Saturday, 27 January 2018

சிறுவர் நாடகக் கொண்டாட்டம் ஆரம்பம்.


 சிறுவர் நாடகக்  கொண்டாட்டம் 26.01.2018 அன்று  ஆரம்பமானது. சிறுவர் குதூகலிப்பதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ள இன்றய எமது பரபரப்பான வாழ்க்கைச் சூழழலில் வாய்விட்டுச் சிரித்து மகிழ சிறுவர்களுக்கான களங்களை நிறையவே உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகள் பெருமெடுப்பில் நடைபபெற வேண்டும். இந்த முயற்சியை சிறிதளவில் செயல் திறன் அரங்க இயக்கம் கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.

Wednesday, 3 January 2018

Post war Theatre In Northern Srilanka

வடஇலங்கையில் யுத்தத்தின் பின்னரான அரங்கு


---------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதை முதலில் வரையறை செய்தல் வேண்டும். இதன் போது யுத்த கால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் இலங்கையரசு விடுதலைப்புலிகளை முற்றுமுழதாக இராணுவரீதியாக தோற்கடித்ததாக மார்தட்டிக் கொண்டதான 2009 ஆண்டுக்குப்பின்னரான சூழலை இங்கு நாம் யுத்தததின் பின்னரான சூழல் என்று வரையறுக்க முற்படுகின்றோம். கடந்த ஏட்டுவருடகாலங்கள் இதற்குள் அடங்கும் எனலாம்.


Tuesday, 2 January 2018

இலங்கையில் ஊடக சுதந்திரம்’


- ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை தினத்தை அடியொற்றிய கருத்துநிலை
(ஈழத்தின் மிகப்பெரிய ஊடகப்படுகொலை தினமாக வர்ணிக்கப்படுகின்ற மே 02 இன் பத்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக 02.05.2016 அன்று யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை)

‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது.

Monday, 1 January 2018

‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது.


- சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு

தலைவர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’   என்று மக்கள் பணி செய்து கிடந்த அமரர் எஸ்.பரமநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனது பணி ஓய்வுக்காலத்திலும் ஓயாது உழைத்தவர். தமது பக்கபலமான ஒரு தோழனைஇ சக பணியாளனை இழந்த துயரில் சமூகப்பணியாளர்கள் பலரும் உள்ளார்கள்.அவர்களோடு நாமும் துயருகி;றோம். வையத்துள் வாழ்ந்தவர்களில் சிலரே அவர்களின் இறப்பின் பின்னரும் போற்றப்படுகிறார்கள். தாமும்இ தமது குடும்பமும் என்று சிவனே என்று கிடக்கின்ற இன்றைய எமது சூழலில் அமரர் பரமநாதன் மகத்தானவர், போற்றப்பட வேண்டியவர்.

Sunday, 31 December 2017

இணையத்தைப் பலப்படுத்துவோம்


அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது 27 ஆண்டை நிறைவு செய்து தனது பயணத்தை  தொடர்கிறது.பலர் இணைந்து கால் நூறாண்டு மேலாக பயணிப்பதென்பது மிகக்கடினமான பணி;. இது இன்று வரை சாத்தியப்பட்டிருப்பது தான் இந்த அமைப்பின் பலம். இந்தப்பலத்திலிருந்து எமது பயணத்தை நாம் மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
மக்களுக்கான சேவையை வழங்குவற்கு நிறுவனங்களை பலப்படுத்துவதோடு ஒன்றிணைந்து செயற்படுவதென்பது மிகக்கடினமான செயல். இது சாத்தியமாகியிருப்பது சாதனையன்றி வேறென்ன!.

Saturday, 2 December 2017

இடர்மிகு காலத்தில் எம்மோடு நின்றவர்


திரு.பொ.பாலகிருஷ்ணன்  பற்றிய  பதிவு

யுhழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 1990 ஆண்டு உருவாக்கப்பட்டடு இன்று வரை தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்த 27 வருடங்களும் மக்களோடு மக்களாக நாம் நின்றிருக்கிறோம் என்பதை நினைக்கின்ற போது பிரமிப்பாக இருக்கிறது.

Sunday, 18 June 2017

யுத்தத்தின் நினைவிடங்கள்
ஜேர்மனினியிலிருந்து ஜேர்மானிய ஊடக நண்பர்களுடன் ருனிசியா இராக் மற்றும் இலங்கை ஊடக நண்பர்களுடன் போலட் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எமது பயணம் அறிந்து நாடக நண்பர் ஜெராக் 200 கி.மீ தூரம் இருந்து ஓடி வந்து என்னை தனது காரில் ஏற்றிக் கொண்டு சில முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டினார். 
 நாங்கள் இருந்த இடம் இரண்டாம் உலகப்போரில் அதிகளவு பாதிக்கப்பட்ட இடம். ஜேர்மன் படைகள் ரஷ்சியாவை நோக்கி போலண்ட் வழியாகவே சென்றார்கள் அப்போது ஆற்றங்கரையொன்றில் இரண்டு படைகளுக்கும் இடையில் கடுமையான யுத்தம் நடைபெற்றது. அதில் பல ரஷசிய வீரர்கள் உயிரிழந்தார்கள். அவர்களின் நினைவிடம் இப்போதும் உள்ளது. இறந்த ரஷ்சிய வீரர்களின் பெயர்கள் அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இந்த நினைவிடங்களுக்கு அதிகளவு முக்கியத்தவம் கொடுக்கப்பட்டதாகவும். இப்போது இவ்வாறான நினைவிடங்கள் முக்கியமற்று வருவதாகவும் ஜெராக் சொன்னார். யுத்ததத்தில் வென்றவர்கள் வெற்றிக்கான நினைவிடங்களை அமைத்துக் கொண்டாடுவதென்பது எல்லா இடங்களிலும் நடப்பது. அது தேவையற்றது என்பதான நினைவு வருவதற்கு காலம் அதிகம் தேவைபோலும்.

எங்கள் கிராமங்கள் எப்போ இயல்புநிலை திரும்பும்?
போலந்து நூற்றாண்டுகளாக படையெடுப்புக்களைச் சந்தித்த நாடு குறிப்பாக ரஷ்சியா அதன் மீது அடிக்கடி படையெடுப்புக்களை நடத்தியது. இதனால் அவர்கள் தமது சிறிய கிராமங்களைச் சுற்றி கோட்டை போன்ற மதிலைக்கட்டி எதிரியிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள். இது பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் நடைபெற்றது. இந்த  ஊர்கள் இன்றும் அதே அமைப்பில் காணப்படுகின்றன. ஒரு கோட்டைக்குள் கிராமம் இருக்குகிறது. உள்நுழையவும் வெளியேறவும் வாயில்கள் உள்ளன. இருபது மைல் தொலைவில் ஒரு கிராமம் இருக்கிறது. அதில் தேவாலயம் தொடக்கம் பொலிஸ் என்று அனைத்தும் உள்ளன. அழகாக வடிவமைக்கப்பட்ட கிராமங்கள் இத்தனை யுத்தங்களின் பின்னரும் அப்படியே இருக்கின்றன.எங்கள் கிராமங்கள் எப்போ இயல்புநிலை திரும்பும்?

Wednesday, 1 February 2017

முதுகெலும்பில்லாத செயலாளர் -03


விடியக்காத்தால கண்ணமுழிச்சு கட்டிலால எழும்ப கேற்றடியில் “அப்புச்சி….அப்புச்சி “ என்று கூப்பிட்டுக் கொண்டு சொந்தக்காரர் ஒருத்தர் வாசல்ல வந்து நின்றார். அவசரமா வந்த சலத்தையும் அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கேற்றத் திறக்க “அப்புச்சி நீ உலகம் தெரிஞ்சனி உரெல்லாம் நியாயங்கள் பிளக்கிறாய். இஞ்ச சொந்தத்துக்க நடக்கிற பிடுங்குப்பாடுகள் ஒன்றும் உனக்குத் தெரியாது…”என்று கேற்றத்திறந்து உள்ளுக்க வராதுக்கு முன்னமே அந்தாள் குழறத்தொடங்கிட்டு.