Saturday, 7 January 2017

‘ஜெ‘ : 29 ஆண்டுகளுக்கு முன் அவமரியாதைக்குள்ளானவர் அதே இடத்தில் மிகப்பெரிய மரியாதை பெறுகிறார் ! -02


தேவநாயகம் தேவானந்த்

திராவிடக்கழகங்களின் போர் வாள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் எல்லாம் தமிழை மிகக்கச்சிதமாக கையாளும் ஆற்றல் பெற்றவர்கள். தொடர் மொழிகள் எதுகை, மோனை, உவமை, உருவகம் அடுக்கு மொழிகள் என்று தமிழ் அவர்கள் நாவில் நின்று விளையாடும். இந்த பேச்சாற்றலால் தான் திராவிட இயக்கங்கள் பெரு வளர்ச்சி கண்டன அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றவர்களின் பேச்சுக்களை காசு கொடுத்துக் கேட்குமளவிற்கு அவை பிரபல்யமானவை . அண்ணாத்துரையின் பேச்சுக்களைக் கேட்க மக்கள் அலைமோதுவார்கள். அண்ணா தனது பேச்சுகளில் குட்டிக்கதைகள் சொல்லுவார் அவை கேட்போருக்கு சுவையானவைகளாக இருக்கும். இந்தப் பேச்சுப் பாரம்பரியத்தில் வராதவர் ஜெயலலிதா.



ஆனால் அவர் தான் அ.தி.மு இன் கொள்கைபரப்பு செயலராக கட்சியை வெற்றி பெறச் செய்தார். அவரின் வசிகரமான தோற்றம், நடிகையென்ற அந்தஸ்து, அவரது பிரச்சாரங்களுக்கு துணை நின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக துணிவோடு வெளிப்படையாக தனது மனதில் தோன்றுபவற்றை நறுக்காக பேசுபவர். தனது மேடை பேச்சு குறித்து ஜெ. கூறுகையில் ''பொதுக்கூட்டங்களில் குட்டிக் கதைகள் நகைச்சுவை உதாரணங்கள் சொல்வது என் வழக்கம். மக்கள் ரசிக்கிறார்கள். பொதுக்கூட்டங்களில் நான் வளவளவென்று பேசுவது இல்லை. குறிப்பெடுத்துக்கொண்டு பேசுகிறேன்''என்றார்.

இவரது பேச்சுக்களை பாமர மக்கள் மிகவும் விரும்பிக்கேட்பார்கள்.அதற்காக பல மணி நேரத்தைச் செலவிடுவார்கள்.  சேலம் ஆத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தாய்மார்கள் பகுதியில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி இருந்திருக்கிறார். பிரசவ வலி வந்துவிட்டதாம்.அப்படியும் 'அம்மா பேச்சைக் கேட்காமல்போக மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். 'இங்கேயே குழந்தை பிறக்கட்டும்... அம்மா பெயரையே வைக்கிறேன்' என்று அடம் பிடித்தாராம். தொண்டர்கள் பெரும்பாடுபட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தளவிற்கு மக்கள் அளபபெரும் அன்பு கொண்டிருந்தார்கள். nயைலலிதாவும் மேடைகளில் மக்களுக்காகப் பேசினார்கள்.
இவரது பேச்சு மக்களால் விரும்பப்பட்ட போதும். அது பல சர்ச்சைகளையும் கொண்டு வந்தது. ஒரு தடவ தமிழ்நாட்டு ஆளுனர் பற்றி இவர் தெரிவித்த கருத்து எல்லோரையும் அதிர வைத்தது.
'' நான் ஆளுநர் மாளிகைக்கு சென்ற போதுஇ ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்'' இது சட்டமன்றத்தில் - தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி மீது  ஜெயலலிதா தெரிவித்த குற்றச்சாட்டு.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடந்த போது அதற்கு ஆதரவளித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா பா.ஜா.க பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து இந்திய அரசிலில் அதிர்வலைகளைத் தோற்றுவித்தார்.
''இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல்இ தைரியம் எனக்கு உண்டு அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பிஜேபி ஆட்சியை நான் கவிழ்த்தேன்.'' - சென்னை கடற்கரையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றிய ஜெயலலிதா தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்பதை வெளிப்டையகக் தெரிவித்தார்.

1998-ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பை மையமாக வைத்து திமுக ஆட்சியை தங்களின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக கலைக்கவில்லை என்ற கோபத்தில் ஜெயலலிதா கூறியது "பல பிரச்சினைகளை நினைவில் வைத்திருக்கும் பாஜக தலைமை குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் நினைவிழந்து (செலக்டீவ் அம்னெஷியா) பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத இப்படிப்பட்ட ஒருவர் (அத்வானி). உள்துறை அமைச்சராக கிடைத்து இருக்கிறாரே என்ற வேதனைதான் ஏற்படுத்துகிறது" என்று பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்

இதே போன்று கம்யூனிஸடுக்கள் பற்றி 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின."தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள்" அதனை சட்டமன்றத்திலும் ஜெயலலிதா பதிவு செய்தது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு திராவிடக் கட்சிக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை தாங்குவதா என்ற விமர்சனம் எழுந்த போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்குப்பதற்காக  ஜெயலலிதாஇ "ஆமாம்! நான் பாப்பாத்தி தான்'' என்று தமிழக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார். தனது அரசியல் இருப்புக்காக எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதவர். தான் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் அரசியல் நடத்தியவர.இதனால்; தான் இந்தனை மரியாதைகளோடு அமரத்துவமடைந்திருக்கிறார். ‘நான் கமராவின் முன்னால் மட்டும் தான் நடித்திருக்கிறேன். மற்றப்படி எனக்கு நடிக்க வராது’ என்ற அவரின் கூற்றுக்கு உண்மையாக இருந்திருக்கிறது.
''மக்களால் நான்இ மக்களுக்காக நான்'' - இது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அடிக்கடி முழங்கிய வாசகம் . இது குறித்து சில எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்த போதிலும்இ மக்களின் குறிப்பாக அதிமுக தொண்டர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற வாசகம் இது.

ஜெ. தனது அனல் பறக்கும் பேச்சாலும்இ புன்னகை முகத்தாலும் மக்களை வசீகரிக்க தொடங்கினார். ஜெ. இன் பேச்சுத்திறமை மற்றும் ஆங்கிலஇஇந்தி புலமைகளைக் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டில்லி அரசியலுக்கு சரியான நபர் என்று தீர்மானித்துஇ 1983மார்ச் 4இல் ராஜ்யசாபா எம்.பி.ஆக்கினார். ராஜ்யசபா அ.தி.மு.க. துணைத்தலைவராகவும் நியமித்தார். ராஜ்யசபாவில் ஜெ. பேசிய கன்னி பேச்சு  பிரதமர் இந்திரா உள்பட அனைவரையும் கவர்ந்தது. அதே நேரத்தில் ஜெ.க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என  கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ப்தி அடைந்தார்கள். கட்சியிலிருந்து ஜெயலலிதாவை துரத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெ மீது வைத்த அபரிமிதமான நம்பிக்கை அவரை அசுர வேகத்தில் வளர்ச்சி பெற வைத்தது.
எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவின் போது ஜெ மூத்த தலைவர்களால் புறக்கணிக்கபட்டார் இருந்தாலும் அப்போது நடந்த தேர்தலில்  தனது பிரச்சாரத்தால் அ.திமு.க வை வெற்றி பெறச் செய்தார். 1984ல் நடந்த தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார். ஜெ. க்கு மூத்த தலைவர்களிடம் தான் அதிருப்தி இருந்ததே தவிர தொண்டர்களிடமும் மக்களிடமும் இல்லை என்பதை அவர் சென்ற இடமெல்லாம் கூடிய மக்கள் கூட்டம் நிரூபித்தது.
அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 152 இடங்களில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணிகட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன.எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.லோக்சபா தேர்தலில் காங். 25 அ.தி.மு.க.-12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன. இதையடுத்து ஜெ. புகழ் உயரத் தொடங்கியது. அவருக்கென அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலர்கள் என ஆதரவாளர்கள் உருவாகினர். சிகிச்சை முடித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றார்.
1987 டிச. 24ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். முதல்வர் எம்ஜிஆர் இறந்தததை அறிந்ததும் அவருடைய வீட்டிற்கு ஜெயலலிதா விரைந்தார். ஆனால் எம்ஜிஆரின் மனைவி ஜானகிஇ எம்ஜிஆரின் உடலை ஜெயலலிதா பார்க்க அனுமதிக்கவில்லை. எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டிருந்த அறையை ஜானகி பூட்டச் செய்தார். எம்ஜிஆரின் உடல் வீட்டின் பின்புறம் வழியாக பொது மக்கள் அஞசலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதிர்ச்சி அடைந்தhர் ஜெயலலிதா.

தொடர்ந்துஇ எம்ஜிஆரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு சென்றுஇ எம்ஜிஆரின் தலைமாட்டருகே சோகமே உருவாக நின்று கொண்டார். அந்த இடத்துக்கு எம்ஜிஆரின் மனைவி ஜானகி தாமதமாக வந்ததால்இ ஜெயலலிதாவுக்கு கிடைத்த முக்கியத்துவம் அவருக்கு கிடைக்கவில்லை. சுமார் 30 மணி நேரம் எம்ஜிஆர் உடலின் தலைமாட்டில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த ஜெயலலிதாவின் தோற்றம்இ அதிமுக.வினரின் மனதில் ஆழப் பதிந்தது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் உடல் அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது. ஜெயலலிதா உடன் செல்ல விரும்பினார். அதற்காக எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ டிரக்கில் ஏற முயன்றார்.அப்போது நடந்த ஒரு சம்பவம் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது டிரக்கில் ஏற முயன்ற ஜெயலலிதாவைஇ ஜானகியின் உறவினர் டிரக்கிலிருந்து கீழே இழுத்து தள்ளினார். எந்த ஒரு அரசியல்வாதியின் இறுதி ஊர்வலத்திலும் நடந்திராத இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் ஜானகியும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால்இ லட்சக்கணக்கான மக்கள் காண முடிந்த எம்ஜிஆர் உடல் அடக்கத்தைஇ ஜெயலலிதாவும் ஜானகியும் காண இயலாமல் போனது.
விரக்தி அடைந்த ஜெயலலிதாஇ தனது அரசியல் எதிர்காலமே இருண்டு விட்டதாக கருதிஇ போயஸ் இல்லத்திற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். இருப்பினும் எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்இ அதிமுக தொண்டர்கள் மனதில்இ சோகமே உருவான ஜெயலலிதாவின் தோற்றமே நிலைத்து நின்றிருந்ததால்இ அவர்கள் திரளாக போயஸ் இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இன்று ஜெயலலிதா உடல் அதே ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுஇ லட்சக்கணக்கான மக்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிலை உருவானது.  இந்தியாவின் அதியுர் சபைகள் இரண்டும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் ஒத்திவைத்திருக்கின்றன. இவ்வாறு ஒரு முதலமைச்சரின் இறுதி நிகழ்விற்காக பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் தடவை. 20 மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்று பலரும்; நேரில் சென்று அஞ்சலி செலுத்தியமை புதிய வரலாறாகப் பதியப்பட்டுள்ளது.

1987 ம் ஆண்டு 29 ஆண்டுகளுக்கு முன் இதே ராஜாஜி அரங்கில் அவமரியாதைக்கு உள்ளாகிஇ உதைத்து இறக்கி விடப்பட்ட ஒரு பெண்மணியின் உடல் அதே இடத்தில் தேசிய கொடி போர்த்தப்பட்டுஇ அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது. இது  சாதனையல்லாமல் வேறென்ன!!!!
(தொடரும்)

No comments:

Post a Comment