2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ ); கௌரவத்திற்குரிய (‘Honorable’) கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும்.
Wednesday, 25 December 2024
Sunday, 6 October 2024
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01
‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும். இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர், மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.
“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால், கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம். ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02
தேவநாயகம் தேவானந்த்
இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார்.
‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை.
க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள். ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள்.
குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள். க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள்.
Wednesday, 25 May 2022
Sunday, 22 May 2022
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'ஆப்பிழுத்த குரங்குபோலானார்'
Wednesday, 11 May 2022
இணையவழிக் கருத்தரங்கு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன?
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? என்ற தலைப்பில் பொருளியல்துறைப் பேராசிரியர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் இணையவழி கருத்துரைவழங்குகிறார். எதிர்வரும் 13.05.2022 அன்று மாலை 7.00மணிக்கு இந்தக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை சூம் செயலிவழியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஐ.டி: 69114783312 கடவுச்சொல்: Jsa@2022)