Sunday 3 April 2011

பேராசிரியர் நந்தியின் பங்களிப்பு பெரியது – ஆறுதிருமுருகன்

http://www.globaltamilnews.net,%2002/ ஏப்ரல் 2011 ,

மருத்துவ பீடத்தை வளர்க்க கடுமையாக உழைத்தவர்.



மருத்துவ பீடத்த்தின் வரலாற்றில் அதன் வளர்ச்சியில் போராசிரியர் நந்தியின் பங்கு அளப் பெரியது என்று தெரிவித்துள்ளார் தெல்லிப்பளை துர்க்கா தேவள்தானத்தின் தலைவரும் அதிபருமான ஆறுதிருமுருகன். போராசிரியர் நந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நினைவு நிகழ்வில் தலமையேற்றுப் பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



அங்கு மேலும் உரையாற்றிய ஆறுதிருமுருகன் மருத்துவபீடத்தின் வரலாற்றில் நந்தி மிகவும் முக்கியமானவர். மருத்துவபீடத்தை வளர்க்க கடுமையாக உழைத்தவர். பீடாதிபதியாக இருந்து மருத்துவபீடத்திற்காக உழைத்த நந்தி சாதாரணமாக வருகை விரிவுரையாளராக இருந்த பொழுதும் தனது கடமையை அதிகம் ஆற்றியவர்.



அவரிடம் பெரிய மனமும் பங்களிக்கும் உழைப்பும் இருந்தது. அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் ஆழமானவை என்றும் தெல்லிப்பளை துர்க்கா தேவள்தானத்தின் தலைவரும் அதிபருமான திரு ஆறுதிருமுருகன் தெரிவித்தார். இன்று மாலை (30.03.2011) யாழ்ப்பாணம் இந்துமாமன்றத்தில் பேராசிரியர் நந்தி என்கிற சிவஞானசுந்தரத்தின் பிறந்த நாள் நினைவுக்கூட்டம் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கனும், சிறப்புரையை தமிழ்த்துறைப் பேராசிரியர எஸ். சிவலிங்கராசாவும், நினைவுரையை சமுதாய மருத்துவப் பேராசிரியர் சிவராஜாவும் நிகழ்த்தினர். தொடக்கவுரையையும் நன்றியுரையையும் ஊடக கற்கை வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இணைப்பாளர் தே.தேவானந் நிகழ்த்தினார்.



நிகழ்வில் நந்தியின் தம்பி தங்கைகளுக்கு என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலிற்கான விமர்சன உரையை தமிழ்ப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா வழங்கினார். அத்துடன் நந்தியின் சிங்கப்பூர் டாக்டர் என்ற நாடகமும் ஆற்றுகை செய்யப்பட்டது. ஆற்றுகை செய்யப்பட்ட சிங்கப்பூர் டாக்டர் தொடர்பான பதிவு குளோபல் தமிழ் செய்திகளில் விரைவில் இடம் பெறும்.



No comments:

Post a Comment