காணாமல் போனோர் பிரச்னையைப் பேசிய நாடகம் ‘அக்கினிப்பெருமூச்சு’
1998 ஆண்டு தொடக்கம் 2002 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த இராணுவ சிவில் நிர்வாகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்ந்ததான விடயமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எழுந்த நாடகங்கள் காணப்பட்டன. நாடகத்தயாரிப்புக்கள் பற்றியும் நாடகத் தயாரிப்பில் ஈடுபடுவோர் பற்றியும் அறிவதற்காக பெரும் முயற்சிகள் இராணுவத்தரப்பால் எடுக்கப்பட்டன. யதார்த்த உண்மைகளை நாடகத்தினூடு பேசியதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டது. இருப்பினும் ää பல்கலைக்கழக மாணவர்களின் தற்துணிவினால் பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து பல்கலைக்கழகம் என்னும் ‘பாதுகாப்பு வெளிக்குள்” மேடையேற்றப்பட்டன. இந்த வகையில் 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற் றப்பட்ட தமிழர் காணாமற்போதல் தொடர்பான பிரச்சினை களை பேசிய ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகத்தைக் குறிப்பிட்ட முடியும். அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தற்துணிவோடு செயற்பட்ட முப்பது இளைஞர் யுவதி களோடு இணைந்து வேலை செய்த அனுபவம் பூரிப்பானது. இந்நாடகத்தின் எழுத்துருவாக்கம்ää நெறியாள்கைப் பொறுப்பை நான் ஏற்று நிறைவேற்றியிருந்தேன். அந்த மேலான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விளைகிறேன். யாழ்ப்பாண மக்கள் 1997ம் ஆண்டுக்குப் பின் திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் அடைபட்டுக்கு கிடப்பதாக உணர்ந்தார்கள். இராணுவ சிவில் ஆட்சி யாழ்ப்பாண மக்கள் மகிழ்வாய் இருக்கிறார்கள் என்று வெளியுலகுக்கு காட்ட முயற்சித்தது. இதனைவெளியுலகுக்குச் சொல்லுவதற்காக இராணுவ சிவில் நிர்வாகத்தின் ஊதுகுழல்களாக ‘தலையாட்டு பொம்மைகள்” நிர்வாக இயந்திரத்தின் கதிரைகளில் இருத்தப்பட்டார்கள். இவர்கள் பத்திரிகையாளர்களுக்கும் சர்வதேச பிரமுகர்களுக்கும் எல்லாம் நல்லபடி நடப்பதாகச் சொன்னார்கள் உண்மையில் நிலைமை வேறாக இருந்தது. ஊர்கள் தோறும் அரச நிவாரணத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கைதுகள் திடிர் சுற்றி வளைப்புக்கள்ää வீதிகள் தோறும் சோதனைச் சாவடிகள்ää இராணுவ முகாம்கள்ää வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலைமைää பல இளைஞர்கள் திடீர் எனக் காணாமற் போதல் என்று நிமைமைகள் இருந்தன. உறவுகள் காணாமற் போன துயர் பெரும் அவலமாகத் தொடர்ந்தது. பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்திருந்தன. இராணுவ வியாபாரி மிகுந்த இலாபம் சம்பாதித்தனர். இந்த நிலைமைகள் எல்லாம் மூடிமறைக்கப்பட்டன. இந்நேரம் கற்றோர் ‘மணிவிழா” கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மேள தாளங்களோடு மணிவிழாக் கொண்டாட்டாங்கள் தடபுடலாக நடந்தது. உள்@ர் பத்திரிகையான உதயன் பத்திரிகையில் ‘பாராட்டி வாழ்த்துகிறோம்” இல்லாத பக்கம் இருக்கவில்லை. பாடசாலை அதிபர்கள்ää அதிகாரிகள் என்று பலரும் பத்திரிகையில் பாராட்டி வாழ்த்துவதை விரும்பினார்கள். நீதியே நிலவாத அன்றைய யாழ்ப்பாணச் சூழலில் அரசியல் செல்வாக்கால் பலர் சமாதான நீதிவான்களாக ( ) பதவிப்பிராமணம் செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு சமாதானத்தை நிலைநாட்டுவது நோக்கமாக இருக்க வில்லை பட்டமொன்றை பெறுவதே நோக்கமாக இருந்தது. பத்திரிகைகளில் அவர்களுக்கான பாராட்டி வாழ்த்துக்கள் வேறு இந்த நிலையில் ஒரு சிலரே நடந்த அநீதிகள் பற்றி உலகுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் பல்கலைக்கழக மாணவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். காணாமற் போன தமது உறவுகளை மீட்பதற்காக அதிகாரிகளின் வாசல்களிலும் அரசியல் கட்சி அலுவலகங்கள் முன்பாகவும் இராணுவது.P முகாம்களின் முன்பாகவும் மனித உரிமை ஆணைக்குழு முன்பாகவும் பல போராட்டங்கள் நடத்திய உறவுகளை காணும் வாய்ப்பு பல்கலைக்கழக மாணவவர்களாக இருந்த எமக்குக் கிடைத்தது. தீபமேந்திய போராட்டம்ää உண்ணாவிரதப் போராட்டம்ää மறியல் போராட்டம்ää சர்வமதப் பிரார்த்தனைää அமைதி ஊர்வலம் என்று தம்மைத்தாமே உருக்கி நின்ற அந்த உறவுகளோடு நாம் பேசினோம். அழுதுää அழுது கதை சொன்னார்கள். பல்கலைக்கழக மாணவர்களாகிய எமக்கு தம்கதை சொல்வதால் தங்கள் உறவுகள் மீளக்கிடைத்து விடுவார்கள் என்று நம்பி கதை சொன்னார்கள் கடிதங்கள் எழுதி எல்லா இடமும் அனுப்பியிருந்தார்கள். ஓரிரு விசாரணைக் கமிஷன்கள் நடந்திருந்தன. அஙடகு சென்று கதறிக்கதறி கதை சொன்னார்கள் பத்திரிகையாளர்கள் படங்களை எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள். செம்மணி மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது அங்கு சென்று முழுநாளும் வெயிலில் கிடந்து தங்கள் பிள்ளையின் எலும்புக்கூடு வருகுதா என்று பார்த்தார்கள். மகனைத் தொலைத்த தாயின் அவலமும் கணவனைத் தொலைத்த மனைவியின் அவலமும் எம் நெஞ்சைப் பிழிந்தன. போராட்டத்தில் பங்கு பற்றுவதற்காக பஸ் ஏறி வருவதற்கோ பணமில்லாத பலரைப் பார்த்தோம். தம் உறவுகளை இராணுவத்தினர் கைது செய்து மறைத்து வைத்திருக்கிறார்கள் அவர்க்ள உயிரோடு இருக்கிறார்கள்இ அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதே வேளை செம்மணியில் புதைகுழிகள் தோண்டும் போதும் அங்கும் நின்றார்கள். தங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற எண்ணமும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் அவர்களது மனதிற்குள் கிடந்து போராடி அலைக்கழித்தலைப் பார்க்க முடிந்தது. தன் பிள்ளையை இராணுவத்தினர் விடுவிக்கவேண்டும் என்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்ட தந்தையொருவர் உண்ணாவிரதப் போராட்ட முடிவில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறினார். ‘நான் உணாவிலில் இருந்து செம்மணி வெளிக்குள்ளால ஒவ்வொரு நாளும்யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வாரனான். செம்மணி வெளிக்குள்ளால நான் வரேக்கை என்ர பிள்ளை புதைஞ்சு கிடந்து ‘அப்பா அப்பா என்னைக் காப்பாற்றுங்கோ” என்று கத்துறது போல இருக்கு. இந்த ‘இருமை” நிலை சிலரை சித்தப்பிரமை பிடித்தவர்களாக ஆக்கியிருந்தத. நினைவிலும் கனவிலும் தம் சொந்தம் வந்து போவதை எல்லோரும் உணர்ந்தார்கள். கோயில்களில் தம்மைவருத்தி வேண்டுதல்கள் செய்தார்கள். சாஸ்திரியின் பிணிதீர்ககும் ஆலோசனைக்கேற்ப உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிட்டார்கள். சாஸ்திரிகள் பிழைத்துக் கொண்டது தவிர நடந்தது வேறொன்றுமில்லை. இளம் மனைவிகள் தங்கள் கணவன் காணாமல் போனதால் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினார்கள். குங்குமப் பொட்டு வைப்பதற்கும் கலர் சீலை உடுப்பதற்கும் முழுவியளத்திற்கு நிற்பதற்கும் சிரமப்பட்டார்கள். அயலவர்கள் ‘வார்த்தைகள்” அவர்களை பெரிதும் இம்சித்தன. பல பெண்கள் தம் கணவன் காணாமல் போன போது தம் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார்கள். அன்று வயிற்றில் இருந்த பிள்ளைக்கு இன்று 5 - 6 வயது தந்தை முகம் அதற்குத் தெரியாது. தந்தை இல்லாத் துயரை அந்தக் குழந்தை அனுபவிக்கிறது. சில இளம் மனைவியர் தம் வயது முதிர்ந்த பெற்றோரையும்ää கணவனின் வயது முதிர்ந்த பெற்றோரையும் பிள்ளையையும் பராமரிப்பதை காணமுடிந்தது. தன் விருப்பத்திற்கு மனம் விட்டு அழ முடியாமல் இருப்பதாக அப்பெண்கள் சொன்னார்கள். இந்தத் துயர்கள் எம் நெஞ்சை அடைந்தன. இவர்களின் துயரை அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் உணர்ந்திருக்கவில்லை உலகு உணர்ந்திருக்கவில்லை என்பதை நாம் உணர்ந்தோம். இதற்காக எமக்கு பரிச்சையமான நாடக வடிவமூடாக இப்பிரச்சினையை பேசுவதெனத் தீர்மானித்தோம். எமது நோக்காகப் பின்வருவனவற்றைத் தீர்மானித்துக் கொண்டோம். . காணாமற் போன ஒவ்வொரு உயிர்களுக்கும் என்ன நடந்தது என என்பதை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை ஊடகங்களும் பொது அமைப்புக்களும் வழங்குவதற்குரிய தூண்டுதலை வழங்குதல். . பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் அவலத்தை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். . பாதிக்கப்பட்டோருக்கு ஆக்கபூர்வமான புனர்வாழ்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு பலரும் உதவ வேண்டும். . இனிவரும் காலங்களில் தமிழர் காணாற் போதல் என்கின்ற அவலம் நடக்கக் கூடாது இதற்காக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து விழிப்பாக இருக்கவேண்டும்.
நாடகத் தயாரிப்பிற்காக ஒரு மாத காலத்தை செலவிட்டோம். எமக்குள் கிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தேவையான கவிதைகளை முதலில் தொகுத்துக் கொண்டோம். வெளிப்படுத்த வேண்டிய பிரதான விடயங்களை தீர்மானித்துக் கொண்டோம். வேதனை இளம் மனைவியினதும் தாயினதும் துயரை பிரதானமாகப் பேசுவது எனத் தீர்மானித்துக் கொண்டோம். இதற்காக இரண்டு கதைகளை தேர்ந்தெடுத்து க் கொண்டோம். 1.கடலுக்குச் சென்ற கணவனைக் காணாது தவிக்கும் இருப்பத்தியிரண்டு வயது இளம் பெண்ணின் உண்மைக் கதை 2.மகன் உயிரை பறித்துக் கொண்ட ஜெமனை துரத்தும் தாயின் கதை தமிழர் பண்பாட்டில் காணப்பட யாழ் ஐதீகத்தை ஒத்தான கதை.
எழுத்துருவாக்கத்தின் போது எனது மனக்கண் முன் நிறையப் படிமங்களே முதலில் வந்தன. நின்றன இந்தப் படிமங்கள். அனைத்தும் நாம் சந்தித்தவர்கள். கதைக்கும் போது அவர்கள் வார்த்தைகளில் தெறித்தவை நான் ஒரு கருவறையான எழுத்துருவை உருவாக்கி அதற்கு ‘அக்கினிப் பெருமூச்சு” என்று பெயரிட்டு அதை நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன் அவர்களை எழுத்துரு பதித்திருந்தது. ஆனால் அவர்களிடம் ஒரு கேள்வி இருந்தது. நாடகத்தின் காட்சிகள் எவ்வாறு காட்சிப்படுத்தப்படும் உதாரணமாக நிலம் வெடித்து உயிர்கள் மேலெழுந்து வருதல் எவ்வாறு மேடையில் சாத்தியமாகும். இந்த அசாத்தியமான விடயங்களை பின்னர் தொழிநுட்பம் சார் விற்பனர்கள் சாத்தியமாக்கித் தந்தார்கள். எழுத்துருவை ஓரளவு பூர்த்தியாக்கிய பின்பு நாள் நாடகத்தின் பொறுப்பை ஏற்றிருந்த த.றொபேட் உடன் இரண்டு மூன்று இரவுகள் செலவிட்டேன். றொபேட்டை சந்திக்கும் போது கணனிக்கலைக்களஞ்சிய மென்தட்டில் இருந்து பெறப்பட்ட சில வகையான இசைகள் என் கையில் இருந்தன. நான் ஒவ்வொரு சூழலையும் விபரித்துச் செல்ல றொபேட் இமை மெட்டுக்கதளை அமைத்தார். இரவிரவாக பிளேன் ரீ குடித்து மனதை ஈடுபடுத்தி றொபேட் அமைத்த இசை மெட்டுக்களை பார்வையாளர் ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகத்தின் உயிராக இசை அமைத்திருந்தது. அதனைப் பலரும் வியந்தார்கள். பாராட்டினார்கள். இதன் பின் நான் நடிகர்களைச் சந்தித்து ஒத்திகைகளை ஆரம்பித்தேன். நாடகத்தில் நடன அமைப்புக்களை அதிகம் பயன்படுத்த எண்ணியதால் நடனம் தெரிந்த பலரையும் இணைத்துக் கொண்டிருந்தோம். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல மாணவிகள் ‘அக்கினிப் பெருமூச்சு” நாடக வெற்றிக்கு பெரிதும் உதவினார்கள். நாடகம் நடித்திராத பலர் இதில் பங்கு பற்றி மிக அற்புதமாக நடித்தார்கள். குறிப்பாக கணவனைத் தொலைத்த இளம் மனைவிக்கு நடித்தவரும் அவள் தாய்க்கு நடித்தவரும் ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிகப்படியான ஆற்றுகைச் செழுமையை தொடர்ச்சியான ஆற்றுகையின் போது கொடுத்து நின்றார்கள். நாடகத்தின் ஒத்திகைகளை செய்து கொண்டிருக்கும் போது பல அற்புதமான புதிய கற்பனைகள் உருவாகின. நெறியாளனும் நடிகர்களும் கொடுத்து வாங்கக்கூடியதான ‘வளமான சூழல்” அக்கினிப்பெருமூச்சு நாடகத்தயாரிப்பின் போது காணப்பட்டது. இந்த வளமான சூழலை ஆற்றல் உள்ள நடிகர்கள் சிருஷ்டித்தார்கள். ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகம் தான் எடுத்துக் கொண்ட விடயத்தைப் பேசுவதற்கு தனக்கு தேவைப் பட்டவற்றையெல்லாம் எடுத்து ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொண்டது. ‘செய்து காட்டல் பண்பு” இவ்வரங்கில் அதிகம் உண்டு. சமூகத்தின் நலனுக்காக உயிரைக் கொடுக்க முன்வந்த போராளிகள்ää இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாந்தர்கள்ää போரை விரும்புவோர்ää அட்டூழியம் புரிவோர்ää சுயநலம் மிக்க கற்றோர் என்ற பலதரப்பினர் பற்றிய எமது எண்ணத்தை ‘செய்து காட்டல் வெளிப்பாடு” மூலம் வெளிப்படுத்த முற்பட்டோம். இந்தப் பாத்திரங்களுக்கிடையிலான முரணே நாடகம். இவற்றுக்கிடையிலான ஊடாட்டத்தில் அழுகைää கோபம்ää ஏக்கம்ää தவிப்புää எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலெழுகின்றன. மொத்தத்தில் அவலச்சுவை மேலோங்கி நிற்கும் சாதாரண வாழ்வில் காணப்படும் பல தனித்தனி கதை மாந்தர்களை உள்ளடங்கியதான ஒரு ‘பொதுப் பாத்திர வெளிப்பாடு” இங்கு காணப்படும் வகை மாதிரிப் பாத்திர வெளிப்பாடாகவும் இதனைக் கருதலாம். அக்கினிப் பெருமூச்சு நாடகம் நான்கு பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. பாத்திரங்களை ஒருவர் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பர். அறிமுகம் பாத்திரங்கள் தொடர்பான விமர்சனங்களை உள்ளடக்கியதாகவும் அமையும். இதேவேளை பாத்திரங்கள் பேசுவதனூடாகவும் தாம் யார் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தி நிற்பர். இத்தோடு அறிமுகத்தில் பாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுவதும் முரண்படுவதும் கூட அறிமுகத்தில் நடக்கும். இந்த அறிமுகப்பகுதி 10 நிமிட நேரம் நடைபெறும். மேடையின் முன் திரை மூடியிருக்க திரைக்கு முன் உள்ள பகுதியில் பாத்திரங்கள் அறிமுகம் நிகழும். சமாதானப் போர் என்ற கோஷத்தை முன்வைத்து நடத்தப்பட்ட கைதுகள்ää சித்திரவதைகள்ää காணாமற் போதல் பற்றி இதில் பேசப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அந்தக் காலங்களில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறிக் கொண்டிருந்தார்கள். மீளக் கடியேறுவதற்காக வீடுகளை துப்புரவு செய்யும் போது தங்கள் வளவுகளுக்குள் புதைகுழிகள் இருப்பதை இனங்காண்பார்கள். இதனை உணர்த்துவதாக எம்மைச் சுற்றி எங்கும் புதைகுழிகள் என்பதை உணர்த்துவதாக மேடையெங்கும் புதைகுழிகள் காணப்படும் அவற்றில் நடுவில் சிறிய வீடு ஒன்றும் இதில் வெளிப்படுத்தப்படும் கூடு சிதைந்த ஊரும். தனியன்களான மனிதர்களும் இராணுவ ஆட்சியில் அவதிப்படுவதை நினைவுறுத்துவதாக இப்பகுதி அமையும். 3. ஒருவரின் உண்மைக்கதை கணவன் இல்லாத போது சமூகம் ஒரு இளம் மனைவியை எவ்வாறு பார்க்கிறது என்பதையும்ää அதிகாரிகளின் அலட்சியப் போக்குää அவர்கள் 1. பாத்திரங்கள் தம் பண்புகளோடு அறிமுகமாகி தமக்கிடையில் உறவு கொள்ளுதல். 2. இராணுவத்தினரின் அட்டூழியம். கதிரையைக் காப்பதற்காக தப்பித்துக் கொள்ளுதல்ää கோயில் வேண்டுதல்கள்ää குங்குமப் பொட்டை போடுவதா? அழிப்பதா? தாலியைக் கழற்றுவதா? அணிவதா? என்ற மனப் போராட்டங்கள் பற்றி இப்பகுதியில் உணர்ச்சியோடு பேசப்படுகின்றது. தன் பிள்ளையைக் கொண்டு செல்லும் ஜெமனை இந்தத் தாய் துரத்திச் செல்கிறாள். ஜெமன் இருக்குமிடத்தை சென்றடைவதற்காக பலரின் உதவியை நாடுகிறாள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதாகக் கூறி இவளிடம் இருந்து பலவற்றை பறித்துக் கொண்டு ஒன்றுமற்ற வெறுமையில் அவளை விடுகின்றனர். தன் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக தன் உடலைக் கொடுக்கிறாள். தன் கண்களைக் கொடுக்கிறாள். தன் அணைப்பைக் கொடுக்கிறாள். மட்டக்களப்பு திருகொணமலை போன்ற பகுதிகளில் தன் கணவனை தன் தம்பியைää தன் மகனை காப்பாற்றுவதற்காக இராணுவ அதிகாரியுடன் இரவுகளைக் கழித்த பெண்களின் கதைகளை இவை நினைவூட்டுகின்றன. போர் அக்கிரமத்தினால் எல்லாவற்றிலும் பற்றாக்குறை நிலவியது. இதனால் ஒவ்வொருவரும் தம் பசிபோக்க மற்றவனை கவனிக்காத போக்கு பிறர் மீது அன்பு செலுத்த முடியாத நிலை என்பன தமிழர் பகுதியில் அதிகரித்து வருவதையும் கூட இந்தச் சம்பவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தாயின் நினைவில் புதைந்து கிடக்கும் தன் குழந்தை புதைகுழி வெடித்து எழுந்து வருவதான நினைவுக் காட்சிகளும் இதில் வெளிப்படுத்தப்படுகின்றன. நாடகம் தன் உணர்வையும் பொருளையும் வெளிப்படுத்த இசைப்பாடல்களையும் படிமங்களையும் அதிகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. நடிப்பும்ää வார்த்தைகளும் நடனக்கோலங்களும் காட்சிகளும் பொருள் வெளிப்பாட்டுக்கு செழுமை சேர்த்துள்ளன.‘அக்கினிப் பெருமூச்சு” நாடகம் 2000ம் ஆண்டு மாசி மாதம் 09ää12ää13 திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டு பின் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 தடவை மேடையேற்றப்பட்டது. இக்காலத்தில் காணப்பட்ட இராணுவக் கெடுபிடி சூழல் காரணமாக உட்கிடையாகவே தமிழர் வாழ்வு யதார்த்தம் 4. மகனைத் தொலைத்த தாய் தன் மகனைத் தேடுதல் பேசப்பட்டது. சட்டத்தின் பிடிக்குள் சிக்கிவிடாமல் குறியீடுகளாக பலவற்றை சொல்ல வேண்டியிருந்தது. அன்றைய இராணுவச் சூழ்நிலைக்குள் வாழ்ந்த மக்கள் அந்தக் குறியீடுகளை உணர்ந்து கொண்டனர். ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகத்தில் மனதில் எழுந்த எண்ணங்களும் படிமங்களும் குறியீடுகளாகவே அதிகம் காட்சியாகின்றன. படிமங்கள் குறியீடுகள் நாடகப்பாங்கான அசைவுகள்ää இசைää நடனம் அனைத்தும் பிசைந்து ஒரு அவல உணர்வை பார்வையாளரிடம்ஏற்படுத்துகின்றது. நாடகத்தை பார்த்த பலர் அழுதார்கள்ää வருந்தினார்கள்ää தங்கள் தலை பாரமாக உள்ளதாக உணர்ந்தார்கள். பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். குறிப்பாக நாடகத்தைப் பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட பிள்ளைகளிற்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பு திட்டமொன்றை ஆரம்பித்து 125 மாணவர்களுக்கு உதவினார்கள். இதற்கு கைகொடுத்தல் நிதி” என்று பெயரிட்டார்கள். நிதி திரட்டலுக்காக ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகத்தின் தொடர்ச்சியாக ‘உயிர்விசை” என்னும் நாடகத்தை தயாரித்திருந்தோம். இராணுவ இயந்திரத்தின் அட்டூழியங்களுக்கு எதிர்ப்புக்குரலாக எழுந்த ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்ட அனைவரும் முழுமன ஈடுபாட்டுடன் காணப்பட்டனர். தங்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையை வெளிப்படுத்துகிறோம் என்ற திருப்தியில் காணப்பட்டனர். பலர் தங்கள் வீடுகளுக்கும் தெரியாமல் ஆற்றுகையில் பங்குபற்றியிருந்தனர். உண்மையில் நேர்மையுடனும்ää ஈடுபாட்டுடனும் அனைவரும் காணப்பட்டதால்ää ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகம் ஆன்ம வலுவுள்ளதாகக் காணப்பட்டது. இராணவக் கெடுபிடி காரணமாக பல தடவை இறுதி ஆற்றுகை என்று தீர்மானித்து மேடையேற்றுவோம் ஆனால் மீண்டும் மீண்டும் நாடகம் உயிர்பெறும். 2000ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்ற இடத்தில் நாடகத்தை ஒழுங்குபடுத்தியோர் இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதனோடு நாடகத்தை மேடையேற்றுவதை இடைநிறுத்திக் கொண்டோம். அதுவரை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் 11 தடவை நாடகம் மேடையேறியிருந்தது. ஆனால்ää மீண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் விளைந்த ‘சமாதான” சூழலில் இந்நாடகத்தை மேடையேற்றினோம். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களிற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வவுனியாää திருகோணமலைää கொழும்பு போன்ற இடங்களிலும் மேடையேற்றினோம். இதில் யாழ்ப்பாணத்திலும்ää திருகோணமலையிலும் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வில் மேடையேற்றப்பட்டதையும் கொழும்பில் ஒழுங்கு செய்த சிங்கள - தமிழ் கலைக்கூடல் நிகழ்வில் மேடையேற்றப்பட்டதையும் குறிப்பிட்டுக் கூறமுடியும். காணாமற்போனோர் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாத பெரும் பிரச்சினையாகத் தொடர்கிறது. இதனால் ‘அக்கினிப் பெருமூச்சு” நாடக ஆற்றுகையின் தேவை தொடர்ந்து உணரப்படுகின்றது. சமாதான காலத்தில் மேடையேற்றிய போது போர்க்கால நாடகத்தின் வலிமையை நன்கு உணரமுடிந்தது. இறுக்கமாக பயம் சூழ்ந்த காலத்தில் பிறர் ஈன நிலை கண்டு துள்ளிpய நாடகக் கலையுடன் பிணைந்து துணிச்சலோடு செயற்ப்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் அரங்கச் செயலாளிகளுடனும் இணைந்து செயற்பட்ட மேலான அனுபவத்தை என் இதயம் மீள மீள நினைத்துப் பூரிக்கிறது. யாழ்ப்பாணத்தின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படுகின்ற 1995 தொடக்கம் 2001 வரையான இராணுவ ஆட்சிக்காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட ‘அக்கினிப் பெருமூச்சு” நாடகம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்டது. இதில் அண்மையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள கலைக்கூடல் நிகழ்வில் மேடையேற்றப்பட்டதை குறிப்பிட்டுக் கூறமுடியும். இந்நாடகம் காணாமற் போனோரின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. அக்கினிப் பெருமூச்சு நாடகப் பயணத்தில் இணைந்து செயற்ப்பட்ட அனுபவம் மிகப் பெறுமதியானது. சுபாஙகி
நான் முதன்முதலில் நடித்த நாடகம் ‘அக்கினிப் பெருமூச்சு” ஆகும். எனக்கு நாடகம் பேசிய விடயத்தோடு உடன்பாடு இருந்ததாலும் நடனம் தெரியும் என்பதாலும் நாடகத்தில் இணைந்து கொண்டேன். ஏற்கனவே பாடசாலைகளில் நடன நிகழ்ச்சிகள் நிpறைய செய்த அனுபவங்கள் எனக்குண்டு. எனவேää எந்தவித பயமுமின்றி நடனம் செய்வதற்காக நாடகத்தில் ஒப்புக்கொண்டேன். முதன்முதலாக எல்லோரும் ஒன்றிணைந்து கதைத்த போது ஆண்கள்ää பெண்கள் என்று பலபேர் காணப்பட்டமையால் எனக்கு நான் செய்வேனோ என்கிற பயம் எழுந்தது. எனினும்ää செய்து பார்ப்போம் என்ற நிலையில் இதனுள் இறங்கினேன் முதலில் எங்களை சில வசனங்கள் பேச வைத்த போது எனக்கு பயம் எழத்தொடங்கியது. பலபேருக்கு முன் கதைப்பதென்றால் எனக்குப் பயம். குரல் நடுங்கத் தொடங்கிவிடும். எனினும் நான் எனக்குத் தெரிந்த மாதிரிக் கதைத்தேன். அதன் பின் நாடகத்தில் எனக்கு முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. சொல்லித்தருவதைச் செய்வதுதானே என எண்ணி சம்மதித்தேன். ஆனால்ää தேவா அண்ணாவினது நாடகங்கள் எல்லாம் நல்லது என ஏனையவர்கள் கதைத்த போது நான் செய்யாமல் விட்டு அவர் பற்றிய நல்ல அபிப்பிராயங்களைக் குழப்பிவிடுவேனோ என்கிற பயம் எழுந்தது. நான் நடிக்கவில்லை என்று சொன்னேன். அதற்கு நெறியாளரான தேவா அண்ணா ‘’நீர் தான் மகள் பாத்திரம் செய்ய வேண்டும்ää அதெல்லாம் செய்யலாம்”” என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். நாடகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நானும் ஒப்புக் கொண்டேன். ஆரம்பத்தில் நான் சொல்லித் தருகின்ற மாதிரிச் செய்வேனோ? என்கின்ற பயம் இருந்தது. ஆனால் எங்களிடமிருந்தே உணர்வுகள் வெளிப்பாடுகள் என்பவற்றை வெளிக்கொணரச் செய்வதன் மூலமும் எங்களுடன் கதைத்து எங்களது அபிப்பிராயங்களை கேட்டுää எங்களது உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்து செயற்பட்டதன் மூலமும் எமது பயம் நீங்கியது. இதற்கு ஏனைய நடிகர்களின் ஆதரவும் கிடைத்தது. அதன்பின்னர் நாடக ஒத்திகைகளின் போது எனது பாத்திரத்தினை வடிவாக செய்ய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. என்னால் இந்த நாடகத்துக்கு எந்தவித இழுக்கும் வரக்கூடாது என எண்ணினேன். மிகக் கவனமாக எனது பாத்திரத்தை உள்வாங்கி அப்பாத்திரத்தில் நடித்தேன். நான் நாடகம் செய்தது இதுதான் முதல் தடவை எனவே எனது பாத்திரத்தின் உணர்வு வெளிப்பாட்டுக்கு எனக்கு எனது ‘நடன அனுபவங்கள்” உதவி செய்தன. நடனத்தின் அங்க அசைவு முகபாவங்களினால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். ஆனால் நாடகம் இன்னொரு படிநிலை கடந்து வார்த்தைகளை அங்க அசைவுää முகபாவங்களுடன் இணைப்பதன் மூலம் எமது உணர்வுகளை வெளிப்படுத்தப்படுகின்றது. அசைவுடன் வார்த்தை சேரும் போது அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. நடனத்தில் பாத்திரங்களுக்கு சில வரையறுக்கப்பட்ட அசைவுகள் உண்டு உதாரணமாக கவலை என்ற உணர்வினை வெளிப்படுத்தும் போது அழமுடியாது. அழுவது போன்று பாவனையே செய்ய முடியும். இங்கு பாவனைதான் முதலிடம் பெறுகின்றது. ஆனால்ää நாடகத்தில் இத்தன்மைகள் இல்லை. சுதந்திரமான நிமைமை காணப்படுகின்றது.இதனால்ää அதிகளவில் எம்மை பாத்திரத்துடன் ஒன்றிணைக்கக் கூடியதாக இருந்தது. முதல் மேடையேற்றத்திற்கு முன் தேவா அண்ணா ‘நீங்கள் செய்யிறதுதான் நாடகம் பயப்படாமல் வடிவாச் செய்யுங்கோ” என்று கூறினார். இதை மனதில் கொண்டு துணிவுடன் மேடையேறினேன். எனினும் நான் வடிவாகச் செய்வேனோ அல்லது நடுங்கி வசனங்களை பிழைவிட்டு விடுவேனோ என்கின்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும்ää வடிவாச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. முதன் முதல் நாடகம் செய்து முடியும் மட்டும் நான் நானாக இல்லை. மேடையில் ஏறியபின் நான் என்ன செய்தனான் எப்படிச் செய்தனான் என்பதே எனக்குத் தெரியாது. நாடகம் முடிந்தபின் பார்வையாளர்கள் வந்து நாடகம் நன்றாக இருந்தது நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி நானா அப்படிச் செய்தேன் என்கிற பிரமிப்பு ஏற்ப்பட்டது. என்னாலும் நாடகம் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அப்போதே எனக்குள் வேரூன்றியது. என் நடிப்பை பார்த்தவர்கள் வந்து ‘’என்னெண்டு அந்த உணர்வுடன் செய்தனீங்கள் அதாவது அழுதனீங்கள்ää உங்களுக்கு அப்படி நிகழ்ந்த அனுபவம் இருந்ததா”” எனக் கேட்டபோது நான் நல்லாச் செய்தனான? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் ஆர்வம் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆரம்பத்தில் இருந்த வெட்கம்ää பயம் என்பன கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆண்களுடன் இணைந்து செய்வது என்பது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. நாடகத்தின் இறுதியில் நான் வேறொரு பாத்திரம் தாங்கி நடித்தேன். புதைகுழிக்குள் இருந்து மூச்சுடன் எழுந்து வரும் உயிர்களில் நானும் ஒருவராக இணைந்து நின்றேன். இதில் எழுந்து கொண்ட உயிர் மூச்சுக்கள் அசைய வேண்டும். குறிப்பாக அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். இதில் நான் முன்னைய காட்சியில் அடக்கப்பட்டதும் நினைவுக்கு வரும். எனது ஆசைகள் நிறைவேறாவிடின் எப்படிக் கோபப் படுவேனோ அந்த உணர்வில் செய்தேன். அவ்வாறு செய்யும் போது பரத நாட்டிய கட்டுப்பாடுகளை மீறி உடலை நன்கு அசைத்து அதற்கேற்ப கைகளை கொண்டு சென்ற போது வேறொரு அனுபவம் கிடைத்தது. நான் புதைகுழிக்குள் கிடக்கும் போது ‘நான் இறந்த பின் இப்படித்தானே கிடப்பேன்” என்ற உண்hவு வரும். அதுவும் ஒரு வித்தியாசமான மனக்கிளர்ச்சி நிலை. புதைகுழிக்குள் படுத்துக்கிடந்தபடி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இன்று வரை நிறைவேறவில்லை. அக்கினிப் பெருமூச்சு நாடகம் 18 தடவைகள் மேடையேற்றுப்பட்டுவிட்டது. எனினும்ää ஒவ்வொரு தடவையும் மேடையேறும் போது சிறுபயம்ää பதட்டம்ää ஏற்படுவது இன்னும் கூடக் காணப்படுகிறது. ஆனால்ää பார்வையாளர்கள் ஒவ்வொரு தடவையும் இயல்பாக நன்றாக நடித்ததாக எனது நடிப்பைப் பார்த்து தாம் அழுததாகää அந்தரப்பட்டதாக சொல்வார்கள். 2000ம் ஆண்டு பல்வேறு இடங்களிலும் பயம் நிறைந்த சூழலில் குழுவாக வாகனத்தில் சென்று நாடகத்தை மேடையேற்றினோம். ஒவ்வொரு இடங்களிலம் வௌ;வேறு அனுபவங்கள் ஏற்பட்டன. இராணுவக் கெடுபிடிகள் ஏதும் இருக்கக்கூடாது என்று கடவுளை அடிக்கடி வேண்டிக் கொள்வோம். சமாதானச் சூழலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எமது நாடகம் வவுனியாவில் மூன்று தடவைகள் மேடையேற்றப்பட்டது. ஒரு ஆற்றுகை கலைஞர்களுக்காக காமினி மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது. இதன்போது வித்தியாசமான உணர்ச்சி வெளிப்பாடு காணப்பட்டது. சிறிய தொகைப் பார்வையாளர்கள் மிக அருகில் இருந்தார்கள். அடக்கமான மண்டபம்ää மைக் பூட்டப்படவில்லை. செயற்கை ஒளி அமைப்பு இல்லை. இந்தச் சூழல் எம்மை மிக உணர்ச்சித் தளத்திற்கு இட் டுச் சென்றது உணர்ச்சிக்குள் அமிழ்ந்து போனம். பார்த்தவர்கள் அழுத ழுது பார்த்தார்கள். உண்மையில் காமினி வித்தியாலயத்தில் நாடகத்தை மேடையேற்றும் நிலையில் நாங்கள் இல்லை. பல நடிகர்களுக்கு உடல் நிலை சரியாக இல்லை. இதனைப் பார்க்க வந்த கலைஞர்களுக்குச் சொன்னோம். அதனைப் பலர் ஏற்றுக் கொண்டார்கள். இருந்தாலும் ஏமா ற்றக்கூடாது என்ற எண்ணத்துடன் நாட கத்தை நாடகத்தை ஒப்பனை கள் ஒளியமைப்புக்கள்ää மைக் போன் றன இல்லாது ஆற்றுகை செய்தோம். ஆற்றுகை நன்றாக வந்திருந்தது. புதியதொரு அனுபவத்தையும் தந்தது. ஆரம்பத்தில் இருந்த பயம் வெட்கம்ää மற்றவர்கள் என்ன நினைப்பார்களோää என்ற நிலை இன்று இல்லை. அத்துடன்ää நான் செய்வதைப் பார்த்து மற்றவர்கள் சிரிப்பாரோ என ஆரம்பத்தில் எண்ணியது உண்டு. இன்று இந்நிலை இல்லை. என்னால் எதையும் சுலபமாக செயடயமுடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். பல நாடகங்கள் செய்யவேண்டும். பல பாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்ற ஆர்வம்ää ஆசை உண்டு. எனது பல்கலைக்கழக வாழ்வின் ஆரம்பத்தில் நானும் என்பாடும் என்று இருந்தேன். நாடகத்தில் ஈடுபட்டதன் மூலம் பல நண்பர்களைப் பெற்றுக்கொண்டேன். மேலும்ää பலருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பல்வேறுபட்ட மக்களை சந்திக்ககூடியதாகவும்ää பலரைப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அதாவதுää சமூகத்தில் உள்ளவர்களின் ஒவ்வொருவரது குணங்கள்ää அவர்களது நடத்தைகள் அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பன பற்றி எல்லாம் இந்த நாடகச் செயற்பாட்டுக்கு வந்தபின்னரே அறிந்துகொண்டேன். எனது படம் பத்திரிகையில் வந்தபோதும்ää எமது நாடகம் பற்றிய கருத்துக்கள் பத்திரிகைகளில் வந்த போதும் நாங்கள் செய்த நாடகம் என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது.
சுதாஜினி
அக்கினிப் பெருமூச்சு நாடகத்தை நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை வாழ் நாட்களில் எனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்றே உணர்கிறேன். சிறுவயதிலிருந்தே நாடகக்கலையில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்தது. பாடசாலைகளில் படிக்கும் போது பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அந்த ஆர்வமே பல்கலைக்கழகத்திலும் நான் நடிப்பதற்கு தூண்டியாக இருந்தது. பாடசாலைகளிலே நாடகம் போடுகின்ற போது நாமாகவே கூடிக்கதைத்து கதைத்தெரிவு முதல் பாத்திரத்தெரிவு வரை நாமாகவே செய்தோம். எமக்கு என ஒரு நெறியாளன் இருப்பதில்லை. நடிகர்கள் அனைவருமே நெறியாளனது நடிப்பை ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு பழக்கப்பட்ட எனக்கு என் வாழ்வில் முதல் தடவையாக ஒரு சிறந்த நெறியாளனின் கீழ் இருந்து குறிக்கப்பட்ட காலää நேரத்திற்குள் நிகழ்த்திய முதல் நாடகம் என்றால் அது அக்கினிப் பெருமூச்சு. இது எனக்கு கிடைத்த புதிய அனுபவம். இந்த நாட கத்தை பழகியதன் பின்பு தான் நான் வாழ்க்கையில் நடிக் கும் முத லாவது நாடகம் போல் உணர்ந்தேன். நெறியாள னின் கீழ் இருந்து பழகி மேடையேறிய அனுபவம் எனக்கு இதுவே முதல்தடவை. இந்த நாடகத்தின் பின்பே உண்மையில் என்னால் நாடகக் கலையின் செயற்பாடுகள்ää அதன் நுட்பங் கள் அதன் விளைவுகள் என்பவற்றை எனக்கு அறிய முடிந்தது.
இந்த நாடகம் இன்று வரை 17 தடவைகள் மேடையேறியுள்ளது. முதல் தடவையாக நான் மேடையேறுகின்ற போது என்மனதில் சரியான பயம் இருந்தது. (பரீட்சை நோக்கத்திற்காக போடப்பட்டமையால் எம்மால் எங்களது நெறியாளர்களுக்கு பெறுபேறு குறையக்கூடாது. நல்ல பெறுபேற்றினை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. இதனால் ஒரு பிழையும் விடாது செய்யவேண்டும் என அடிக்கடி என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன்) முதல் தடவையாக மேடையேறி எமக்குக் கிடைத்த விமர்சனங்களும் எனக்கு கிடைத்த பாராட்டுக்களும் மேலும்ää இந்நாடகத்தை நடிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டியது. ‘காணாமற்போனோர்” பற்றிய பிரச்சினையை பேசுவதற்குத் துணிந்த நெறியாளரோடு நானும் என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கினேன். காலத்தின் தேவையை கருப்பொருளாக கொண்டிருந்தமையால் இதைப்பலரும் பார்க்கவேண்டும்.சிந்திக்காமல் இருப்பவர்களது சிந்தனையைத் தூண்டவேண்டும். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளியிடவேண்டும். இதைப் பார்க்கும் அனைவர் ஊடாகவும் காணாமல் போனோர் பற்றிய பிரச்சினையை சம்மந்தப்பட்டவர்கள் கருத்திலெடுக்க இந்த நாடகமும் பார்ப்பவர்கள் மனதில் சிறுபாதிப்பையாவது ஏற்படுத்தும் என நம்பினேன். இந்தப் பிரச்சினையை எல்லோரும் பார்க்கவேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினேன். இதனால் தான் இதை பலதடவைகள் பரவலாக யாழ்மாவட்டத்தில் மேடையேற்றுவதற்கு சம்மதித்தோம். வீட்டிலும் சரி நாம் வாழ்கின்ற சூழல் நெருக்கீடுகளும்ää இதை போடுவதற்கு தடைகள் ஏற்பட்ட போதும் கூட அதையும் மீறி நாம் துணிவுடன் பல இடங்களில் மேடையேற்றினோம். இவையாவும் அன்றைய காலத்தின் வெற்றி. பல்கலைக்கழகம் என்ற கவசம் எம்மை பாகாக்கும் என்ற துணிவுடன் நாம் செயற்ப்பட்டோம். ஆயினும்ää இன்றும் பல தடவைகள்ää நெருக்கீடுகளை தாண்டி அது திரும்பத்திரும்ப பிற மாவட்டங்கள் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மேடையேற்றத்தின் போதும் நான் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் வசனங்களை சொல்லிப் பார்க்கின்ற போது என்னை அறியாமல் என்கண்ணில் கண்ணீர் துளிர்த்துவிடும். இதைவிட நாடகத்தில் உள்ளத்தையே ஊடுருவி உருக்கும் பாடல்களும் அதற்கான இசையும் மேலும்ää என்னை பாத்திரமாக வாழ ஏதுவாய் அமைந்தது. என்னுடன் இணைந்து நடித்த அனைவரும் எல்லா விடயத்திலும் ஒத்துழைத்து ஒவ்வொருவரது பாத்திர வெளிப்பாடும் சிறப்பாக அமைய வேண்டும் என அக்கறை கொண்டவர்களாக எல்லோரையும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்களாக காணப்பட்டனர். இவர்களுடனான நட்பினை இந்த நாடகத்தின் மூலம் பெற்றுக் கொண்டது எனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே கூறுகிறேன். இவர்களுடன் நான் வாழ்ந்த காலங்களை என்னால் மறக்க முடியாது. இந்த நாடகத்தின் கருவானது ஓர் உண்மைச் சம்பவம். இதை நெறியாளர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தச் சம்பவத்துக்குரியவரை எனக்கு தெரியாது. ஆனால்ää 3 வருடங்களின் பின் ஓர் கள ஆய்வுக்காக சாவற்காடு என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவரை விடயக்கலை ஆய்விற்காக அணுகிய போது வர த வாயால் வந்த இரண்டுää மூன்று வார்த்தைகளை கேட்டவுடனேயே எனக்கு எங்கள் நாடகம் கண்முன் வந்தது. நான் உடனே அவருக்கு நான் உங்கள் கதையை ஒரு நாடகமாகப் பார்த்தேன் என்றேன். அவரும் ‘நடித்திருக்கிறார்கள் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை” என்றார். அவர் தன்னை தனது அயலவர்கள் நடத்துகின்ற விதம் பார்க்கின்ற விதம் என்பவற்றை கூறிய சொற் பிரயோகங்கள்ää விமர்சனங்கள் யாவும் எமது நாடகத்தில் மக்கள் என்றபகுதியினர் நிகழ்த்தும் செயலாக இருந்தது. அவர் எனக்கு கதைக்க கதைக்க ஆச்சரியமாக இருந்தது. இவருடைய தாயாரையும் சந்தித்து கதைத்தேன். அவர்களைச் சந்தித்து இரண்டு கிழமைக்குப் பின் மீண்டும் எமது நாடகம் பல்கலைக்கழகத்தில் மேடையேறியமையால் அவரை வற்புறுத்தி கூட்டிக் கொணர்ந்து பார்க்கவைத்தேன். நாடகம் முடிந்ததும் என்னுடைய பழைய ஞாபகத்தைக் கிளறி விட்டீர்கள் என்றார் (அழுதபடி). மறுநாள் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அவரது தாயார் பிள்ளை வந்து ஒரே உங்கட நாடகத்தைத் தான் இரவிரவாக அழுது கொண்டு படுத்திருந்தாள் என்றால் தாய்ää மகள இருவருமாகச் சேர்ந்து எங்கட அயல் சனங்கள் தான் இதை முக்கியமாக பார்க்கவேண்டும். இந்த நாடகத்தை பார்த்தாலாவது அவர்கள் திருந்தினால் நல்லம். நீங்கள் கட்டாயமாக எங்கட இடத்தில் போடுங்கோ. எங்களுடைய ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். என கேட்டுக்கொண்டனர். இவ்வாறாக நாலு வருடமாக மேடையேற்றி வருகின்ற எங்கள் நாடகத்தின் அனுபவங்களோ பல. ஆயினும் ஒரு சிறந்த நெறியாளரின் அறிமுகம் இந்த நாடகத்தின் மூலம் எனக்குக் கிடைத்ததோடு உண்மையிலேயே சிறந்த ஒரு நாடகத்தையும் நடித்துள்ளேன் என்பதையும் நினைத்து நான் மனமகிகழ்ச்சி அடைகிறேன்.
சுகன்ஜா.சி
பல்கலைக்கழகம் பரீட்சை என்கிற முகங்களோடு எனக்கு அறிமுகமானதுதான் அக்கினிப் பெருமூச்சு. இரண்டாயிரமாம் ஆண்டின் மலர்விலே இந்தக் கலைப்படைப்பு பல்கலைக்கழக அரங்க வட்டத்துக்குள் அறிமுகம் செய்யப்பட்டது. இளம் நெறியாளனின் முற்போக்கான சிந்தனை ஓட்டம் கலைப்படைப்பாக மட்டுமன்றி ஒரு சமூகப் பணியாகவும் இந்த அரங்கை நகர்த்த எண்ணம் கொண்டது. சொல்ல முடியாத வடுக்களை பதித்துப் போயிருந்த யுத்தத்தின் சுவடுகளை காலத்தின் தேவைக் கேற்ப சமூகத்தின் முன் துணிந்து பேச முயன்று வெற்றியும் கண்டது. இந்த சமூகப் பணியில் நாமும் கலந்து கொண்டது எண்ணற்ற மகிழ்வும் சமூகத்திற்கு ஏதொ செய்தோம் என்கிற ஒரு திருப்தியும் எம் மனங்களை நிறைக்கின்றன. இன்றும் அந்தக் காலங்களை மீட்டுப் பார்க்கின்றேன். இராணுவ காவல் அரண்களுக்குள் பேசப்போகிறோம் என்கிற அச்சத்திலும் துணிவுடன் செயற்பட்டோம். எத்தனை வாய் வார்த்தைகள்......
இவற்றுக்கு மத்தியிலும் மேடைகள் ஏறினோம். பல்கலைக்கழகமும் அதனைச் யாழ் நகரப் பகுதிகள்ää இவற்றையும் தாண்டி சுழிபுரம்ää பண்டதரிப்புää வடமராட்சிää வவுனியாää திருகோணமலை இவற்றுக்கப்பால் கொழும்பு மாநகராட்சி மண்டபம் எனப் பல மேடைகள் ஏறிஉறவுகளைத் தொலைத்து உள்ளத்தில் நெருப்போடு உறைந்து போயிருக்கும் உறவுகளைப் பற்றிப் பேசினோம். இத்தனை களங்களிலும் நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் ஏராளம் ஏராளம். அத்தனை சவால்களையும் எதிர்கொண்டும் இன்னும் நாம் தளர்ந்து விடவில்லை. இன்றுவரை இந்தக் கலைப்படைப்புக்குரிய சமூகத்தின் எதிர்பார்ப்பானது எமது தேசத்தின் நீறுபூத்த அக்கினிப் பெருமூச்சாகப் போயிருக்கின்ற தொலைந்த உறவுகளின் தேடல்கள் இன்று தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என்பதை காட்டிநிற்கின்றன. சமூகம் இன்னும் சிதைந்து போயே இருக்கின்றது. இந்தக் கலைப்படைப்புப் பற்றி நிறையப் பேச முடியும். இந்தக் கலைப்படைப்பிலே சாதாரண ஒரு பாடகராக மட்டுமே எனது இணைவு இருந்தாலும் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் சுவையாவை. றொபேட்டினுடைய அருமையான இசையமைப்பு படைப்பின் கலைத்துவமான அசைவிற்கு தளமாயமைந்தது என்றால் அது மிகையாகாது இசையமைப்பாளரின் வழி நடத்தலில் இசைக்குழுவின் இயக்கம் செயற்ப்பட்டது. மூன்று பாடகர்களையும் மூன்று வாத்தியக்கலைஞர்களையும் இசைக்குழு கொண்டிருந்தது. பந்துவராளியின் பாமா காரிஸரிகா...” என்கிற ஸ்வரக்கோவை வழிவந்த ஒரு இசைää மரபினின்று கொண்டு நவீனத்தை வெளிக்காட்டி இருக்கின்றது. அந்தக் கனத்த இருள் படிமத்தில் எங்கோ இருந்து எழுவது போன்ற இந்தக் கருஇசை மற்றும் சமாதானத்திற்கான போர் என்று போர்வையிலே இரவோடிரவாக உறவுகளை அள்ளிச் செல்லும் அவலத்தை மதுவந்தியின் அசைவின் பின்னயிலும் எத்தனை முறை பார்க்கும் போதும் உறவுகளைத் தொலைத்துத் தவிக்கும் மனங்களின் துயரத்தை அவர்கள் படும் அவலத்தை பார்ப்போர் மனங்களிலே பதித்துச் செல்கின்றது. றொபேட்டினுடைய இசையமைப்பிலே ஒரு சிறிய இசைத்துணுக்குகளாயினும் சரிää சிறிய சிறிய இடையிசைகளாயினும் சரி அதற்காக ஒரு இராகத்தைத் தெரிவு செய்து அந்தத்தளத்திலே நின்று கொண்டு படைப்பின் களநிவைக்கேற்ப மெட்டுக்களை அமைத்துக் கொள்வது அவருக்குரிய தனித்துவமான மரபு. இது அவரது பிளஸ் பொயின்ட் என்று கூடச் சொல்லமுடியும். இந்தக் கலைப்படைப்பிலும் இந்தத் தனித்துவம் மிகக் கவனமாகப் பேணப்பட்டது. எத்தனையோ இரவுகளின் விழிப்புக்களில் தேவாண்ணாவின் சிந்தனை ஓட்டத்திற்கேற்ப அழகான இசைவடிவங்கள் கோர்க்கப்பட்டன. இந்த அயரா உழைப்பில் அற்புதமான இசைக் கோலம் படைப்பாக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபை மேடை ஏற்றத்தின் போது கம்பியூட்டர் மூலம் அற்புதமாக இசை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று மூக்கில் விரல் வைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையிலே இந்தக் கலைப்படைப்பிலே அளிக்கையாளர்களின் மன ஒன்றிப்பு அதிகமாகவே இருந்தது. கணவனைத் தொலைத்த இளம்பெண்ணின் அறிமுகத்திலும் அவளது ஒவ்வொரு அசைவிலும் நாங்கள் கண்கள் பணித்த சந்தர்ப்பங்கள் அனேகம். இது கதாபாத்திரங்களின் வெற்றி என்பதா அல்லது கலைப்படைப்பு என்பதற்கு அப்பால் சமூகதரிசனம் என்ற வகையில் ஏற்பட்ட உணர்ச்சி வெளிப்பாடு என்று கொள்வதா? தெரியவில்லை. ஒவ்வொரு மேடையேற்ற நிறைவிலும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற விமர்சனங்கள்கருத்துக்கள் என்பன நாம் ஏதொ ஒரு பயனுள்ள விதைகளை அந்தத்தக் களங்களிலே தூவி வந்திருக்கின்றோம் என்கிற எண்ணத்தில் மனம் நிறைகின்றது.’
No comments:
Post a Comment