Showing posts with label Newspaper Articles. Show all posts
Showing posts with label Newspaper Articles. Show all posts

Saturday, 18 April 2026

நீளிரா: ‘போர் விளையாட்டுகளை’ வெளிப்படுத்தும் சினிமா


 Dr தேவநாயகம் தேவானந்த்

 அரசியல் அதிகாரம் என்பது வெறும் இராணுவ வலிமையாலோ அல்லது நேரடி கட்டுப்பாட்டாலோ மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. அது சமூகத்தின் சிந்தனை, கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளின் வழியாக இயல்பான ஒன்றாக உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தெளிவாக முன்வைத்தவர் இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்ஸ்சி (Antonio Gramsci) ஆவார். அவரது hegemony (ஆட்சி ஆதிக்கம்) என்ற கோட்பாடு, அரசியல் ஆட்சி எவ்வாறு மக்களின் சம்மதத்தை உருவாக்கி, அதே நேரத்தில் மறைமுகமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்பதை விளக்குகிறது.

நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு


 நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு

------------------------------------------------

பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இன்று சமூக ஊடகங்களில் (17.04.2026) பிரசுரித்த ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கான ஒரு விவாத களத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த பதிலிறுப்பு அமைகிறது. துறைசார்ந்தோருக்கிடையிலான மோதல்கள் ஆராக்கியமான விவாதங்களுக்கும் கற்றலுக்கும் வழிவகிக்கும் என்ற நம்பிக்கையில் இதனை பிரசுரிக்கிறேன். 

பேராசிரியர் மௌனகுருவின் இந்தக் கட்டுரை ‘நடிப்பு முறைகளின் கலப்பு’  என்று விளக்குகிறது. ஆனால் இந்த அணுகுமுறை நடிப்பின் அடிப்படை இயல்பை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு பொதுமைப்படுத்தலாகும். நடிப்பு என்பது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாணி/கூறுகளின் சேர்க்கை அல்ல; அது நடிகனின் உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு.

நீளிரா: சினிமா விமர்சனம்


யுத்த நினைவுகளின் சினிமா

 

 Dr.தேவநாயகம் தேவானந்த்

 

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு  மட்டுமல்ல; அது ஒரு மொழி. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை இனங்களுக்கு, தமது வரலாறு, நினைவுகள் மற்றும் அரசியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த காட்சிமொழியாக அது செயல்படுகிறது. ஈழத் தமிழர்களின் யுத்த அனுபவங்களும் அதனுடன் தொடர்புடைய மனநிலைகளும்  சினிமா வழியாகவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில், நீளிரா திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக மட்டுமல்லாது, ஒரு இனத்தின் நினைவுகளையும் குரலையும் வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படக் கூடியது.

ஈழத் தமிழ் சினிமாவை யுத்தத்திற்கு முன், யுத்தகாலம் மற்றும் யுத்தத்தின் பின் என்று பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. எமக்கான சினிமா, எமக்கான வானொலி, எமக்கான தொலைக்காட்சி தேவை என்பதை நீண்ட நாட்களாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் இத்துறைகளுக்கான கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Monday, 26 May 2025

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தியில் தாமதம் ஏன்?

                                                                                                                                                                    


Dr.தேவநாயகம் தேவானந்த்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இந்தியாவிற்கு தெளிவான பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, சீனா மோதல்களில் எவ்வளவு பங்கு வகித்தது என்பது தான் இங்கு நோக்கப்பட வேண்டியது. சீனா யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிரான ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தியது, அதன் ஆயுதங்களை விளம்பரப்படுத்தியது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சோதித்தது. இந்தச் சூழலில் இந்திய அயலுறவுக் கொள்கை முக்கியம் பெறுகிறது. இந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை மிக முக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அதனோடுடனான இந்திய உறவு முக்கியமாகிறது.  

வரலாற்றுரீதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இடர்கால நண்பனாக செயற்பட்டிருக்கிறது. இந்தியாவின் அண்மைய கொள்கையில் முக்கியமானதாக இருப்பது ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதாகும். இதில் ஏனைய அயல்நாடுகளைவிட இலங்கையில் இந்தியாவின் கவனம் மிகஅதிகமாகவே உள்ளதை அவதானிக்கலாம். இந்தச்சூழலில் இலங்கை இந்தியாவின் நேசக்கரத்தை எவ்வாறு பற்றுறிதோடு தொடர்ந்து தனது பொருளாதார நிலைத்த தன்மையைப் பேணப்போகிறது என்பது முக்கியமாகிறது. இலங்கை புதிய அரசியல் கலாச்சாரத்திற்குள் தன்னை நிலைநிறுத்த முற்படுகின்றதான இந்தக்காலகட்டத்தில் தனது அயலுறவுக்கொள்கையை தெளிந்த மனதோடு வடிவமைத்தாக வேண்டும். இந்திய உதவிகளிலிருந்து இலங்கையின் பொருதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அணுகுமுறைகள் தேவை எனலாம். இலங்கை அரசாங்கம் தனது ‘தறுக்கணித்த’ நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு நகரமுற்படுவதன் விளைவுகளை,; அதன்நகர்வு வேகம் மிக மந்தமாகவே இருக்கிறது. இதற்கு ஏலவே இருந்த நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய சிந்தனைகளையும் நடைமுறைகளையும் நகர்த்த முடியாத இக்கட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இந்திய உதவிகளை துரிதகதியில் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தாக வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியப்பங்களிப்பை பயன்படுத்தும் திறன் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். சந்தேகங்களையும் தயக்கங்களையும் தாண்டி எதிர்கொண்டு வளரும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.  

Friday, 23 May 2025

இலங்கையின் பழைய காவலர் கறைபடிந்த மரபுக்குச் சொந்தக்காரன்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் தொகுத்து வழங்கிய அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" நிகழ்ச்சியில் ஒரு உயர்மட்ட நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி யூடியூப்பில் மார்ச் 6 அன்று முதன்முதலில் ஒளிபரப்பரப்பப்பட்டது. இது ரணிலின் அரசியல் வாழ்வை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அவரது முரண்பட்ட அரசியல் சிந்தாந்த்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 

தொண்டன் இல்லாத கட்சிகள் போட்டியிடும் உள்ளுராட்சித் தேர்தல்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கின்றன. வடக்கு,கிழக்கு  மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரலாற்று ரீதியாக தமிழ் தேசியம் பேசிய அரசியல் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருகின்றன. ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டக்கட்மைப்புக்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது முக்கியமானதாகிறது. துற்போதைய சூழலில் கட்சிகளிடம் தொண்டர்கள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகின்றது. கட்சிகளின் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் எவையாயினும் பணம்பெற்றுக்கொண்டு திரளும் மக்கள் கூட்டமே காணப்படுகின்றது. இது கட்சி சார்ந்த கட்சிக்கு விசுவாசமான மக்கள் கூட்டமாக இல்லாமல் யாரொருவர் பணம் கொடுத்தாலும் அவர்களுக்காக அணிதிரளும் ஒரு வகை மந்தைக்கூட்டமாகவே காணப்படுகிறது எனலாம். இவர்களை ஒருங்கிணைப்பதற்கு முகவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அணுகினால் இந்தக்கூட்டத்தை திரட்டிவிடலாம் என்ற நிலை தான் காணப்படுகின்றது. இந்த முகவர்களாக உள்ளுர் அமைப்புக்களின் தலைவர்கள் செயற்படுவதும். மறுப்பதற்கில்லை. ஆகவே தான் தேர்தலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பணம் தான் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறது எனலாம். இந்த நிலைமைகளில் அரசியல் கட்சிகள் அடிநிலைத் தொண்டனைத் திரட்டுவதற்கான களமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலைப்பார்க்கலாம். இது கிராமங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. கட்சிக்கான தொண்டன் எப்படி உருவாகுவான் என்பதை கட்சிகள் கற்றறிய வேண்டிய காலமிது. 

நிலைத்த அபிவிருத்திக்கு அரசியல் தைரியம் வேண்டும்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை வடபகுதியில் கடந்த வாரம் முழுவதும் பிரதேசசெயலர் ரீதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் வெறும் தனிப்பட்ட வசைபாடல்களாகவே நிறைவுற்றிருக்கின்றன. அரசியல்தீர்விற்கு முன்னர் அபிவிருத்தியிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கின்ற அரசாங்கம் தனது அபிவிருத்திக்கான தெளிவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அதிலும் என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் மக்களுக்கு அபிவிருத்திசெய்யவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் எம்மை தெரிவு செய்தார்கள் என்று மார்தட்டுவதையும் காணமுடிகிறது. அபிவிருத்திபற்றி பேசும் போது நிலைத்த அபிவிருத்தி பற்றிச்சிநதித்தாக வேண்டும். அதில் நிலையான இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும். அதற்கான முயற்சிகளும் சமாந்தரமாக எடுக்கப்படுகின்ற போதுததான் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும்.  

Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.

Sunday, 23 February 2025

2025-ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை - விமர்சனப் பார்வை

Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் மலிந்து கிடக்கின்ற ஊழல், முறைகேடு போன்ற விடயங்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான முறைமை மாற்றத்தை முன்னினைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி அதனை நோக்கி நகர்கிறதா? ஆல்லது ஏலவே இருக்கின்ற அதிகாரக்கட்டமைப்புக்களில் ஏறிக்குந்தியிருந்து அதனைச்சுவைக்கிறதா? ஏன்ற கேள்வி வலுவாகிறது. கடந்த வாரம் பிரதமமந்திரி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார் அப்போது சிறுவர் உளநலமேம்பாடு தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்காக அவரைச்சந்திப்பதற்கு வாயப்புக்கேட்டு அமைச்சர் சந்திரசேகரத்தைத் தொடர்புகொண்டிருந்தோம். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்டு இறுதியாக கந்தர்மடத்திலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். என்னொடு ஊடக நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஏலவே சினிமாஅரங்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வைத்திருந்த அலுவலகத்திற்கு ஒப்பானதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே கேள்விகள்,அதே அணுகுமுறைகள், அதே மூடிய அறைகள், முறைத்த முகங்கள் என்று எந்த மாற்றத்தையும் காணவில்லை. தெளிவான பதில்கள் இல்லை, தமது அலுவலத்திலேயே மக்கள் அணுகும் முறைமையில் மாற்றத்தை செய்ய முடியாதவர்கள் எப்படி நீண்ட காலம் புரையோடிப்போன நிலைத்த கட்டமைப்புக்களில் மக்கள் சார்பு நிலையை உருவாக்கப்போகிறார்கள் என்பது புரியவில்லை. அது நிற்க,

Saturday, 15 February 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனம் அரசியல் அசிக்கத்தைப் போக்குமா?



Dr. தேவநாயகம் தேவானந்த்

தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற போராட்டம் மக்கள் மயப்பட்டுவருகின்ற சூழலில் யாழ்ப்பாண அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது போலும். இந்தத் தருணத்தில் இலங்கையின் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கிறார். இது உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார ஆரம்பமாகவும் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை சமாளிப்க்கும் முயற்சியுமாகவே பார்க்கமுடிகிறது. இதற்கிடையில் பிரதமர் பொறுப்பு வகிக்கும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு தலைவர், மூத்த பேராசிரியர் கபிலா சேனிவிரத்ன, அனைத்து பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கும் அவர்கள் பதவிகளை பெப் 13 திகதிக்கு முன்னர் ராஜினாமா செய்யுமாறு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் ஏன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, தேசிய கொள்கையின் பரந்த அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படுகின்றது.  

Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.

Monday, 3 February 2025

Questioning the Need for Continued NGO Politics in Sri Lanka


(The Article Published in Yarl Thinakural in Tamil, 02.02.2025)

Dr. Thevanayagam Thevananth

The re-election of Donald Trump as the President of the United States in 2025 has led to significant global policy shifts. In particular, his decisions regarding foreign aid and international development are expected to have a substantial impact worldwide. Shortly after taking office, Trump signed an executive order halting all U.S. foreign aid for 90 days. This decision presents a major challenge for NGOs operating in Sri Lanka, potentially forcing them to reduce efforts in human rights and social development. As these funding cuts take effect, organizations will need to find new ways to sustain their operations and ensure the continuation of essential projects. In the future, many NGOs could disappear due to financial constraints.

இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசியல் நிலைக்குமா?

 

(Yarl Thinakural Article ,02.02.2025 ) 

Dr. தேவநாயகம் தேவானந்த்

2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்க உலகளாவிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுததிருக்கிறது. குறிப்பாக , வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பாக இவரது முடிவுகள் உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்  பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இந்த முடிவுகளால் இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது, இது மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் முயற்சிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிதி வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்போது, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், அத்தியாவசியத் திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்யவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் குறைப்புகளின்  விளைவாக எதிர்காலத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் காணாமல் போகக்கூடும்.  இந்தக்கணத்தில் பலவிடயங்களை நாங்கள் சிந்தித்தாக வேண்டியதாகிறது. இந்த அமெரிக்க நிதியுதவிகள் வடக்குக்கிழக்கில் எதை செய்தன என்பதையும் பார்த்தாக வேண்டும். இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தன, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில்நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளில் பல, ருளுயுஐனு மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் உட்பட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெறுகின்றன. இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 1956 தொடக்கம் அமெரிக்கா 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியை வழங்கியுள்ளது, 

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நன்மைகள் பல இருந்தாலும் பாதிப்புக்களும் இருந்திருக்கின்றன. அதில் வடக்கு கிழக்கில் தனித்துவமாக மக்கள் அமைப்புக்களாக இருந்த பல அரசார்பற்ற நிறுவனங்களை செயலிக்கச் செய்தததைக் குறிப்பிடலாம். இதன் பயன் இன்று சர்வதேச

அரசசார்பற்ற நிறுவனங்களின் ஓலமாக ஒலிக்கும் சிவில் அமைப்புக்கள் செயலிழந்து போயுள்ளன, அவை விளைத்திறனுடன் இல்லை’ என்பதைக் கேட்க முடிகிறது. இந்த வினைத்திறன் இன்மைக்கு என்ன காரணம் என்று சிந்தித்தாக வேண்டும். 

Saturday, 25 January 2025

செய்தி அரசியலிலிருந்து செயற்பாட்டு அரசியலுக்கு நகர வேண்டும்.

 


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களின் அடையாளமான பல விடயங்களை கொண்டிருக்கிறது. அதில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி , பொங்கு தமிழ் நினைவிடம், மாவீரர் சதுக்கம் என்று ஈழப்போராட்டத்தின் நினைவுகளைத் தாங்கிநிற்க்கும் நினைவுத்தூபிகள் குறிப்பிடத்தக்கன. 

2001 ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் பொதுமக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி  பொங்கு தமிழ் பிடகடனத்தையும் வெளியிட்டார்கள்.. 2001 ஆண்டுமிக மோசமான இராணுவ அடக்குமுறைக்குள் யாழ் குடாநாடு இருந்த காலகட்டம், அப்போது வன்னிப்பெருநிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

Sunday, 19 January 2025

தமிழாராய்ச்சி மகாநாட்டிலிருந்து எங்கு புறப்பட்டோம் ? எதை அடைந்தோம் !!

Dr. தேவநாயகம் தேவானந்த்

(Sunday Yarl Thinakural 19.01.2025)

டிசம்பர் 17, 2022 அன்று, வடக்கு இலங்கை மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 18 அன்று,  படகில் இருந்து 104 பேர் கொண்ட குழு மீட்க்கப்பட்டனர். கடற்படை அவர்களை மியான்மர் நாட்டின் ரோஹிங்கியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.  ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்கள், மியான்மரில் இனஅழிப்பு செய்யப்படுவதால்; தமது வாழ்விடத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தமது நாட்டைவிட்டு கடல்வழியாக வெளியேறியவர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு கடற்படையால் மீட்கப்பட்டார்கள். 

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 

Saturday, 4 January 2025

"உலகமயமாதலுக்கு பதில் அமெரிக்கமயமாதல்"



Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் புதிய அரசாங்கம், பல சவால்களைஎதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார சரிவிற்குப் பிந்தைய முன்னேற்றத்திற்கு உலக வங்கி, IMF போன்ற அமைப்புகளின் உதவியை நாடி நிதி பூர்த்தியை மேம்படுத்த முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கம் இந்த அரசின் முதன்மை வேலைத்திட்டமாகச்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து சமூகங்களை இணைத்து அரசியல் நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாய சூழலும் காணப்படுகின்றது. அதே வேளை வெளிநாட்டு உறவுகளை தந்திரோபாயமாக முன்நகர்த்த வேண்டியுள்ளது.  இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சிறந்த தந்திரோபாயங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த அத்தனை விடயங்களும்; நிலையான அரசியல் சூழலை உருவாக்குவதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்கும் நோக்கம் கொண்டன.

Saturday, 28 December 2024

பெருவெற்றி யாருக்கு ?

( Yarl Thinakural Article 29th Dec, 2024)


Dr. தேவநாயகம் தோனந்த்

அண்மைக் காலங்களின் இந்தியாவின் அயலுறவு கொள்கை ஒரு பதட்டமான நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் அயல்நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அதன் விளைவாக அந்த நாடுகள் சீனாவின் பக்கம் நகரும் தோற்றப்பாடுகள் போன்ற நிலைமைகளால் இந்திய வெளியுறவுக் கொள்கை பதட்டத்தில் காணப்படுகிறது எனலாம். 

பொதுவாக இந்தியாவின் அயல்நாடுகளில் ஆட்சியமைப்பவர்கள் தமது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவிற்கு சென்று ஆரம்பிப்பது வழமை. இது அயலில் உள்ள பெரியண்ணையைப் ( Big Brother ) பார்க்காது போவது தவறாகிவிடும் என்ற பய உணர்வு சார்ந்தது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை. 

Wednesday, 25 December 2024

‘பட்டம்’ , ‘பட்டம்’ பறக்குது பார்…

Dr. Thevanayagam Thevananth

2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ );  கௌரவத்திற்குரிய (‘Honorable’)   கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும். 

Sunday, 15 December 2024

இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை !!???

 Dr.தேவநயாகம் தேவானந்த்


கடந்த சில மாதங்களின் இரண்டு நாடபளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள்  உலகின் கவனத்தை ஈர்த்தன. 

கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்  பிரித்தானிய மன்னர் சார்ல்ள்ஸ் அவரே அவுஸ்ரேலியாவின் குடியரசு தலைவராக  தற்போதும் இருக்கிறார்.  அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளன்று  அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் 'நீங்கள் எனது மன்னரில்லை' என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டுள்ளார். ஆனால் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவராக  இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும். மன்னர் இந்த நாட்டவர் இல்லை . சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர். பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சப்பவத்தின் பின்னர் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன. இதிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போது செனட்டர் தனது பழங்குடிகளின் தோலாலான பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது பாராளுமன்ற உடைப்பாரம்பரியத்திற்கு மாறானதாக இருந்தது.