Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Saturday, 18 April 2026

நீளிரா: ‘போர் விளையாட்டுகளை’ வெளிப்படுத்தும் சினிமா


 Dr தேவநாயகம் தேவானந்த்

 அரசியல் அதிகாரம் என்பது வெறும் இராணுவ வலிமையாலோ அல்லது நேரடி கட்டுப்பாட்டாலோ மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. அது சமூகத்தின் சிந்தனை, கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளின் வழியாக இயல்பான ஒன்றாக உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தெளிவாக முன்வைத்தவர் இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்ஸ்சி (Antonio Gramsci) ஆவார். அவரது hegemony (ஆட்சி ஆதிக்கம்) என்ற கோட்பாடு, அரசியல் ஆட்சி எவ்வாறு மக்களின் சம்மதத்தை உருவாக்கி, அதே நேரத்தில் மறைமுகமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்பதை விளக்குகிறது.

“‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”


 “‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களின் கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”

---------------------------------------------------------------------------------------------

இந்த விமர்சனத்தில் முன்வைக்கப்படும் சில கவலைகள் ஏற்புடையவையே. இவ்வாறான திறந்த உரையாடல்கள் மூலம் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டும். அந்த உரையாடல் வெளியைத் திறந்ததற்காக கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களுக்கு நன்றி. குறிப்பாக ஆய்வரங்குகளின் தரம், தேர்வு செய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பொருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை.

ஆனால், இந்த விமர்சனம் சுயபரிசோதனைக்கும் சுயவிமர்சனத்திற்கும் உரியதாகவும் அமைகிறது. இங்கு விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தம்மைத்தாமே ஒரு முக்கியமான முரண்பாட்டில் நிறுத்துகின்றனர். ஏனெனில் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் நாடக மற்றும் அரங்கியல் துறைகளுக்குள் சாதாரணமாக நிலவி வருகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.

Tuesday, 27 May 2025

ஓபன் மைக் உங்களுக்கானது

நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோவொன்றில் திறமைசாலிகள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் திறமையை வெளிக்காட்ட உங்களுக்கு களம் கிடைக்கவில்லை அல்லது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை . இதோ உங்களுக்கான வாய்ப்பு ஓபன் மைக். நீங்கள் கலைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மீது நம்பிக்கை கொண்டவராக உங்கள் திறமையை வெளிக்காட்ட துணிந்து ஓபின் மைக் நிகழ்ச்சிக்கு வாருங்கள். அங்கே பாடலாம், ஆடலாம், வரையலாம், மண்ணில் உருவம் செய்யலாம், இசைவாத்தியம், வாசிக்கலாம், பேசலாம், நடிக்கலாம், மிமிக்கிரி செய்யலாம், கதைசொல்லலாம், புத்தாக்கமாக எதையாவது செய்யலாம். வாருங்கள் நாமே நமக்காக ஒன்று கூடுவோம். பங்கு கொள்ள வரும்புபவர்கள் யூன் 1ம் திகதி நல்லூரில் அமைந்துள்ள முற்றம் திறந்த வெளி அரங்கில் சந்திக்கலாம். இலவசமாகப் பங்கு கொள்ளலாம்.

Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.

Sunday, 6 October 2024

Success Story : Theatre helps marginalized communities

The effort promotes social expression and discourse on human rights through popular theater

The Active Theater Movement (ATM) uses popular theater to provide a voice to the most marginalized communities in the post-conflict regions of northern Sri Lanka. Its performances facilitate dialogue and promote awareness of critical issues facing these communities such as human rights, reconciliation, and social expression. 

The productions also prompt participants and audiences to confront traumas stemming from decades of life in conflict zones. With the support of USAID’s SPICE project, ATM provides training and performance opportunities for youth to use theater to promote human rights by using their personal narratives and those of their local communities. In early 2015, ATM trained 21 young women and men from villages in Jaffna to act, write scripts, direct and manage the technical aspects of theater production. The group also received training on human rights principles to better understand and contextualize people’s experiences during the conflict. During the workshops, the group selected five themes that are relevant to their lives. They then drafted scripts that they could perform. In August 2015, ATM organized a 12-day drama festival to showcase plays developed by the youth group during the SPICE initiative. The festival staged 17 skits and plays, including performances that addressed serious social issues such as violence against women and the traumatic experiences of war. 

 ATM’s productions re-introduced theater to Jaffna and provided a safe space for public discourse on subjects that would otherwise be too sensitive or difficult to articulate in public. The performance also provided a platform for interactive debate; at the end of each skit or play, the audience was encouraged to reflect and share ideas on the themes raised through the performances. The audience was then encouraged to collectively develop responses to these issues and find ways to improve understanding and respect for human rights. Many youth bear the psychological scars of Sri Lanka’s prolonged conflict. SPICE’s support has given them skills and an opportunity to articulate their emotions and experiences through dramatic expression.

 It has fostered their creativity and built their confidence to share their experiences. This has helped them come to terms with their experiences and promoted integration within their communities and families. Youth theater group member Murugiah Kumarasivam recalls, “When I was 14 years old, my oldest brother was killed by an unknown gang. For years, I could not speak about this and it was a very difficult time for me. … I could not concentrate on anything. The trauma I experienced has remained with me. After I joined the theater group and attended the trainings, it was only then that I felt comfortable to express my feelings to others.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகள் திவாலாகுமா?


இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?
பேராசிரியர் வி.பி.சிவநாதன்  என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை. 

Tuesday, 19 March 2024

புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஒரு பாராட்டுப் பத்திரம்

                                                                                                     

ஒரு மாலை வேளை (13.02.2022) கைதொலைபேசியில் ஒரு அழைப்பு உள்ளூர் இலக்கத்திலிருந்து வந்தது "சேர்" FATV லண்டன் ஞாயிறு நிகழ்ச்சிக்காக உடன் இணைய வேண்டும் கேட்ட குரல் சுவிசிலிருந்து கேட்ட குரலாயிற்றே என்று எண்ணுவதற்குள் "நாங்கள் நீங்கள் இருக்குமிடம் வருகிறோம் சேர்ந்தே சூமில் இணையலாம் என்றார்கள்."  ஆம் மெய்நிகர் வெளியில் சுவிசிலிருந்து நடித்த அவந்திகா அவர் குடும்பத்தினரை மெய்வெளியில் கண்டது மகிழ்ச்சி பாட்டி நாடகத்தில் சுவிசலண்ட், டென்மார், பெல்ஐியம் யேமன் நாடுகளின் சிறார்கள் ஒன்றாக சேர்ந்து அனுப்பிய பாராட்டு பட்டயத்தையும் தந்தார்கள் கொரோனா வருமோ என்றிருக்க இப்படி பாராட்டுப் பத்திரங்கள் நாடுகள் கடந்து வருவது மகிழ்ச்சி, நன்றி சிறார்கள் அவர்தம் பெற்றோருக்கு உரித்தாகட்டும்


Friday, 15 March 2024

இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நல்லெண்ணச் சந்திப்பு

இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நல்லெண்ணச் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்தானியராலயத்தில் 02.03.2022 மதியம் 11.00 மணிக்கு நடைபெற்றது. புதிய துணைத்தூதுவரை பொன்னாடை போர்த்தி யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைத்தின் தலைவர் திரு வை.யுகேந்திரா  கொளரவித்ததைத் தொடர்ந்து. இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் மாலையணிவித்து மதிப்பளித்தார். 

 

Thursday, 30 June 2022

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு கடந்த 12.06.2022 அன்று ஹட்டன் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெற்றது. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 2021 ஆண்டு இணையவழியாக நடத்திய அடிப்படை மனிதவுரிமைகள் தொடர்பான கற்றைநெறியை பூர்த்திசெய்த மலையக மாணவர்கள் நாற்பது பேருக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார் நிகழ்வு அரங்கு நிறைந்த பார்வையாளருன் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் மானுடம் சுடரும் என்ற மனிதவுரிமை மேம்பாட்டு அமைப் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மனிதவுரிமை பயிற்சிபெற்ற மாணவர்களை உள்ளடக்கியதாக வடக்கு கிழக்கு மலையம் ஆகிய மூன்று பகுதிகளிளைச்சார்ந்தவர்கள் இணைந்து செயற்படும் அமைப்பாக விளங்கும்.இதனை யாழ்மாவட்ட தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைப்பார். மலையத்துக்கான ஒருங்கிணைப்பாளராக திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்கள் செயற்படுவார். எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் இதற்கான இயங்குநிலைக்குழு உருவாக்கப்படும்.

Wednesday, 29 June 2022

கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னான் சந்திப்பு


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கனா உயர்ஸ்தானிகர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து நாட்டின் நிலைமைகள் பற்றி உரையாடினார். யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்தச்சந்திப்பு 22.06.22 அன்று மாலை 2.30மணிக்கு நடைபெற்றது.இதில் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் சார்பாக அதன் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் கலந்து. எதிர்காலத்தில் கனடா நாட்டின் நிதியுதவிகள் வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும. அதற்கேற்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 


 

Sunday, 22 May 2022

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'ஆப்பிழுத்த குரங்குபோலானார்'

இலங்கையில் 2022 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகாரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் தெரிவிக்கும் கருத்துக்கள் இதில் பார்க்கலாம்.யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் (பிரிவு டி) மற்றும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இணைந்து 20.05.2022 @ 7.00 pm நடத்திய கருத்தரங்கின் ஒளி,ஒலி வடிவம்

 

Tuesday, 17 May 2022

இணையவழி கருத்தாடல் களம் : ‘ரணில் விக்கிரமசிங்க இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பாரா?’


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலையை தோற்றுவித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.   மக்கள் தமது விரக்தியை வன்முறையாகவும் வெளிப்படுத்தத் தலைப்படுகிறார்கள் போலும். ஒரு ஸ்திரமான அரசாங்த்தை கொண்டிருந்த கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறுமளவிற்கு பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக வலுப்பெற்று நீண்டு செல்கிறது. இந்தச்சூழலில் தனியொருவராக தனது கட்சியைப்பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விங்கிரமசிங்க நாட்டைமீட்டெடுக்க துணிந்து பிரதமர்பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறார்.

 பாராளுமன்ற அரசியல், மக்கள் கொந்தளிப்பு, பொருளாதார மீட்டெடுப்பு என்ற பல விடயங்கள் தனிமனிதனை மையப்படுத்தியே நகர்வது போன்றதான நிலைப்பாடு காணப்படுவதான சு}ழலில் மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தச்சூழலில் விழிப்பூட்டும் நோக்கம் கொண்டு இந்த கருத்தாடல் களம் இணையவழி ஒழுங்குபடுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண விஞ:ஞர்னச் சங்கம் (பிரிவு டி) இணைந்து இந்தக்கருத்தாடல் களத்தை ஒழுங்குசெய்துள்ளனர்.

Monday, 16 May 2022

ஆய்வு மகாநாடும் ஆய்வுநூல் வெளியீடும்

 


யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூகவிஞ்ஞானப்பிரிவு நடத்துகின்ற ஆய்வரங்கத் தொடரின் ஏழாவது அமர்வு எதிர்வரும் 19.05.2022 அன்று மாலை 7.00 மணிக்கு இணையவழி நடைபெறவுள்ளது. இதற்கான வளவாளராக தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல்துறை பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வழிவநத்துகின்றார். இந்த அமர்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இந்தத் தொடரின் நிறைவாக இலங்கை தமிழர் வாழ்வியல் சார்ந்த 15 தலைப்புக்களின் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை  ஆய்வுமகாநாட்டில் சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்த ஆய்வு மாகாநாடு ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல் வெளியிடப்படும்.அந்த ஆய்வரங்குகளை யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விஞ:ஞானப்பிரிவு தலைவர் தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைக்கிறார்.

Wednesday, 11 May 2022

இணையவழிக் கருத்தரங்கு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன?

 இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? என்ற தலைப்பில் பொருளியல்துறைப் பேராசிரியர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் இணையவழி கருத்துரைவழங்குகிறார். எதிர்வரும் 13.05.2022 அன்று மாலை 7.00மணிக்கு இந்தக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை சூம் செயலிவழியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஐ.டி: 69114783312 கடவுச்சொல்: Jsa@2022)

Monday, 2 May 2022

யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளை பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்

 


தமிழ்நாட்டிலிருந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்திருந்த பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெற்விங் ஹோட்டேலில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்,அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இந்த கலந்துரையாடலில் வடபகுதி பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழகத்துடனான தொடர்பு முக்கியமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு இது வணிகவிருத்திக்கு அவசியமானது போன்ற விடயங்கள் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது  யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்தை மீளத் திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மற்றும்; காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான கப்பல்போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையடங்கிய மகஜர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி  அவர்களிடம் கையளிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. ‘இந்த விடயங்களை டெல்லிக்கு எடுத்துச்சென்று நிச்சயமாக விமானநிலையத் திறப்பு மற்றும் கப்பல்போக்குவரத்து என்பவற்றிற்கு ஏற்பாடுகள் செய்வதாக அண்ணாமலை உறுதியளித்தார்.இந்தச்சந்திப்பில் யாழ்மாவட்ட அரசசார்பற்றநிறுவனத்தின் இணையத் தலைவர் எஸ். யுகெந்திரா,செயலாளர் தே.தேவானந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ். இன்பரூபன்,எஸ். திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.  

Saturday, 9 April 2022

பேரிடர்காலத்தில் சிறுவர் மனச்சுமைத் தணிப்பு அரங்கு


யாழ் தினக்குரல் பத்திரிகையில் ஞாயிறு தோறும் வெளிவந்த இந்தத் தொடர்  இங்கு மீள்பிரசுரமாகிறது. 

தொடர் -01 

தேவநாயகம் தேவானந்த்

COVID 19 வைரஸ் பரவல் உலகெங்கலும் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றது. சமூகமுடக்கம், பொருளாதார மந்த நிலை, புதிய வாய்ப்புக்களுக்கான வழிகள் திறக்கப்படாமை, கல்விக்கூடங்கள் மூடப்பட்டமை என்று பல நெருக்கடிகால நிலைமைகள் சிறுவர்கள் மீது பலவிதமான மன அழுத்தங்களைக் ஏற்படுத்தியிருக்கின்றன. பாடசாலைச்சூழல் இல்லாது போனதால் பாடசாலைப்பருவத்தின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் இல்லாது போகின்றன. சகபாடியுடன் உறவாடும் மற்றும்; நட்புக்கொள்ளும் வாய்ப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. நண்பர் வட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் போன்ற பல பாடசாலைப்பராய வனப்புக்கள் இல்லாமல் போயிருக்கின்றன. 

சும்மாயிருக்கும் சிறுவர்களுக்கு பாடங்களைகற்பித்தால் போதும் என்று சிந்திக்கப்படுகிறது. பாடங்களைக்கற்பதற்கு இணையவழிக்கல்வி ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்தபடி மாணவரும் ஆசிரியரும் மென்செயலி வழி இணைந்து கற்றால் போதும் என்ற சிந்தனை உருவாகிறது, இருந்தாலும் அந்த புதிய கல்விக்கான களமும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை காணலாம்.