‘அடிப்படை மனிதவுரிமைகள் தொடர்பான பயிற்சிநெறி’ யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தினால் 2018 ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிநெறியை யாழ்மாவட்ட அரசசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தற்போதய செயலாளர் திரு. தேவநாயகம் வேதானந்த அவர்கள் ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக நடத்திவருகிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றும் போது “ இன்றையகாலகட்டத்தின் மக்கள் நலிவுற்றுள்ளார்கள், வறுமையில் வாடுகிறார்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யத் திண்டாடுகிறார்கள். அவர்களின் வாழ்வுரிமைக்காகப் குரல்கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களின்நல்வாழ்வுக்காக பாடுபடவேண்டியுள்ளது. இதற்கான செயற்பாட்டாளர்களை உருவாக்க வேண்டும். தற்போது மக்களின் வாழ்வுரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களை காணமுடியவில்லை. முன்னர் இவ்வாறான செயற்பாட்டாளர்கள், நேரடியான மற்றும் மறைமுகமான செய்றபாட்டாளர்களாக இருந்தார்கள், செயற்பட்டார்கள். தற்போது இல்லையென்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் இது போன்ற பயிற்சிகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. மேலும் மனிதவுரிமை தொடர்பான விழிப்புணர்வை பல்வேறு மட்டங்களிலும் உருவாக்கும் நோக்கமும் உண்டு” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைத்தினுடைய தலைவர் திரு யுகேந்திரா நிகழ்விற்கு தலைமை தாங்கியிருந்தார். இந்தபபிற்சிநெறி இணையவழியாக கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகி நவம்பர் மாதம் நிறைவடைந்திருந்தது. அறுபது மணித்தியாலங்கள் கொண்ட இந்தப்பயிற்சியில் நூற்றி முப்பந்தைந்து பேர் பங்கு கொண்டிருந்தார்கள். குறிப்பாக, இந்தப்பயிற்சி இலவசமாக நடைபெற்றது. மலையகப்பகுதியில் இருந்து அதிகமானவர்கள் இதில் பங்கு கொண்டார்கள். கிழக்கிலங்கை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இதில் பங்கு கொண்டு பயன்பெற்றிருந்தார்கள்.
No comments:
Post a Comment