Friday 26 October 2012

கால கர்த்தர் கார்த்திகேசு சிவத்தம்பி -- நம் முன்னே நகரும் ஒளித் தடம் ஏ சி தாசீசியஸ்


 சி தாசீசியஸ் 
பேராசான் சிவத்தம்பி அவர்களுடைய மறைவை அடுத்து வந்த  நாட்களில்அவரைத் தாம் ஒவ்வொருவரும்  புரிந்துகொண்ட  அளவை,அவருடைய வெவ்வேறு துறை சார்  நண்பர்கள் ஊடகங்களில் தெரிவித்தபோதுஅறிய,மலைப்பாகவும்  மன நிறைவாகவும்   இருந்தது
பேராசிரியரின் முழுப்  பங்களிப்புகளை   ஓரளவுக்கேனும் வகைப்படுத்தி அவற்றை  ஒன்று திரட்டும்போது,அவருடைய மீள்தரிசன முழுமையானதுபொய்மை அற்ற வடிவம் பெறும் என்ற எதிர்பார்ப்புமன  நிறைவைத்தருகின்றது.




"பேராசிரியர் சிவத்தம்பி காலமானார்," என்ற துயர் பகிர் செய்தியை ஆய்வறிஞர் பற்றிமாகரன் லண்டன்  எல் சி -உயிரோடை தமிழ் -வானொலிக்கு அறிவித்தவுடன் நிகழ்ச்சிகளை நாம் இடை நிறுத்தி துயர் பகிரத் தொடங்கியதும்,கருத்துகள் திரளத் திரள,  பேராசிரியரே நம்மிடையே அறிமுகப் படுத்திய "காலம் ஆகினார்," என்ற அர்த்தம் பொதிந்தபதமே  அவர் தொடர்பாக,  நெஞ்சில் கலக்கத்தோடுமீண்டும் மீண்டும்  நிழலாடத் தொடங்கியது

ஐரோப்பா
அமேரிக்காஇந்தியா போன்ற பெரு வட்டகைகளில் இருந்து வெவ்வேறு அறிஞர்களும் தோழர்களும் சாதாரணவானொலி நேயர்களும்  ஐஎல்சி வானொலியில்  அஞ்சலி செய்யக் குவிந்தனர்பேராசிரியருடைய வழிகாட்டல் சாதனையை வியந்தனர்.  சங்க காலம் தொடக்கம் சிவத்தம்பி காலம் வரைக்கும் தமிழ் பெற்ற சிறப்பை அவர்பெயரால் போற்றினர்ஒரு முழுமை பெற்ற  ஆளுமையாகவே அவரை இனம் கண்டனர்

 இனி,  மண்ணிலும் புலத்திலும் இயங்கும் வெவ்வேறு  வரி - ஒலி ஊடகங்களில் மேலை நாட்டுதமிழ் நாட்டு , ஈழத்துஅறிவியல் ,   அரசியல் , தமிழ்மொழி அறிஞரும் கலைத் துறை போந்தோரும் அவருடைய பன்முக ஆளுமையைமெச்சினர்தமக்கும் பேராசிரியருக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவு தொடர்பாகவும் நெகிழ்ந்து பேசினர்

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய பலமும் பயிற்சியும்   நாடகம்ஊடகம் கல்வி  ஆகிய துறைகளிலேயேஎன்பதால் அவற்றில்   துறை போந்த பேராசிரியருக்கும் எனக்கும் இடையே நிலவிய தொடர்பும் உறவும் நாடக-ஊடக,கல்வி  துறைசார் தனித்துவம் கொண்டவையாகவே திகழ்ந்தனஇலக்கிய ஆழம் கொண்ட  அவருடையஅறிவூட்டலும் வழி காட்டலும்  எனக்கு கணிசமான அளவு கிடைத்தனஎன்னுடைய கருத்து எதிர்ப்புகளை கூர்மையாககவனத்தெடுப்பார்.  என்னுடைய நிராகரிப்புகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் எனது தனித்துவத்தை மெச்சும்தந்தைப் பெருமிதப் பரிவும்கூட   அவரிடம் சுனையாக இருந்தன

பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக நான் இருந்தபோதுஒவ்வொரு ஞாயிறு காலையும் கார்த்திகேசு சிவத்தம்பிஎன்ற முகமறியாக் கல்விமான் எழுதும் சிறுகதை வளர்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளிவரும் வீரகேசரி வாரசஞ்சிகையை வணங்கி   வாங்குவதற்காக வளாகத்துக்கு வெளியே இரண்டு மைல் நடந்து தமிழ் வளர்க்கும் ஒருமுஸ்லிம் கிராமத்துக்குப்  போவேன்

கொழும்பு பல்கலைக் கழகத்தில்  பட்ட மேல்  நாடக டிப்ளோமா நெறியை நான்  பயின்ற வேளை,தமிழ் இலக்கியத்தில் நாடகம் தொடர்பாக  அவர் எமக்கு நடத்திய விரிவுரைகளில் அவருடைய அறிவும் ஆழமும்என்னை மலைக்க வைத்தனநான் அறிந்திராத நாடக அறிவுசார் இலக்கிய தொன்மைச்  சங்கதிகள் பலவற்றை அவர்எனக்கு ஊட்டினார்நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் உள்ள பெருந்தொகைக் கிராமங்களுக்குச் சென்றுஅங்கெல்லாம் பாடப்படும் கூத்துகள்ஏட்டிலுள்ள கூத்துகள்ராக கோலங்கள்ஆட்ட வடிவங்கள்  என்ற பச்சைமண் தேடலிலும் சேகரிப்பிலும் ஈடுபட்டு என் அறிவை என்பாட்டில் வளர்த்துக் கொண்டவன் நான்.   நவீன நாடகமேடையாக்கங்களில் அவற்றை எவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் சேர்த்திழைத்து புதிய நாடக  கோலங்கள் வரையலாம் என்ற முயற்சியில் மட்டுமே  அன்றுவரை கவனம்  செலுத்தியவன்பேராசிரியர் சிவத்தம்பி சொரிந்தபழந் தமிழ்  இலக்கிய அறிவுப் பால் வார்ப்போடுஎன் வசமிருந்த தேட்டங்களில் அடங்கிய வளங்களின் செழுமையைபுதிய கண்ணோடு துருவத் தொடங்கினேன்.  அப்போதிருந்து என் தாய்த் தமிழ் நாடக புராதன வாய்க்கால் பச்சைமண்ணில் பேராசிரியர் பாய்ச்சிய இலக்கியப் பாலைத் தழுவ விட்டுஅந்தக் குழையலை  பக்தியோடு விண்டு நெற்றிநீறிடத் தொடங்கினேன்

என்னுடைய தொடக்க கால நெறியாட்சியில் உருவான மகாகவியின் கோடைமகாகவியின் புதியதொரு வீடு ஞானம்லம்பேட்டின் பிச்சை வேண்டாம் ஆகிய நாடகங்களை என் பேராசான் பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்ததில்லை என்றேகருதுகின்றேன்எனது நாடகம் எதையும் பார்க்காது அது தொடர்பாக அவர் வெறும் கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு சிலாகித்துப் பேசக் கூடாது என்பதில் அவரிடம்  பிடிவாதமாக இருந்தேன்இதுஎம் இருவரிடையேயும் இனியபனிப் போர் ஒன்றைத் தோற்றுவித்திருந்ததுஇலங்கையில் நான் நாடக மேடைகளில் வலுவாகக் காலடி பதித்த வேளை,தமது கலாநிதி  ஆய்வுக்காக தாம் மேல் நாடு சென்றிருந்ததாக அவர் நொண்டிச் சமாதானம் கூறுவதை ஏற்பதற்கு நான்தயாராக இருக்கவில்லை.

பின்னொரு நாளில்வித்யோதய பல்கலைக் கழக சிறப்புப் பேராசிரியராக அவர் திகழ்ந்த வேளை அங்கு ஒரு நாடகம்தயாரிக்க என்னை அழைத்திருந்தார்நாடகர் நாசுந்தரலிங்கம் இரண்டு தாள்களில்  எழுதிய ஓலங்கள் என்ற நாடகப்பிரதியைப்  படிக்கத் தந்தார். "குறைந்தது 15 நிமிடத்துக்குத் தாக்குப்  பிடிக்கும் வகையில் தயாரிக்க  முடியுமாடாப்பா?"  என்று கேட்டார்

கருத்துக்கு வடிவமும் அசைவும் ஒலியும் ஒளியும் வர்ணமும்  கொடுக்கும் ஐம்புலன்  உள்மனக் கொடும் பயிற்சியால் (இன்று வீணடிக்கப்பட்ட ) அன்று  தேறி வந்திருந்த  தன்னம்பிக்கை என்னிடம் இருந்தது.  "பிரதிச் சொல்லாடலில்  கைவைக்காமலே அரை மணி நேரம் செய்யலாமே!"என்றேன்

வெவ்வேறு வகை ஓசைகளும் ஓலங்களும் இசையும் ஒளியும் குழைந்தனவெவ்வேறு தளங்களில் அசைவுகளும்ஆட்டங்களும் இழைந்தனதமிழ் புரியாக் கூடத்தில் பெருமளவில்  மொழி இல்லாக் காட்சியாக்கி ஓலச் சிவிறலில்நிகழ்ச்சியை  நிறைவு செய்தோம்.  
 நிகழ்ச்சி நிறைவில் மேடைக்குச் சென்ற பேராசிரியருக்கு அன்று மண்டபத்தை நிறைத்த சிங்கள   மாணவர் கூட்டம்முழுமையாக எழுந்து நின்று முழு மனதோடு கரவொலி மரியாதை செய்ததை,   பேராசிரியரின் மறைவுக்குலண்டன் ஐஎல் சிஉயிரோடை  தமிழ் - மக்கள் வானொலி அஞ்சலி செலுத்திய  தருணத்தில்அதே நாடகத்தில் பங்கெடுத்தஅவருடைய தமிழ்  மாணவர்கள்,   வானலையில் வந்துகாலப் பொறி ஏறி,  பின்  நகர்ந்து  விரிவாக நினைவு கூர்ந்த போது,நெகிழ்ந்து போனேன்

புலத்துத் தமிழ் மக்களின் கலை இலக்கிய விழாக்களில் மிகப் பரவலாகக்  கலந்து கொண்ட ஊரவர் ஒருவர் என்றால்,அவர்பேராசிரியராகத்தான் இருக்க முடியும்வெறுமே தலைமை தாங்குவதோடு நின்றுவிடாதுதம்முடைய புலத்துஉறவுகளின் வாழ்க்கை முறைகளையும் அவர் ஊன்றிக் கவனித்ததால்மண்ணுக்கும் புலத்துக்கும் இடையே மட்டுமன்றிபுலத்து நாடுகளுக்கிடையேயும்பண்டைக் காலப் புலவன்போலவும் , இன்றைக்கால நல்லெண்ண ராஜதந்திரி போலவும்,  நம்மிடையே ஓர் உறவுப் பாலமாகவும்  திகழ்ந்தார்இதை ஒரு தடவை அவரிடம்  சுட்டிக் காட்டியபோது, "எடேய்என்ரபொறுப்புக் கூடுது எண்ணுறாய்என்னடா! " என்று நெகிழ்ந்தார்!

தமிழ் இலக்கியத்துக்கும் , உலக சமுதாயத்துக்கும்  பேராசிரியர் புரிந்த சிந்தனைத் தொண்டு என்று அவருடையஅறிவுசார் சாதனைகள் பற்றி பல்கலைக் கழகங்களிலும் அவற்றுக்கு அப்பாலும் கற்ற மனிதர் பலரும்  போற்றிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்வெறும் நடைமுறைப் பாமர மனிசனாக நான் இங்கே குறிப்பிடப் போவது எவர்அரங்கு ஏறுமோ அறியேன்கூறுவது என் கடன் என்றபடியால் குறிப்பிடுகின்றேன்.

புலத்துத் தமிழ்ப் பாலருக்கு அவர் புரிந்த தமிழ்த் தொண்டே காலத்தால் சுவறிய சமூகப் பெருந்தொண்டு என்று துணிந்துகூறுவேன்.நம் தமிழ்ப்  பாலரின் புதிய புலத்துச்  சூழலில் அவர்களுக்கான தமிழ்க் கல்விப்பாதை ஒன்றை உறுதியாகப் படைப்பதற்கு பேராசிரியர் ஆற்றிய பணியே அவரை ஒரு கால கர்த்தராக எனது இதயத்தில்வீற்றிருக்கச் செய்திருக்கிறது

நம்  மண்ணின் பாலருடைய  தமிழ்க் கல்விக்கு 19 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கால கர்த்தராக ஒப்பற்றபணி புரிந்தாரென்றால் நம் புலத்துப் பாலரின் தமிழ்க் கல்விக்கு 21 ஆம் நூற்றாண்டில் பேராசான் கார்த்திகேசசிவத்தம்பி

No comments:

Post a Comment