Showing posts with label Tamil Journalism. Show all posts
Showing posts with label Tamil Journalism. Show all posts
Tuesday, 21 November 2023
வானலையில் தமிழ்ஒலி -14 : தமிழ்த் தேசிய வானொலி - புலிகளின் குரல் ( Voice of Tiger)
விடுதலைப்புலிகள் தகவல் தொடர்புத் துறையில் வல்லவர்களாகத் திகழ்;ந்தார்கள் என்ற கருத்து உண்டு. விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வகையான ஊடகங்களையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். இந்த வலுவான தொடர்பாடல் திறன் காரணமாக மக்களை வசிகப்படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். தகவல்தொடர்பு துறை விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் மிக முக்கியமான பிரிவாகும். வெகுஜனத் தொடர்பாடல் மூலம் அரசியல் சூழ்நிலையின் அசாதாரணத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் மக்களுக்கும் கற்பித்தார்கள். அரசை எதிர்க்க மக்களை ஊக்குவிப்பதற்காக வானொலியைப் பயன்படுத்தினார்கள். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது. இலங்கையில்; விடுதலையின் அவசியத்தையும் மகத்துவத்தையும் விடுதலைப் புலிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வான்வெளிக்குச் சென்றார்கள். அதற்காக ‘புலிகளின் குரல்’ வானொலியை ஆரம்பித்தார்கள். இது வானலையில் புரட்சிகரமானதான தமிழ்ஒலியாகப் பார்க்கப்படுகிறது.
வானலையில் தமிழ்ஒலி 13 : புலிகளின் குரல்
சுதந்திர வானொலி
------------------------------------
வாலையில் தமிழ்ஒலிபரப்பு தொடரில் இது வரை பி.பி.சி தமிழ், வெரித்தாஸ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மற்றும் மொஸ்கோ வானொலியின் தமிழ் ஒலிபரப்புக்கள் பற்றிப் பாரத்தோம். உலகின் ஒலிபரப்பு சேவைகள் அரசுகளின் கட்டுப்பாட்டிலும் தனியாரின் கட்டுப்பாட்டிலுமாக காணப்படுகின்றன. அரச வானொலிகளுக்கு மாற்றாக பல சமுதாய ஒலிபரப்புக்களும் வந்திருக்கின்றன. இவற்றோடு உலகெங்கும் முக்கியம் பெறுவதாக அமைந்திருப்பது. விடுதலை இயக்கங்களின் வானொலிச் சேவைகள். விடுதலை இயக்கங்கள் தமது கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக வானொலிகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. இது சட்டவிரோத ஒலிபரப்பாக அரசுகளால் பார்க்கப்பட்டுள்ளன. நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இருந்து இவ்வாறான வானொலிகள் ஒலிபரப்புக்களை மேற்கொண்டிருக்கின்றன.இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் இலங்கை அரசோடு போரிட்டார்கள். அந்தச் சூழலில் தமக்கான வானொலியொன்றை உருவாக்கினார்கள்.
Thursday, 5 October 2023
வானலையில் தமிழ் ஒலி -18 : சமுதாய வானொலியாக புலிகளின் குரல்
வானொலிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவதும் போற்றப்படுவதும் சமுதாய வானொலி, இது வணிக மற்றும் பொது ஒளிபரப்புக்கு மாற்றான மூன்றாவது வானலையை உருவாக்கும் முயற்சியாகும்.. சமுதாய வானொலிகள் குறித்த எல்லைப் பரப்புக்குள் உள்ள, அதாவது வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளை உடைய சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. உள்ளுரின் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு பிரபலமான மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை அவை ஒளிபரப்புகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் வணிக அல்லது வெகுஜன ஊடக ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படுவதில்லை. சமுதாய வானொலி நிலையங்கள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கத்தினரால் இயக்கப்படுகின்றன எனலாம். அவர்களுக்கு அது சொந்தமானது என்ற உணர்வைக் கொடுக்கின்றன. அவர்களின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவாக இவ்வாறான சமுதாய வானொலிகள் இலாப நோக்கற்றவை மேலும் தனிநபர்கள் குழுக்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் கதைகளைச் சொல்லவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்குகின்றன.
Labels:
Cylon Radio,
LTTE Radio,
Srilankan radio,
Tamil Journalism
இலங்கைத் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து புலிகளின் குரல் ஒலிபரப்பு
தொன்னூறுகளில் விடுதலைப்புலிகள், விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும்
மக்களுக்கும் இடையே தொடர்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தவும்; ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்குக்காரணம் விடுதலைப்புலிகள் ;தமது தலைமறைவு வாழ்வை மெல்ல முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன் வெளிப்படையாக வந்தார்கள், தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் மக்கள் முன் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது போலும். தமது முகங்களைக்காட்டி பொதுவெளிக்கு வந்த பின்னர் மக்களின் கேள்விகளுக்கு விடைகொடுக்க வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றியிருந்தது இதனை புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை எதிர்கொள்வதற்காக ஊடகங்களை நன்கு திட்டமிட்டு தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தக்காலகட்டம் புலிகள் கரந்தடிப்படையாக இருந்து மரபுவழி இராணுவமாகவும் தம்மை பரிணாம வளர்ச்சிக்குள் இட்டுச் சென்ற செயல் முறையும் நடைபெற்றதை இனங்காண முடியும்.
Saturday, 2 April 2022
தமிழ் அகரமுதலியியல் நாள் நிறைவுவிழா -2020
“தமிழ் அகரமுதலியியல் நாள் நிறைவுவிழாவில் ‘தமிழ் இதழியலில் கலைச் சொற்;கள்’ என்ற தலைப்பில் கருத்துரையை நிகழ்த்தும் வாய்ப்பு 2019 ம் ஆண்டு சென்னையில் கிடைத்தது . எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஈழத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் எல்லோர் முகத்திலும் காணப்பட்ட மலர்ச்சி என்னை வியப்பிலார்த்தியது. புலிகளால் வெளியிடப்பட்ட கலைச்சொல் அகராதி நூலை அறிமுகம் செய்து இதழியலியல் கலைச்சொல் பயன்பாடு பற்றி ஈழத்தை மையப்படுத்தி பேசியிருந்தேன். ஈழத்து கலைச்சொற்கள் பற்றிப் பேசியபோது மிகுந்த வரவேற்றுபுக்கிடைத்தது. இந்த உற்சாகம் கலைச் சொல் தேடலை அதிகரித்திருக்கிறது.” என்று தேவநாயகம் தேவானந்த் அந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டார். ஈழத்தவர்கள் இந்தியத்தமிழ் புலத்தில் பங்கேற்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்குரிய விடயமாகும்.
Monday, 28 March 2022
‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்
![]() |
| Thevanayagam Thevananth |
சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு அழகு சேர்ப்பது திராவிடப்பாணியில் அமைந்த அதன் கட்டடங்கள் அதில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம். அது ‘முற்றம்’.
தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை. அதன் வளர்ப்புத் தந்தை பேராசிரியர் கோ.இரவீந்திரன்.
முற்றத்தில் அழகாக கோலமிடமுடியும். ஆனால் முற்றத்தை உருவாக்குவதென்பது சற்று சிரமமானது. புhரம்பரியமாக பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமானது. அதற்காக பாடாய்ப்பாடுபட வேண்டும். இது ஒரு பண்பாட்டுப் புரட்சியும் கூட. அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம்.
இந்தப் பண்பாட்டு புரட்சியை ஆரம்பித்து வைத்ததில்; யாழ்ப்பாணப்பல்கைலக்கழகத்திலிரு ந்து வந்திருந்த நானும் இருந்திருக்கிறேன் என்பதை மீள நினைக்கின்ற போது பேரானந்தமே!.
பேராசிரியர் கோ. இரவிந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வகுப்புக்கு வெளியே வகுப்பு’ என்ற தத்துவத்தின் செயல் வடிவம் தான் ‘ முற்றம்’.
Tuesday, 15 March 2022
நீண்ட இடைவெளியின் பின் உள்ளம் சஞ்சிகை
Sunday, 6 November 2016
காலைக்கதிர் பத்திரிகை இதழியல் பரப்பிற்கு புதிய வீச்சைக் கொடுக்கட்டும்.
Sunday, 7 October 2012
தமிழ் இதழியல் துறை புதிய பரிமாணத்தை நோக்கி வளர்ந்து செல்லும்
அதன் பயனாக பாரம்பரிய ஊடகங்கள், புதிய ஊடகங்கள் என்ற பெரும் வேறு பாடு பற்றி பேசப்படுகினறது. நிறுவனமயமாக மையப்பட்டு நின்ற இதழியல் துறை இன்று தனிநபர் சார்ந்ததாக மையம் கொள்கின்றது. சாதாரண பொதுமகன் ஒவ்வொருவருக்கும் தான் அறிந்த விடயங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)




.png)
.png)
