Showing posts with label Popular Tamil Dramas. Show all posts
Showing posts with label Popular Tamil Dramas. Show all posts

Tuesday, 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

Sunday, 12 June 2022

'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' நாடகம்

 

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. 

 

இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.  பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.

Wednesday, 6 April 2022

முயலார் முயல்கிறார் சிறுவர் நாடகம்( 2016)


குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய முயலார் முயல்கிறார் நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் நெறிப்படுத்தியிருந்தார். 





 

வண்டியும் தொந்தியும் நகைச்சுவை நாடகம் (2012)



அதிகாரிகள் தங்கள் பதவிக்கதிரைகளுக்காக படுகின்ற பாட்டை இந்த நாடகம் நகைச்சுவைப்பாங்கில் தருகின்றது. இதனை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தேவநாயகம் தேவானந்த். 2012 மேடையேற்றப்பட்டது. 


 

Monday, 28 March 2022

‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்

Thevanayagam Thevananth

சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு அழகு சேர்ப்பது   திராவிடப்பாணியில் அமைந்த அதன் கட்டடங்கள் அதில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம். அது ‘முற்றம்’. 
தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை. அதன் வளர்ப்புத் தந்தை பேராசிரியர் கோ.இரவீந்திரன்.
முற்றத்தில் அழகாக கோலமிடமுடியும். ஆனால்  முற்றத்தை உருவாக்குவதென்பது சற்று சிரமமானது. புhரம்பரியமாக பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமானது. அதற்காக பாடாய்ப்பாடுபட வேண்டும். இது ஒரு  பண்பாட்டுப் புரட்சியும் கூட. அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம்.

இந்தப் பண்பாட்டு புரட்சியை ஆரம்பித்து வைத்ததில்; யாழ்ப்பாணப்பல்கைலக்கழகத்திலிருந்து வந்திருந்த நானும் இருந்திருக்கிறேன் என்பதை மீள நினைக்கின்ற போது  பேரானந்தமே!.
பேராசிரியர் கோ. இரவிந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வகுப்புக்கு வெளியே வகுப்பு’ என்ற தத்துவத்தின் செயல் வடிவம் தான் ‘ முற்றம்’.