நல்ல ஆசிரியர் ஒருவரால் நல்ல சமூகம் உருவாக்கப்படுகிறது. ஆசிரியர் சமூகத்தை வழிப்படுத்தி நல்லதொரு சமூகத்தை உருவாக்கும் பணியைச் செய்பவர்களில் அதிபர்கள் முக்கியமானவர்கள்.
சிறந்த அதிபரை கடலில் பணயிக்கின்ற கப்பலின் கப்ரனுக்கு ஒப்பிடுவார்கள்.; மிக குறுகிய காலத்தில் முடிந்து விடுகின்ற கப்பல் பணயத்தில் கப்பலை வழிநடத்துகின்ற கப்ரன் தன்னை எப்போதும் ‘விழிப்பு’ நிலையில் வைத்து கொண்டு தனது பல்திறனாலும், ஆற்றலாலும் பாதுகாப்பாக பயணிகளை கரை சேர்ப்பான்.
அதிபர் என்பவரும் அவ்வாறான ஒரு பணியையே செய்கிறார் எனலாம். இளமைப்பருவத்தில் பயணிக்கின்ற சின்னஞ் சிறுசுகளுக்கு பாதுகாப்பான, அதே வேளை சிறப்பான அனுபவத்தை கொடு;த்து சிறப்பான எதிர்காலத்தைக் காட்ட வேண்டும்.
யுhழ் இந்து ஆரம்பப்பாடசாலை அதிபர் பேராளர் திரு தியாகலிங்கம் அவர்கள் சிறந்த ‘கப்ரனாக’ இருந்து பல நூறு மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தையும் பசுமையான அனுபவத்தைக் கொடுத்து இழைப்பாறுகிறார்;.
தனது பட்டறிவின் மூலம் கிடைத்த நீண்ட அனுபவத்தையும், தான் கற்றுக் கொண்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வியையும்; , தனது புலமைசார் நுண்ணறிவையும் அறிவையும், தனது நல்ல மனிதநேயப் பண்பையும் பிசைந்து யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையை சிறப்பாக வழி நடத்தியிருந்தார்
தியாகலிங்கம் என்ற ஆளுமையை நான் நான்கு பரிமாணங்களின் பார்க்கிறேன்,
1. சுpற்ந்ததொரு ஆசிரியர்
தனது 30 வருடகாலம் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்ப்பித்திருக்கிறார். மாணவர்களை மிகவும் புரிந்து அவர்களின் உளவியலுக்கு ஏற்றதாக தனது அணுகு முறையை திட்டமிடுகின்ற ஒருவர்.
இவர் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம்,
‘பாடசாலையில் படிப்பிப்பதே பிள்ளைகளுக்கு போதுமானது. புpள்ளைகளை ரியூசனென்று வருத்தக் கூடாது. பிள்ளைகளை பின்னேரத்தில் நன்றாக விளையாட விடவேண்டும். பின்னர் பாடசாலையில் படித்தவற்றை தினமும் மீட்டுப் பார்த்தால் போதும்’
அவர் சொல்லுகின்ற இந்த விடயத்தைத்தான் சிறுவர் கல்வயியலாளர்களும், சிறுவர் உளவியலாளர்களும் வலியுறுத்துகின்றார்கள். அவர் சொல்வதை எத்தனை பெற்றோர்கள் செவிசாய்கிறார்களோ தெரியாது ஆனால் அவர் தனக்குள் ஒரு உயரிய எண்ணத்தோதுடனேயே மாணவர்களை அணுகியிருக்கிறார்.
2. சிறந்த நிர்வாகி
சிறந்த நிர்வாகியொருவர் எப்போதும் நிதானம் தப்பாது இலக்கின் மீது குறியாக இருந்து செயற்படும் ஆற்றல் உள்ளவர். பேராளர் தியாகலிங்கம் அவர்களின் நிர்வாகத்தை அவதானித்திருக்கிறேன். மிக நிதானமாக கொண்டதில் உறுதியாகவிருந்து செயலாhற்றும் வல்லமை படைத்தவர்.
ஆண்டு ஜந்தில் தனது பாடசாலை மாணவர்கள் தமக்கு முன்னுள்ள சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது உயரிய இலக்கு. இந்த இலக்கை நோக்கி மிக அற்புதமாக திட்டமிட்டு செயலபட்டார். ஆண்டு மூன்றில் இருந்து தயார்செய்வதற்கு உரிய திட்டமிடலை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.
மிகக் கண்டிப்பானவர். ஆனால் கண்டிப்பான வார்த்தைகளை அவர் பயன் படுத்தியதை கண்டதிலலை. கோபப்பட்டதையோ, பதட்டப்பட்தையோ கூட பார்க்க முடிந்ததில்லை. இந்த மாதிரியான சுமூகமான சூழ்நிலையில் ஒருவர் நிர்வாகம் செய்வதாகவிருந்தால் அவர் மிகச் சிறப்பாக தன்னை நிர்வகிப்பவராகவும், தனது காரியங்களை சிறப்பாக முகாமை செய்பவராகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
3. நல்ல மனிதர்
சிறந்த நிர்வாகிகள் நல்ல மனிதர்களாக பெயரெடுப்பது மிகவும் சிரமமானது. ஆனால் பேராளர் தியாகலிங்கம் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் நல்ல மனிதராகவும் பெயரெடுத்திருக்கிறார். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் மதிப்பவர், தன்னால் முடிந்தவரை தானறிந்தவர்களை சிறப்பிக்கும் பண்புடையவர். எல்லோரிடமும் இருக்கின்ற சிறந்த பண்பகளில் இருந்து அவர்களைப் பார்ப்பவர். இதனால் நல்ல நிர்வாகியாகவும் நல்ல மனிதராகவும் திகழ முடிகிறது. ஏல்லாவற்றுக்கும் மேலாக இவரது விருந்தோம்பல் பண்பு மனதை நெகிழ வைக்கும்.
4. சிறப்பானதொரு குடும்பத் தலைவர்
காலை 7.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை பாடசாலையிலேயே சுற்றித் திரிவார். சனி, ஞயிறு தினங்களிலும் காணமுடியும். ‘வீட்டைக் கவனிக்காது பாடசாலையில் நிக்கிறாரோ’ என்று எண்ணத்தோன்றும். ஆனால் தனது நேர முகாமைத்துவத்தினால் வீட்டுக்கு தேவையான அத்தனை வேலைகளையும் தானே திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவு செய்து விடுவார் தனது பிள்ளைகளினுடைய கல்வியிலும் மிகவும் கவனமாக இருந்து, அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்கிறார்.
இவ்வாறாக பலபரிமாணங்களில் உள்ள ஒரு அதிபர் பாடசாலையை விட்டு விலகிச் செல்வது பாடசாலைக்கு நிச்சயம் இழப்பாகவே அமையும். இந்த இழப்பை ஈடு செய்ய பாடசாலை சமூகம் நிறையே உழைக்க வேண்டும்.
பேராளர் தியாகலிங்கமவர்கள் தனது கல்விப்புலமைசார் அனுபவத்தை எமது சமூகத்தை மீள்கட்டியெழுப்ப மேலும் பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். ஆவர் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்.
தே.தேவானந்த்,
இயக்குனர்,
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்,
யுhழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment