Showing posts with label Prof Nanthi. Show all posts
Showing posts with label Prof Nanthi. Show all posts

Sunday, 13 March 2022

பேராசிரியர் நந்தி சிறுகதை வாசிப்பு

பேராசிரியர் நந்தி சிறுகதை வாசிப்பு பேராசிரியர் நந்தி அவர்களின் 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு நந்தி அறக்கட்டளை சார்பாக இணையவழி சிறுகதை வாசிப்பு நிகழ்வு மார்ச் 30 திகதி ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் பேராசிரியர் நத்தியவர்கள் எழுதிய சிறுகதைகள் கலைத்துறைசார்ந்தோரால் வாசிக்கப்பட்டன. இதில் உலகெங்கும் இருந்து பலர் கலந்து கொண்டனர். நிகழ்வு தேவநாயகம் தேவானந்த் தலைமையில் நடைபெற்றது.

Sunday, 3 April 2011

பேராசிரியர் நந்தியின் பங்களிப்பு பெரியது – ஆறுதிருமுருகன்

http://www.globaltamilnews.net,%2002/ ஏப்ரல் 2011 ,

மருத்துவ பீடத்தை வளர்க்க கடுமையாக உழைத்தவர்.



மருத்துவ பீடத்த்தின் வரலாற்றில் அதன் வளர்ச்சியில் போராசிரியர் நந்தியின் பங்கு அளப் பெரியது என்று தெரிவித்துள்ளார் தெல்லிப்பளை துர்க்கா தேவள்தானத்தின் தலைவரும் அதிபருமான ஆறுதிருமுருகன். போராசிரியர் நந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நினைவு நிகழ்வில் தலமையேற்றுப் பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



அங்கு மேலும் உரையாற்றிய ஆறுதிருமுருகன் மருத்துவபீடத்தின் வரலாற்றில் நந்தி மிகவும் முக்கியமானவர். மருத்துவபீடத்தை வளர்க்க கடுமையாக உழைத்தவர். பீடாதிபதியாக இருந்து மருத்துவபீடத்திற்காக உழைத்த நந்தி சாதாரணமாக வருகை விரிவுரையாளராக இருந்த பொழுதும் தனது கடமையை அதிகம் ஆற்றியவர்.



அவரிடம் பெரிய மனமும் பங்களிக்கும் உழைப்பும் இருந்தது. அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் ஆழமானவை என்றும் தெல்லிப்பளை துர்க்கா தேவள்தானத்தின் தலைவரும் அதிபருமான திரு ஆறுதிருமுருகன் தெரிவித்தார். இன்று மாலை (30.03.2011) யாழ்ப்பாணம் இந்துமாமன்றத்தில் பேராசிரியர் நந்தி என்கிற சிவஞானசுந்தரத்தின் பிறந்த நாள் நினைவுக்கூட்டம் நடைபெற்றது.