‘இதழியல்’என்ற சொற்பதம் இன்று பலவேறு அர்த்தங்களைத் தந்து நிக்கிறது.பத்திரிகைகள் மக்கள் குரலாகவும் ஆட்சியாளர்களில் குரலாகவும் ஆண்டாண்டு காலமாக பணிசெய்து வந்திருக்கிறதான சூழலில் தொழில் நுட்பத்தில் புரட்;சியினூடான வளர்ச்சி பெரும் மாற்றத்தை உண்டு பண்ணி வந்திருக்கிறது. சமூகமாற்றம் உலக அரசியல் மாற்றம் அரசுகளின் பலம் சார்ந்த போட்டிகள், யுத்தங்கள் போன்றவற்றினூடாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி இதழியல் துறையிலும் ஏற்பட்டு மிகப்பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் பயனாக பாரம்பரிய ஊடகங்கள், புதிய ஊடகங்கள் என்ற பெரும் வேறு பாடு பற்றி பேசப்படுகினறது. நிறுவனமயமாக மையப்பட்டு நின்ற இதழியல் துறை இன்று தனிநபர் சார்ந்ததாக மையம் கொள்கின்றது. சாதாரண பொதுமகன் ஒவ்வொருவருக்கும் தான் அறிந்த விடயங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
கணப் பொழுதுகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.
இவையெல்லாம் தொழில்நுட்பத்தி;ன் வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கிறது. இப்போ பாரம்பரிய ஊடகங்களும் புதிய ஊடகமும் ஒன்றோடு ஒன்று கலந்து பகிர்ந்து ஒன்றறக்கலந்து நிக்கிறன. ஊடக அறிவுப்புலமையில்லாதவர்கள் இதழியலாளராக முடியும்? என்ற நிலை காணப்பட்டாலும்.தொழில்சார் ஊடகவியலாளனின் தேவை உணரப்பட்டவண்ணமே உள்ளது.
ஊடகப்பணியில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரிடமும் பல் ஆற்றல் வேண்டப்படுகின்றது எனலாம். எழுதுவது தொடக்கம் தட்டச்சு செய்து பக்கம் வடிவமைத்தல் வரை தெரிந்தாக வேண்டும். புகைப்படங்களை எடுப்பதற்கும், ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கும் எடிற்றிங் செய்வதற்கும் தெரிய வேண்டும்.மொழிசார்ந்த அறிவும் பல்துறை சார்ந்நத புலைமையும் சிறந்த தொடர்பாடல் திறனும் அவசியமாகின்றன. இதற்காக பயிற்சியும் கல்வியும் தேவையென்ற நிலை வளர்ந்நத நாடுகளில் பல தசாப்தங்களுக்கு முன்னமே உணரப்பட்டு செயல் வடிவம் பெறத் தொடங்கியிருந்தது.
ஆனால் தமிழ் இதழியல் துறையில் இதழியலைக்கற்றிந்து பணிசெய்யும் நிலைமை கடந்த பத்தாண்டுகளாகவே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. முயன்று தவறலாக இதழியல் துறையில் பணியாற்றிய நிலைமைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஊடகத்தை படிப்பதற்கு பலர் முன்வருகிறார்கள், ஏற்கனவே பணிசெய்கின்றவர்கள் தம்மறிவை விருத்தி செய்ய விரும்புகிறார்கள். ஊடக நிறுவனங்கள் பயிற்றப்பட்டவர்களை பணிக்கமர்த்த விரும்புகிறார்கள். ஆகவே தமிழ் இதழியல் துறை புதிய பரிமாணத்தை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment