- திணிக்கப்படும் உணவு அரசியலுக்கெதிராக குரல் கொடுப்போம் -
Dr.தேவநாயகம் தேவானந்த்
சென்ற வாரங்களில் சூடான செய்தியாக இருந்தது நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்ட Barista உணவுப்பெரு நிறுவனத்தின் கிளை திறப்பும் அதற்கெதிராக சைவ அமைப்புக்களின் போராட்டமும் ஆகும். போராட்டத்திற்கான காரணம் நல்லூருக்கு அண்மையில் மாமிச உணவுப்பரிமாற்றம் கோவிலின் தூய்மையைக் கெடுக்கிறது என்பதாகும். இதில் முன்னெப்போதும் இல்லாது சைவ அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தியிருந்தன. இங்கு, பல்தேசிய உணவு வலையமைப்பு மாநகர சபையில் அனுமதி பெறாமலே அந்தக்கிளையைத் திறந்ததாகவும். மாநகர சபை அதற்கெதிராக வழக்குப்பதிவு செய்வதாகவும் பேசப்பட்டது. இதற்கிடையில் குறித்த பல்தேசிய உணவு வலையமைப்பு தாம் அந்தக்கிளையில் மாமிச உணவு பரிமாறமாட்டோம் என்று ஒரு பனர் வைத்ததோடு அந்தப்போராட்டம் நீர்த்துப்போனது. இதே போல சில மாதங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு பிரியாணிக்கடைகள் அதிகளவில் வருகின்றன என்று தனது விசனத்தைப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் ஆழ அகலங்கள் பற்றி சிந்தித்து அதன் அரசியல் பற்றிய தெளிவோடு எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றனவா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஏனெனில் இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் நல்லூருக்கு அண்மையில் இன்னொரு பல்தேசிய உணவு வலையமைப்பான Chinees Dragon தனது கிளையைத் திறக்க ஆயத்தமாகிறது.
இங்கு, தமிழர் அடையாளத்தை இல்லாது செய்வதில்; பல்வேறு தரப்பினரும் கைகோர்த்து பணியாற்றுகிறார்கள் என்தைப் புரிந்து கொள்ள முடியும். உணவு அரசியல் என்பதும் ஒரு தேசிய இனத்திற்கெதிரான தாக்குதலே என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உணவுப்பண்பாட்டு மாற்றம் ஒரு தேசிய இனத்தின் இருப்பைப் இல்லாது ஒழிக்க முடியும். உலகம் முழுவதும் உணவு ஒரு ஆயுதமாக தேசிய இனத்திற்கு எதிரான அரசியலாகப் பாவிக்கப்படுகின்றது. இந்தப்பின்னணியில் தான் தற்போதைய உணவுக்கடைகளின் படையெடுப்பை நாம் பார்த்தாக வேண்டும். அதற்கு என்ன செயயலாம் என்பது பற்றியும் சித்தாக வேண்டும்.
யாழ்ப்பாண உணவுப் பண்பாடு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் நடைமுறையல்ல. அது நினைவுகளின் தொகுப்பாகவும், காலநிலை அறிவியலின் வெளிப்பாடாகவும், சமுதாய நெறிகளின் சூட்சும வடிவமாகவும் அமைந்துள்ளது. இந்த மண்ணின் மொழிபெயர்க்க முடியாத உணவுக் கதைகள் கிராமம் முதல் நகரம் வரை பரவிக்கிடக்கின்றன.
இந்நிலையில், சமீப ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் KFC, Pizza Hut,Burger King,Domino's, Popeyes ,Keels,
Barista, Chinees Dragon போன்ற பன்னாட்டு உணவு நிறுவனங்கள்;
Delize, Kalis, R.R. பிரியாணி போன்ற வணிகவாத இந்திய உணவு நிறுவனங்கள், விரைவாக பரவி வருகின்றன. இவை "நவீனமான" நாகரீகமான உணவுகள் என்ற முத்திரையை சுமக்கின்றன. ஆனால் உண்மையில், இவை யாழின் பாரம்பரிய உணவுகளை மறைத்துவிடும் ஒரு உணவியல் ஆதிக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
சுவை என்பது இயற்கை அல்ல – அது சமூக கட்டமைப்பாகும்
அன்றாட வாழ்வியல் சூழலில், நமது உணவுப் பழக்கங்கள் "பொதுவான" அல்லது "இயல்பான" சுவைத் தேர்வுகளாக ஏற்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், சுவை என்பது ஒரு சமூக கட்டமைப்பு, இது பன்முகமான பின் படிநிலைகளால் – சமூக வர்க்கம், வரலாறு, கல்வி, சந்தை – கட்டமைக்கப்படுகிறது. சுவை என்பது கலாச்சார தலைமைப் பெருமையை நிறுவும் ஒரு கருவியாகும்.. இதில், பல்Nதுசிய வணிக வர்க்கம் தங்கள் சுவையை "தூய்மை", "முக்கியம்", "நாகரிகம்" எனக் கூறி, பின்தங்கிய சமூகங்களின் உணவுகளை கீழ்த்தரமாக வகைப்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில், ஒடியல்கூழ் அல்லது முருங்கை கீரை கஞ்சி போன்ற உணவுகள் "நார்ச்சத்து" மிக்கவையாகும். ஆனால், இவை நாகரிகமற்றவை என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. இதனால் இவை உணவு அடையாள அரசியலில் பின் தங்கி நிற்க, பீட்சா, பெர்கர் போன்ற மேற்கத்திய உணவு வகைகளும் பரியாணி போன்ற இந்திய உணவும் "நவீனம்" என மதிக்கப்படுகின்றன.
பாரம்பரிய உணவுகளின் கலாச்சார உளவியல்
யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள், குறிப்பாக ஓடியல் கூழ்,சோறு, குழம்பு, இறைச்சிக்கறி, பனங்கிழங்கு, வடை, பாரம்பரிய பச்சை இலைக் கறிகள் என்பவை வெறும் சுவைக்கானவை அல்ல அது ஒரே நேரத்தில்:
• ஒரு காலநிலை அறிவு (ஊடiஅயவந-ளிநஉகைiஉ நஉழடழபல),
• ஒரு உடலியல் ஆரோக்கியம் (நுஅடிழனநைன றநடடநௌள),
• ஒரு சமூக அடையாளம் (ஊரடவரசயட டிநடழபெiபெ) ஆகிய மூன்றையும் சுமக்கிறது.
இங்கு, ”சமையல் என்பது சமூகங்கள் தங்களை வெளிப்படுத்தும் ஒரு மொழி.” பன்னாட்டு உணவுகள் இந்த மொழியை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் இருக்கின்றன. இதையே, உணவு ஆராய்ச்சியாளர் இரவீந்திரன் (2020) ஓரங்கட்டப்பட்ட உணவுப் பண்பாடுகளை மீள எழுதுவதும், ஆவணப்படுத்துவதும் ஒரு அறிவியலியலாளனது கடமை ஆகும் என்கிறார்.
பன்னாட்டு உணவின் ஒரு நிலையான கூற்று – "செய்து விடு, சாப்பிடு, மறந்து விடு" என்பதாகும்
ஆஉனுழயெடன’ளஇ முகுஊ போன்ற நிறுவனங்கள் விளம்பரங்களில் "கயளவ"இ "கரn"இ "கசநளா" என வியாபார முத்திரைகளை உருவாக்குகின்றன. அதே வேளை இவை உணவின் சமுதாய - அனுபவ அம்சங்களை அழித்துவிடுகின்றன.
உண்மையில் பன்னாட்டு உணவுகள் மண்ணைப் பற்றிய நினைவுகளை அழிக்கின்றன.” பீட்சா கடைகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் தாய் சமையலின் வாசனைக்கே இடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால், சுவை என்பது ஒரு தொலைதூரப் பெருவாரியான அதிக விலை கொண்ட பண்டமாக மாறுகிறது – இது உணவின் மூலப் பொருள் மற்றும் கலாச்சாரத் தொடர்பை துண்டிக்கிறது.
சுவையை மீட்டெடுப்பது கலாச்சாரச் சுதந்திரம்
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு என்பது வெறும் உணவுப் பொருளல்ல. அது ஒரு சமூகத்தின் அடையாளச் சின்னம், அதன் நினைவகத்தின் வடிவம், மற்றும் பல பல்லாயிரம் ஆண்டுகளின் அனுபவ அறிவியல். சுவையை மீட்டெடுப்பது என்பது எங்கள் பழங்கால மூதாதையர்களின் பாரம்பரியத்தையும், வாழ்வியல் விழுமியங்களையும் காப்பாற்றும் ஒரு அரசியல் செயல் ஆகும்
யாழ்ப்பாணத்தில் பீட்சா உண்ணுவது என்பது வெறும் விருப்பத்தில் நடைபெறுவதல்ல அது ஒரு அரசியல், திணிக்கப்பட்ட அரசியல் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். வாழை இலையில் தோசை சாப்பிடுவது, களிமண் கோப்பையில் ரசம் குடிப்பது என்பவை மேலாதிக்க எதிர்ப்பு கலாச்சார செயலில் பங்கேற்பதாகும். அப்படியானால், யாழ்ப்பாணத்தின் உணவை அதன் நினைவாற்றல், கண்ணியம் மற்றும் எதிர்ப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் ரசனையுடன் சமைப்போம், உண்போம், கற்பிப்போம்.
No comments:
Post a Comment