‘வெப்பக் குடுவை’ நாடகப் பாடல்கள் .
தீ குளிப்பு
கொண்ட கோலமது நெடுந்துயர் தந்தது
கொண்டதின் உறுதியை காட்டென்று கேட்டது
தூய்மையை காட்டவே தீ மிதிபேனென்றாள்
தீயில் குளிப்பது தீர்வென்றெண்ணினாள்
தன் சிதை தான் மூட்டி
தீயில் புகுந்தாள,; சங்கமமானால்
பிள்ளைகள் பரிதவித்தன வீதியில் கிடந்து
பிள்ளையின் அழுகுரல் சாம்பலை உழுதது
சாம்பலிலிருந்து தாயவள் உயிர்த்தாள்
சாம்பலிலிருந்து தாயவள் உயிர்த்தாள்
வெப்பக் குடுவை
வெப்பக் குடுவையில் மனிதர்
வெப்பம் தாங்காது துடிப்பர்
கருக்கும் வெயில் வெக்கை
கானலாகும்; வாழ்க்கை.
வரண்ட வெட்டை வெளி
வாட்டும் வாழ்க்கை கனவுகள்
நிழல் தேடும் அவலம்
நிஐம் தேடும் மனிதர்
வெப்பக் குடுவையில் மனிதர்
வெப்பம் தாங்காது துடிப்பர்
கூனல் விழுந்த பொழுதுகள்
;
இருட்டு பழகிப் போனது
இருண்ட பொழுதுகளில் வாழப்பழகினோம்
கூனல் விழுந்த பொழுதுகள்
நிமிர்த்தத்தக்க திராணியில்லை
கூனிக்குறுக பழகினோம்
கும்பிடவும் பழகிக் கொண்டோம்
சாவீட்டில் மாலை கேட்பர்
சாகவாசமாய் வாக்கு கேட்பர்
வாக்கு பெட்டிகளில் நிரம்புகின்ற
வாக்குகளில் எண்ணிலடங்கா ஏக்கம்
இருட்டு பழகிப் போனது
இருண்ட பொழுதுகளில் வாழப்பழகினோம்
நிழல் தந்த பொறி
தாயைத் தொலைத்தவர்
தாயைத் தேடினர்
தாயவள் தரணியில்;
தென்படவில்லை
நிழலொன்று தெரியவே
சற்று ஆறுதல் தடினர்
உடலசதி போக்கவே
ஆழ்ந்து உறங்கினர்.
உறக்கம் கலந்ததும்
எழுந்து பார்த்தனர்
நிழலது சொன்னது தாயென்று
நிஐம் எதுவென்று ஏங்கினர்
நிர்க்கதி கொணடனர்.
வலைப்பூவாக நுட்பியல் அவத்தை
நுட்பியல் அவத்தை அற்புதமானது
நுகர்வோர்க்கெல்லாம் சொர்க்கம் நிச்சயம்
விரல் நுனியில் வேண்டியது வரும்
அனுங்காமல் குலுங்காமல் சுகங்கள் பெறலாம்
அற்புத நுட்பியல் அனைவர்க்கும் சிறப்பு
அனைவரும் ஒருவரின் கொல்ரோலில்
பட்டினை அமர்த்தினால் பட்டாலியன் அசையும்
பட்டத்து அடையாளம் தொலையும்
சுயமாய் சிந்திக்கும் திறனது சிதையும்
சிந்தையின் சிறப்புக்கள் சீரற்று போகும்
முகமது தொலையும் தோற்றமது மாறும்
மொழியது சிதையும் முறையது தவறும்
பண்பாடு படு கேவலாமாகும்
பலர் பாடு நிர்கதியாகும்
எங்கள் வீடு
வீடு எங்கள் அழகு
அழகு தந்த வீடு
அன்பு தந்த வீடு
அது எங்கள் வீடு
ஆதிக் குடிகள் வாழ்ந்த
அடித்தடங்கள் உண்டு
நாம் கூடி வாழும் வீடு
எம்மை ஊட்டி வளர்க்கும் வீடு
பாட்டி சொன்ன வீடு
பண்பு தந்த வீடு
பட்டறவு தந்த வீடு
பாசம் தந்த வீடு
பாடித்திரிந்த வீடு
உணவு தந்த வீடு
உறக்கம் தந்த வீடு
பாரக்கப்பார்க்க அழகு
பார்க்கப்பார்க்க அழகு
வீடு எங்கள் அழகு
அழகு தந்த வீடு
அன்பு தந்த வீடு
அது எங்கள் வீடு
அது எங்கள் வீடு
தாய்
பண்போடு இருப்பாள்
பார்க்க நல்ல அழகு
பார்வையில் கனிவு
பாலூட்டி வளர்த்தால்
சீராட்டிச் சிரிப்பாள்
அவள் மடியின் குளிர்மை
நிம்மதியாய் தூக்கம் தரும்
பசியென்ற சொல்லறியோம்
பயமென்று ஏதுமறியோம்
கோழி குஞ்சைக் காப்பது போல்
கூதல் அறியாது வளர்பாள்
அழகு மொம்மையவள்
கொள்ளை அழகு
தாலிக் கொடியோடு அவள்
அப்பன் கொலுவேறி வரும் போது
கொள்ளையழகு கொள்ளையழகு
அவள் என் தாய,; அவள் என் தாய்
No comments:
Post a Comment