Showing posts with label Journal Articles. Show all posts
Showing posts with label Journal Articles. Show all posts

Tuesday, 21 November 2023

வானலையில் தமிழ்ஒலி -14 : தமிழ்த் தேசிய வானொலி - புலிகளின் குரல் ( Voice of Tiger)


விடுதலைப்புலிகள் தகவல் தொடர்புத் துறையில் வல்லவர்களாகத் திகழ்;ந்தார்கள் என்ற கருத்து உண்டு.  விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வகையான ஊடகங்களையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். இந்த வலுவான தொடர்பாடல் திறன் காரணமாக மக்களை வசிகப்படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். தகவல்தொடர்பு துறை விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் மிக முக்கியமான பிரிவாகும். வெகுஜனத் தொடர்பாடல் மூலம் அரசியல் சூழ்நிலையின் அசாதாரணத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் மக்களுக்கும் கற்பித்தார்கள். அரசை எதிர்க்க மக்களை ஊக்குவிப்பதற்காக வானொலியைப் பயன்படுத்தினார்கள். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது.  இலங்கையில்; விடுதலையின் அவசியத்தையும் மகத்துவத்தையும் விடுதலைப் புலிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வான்வெளிக்குச் சென்றார்கள். அதற்காக ‘புலிகளின் குரல்’ வானொலியை ஆரம்பித்தார்கள். இது வானலையில் புரட்சிகரமானதான தமிழ்ஒலியாகப் பார்க்கப்படுகிறது.