடல் சாதனமாக விளங்குகிறது. இளைஞர்கள் மத்தியில் ஆண், பெண் வேறுபாடின்றி செல்பேசிப் பாவனை அதிகரித்து வருவது மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.



செல்பேசி மாணவர்கள் தம் சக தோழர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உதவுவதோடு, சமூக வலை யமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. மாணவிகள் தாம் பயணம் செய்யும் போதும் வீட்டில் இருந்து தொலை தூரத்தில் இருக் கும் போதும் மற்றும் அவசரகால நிலைமைகளிலும் பெற்றோருடன் தொடர்பு கொள்வதற்கு செல்பேசி உதவுவதாகக் குறிப்பிட்டனர்.



செல்பேசி வைத் திருப்பது தமக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவதா கவும் குறிப்பிட்டனர்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆண்கள் தாம் பெற்றோருடன் தொடர்பு கொள்வதற்காகவே செல் பேசியை வாங்கியதாகவும் ஆனால், பெற்றோருடன் தொடர்புகொள்ள செல்பேசியைப் பயன்படுத்து வதில்லை என்றும் குறிப்பிட்டார்கள். இவர்கள் அதிகமாகத் தமது பாலிய நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே செல்பேசிகளைப் பயன்படுத்து கிறார்கள். மாதாந்தம் 100 - 150 ரூபா வரையில் இதற்காகச் செலவிடுகிறார்கள்.



ஆய்வில் பங்கு கொண்ட அனைவரும் செல்பேசி களைத் தாம் இசைப்பாடல்களைக் கேட்பதற்காகவே அதிகம் பயன்படுத்துவதாகவும் அதற்கடுத்து குறுந் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்கள். வீடியோ, மற்றும் ஆடியோ பதிவு களுக்கு செல்பேசிகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிது என்றும் குறிப்பிட்டார்கள்.



செல்பேசி மிக இலகுவாக எந்தவொரு இடத்தி லிருந்தும் தொடர்புகொள்ள உதவுவதால் பல்கலைக் கழக செயற்பாடுகள் தொடர்பாக உடனுக்குடன் தொடர்புகொள்ள உதவுவதாகக் குறிப்பிட்டார்கள்.

அதிநவீன செல்பேசியைக் கையில் வைத்திருத்தல் ர்நயனிhழநெ அணிந்து இசைப்பாடல் கேட்டல் என் பன பல்கலைக்கழத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகவும் பழக்கமாகவும் கருதப்படுகின்றது. இது தமது அந்தஸ்து நிலையை அதிகரிப்பதாகவும் மாணவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்.



ஆய்வில் பங்குகொண்ட மாணவர்கள் முற்பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளும் செல்பேசி இணைப் புக்களை வைத்துள்ளனர். யுசைஉநடஇ யுசைவநடஇ ஏழனயகழநெ ஆகிய செல்பேசி சேவைகளை மாணவர்கள் பயன் படுத்துகிறார்கள். முற்பணம் (Pசநியனை) செலுத்திய சேவைகளில் குறைந்த செலவு அழைப்புக்களுக் காக ஊழளவ உரவவநச என்ற சலுகையை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சலுகைச் சேவை யைப் பயன்படுத்துவதால் மாணவர்களால் நாளொன் றுக்கு 750 குறுந்தகவல்களை இலவசமாகப் பயன் படுத்த முடிகிறது.



பல்கலைக்கழக மாணவர்கள் குறுந்தகவல் சேவையை பல்வேறு தேவைகளுக்காகப் பயன் படுத்துகிறார்கள். தகவல் பரிமாற்றத்திற்கு, நண்பர் கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பாடுவதற்கு, உதவி கோருவதற்கு, தனிமையைப் போக்குவதற்கு அல்லது பொழுதைப் போக்கிக் கொள்வதற்கு மற்றும் மகிழ்விப்புக்கு என்று பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில மாணவர்கள் இலவ சமாக வழங்கப்படுகின்ற குறுந்தகவல் சேவையைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே குறுந்தக வல்களை அனுப்புகிறார்கள்.



விரிவுரைகள் சலிப்பூட்டுகின்ற போது குறுந்தகவல் அனுப்பும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், கருத்தரங்குகள், கூட்டங்களுக்கு விரிவுரையாளர் களால் கட்டாயப்படுத்தி அனுப்பப்படுகின்ற போது ஆர்வமில்லாத கருத்தரங்குகள், கூட்டங்களில் தமக்கு எப்போதும் ஆறுதல் தருவதாக இருப்பது குறுந்தகவல் பரிமாற்றாம் தான் என்றும் மாணவர் கள் குறிப்பிட்டார்கள்.

பேரூந்து மற்றும் தொரூந்தில் பயணிக்கும் போது தனிமையைப் போக்குவதற்கு நண்பர்களுடன் குறுந்தகவல் சேவையூடாகத் தொடர்பு கொண்டு தனிமையைப் போக்கிக் கொள்வதாகவும் குறிப்பிடப் பட்டது.



பல்கலைக்கழக மாணவர் மத்தியில் குறுந்தகவல் பரிவர்த்தனை ஒரு வகையான களிப்பூட்டல் நடவடிக் கையாகவே காணப்படுகிறது. ஆய்வில் கலந்து கொண்ட இரண்டு மாணவர்கள் தாம் நாளாந்தம் 200 - 250 வரையான குறுந்தகவல்களை அனுப்பு கின்றனர் எனக் குறிப்பிட்டார்கள். இவர்கள் தாம் இலவசமாகத் தரப்படுகின்ற குறுந்தகவல்களைப் பயன்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்டார்கள். இதே வேளை இலவச குறுந்தகவல் அனுப்பும் சேவை பற்றி அறிந்திருக்காமலும் இரண்டு மாணவர்கள் இருந்தார்கள்.



பெரியவர்களின் பொன்மொழிகள், அறிவுரைகள் மற்றும் மகிழ்வளிப்புச் செய்திகள், கேலி அல்லது கிண்டல் செய்யும் குறுந்தகவல்கள் மாணவர்கள் மத்தியில் உலா வருகின்றன. இவ்வாறானதொரு செய்தியை ஒருவர் பெற்றுக் கொண்டால் அது அவரது விருப்புக்குரியதாக இருந்தால் அதனை தனது செல்பேசியில் சேமித்து வைப்பதோடு தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்.



மாணவர்கள் குறுந்தகவல் அனுப்புவதைத் தமது ஒரு கட்டாயமான பழக்கமாகக் கொண்டு வந்தி ருக்கிறார்கள். இதற்கு அடிமையாகிறீர்களா என்று கேட்டபோது, உடனடியாக இல்லையென்று குறிப் பிட்டார்கள். ‘அடிமையாதல்’ என்பதைப் பெரிய கருத்து நிலையில் நிறுத்திப் பார்க்கிறார்கள். தாம் குறுந்தகவல்களை அனுப்பும் பழக்கத்திற்கு அடிமை யாகிறோம் என்பதை மறுதலிக்கிறார்கள். குறுந் தகவல் சேவையை அதிகம் பயன்படுத்துபவர் களாகக் காதலர்கள் காணப்படுகிறார்கள். இவர்கள் செல்பேசி உரையாடலையும் குறுந்தகவல் பரிவர்த் தனையையும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.



ஆய்வில் பங்குபற்றிய ஒரு மாணவன் தனது காதலை குறுந்தகவல் சேவையூடாகவே தெரிவித் தான் எனக் குறிப்பிட்டிருந்தான். காதலியைத் தொலைபேசியில் அழைக்கும் போது அவர் உடனடி யாகப் பதில் தராவிட்டால் ‘ஏழiஉந அநளளயபந’ அனுப்பத் தான் பிரியப்படுவதாகவும் குறிப்பிட்டான்.

குறுந்தகவல் வாய் மொழி உரையாடல் மூலம் தெரிவிக்க முடியாமல் அல்லது தடையாக உள்ள விடயங்களைத் தெரிவிப்பதற்கு உதவுவதாகவும் குறிப்பிடப்பட்டது. எப்போதும் ‘ளுழசசல அநளளயபந’ அனுப்பு வதற்கும் குறுந்தகவல்கள் துணைபுரிகின்றன.



குறிப்பாக நேரடியான உரையாடல் தோற்றுப் போகின்ற போது அந்த இடைவெளியை நிரப்புவ தற்குக் குறுந்தகவல் சேவை பெரிதும் துணை புரி கின்றது. மனித்துக் கொள்ளுங்கள் என்று உரை யாடல் மூலம் சொல்வதற்குச் சங்கடமாக இருக்கின்ற அதேவேளை, குறுந்தகவல்களாக ‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது இலகுவாக உள்ள தாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.



அதேவேளை, குறுந்தகவல் நேரடி உரையாடலுக்கு எப்போதும் இணையாக முடியாது என்றும், சில சந்தர்ப்பங்களில் குறுந்தகவல்கள் தவறான அத்தத் துடன் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும், தனி நபர் தொடர்பாடலுக்குள் அவை பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன என்றும் அய்வில் பங்கு கொண்டோர் சுட்டிக்காட்டி இருந்தனர். உணர்வு ரீதியாகத் தொடர்பு கொள்வதற்கு குறுந்தகவல்கள் ஏற்புடையவை அல்ல என்பதும் குறிப்பிடப்பட்டது.



எனது அவதானத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் குறுந்தகவல்களை மிக விரைவாக தட்டச்சு செய்யும் வழக்கமுடையவர்களாகக் காணப்படுகின் றார்கள். எழுத்துக்களைப் பார்க்காது இரண்டு கை விரல்களாலும் விரைவாகத் தட்டச்சு செய்வதைப் பார்க்க முடிகிறது. இது ஒரு தனியான சிறப்புத் திறனாக நோக்கப்படவல்லது.



நண்பர்களுக்கிடையிலான குறுந்தகவல்கள் எப்போதும் ர்ழற யசந லழர? என்றே ஆரம்பமாகின் றன. இதன் பின் அதற்கான பதிலில் இருந்து உரை யாடல் தொடங்குகிறது.



மாணவர்கள் குறுந்தகவல்களை அனுப்புவதற்கு ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில எழுத்துக்களைப் பிரயோகித்து ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சு செய்கின்ற அதேவேளை தமிழ்ச் சொற்களையும் தட்டச்சு செய்கிறார்கள்.



குறுந்தகவல்களை சில மாணவர்கள் கலந்துரைய டலில் பகிர்ந்து கொண்டார்கள். சொற்கள் புதியதொரு குறுகிய வடிவில் அச்சடிக்கப்பட்டிருந்ததை அவ தானிக்க முடிந்தது. தமது நேரத்தையும் சக்தியையும் விரையமாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு மிகக் குறுகிய வடிவத்தைத் தாம் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த வகையான குறுந்தகவல் கள் மாணவர்கள் அல்லது இளையோர் மத்தியில் இலகுவில் புரிந்துகொள்ளும் ஏதுநிலை காணப்படு கிறது. சாதாரணமாக How என்பதை Hw என்றும் You என்பதை U என்றும் குறிக்கிறார்கள்.



guys 2 mrw v hv என்ற தொடரின் விரிவு guys tommorrow we have என்று அமையும். இந்தக் குறுக்க வடிவ செய்திகள் மாணவர்கள் மத்தியில் பரிமாறப்படுகின்றன.



ஆங்கில எழுத்துக்களில் தமிழ் சொற்கள் அச்சிடப் படுகின்றன. அதற்கான உதாரணமாக இதனைப் பார்க்கலாம்.



“Unnai athigmaga

santhosa paduthum

ithayathirku....

unnai azha

vaikavum urimai undi

so don’t mis take ur lovable ones





அதாவது



உன்னை அதிகமாக

சந்தோஷப் படுத்தும்

இதயத்திற்கு

உன்னை அழ

வைக்கும் உரிமையும் உண்டு”



ஒரு குறுந்தகவலில் ஆங்கில சொற்றொடரும் தமிழ் சொற்றொடரும் அமைத்திருப்பதையும் காணலாம். மேலேயுள்ள குறுந்தகவல் அதற்கான சிறந்த உதார ணமாகும். ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமது சொந்தம் மொழி சொற்தொடர்களைத் தட்டச்சு செய்யும் வழக்கம் இந்தியாவில் ஏனைய மாநில மொழிப் பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் காணப்படு கின்றது.



செல்பேசி குறுந்தகவல் சேவை புதிய தொடர்பாடல் மொழியை சிருஷ்டித்திருக்கிறது என்பதையும் இங்கு நோக்கலாம்.



குறுந்தகவல் பயன்பாட்டில் ஏற்பட்ட அனுபவங்கள்



ஆய்வில் பங்குகொண்ட மாணவர் ஒருவர் தான் தனது காதலி அனுப்பிய 58 குறுந்தகவல்களைத் தனது செல்பேசியில் சேகரித்து வைத்திருப்பதாகவும் அதற்கு மேல் தனது செல்பேசியில் குறுந்தகவல் களை சேமித்து வைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். குறுந்தகவல்கள் உணர்வு ரீதியான தொடர்புகளைக் கொண்டவை அதனைச் சேமித்து பாதுகாத்து வைப்பதில் இந்த ஈடுபாட்டைக் காண முடியும்.



மேலும், குறுந்தகவல்கள் எப்போதும் ஒருவர் இன் னொருவர் மீது அக்கறையாக இருப்பதான உணர்வை வழங்குகின்றன. நட்பை உருவாக்கு வதற்கும் அதனை வளர்த்துச் செல்வதற்கும் உதவு கிறது. பெண்கள் தம் செல்பேசிகள் மற்றும் குறுந் தகவல்கள் பாதுகாப்பு உணர்வை வழங்குவதாகக் குறிப்பிடுகிறார்கள்.



சில குறுந்தகவல் பரிவர்த்தனைகள் உறவுகள் இடையில் விரிசலை ஏற்படுத்தியதையும் ஆய்வில் பங்குகொண்டோர் சுட்டிக்காட்டினர். மேலும் அதிக மான சந்தர்ப்பங்களில் குறுந்தகவல்கள் தனிமை யைப் போக்குவதற்கான ஒரு சாதனமாகப் பயன் படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.



மேலே குறிப்பிட்ட சாதகமான விளைவுகள் மற்றும் அனுபவங்களோடு எதிர்மறையான அனுபவங் களையும் தாம் பெற்றுக் கொண்டதாக மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அறிமுகமில்லாதவர்கள் குறுந்த கவல்களை அனுப்புவதாகவும் அதில் சில மிக மோசமாக பாலியல் வார்த்தைகள் நிறைந்ததாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.



முன் அறிமுகமில்லாத தொலைபேசி இலக்கங்களில் இருந்து வருகின்ற குறுந்தகவல்களை பெண்கள் உடனடியாக நிராகரித்து பதிலளிப்பதில்லை என்று குறிப்பிட்டார்கள். ஆனால், ஆண்கள் எந்தவொரு குறுந்தகவலும் அறிமுகமில்லாத செல்பேசியில் இருந்து வந்தாலும் பதிலளித்து பதிலை எதிர்பார்த்து மிகையார்வம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்கள். இருந்தாலும் அந்தத் தொடர்பாடலை ஏதோவொரு கட்டத்தில் இடைநிறுத்த வேண்டிய அல்லது அறுத்து விடவேண்டிய சூழ்நிலையே ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்கள்.



குறுந்தகவல்களைப் பெற்றுக் கொண்டதும் அதன் முக்கியத்துவம் கருதி உடன்பதில் அளிக்கின்ற சூழல் ஏற்படுவதாகவும் எப்போதும் குறுந்தகவல் களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பதிலளிக்க முடிவது இதன் அனுகூலமான அனுபவ மாக இருக்கிறது. அதேவேளை குறுந்தகவல்களை விரும்பிய நேரத்தில் வாசிக்க முடிவது சாதகமான நிலைமை.



ஒரு கட்டத்தில் இருக்கின்றபோது கைத்தொலை பேசிக்கு அழைப்பு ஒன்று வரும் பட்சத்தில் உடனடி யாகப் பதிலளிக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் தொடர்பை இடைநிறுத்தி குறுந்தகவலில் நான் எங்கே இருக்கிறேன், எப்போது தொடர்பு கொள் வேன் என்பதைத் தெரிவித்த அனுபவம் அதிகமாக எல்லா பங்குபற்றுனர்களுக்கும் உண்டென்பதை உறுதி செய்தனர்.



முடிவாக....



குறுந்தகவல் பரிமாற்றம் செல்பேசியின் ஒரு செயல் நிலையாகும். பல்கலைக்கழக மாணவர்கள் பிரதானமாக குறுந்தகவல் தொடர்பாடலையே அதிகமாக விரும்புகிறார்கள். நண்பர்களுடன் தொடர்புகொள்ள இதனைப் பயன்படுத்துகிறார்கள்.



குறுந்தகவல் அனுப்புதல் இளைஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக பழக்கமாக உரு வாகி வருகின்றது. கைத்தொலைபேசி அழைப்புக் களுக்கு பதிலிறுப்பது போன்று உடனடியாகப் பதிலிறுக்கத் தேவையில்லை. குறுந்தகவல்களைச் சேமித்து வைத்துப் பின்னர் பார்க்கும் வாய்ப்பு உள்ளதால் உடன் பதிலிறுக்கத் தேவையில்லை.



மாணவர்கள் செல்பேசியைத் தமது பெற்றோருடன் தொடர்பு கொள்வதற்காகவே வாங்கியிருந்தார்கள். ஆனால், பெற்றோருடன் தொடர்பு கொள்வதைவிட அதிகமாக நண்பர்களுடனேயே தொடர்பு கொள் கிறார்கள்.



செல்பேசிப் பாவனை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதற்கு அதன் எளிமை மற்றும் இலகுத் தன்மையே காரணமாகிறது. எப்போதும், எந்த இடத்திலும் பயன்படுத்த முடிவதும் இதற்கு வாய்பளிக்கின்றன.



மாணவர்களின் செல்பேசிப் பாவனை மற்றும் குறுந்தகவல் பயன்பாடு என்பது தமது சமூக அந்தஸ்து நிலையை உயர்த்துவதற்கானதாகவே காணப்படு கின்றது.

பெண்களுக்கு குறுந்தகவல் பரிவர்த்தனை பாதுகாப் பான சூழலை வழங்கியிருக்கிறது. தமது பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் அவசர நிலமைகளில் தொடர்பு கொண்டு தகவலைப் பரிமாற உதவுகிறது.



குறுந்தகவல் பரிவர்த்தனைக்கான தொடர்புகொள் மொழியொன்று விருத்தியாகின்றது. இது அதிகமாக இளைஞர்கள் மத்தியில் புரிதலுக்குரிய ஒன்றாகக் காணப்படுகின்றது.

இளைஞர்கள், சமூக வலையமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதற்கும் நட்பைப் பேணுவதற் கும் செல்பேசி மற்றும் குறுந்தகவல் சேவை பயன் படுகின்றது.



இளைஞர்கள் மத்தியில் மற்றுமொரு வழக்கமாககக் காணப்படுவது ‘அளைளநன உயடட’ இது தனது செல்பேசி யில் அழைப்புக்காகப் போதிய பணம் இல்லாத போது நண்பனுக்கு ‘எனக்கு அழைப்பு ஏற்படுத்து’ என்று குறிப்பால் உணர்த்துவதாகும்.



இலவசமான குறுந்தகவல் சேவை இளைஞர்கள் குறுந்தகவல் அனுப்புவதை ஊக்கப்படுத்துகின்றது. குழசறயசனநன அநளளயபந இளைஞர்கள் மத்தியில் பரிமா றப்படும் அதிகமான குறுந்தகவல்களாக இருக்கின் றன.



இளைஞர்கள் தமக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரத் தைச் செலவிடுவதற்காக குறுந்தகவல் பரிவர்த் தனையை மேற்கொள்கிறார்கள். மன ஆறுதல் அல்லது மனவிடுப்பு செயல்முறையாகவும் இதனைக் கொள்ள முடியும்.



ஆங்கில எழுத்துக்களால் தமது பேச்சுமொழி வார்த் தைகளை அச்சிட்டு நண்பர்களுக்கு அனுப்புகின்ற வழக்கத்தையே இளைஞர்கள் அதிகமாகத் தமது வழக்hகக் கொண்டுள்ளார்கள்.

இலவச குறுந்தகவல் இளைஞர்களை அதற்கு அடிமைப்படுத்துவதை ஊக்குவிக்கின்றது. இளை ஞர்கள் தமது அதிகமான நேரத்தை குறுந்தகவல் அனுப்புவதற்குச் செலவிடுகிறார்கள்.

குறுந்தகவல் பரிவர்த்தனை எப்போதும் நேருக்கு நேரான உரையாடல் மற்றும் செல்பேசி உரையாட லுக்கு இணையாகக் கருதப்பட முடியாதது.



இருப்பினும், குறுந்தகவல் பரிவர்த்தனை தொடர் பாடலுக்கான நல்லதொரு கருவியாகவே நோக்கப் படவேண்டும். தகவல் பரிமாற்றத்திற்கும் அது உதவுகின்றது.



இன்று, குறுந்தகவல் பரிமாற்றம் இளையோர் மத்தியில் ஒரு சடங்காகவே வளர்ச்சியடைந்து வருகின்றது.

No comments:

Post a Comment