- துளசி முத்துலிங்கம் / ஆங்கில ஊடகத்துறை
உலகின் பிற பகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள், பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்,; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில், திருமணம் செய்வதும் ,அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான், அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
யாழ்ப்பாண கலைஞர்கள் மன்றமும், செயல் திறன் அரங்க இயக்கமும் ஆகிய நாங்கள்; சிறுவர்களின் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறோம்.
இன்று யாழ்ப்பாணத்தில் பல குடும்பங்களில் ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களே இருப்பதால், அவர்களை புறயிலர் கோழிகள் போன்று வளர்க்கின்ற பெற்றோர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இவர்களின் அதீத கவனம், கண்காணிப்பு காரணமாக சிறுவர்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் திறனை இழந்துவருகிறார்கள். இன்று ஒற்றைக்குழந்தைகள் உள்ள குடும்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவர்களுக்கு சகோதரர்கள் இல்லை அல்லது அக்கம் பக்கத்தில் விளையாட சகபாடிகள் இல்லை என்ற நிலைமையே காணப்படுகின்றது.
ஆகவே தற்போதைய யாழ்ப்பாணப்; பெற்றோரின் குழந்தை வளர்ப்பு ஒரு பேரழிவை நோக்கிய பயணமாகவே பார்க்கப்பட வேண்டியது. ஆனால், நாங்கள் எமது இளமைக்காலத்தில் பல உடன்பிறப்புக்களுடன் வளர்ந்தவர்கள். அயலிலும் பலர் விளையாடக்கிடைத்தார்கள். நாங்கள் துடிப்பாகவும் உற்சாகமாகவும் எமது இளமைக்காலத்தில் இருந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறுவர்கள் பெற்றோர்களின் அதீத கண்காணிப்பால்; அதிகமாக 'இல்லை' என்ற வார்த்தையைக் கேட்கிறார்கள்!. தன் குழந்தை மீது ஆர்வமுள்ள யாழ்ப்பாண பெற்றோருக்கு கூட அந்த வார்த்தையைச் சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதாவது,
"இல்லை, நீங்கள் விளையாடச் செல்ல முடியாது."
"இல்லை, நீங்கள் தூங்க முடியாது, நீங்கள் படிக்க விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்."
"இல்லை, நீங்கள் சோர்வாக இருப்பதால் பாடசாலைக்கு மேலதிகமாக செல்லும் பல டியூஷன் வகுப்புகளில் இருந்து தொடர்ச்சியாக விலக முடியாது."
"இல்லை, நீங்கள் இயற்கை உலா செல்வதற்கோ அல்லது பொழுதுபோக்குக்காக புத்தகங்களைப் படிக்கவோ முடியாது."
‘இல்லை’ நீங்கள் உங்கள் பாடசாலைக்காலத்தில் படிப்பு தவிர்ந்த வேறு ஏதாவது செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது.
படிப்பு, படிப்பு, படிப்பு வெறுமனே படித்தல் மட்டும் முக்கியமாகியிருக்கிறது.
யாழ்ப்பாண பெற்றோர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் நீண்ட வரிசையில் நின்று, ஒரு வகுப்பு முடிந்தவுடன் தங்கள் விலைமதிப்பற்ற பிள்ளைகளை அடுத்த வகுப்புக்கு அழைத்துச் செல்லக் காத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கும். அங்கு, எவ்வளவு அக்கறை, நேரம் மற்றும் பணம் செலவிடப்படுகிறது - இறுதியில், பாவம் சிறுவர்கள் தங்களுக்காக சிந்திக்கவோ அல்லது எதையும் சுயமாகச் செய்யவோ முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால்தான் யாழ்ப்பாணக் கலைஞர் மன்றத்தின் நிறுவினர் உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி தேவநாயகம் தேவானந்த் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர் மகிழ்களம், சிறுவர் நாடக இரவு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இங்கு சிறவர்களின் படைப்பாற்றல் மேம்படுத்தப்படுகின்றது, மகிழ்ச்சியைத் தூண்டுவதற்கான செயற்பாடுகள் நடக்கின்றன, விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன, சமூகமயமாக்கல் நடக்கிறது. மற்றும் சிறுவர்கள் தாமே மகிழ்ந்திருக்க வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அவர்களின் ஆளுமை விருத்தியடைகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறந்த பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக பயிற்றப்பட்ட கலைஞர்கள் உள்ளார்கள். இவர்களோடு சமூக சேவையாளர்கள், நாடகக் கலைஞர்கள் மற்றும் சிறுவர் உளஆற்றுப்படுத்துனர்கள், மனநலப்பராமரிப்பு நிபுணர்களை உள்ளடக்கிய சிறந்த குழுவை அவர் கொண்டுள்ளார்.
இங்கு செல்லும் நான் பெரியவராக இருந்தாலும் அவற்றை இரசிக்கிறோம்.
நான் அடிக்கடி ஒரு பெரியவனாக பார்வையாளனாக அங்கு அமர்ந்திருக்கிறேன், அங்கு நடப்பவற்றை அவதானித்திருக்கிறேன். அங்கு சிறுவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன், நான் வளரும்போது எனக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
நல்லூரில் நடைபெறும் சிறுவர் மகிழ்களம் ஃ நாடக இரவு நிகழ்ச்சி ஒரு அரிய வாழ்நாள் வாய்ப்பு என்று துணிந்து சொல்லலாம். டிக்கெட்டுகளின் விலை ரூ.200 ஆகும், இதனால் குடும்பங்கள் குறைந்த செலவில் இந்த இடத்துக்கு செல்ல முடியும். அதே வேளை இந்தப்பணியில் ஈடுபடும் கலைஞர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகையொன்று கிடைக்கிறது.
ஆனாலும் பல குடும்பங்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்வதில்லை.
சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள் ‘தாங்கள் நாடக இரவுகளை விரும்புவதாகவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் திரும்பி எங்களைக் கூட்டிச் செல்லுங்கள்’ என்று பெற்றோரிடம் கெஞ்சுவதாகவும் பெற்றோர்களே தெரிவிக்கின்றனர். ஆனால் சிறுவர்கள் படிக்க வேண்டியிருப்பதால் தவிர்ப்பதாக கூறினர். அவர்கள் டியூஷனுக்குச் செல்ல வேண்டும். அதுவே முக்கியமென்று பெற்றோர்கள் பலர் கருதுகிறார்கள். இருப்பினும் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்த சில பெற்றோர்கள் ஒழுங்காக தவறாது தமது பிள்ளைகளை இந்தக் களத்திற்கு அழைத்துவருகிறார்கள்.
ஆனால் வாரத்தின் ஒரு நாளில் இந்த மூன்று மணிநேரத்துக்கு சிறுவர்கள் பங்கு கொண்டால் அவர்களில் நிச்சயமாக பயன்பெறுவார்கள். படிப்பு படிப்பு என்று இருந்த நாள்முழுவதிலும் ஓய்வு நேரமும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தேவைப்படுகின்றது. ஆனால் பெற்றோர்கள், விளையாட்டு நேரமும் பொழுதுபோக்கும் தேவையற்றதாகக் கருதுகிறார்கள். அவ்வப்போது விருந்தாகப் போகலாம், பயன்படுத்தலாம், ஆனால் ஒவ்வொரு வாரமும் கிரமமான முறையில் செல்ல முடியாது என்று கருதுகின்றார்கள்.
இங்கு நான் யாழ்ப்பாணப்; பெற்றோரிடம் பேச முயற்சித்தேன்; அவர்கள் அனைவரும் படித்த பணிபுரியும் நிபுணர்கள், 21 ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை, குழுப்பணி, நல்ல சமூகமயமாக்கல் திறன்கள், முடிவெடுக்கும் திறன்கள், உணர்ச்சி முதிர்ச்சி நிலை மற்றும் புத்திசாலித்தனம் தேவை. இதனை தற்போதைய கல்வி முறைகள் வழங்கமுடியாது திணறுகின்றன. இங்கு நடைபெறும் மனப்பாடம் செய்தல், சொல்வதை மீள ஒப்புவித்தல் போன்றன வாழ்க்கைக்கு தேவையான திறன்கள் எதையும் வழங்கவில்லை. தோல்வியடைந்த முறைகளையே தொடர்கிறோம். ஆனால் பெற்றோர்கள் கேட்கத் தயாராக இல்லை.
ஒரு கலாச்சாரத்தையும் ஆழமாகப் பதிந்த கருத்துக்களையும் மாற்றுவது எளிதானது அல்ல.
ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.
உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிறுவர்கள்; உங்களிடம் இருந்தால் - அல்லது உங்களுக்குத் தெரிந்திருந்தால் - அவர்கள் மீது உங்கள் பரிவு இருந்தால் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறுவர் மகிழ்களம், நாடக இரவுகளில் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவியுங்கள், அவர்களை அங்கு அழைத்துவாருங்கள். ஏனெனில் அவர்கள் பெரியவர்களானதும் இந்த வாய்ப்புக்காக உங்களுக்கு நன்றி கூறுவார்கள். அதே நேரம் அவர்கள் சிறுவர்களாக எப்போதும் நன்றி கூறுவார்கள்.
நல்லூர் சிறுவர் மகிழ்களம், நாடக இரவு நிகழ்ச்சி, இது நம் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று - அது இன்னும் முழுமையாக உணரபடவில்லை என்றாலும். இந்த அளப்பரிய முயற்சிக்காக செயல்திறன் அரங்க இயக்கம் அதன் இயக்குனர்; கலாநிதி தேவநாயகம் தேவானந்திற்கும் நன்றி சொல்லுவோம்.
எமது சிறுவர்கள் புறயிலர் கோழிகளாக வளர்கிறார்கள்இ அதனைத் தவிர்ப்போம் !
- துளசி முத்துலிங்கம் ஃ ஆங்கில ஊடகத்துறை
உலகின் பிற பகுதிகளைப் போலவே யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள் பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில் திருமணம் செய்வதும் அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான் அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
யாழ்ப்பாண கலைஞர்கள் மன்றமும் செயல் திறன் அரங்க இயக்கமும் ஆகிய நாங்கள்; சிறுவர்களின் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறோம்.
இன்று யாழ்ப்பாணத்தில் பல குடும்பங்களில் ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களே இருப்பதால் அவர்களை புறயிலர் கோழிகள் போன்று வளர்க்கின்ற பெற்றோர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இவர்களின் அதீத கவனம்இ கண்காணிப்பு காரணமாக சிறுவர்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் திறனை இழந்துவருகிறார்கள். இன்று ஒற்றைக்குழந்தைகள் உள்ள குடும்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவர்களுக்கு சகோதரர்கள் இல்லை அல்லது அக்கம் பக்கத்தில் விளையாட சகபாடிகள் இல்லை என்ற நிலைமையே காணப்படுகின்றது.
ஆகவே தற்போதைய யாழ்ப்பாணப்; பெற்றோரின் குழந்தை வளர்ப்பு ஒரு பேரழிவை நோக்கிய பயணமாகவே பார்க்கப்பட வேண்டியது. ஆனால் நாங்கள் எமது இளமைக்காலத்தில் பல உடன்பிறப்புக்களுடன் வளர்ந்தவர்கள். அயலிலும் பலர் விளையாடக்கிடைத்தார்கள். நாங்கள் துடிப்பாகவும் உற்சாகமாகவும் எமது இளமைக்காலத்தில் இருந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறுவர்கள் பெற்றோர்களின் அதீத கண்காணிப்பால்; அதிகமாக 'இல்லை' என்ற வார்த்தையைக் கேட்கிறார்கள்!. தன் குழந்தை மீது ஆர்வமுள்ள யாழ்ப்பாண பெற்றோருக்கு கூட அந்த வார்த்தையைச் சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதாவது
"இல்லை” நீங்கள் விளையாடச் செல்ல முடியாது."
"இல்லை” நீங்கள் தூங்க முடியாது நீங்கள் படிக்க விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்."
"இல்லை” நீங்கள் சோர்வாக இருப்பதால் பாடசாலைக்கு மேலதிகமாக செல்லும் பல டியூஷன் வகுப்புகளில் இருந்து தொடர்ச்சியாக விலக முடியாது.
"இல்லை” நீங்கள் இயற்கை உலா செல்வதற்கோ அல்லது பொழுதுபோக்குக்காக புத்தகங்களைப் படிக்கவோ முடியாது."
‘இல்லை’ நீங்கள் உங்கள் பாடசாலைக்காலத்தில் படிப்பு தவிர்ந்த வேறு ஏதாவது செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது.
படிப்பு…. படிப்பு… படிப்பு… வெறுமனே படித்தல் மட்டும் முக்கியமாகியிருக்கிறது.
யாழ்ப்பாண பெற்றோர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் நீண்ட வரிசையில் நின்றுஇ ஒரு வகுப்பு முடிந்தவுடன் தங்கள் விலைமதிப்பற்ற பிள்ளைகளை அடுத்த வகுப்புக்கு அழைத்துச் செல்லக் காத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கும். அங்குஇ எவ்வளவு அக்கறைஇ நேரம் மற்றும் பணம் செலவிடப்படுகிறது - இறுதியில்இ பாவம் சிறுவர்கள் தங்களுக்காக சிந்திக்கவோ அல்லது எதையும் சுயமாகச் செய்யவோ முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால்தான் யாழ்ப்பாணக் கலைஞர் மன்றத்தின் நிறுவினர் உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி தேவநாயகம் தேவானந்த் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர் மகிழ்களம்இ சிறுவர் நாடக இரவு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இங்கு சிறவர்களின் படைப்பாற்றல் மேம்படுத்தப்படுகின்றதுஇ மகிழ்ச்சியைத் தூண்டுவதற்கான செயற்பாடுகள் நடக்கின்றனஇ விளையாட்டுகள் விளையாடப்படுகின்றனஇ சமூகமயமாக்கல் நடக்கிறது. மற்றும் சிறுவர்கள் தாமே மகிழ்ந்திருக்க வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அவர்களின் ஆளுமை விருத்தியடைகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறந்த பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக பயிற்றப்பட்ட கலைஞர்கள் உள்ளார்கள். இவர்களோடு சமூக சேவையாளர்கள்இ நாடகக் கலைஞர்கள் மற்றும் சிறுவர் உளஆற்றுப்படுத்துனர்கள்இ மனநலப்பராமரிப்பு நிபுணர்களை உள்ளடக்கிய சிறந்த குழுவை அவர் கொண்டுள்ளார்.
இங்கு செல்லும் நான் பெரியவராக இருந்தாலும் அவற்றை இரசிக்கிறோம்.
நான் அடிக்கடி ஒரு பெரியவனாக பார்வையாளனாக அங்கு அமர்ந்திருக்கிறேன்இ அங்கு நடப்பவற்றை அவதானித்திருக்கிறேன். அங்கு சிறுவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன்இ நான் வளரும்போது எனக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
நல்லூரில் நடைபெறும் சிறுவர் மகிழ்களம் ஃ நாடக இரவு நிகழ்ச்சி ஒரு அரிய வாழ்நாள் வாய்ப்பு என்று துணிந்து சொல்லலாம். டிக்கெட்டுகளின் விலை ரூ.200 ஆகும்இ இதனால் குடும்பங்கள் குறைந்த செலவில் இந்த இடத்துக்கு செல்ல முடியும். அதே வேளை இந்தப்பணியில் ஈடுபடும் கலைஞர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகையொன்று கிடைக்கிறது.
ஆனாலும் பல குடும்பங்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்வதில்லை.
சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள் ‘தாங்கள் நாடக இரவுகளை விரும்புவதாகவும்இ ஒவ்வொரு சனிக்கிழமையும் திரும்பி எங்களைக் கூட்டிச் செல்லுங்கள்’ என்று பெற்றோரிடம் கெஞ்சுவதாகவும் பெற்றோர்களே தெரிவிக்கின்றனர். ஆனால் சிறுவர்கள் படிக்க வேண்டியிருப்பதால் தவிர்ப்பதாக கூறினர். அவர்கள் டியூஷனுக்குச் செல்ல வேண்டும். அதுவே முக்கியமென்று பெற்றோர்கள் பலர் கருதுகிறார்கள். இருப்பினும் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்த சில பெற்றோர்கள் ஒழுங்காக தவறாது தமது பிள்ளைகளை இந்தக் களத்திற்கு அழைத்துவருகிறார்கள்.
ஆனால் வாரத்தின் ஒரு நாளில் இந்த மூன்று மணிநேரத்துக்கு சிறுவர்கள் பங்கு கொண்டால் அவர்களில் நிச்சயமாக பயன்பெறுவார்கள். படிப்பு படிப்பு என்று இருந்த நாள்முழுவதிலும் ஓய்வு நேரமும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தேவைப்படுகின்றது. ஆனால் பெற்றோர்கள்இ விளையாட்டு நேரமும் பொழுதுபோக்கும் தேவையற்றதாகக் கருதுகிறார்கள். அவ்வப்போது விருந்தாகப் போகலாம்இ பயன்படுத்தலாம்இ ஆனால் ஒவ்வொரு வாரமும் கிரமமான முறையில் செல்ல முடியாது என்று கருதுகின்றார்கள்.
இங்கு நான் யாழ்ப்பாணப்; பெற்றோரிடம் பேச முயற்சித்தேன்; அவர்கள் அனைவரும் படித்த பணிபுரியும் நிபுணர்கள்இ 21 ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைஇ குழுப்பணிஇ நல்ல சமூகமயமாக்கல் திறன்கள்இ முடிவெடுக்கும் திறன்கள்இ உணர்ச்சி முதிர்ச்சி நிலை மற்றும் புத்திசாலித்தனம் தேவை. இதனை தற்போதைய கல்வி முறைகள் வழங்கமுடியாது திணறுகின்றன. இங்கு நடைபெறும் மனப்பாடம் செய்தல்இ சொல்வதை மீள ஒப்புவித்தல் போன்றன வாழ்க்கைக்கு தேவையான திறன்கள் எதையும் வழங்கவில்லை. தோல்வியடைந்த முறைகளையே தொடர்கிறோம். ஆனால் பெற்றோர்கள் கேட்கத் தயாராக இல்லை.
ஒரு கலாச்சாரத்தையும் ஆழமாகப் பதிந்த கருத்துக்களையும் மாற்றுவது எளிதானது அல்ல.
ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.
உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிறுவர்கள்; உங்களிடம் இருந்தால் - அல்லது உங்களுக்குத் தெரிந்திருந்தால் - அவர்கள் மீது உங்கள் பரிவு இருந்தால் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறுவர் மகிழ்களம்இ நாடக இரவுகளில் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவியுங்கள்இ அவர்களை அங்கு அழைத்துவாருங்கள். ஏனெனில் அவர்கள் பெரியவர்களானதும் இந்த வாய்ப்புக்காக உங்களுக்கு நன்றி கூறுவார்கள். அதே நேரம் அவர்கள் சிறுவர்களாக எப்போதும் நன்றி கூறுவார்கள்.
நல்லூர் சிறுவர் மகிழ்களம்இ நாடக இரவு நிகழ்ச்சிஇ இது நம் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று - அது இன்னும் முழுமையாக உணரபடவில்லை என்றாலும். இந்த அளப்பரிய முயற்சிக்காக செயல்திறன் அரங்க இயக்கம் அதன் இயக்குனர்; கலாநிதி தேவநாயகம் தேவானந்திற்கும் நன்றி சொல்லுவோம்.
No comments:
Post a Comment