Wednesday 11 May 2022

இணையவழிக் கருத்தரங்கு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன?

 இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? என்ற தலைப்பில் பொருளியல்துறைப் பேராசிரியர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் இணையவழி கருத்துரைவழங்குகிறார். எதிர்வரும் 13.05.2022 அன்று மாலை 7.00மணிக்கு இந்தக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை சூம் செயலிவழியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஐ.டி: 69114783312 கடவுச்சொல்: Jsa@2022)


அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூக விஞ்ஞானப்பிரிவும் இணைந்து இந்தக்கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளனர். கருத்தரங்கை கலாநிதி கந்தையா சிறீகணேசன் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது வங்கி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்ற குழ்ப்பமான நிலையில் மக்கள் காணப்படுகின்றார்கள். குறிப்பாக வங்கியில் உள்ள தமது சேமிப்புப்பணத்திற்கு என்ன நடக்கும். எந்த வங்கி நம்பிக்கையானது? எங்கு பணத்தை பாதுகாப்பாக வைக்க முடியும் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். இதனைவிட சில வங்கிகள் வெகுசீக்கிரமே முறிவடைந்து விடும் என்ற கதைகளும் மக்களை அச்சுறுத்துகின்றன. இந்தச்சூழலில் வங்கிகளின் நிலை என்ன என்பது பற்றி பொருளியல்துறை பேராசிரியரின் பார்வையை சமூக அக்களைகருதி முன்வைக்;க முயல்வதே இந்தக் கருத்தரங்கு .
உண்மையில் வங்கியாளர்கள் நிதிநிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிதிநிறுவனங்களின் நிலை என்ன? என்பதை தெளிபடுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் உரிமைசார்ந்து இது நடைபெறவேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறாமல் ஒரு மூடுமந்திரமாக  வங்கி மற்றும் நிதிநடவடிக்கைகள் உள்ளன. இங்கு, வாடிக்கையாளர்கள் கைவிடப்படுவதான நிலை தவிர்க்கப்படவேண்டும். வெளிப்படைத்தன்மை காணப்படவேண்டும். அதே வேளை இன்றைய வங்கிநிலை பற்றிய வழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் அதற்காக கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


No comments:

Post a Comment