தமிழ்நாட்டு அரசியல் மூன்று முதலமைச்சர்களை தனது பதவிக்காலத்தில் இழந்திருக்கிறது. பேரறிஞர் இண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்.ஸி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலிதா. இதில் இரண்டு தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தைச சார்ந்தவர்கள். ஆட்சியில் இருக்கும் போது சாவடைவதென்பது அந்த மக்களின் துயரங்களின் எல்லையில்லாத் தன்மையையும் கொடுப்பதோடு ஆட்சி ஆட்டம் காணுவதும் கட்சிகள் பிளவு படுவதும் நடைபெறுகின்ற. எம்.ஜி.ஆர் இறந்தபோது அ.தி.மு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டியிருந்தது.
திராவிட இயக்கங்களின வளர்ச்சி தமிழ்நாட்டின் அரியலின் பெரும் திருப்பு முனையாக இருந்திருக்கிறது. இ.வே. பெரியார் ஆரம்பித்து வைத்த சமூக நீதி இயக்கம் இந்த திராவிட இயக்கங்களின் மூல ஊற்று எனலாம். அண்ணாத்துரை இதன் இயக்கவிசை பெரியாரிடமிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்தார். அண்ணாவின் இறப்பின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழம் உடைந்தது. புதிய கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழம் எம்.ஜி. ஆரினால் தொடக்கப்பட்டு தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்ற பிரதான அரசியல் நீரோட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆண்ணாவின் பாசறையில் வளர்ந்த கருணாநதி, எம்.ஜி.ஆர் என்ற ‘இருவர’; இரண்டு கிளைகளாக திராவிட இயக்கத்துக்கு வலுச்சேர்த்தார்கள். தமிழ்நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக அரசியலைத் தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். இந்த நீரோட்டத்தில் எம.ஜி.ஆரைப்போன்று திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர் தான் ஜெயலலிதா. ஏம்.ஜி.ஆர் இருநூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1980 ஆண்டு வரை 112 படங்களில் நடித்த ஜெயலலிதா “எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியல் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா “ இது பாட்டhளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாசின் கருத்து
''எனக்கென்று எதுவுமில்லை எனக்கென்று யாருமில்லை தமிழக மக்கள் தான் எனக்கு எல்லாமே '' அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க செய்யும் ஜெயலலிதாவின் வாசகம்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து ஜெயலலிதா வினவும் ''செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'' வாசகம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆசாத்தியமான ஆளுமையும் வசீகரமும் கொண்டவர். தனது கடினமான அரசியல் பயணத்தில் தடைகற்களாக இருந்த எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து அவற்றை எல்லாம் தனது வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றியவர். துpராவிட இக்கம் எனபது பாரபனிய எதிரப்பு என்று அடையாளப்படுத்தப்பட்ட சூழலில் திராவிட இக்கத்திற்கு ஒரு பிராமண குலத்தின் பெண்ணாக அதுவும் நடிகையாக நுழைந்து அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கியிருப்பது அவரது சாதனைக்கான எடுத்துக்காட்டு.
துpராவிட இயக்கம் ஒன்றிற்கு பிராமண குலத்தவர் ஒருவர் தலைமை தாங்குவதா? ஏன்ற விமர்சனங்கள் வந்த போது
ஆமாம்! நான் பாப்பாத்தி தான்'' என்று தமிழக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார். அவரது உரைகள் துணிச்சல்மிக்கன. ஒரு தடைவ
1982-ஆம் ஆண்டில்இ கடலூரில் 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் ஜெயலலிதா தனது முதல் அரசியல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ' நடிகை' என்ற ரீதியில் அவர் கடுமையாக எதிர்க்கட்சிகளாலும்இ ஊடகங்களாலும் தனி நபர் தாக்குதலுக்கும்இ உதாசீனத்துக்கும் உள்ளானார்'' என்று எழுத்தாளரும் பத்திரகையாளருமான வாஸந்தி குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது.
துமிழகத்தின் முன்னால் முதலமைச்சரககளாக கருணானிநி மற்றும் அண்ணாத்துரை போன்று அடுக்கு மொழியில் பேசி மக்களைக் கவரும் சொல்லாற்றல் மிக்கவரல்ல ஜெயலலிதா இருப்பினும் எம்.ஜி.ஆரின் மறைவின் பின்னர் தமிழக அரசியல் தளத்தில் எழுந்த வெற்றிடத்தை நிரப்பியவர். வசீகரமான தலைவராக திகழ்ந்தவர்.
இரும்பு மனிசி என்றும் யாராலும் இலகுவில் அணுகமுடியாதவர் என்றும் விமர்சிக்கப்படும் ஜெ யாரையும் எளிதில் நம்ப முடியாது என்ற திடமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுவார்கள். அது அவரது வாழ்க்கையில் ஏற்ப்பட் கசப்பான நிகழ்வுகளின் எதிர் வனை எனலாம்.
சிறந்த நிர்வாகத் திறனுள்ள அதிகாரிகளின் துணை கொண்டுஇ தனது ஆளுமை திறனால் ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. யாரையும் நம்பாத தனது குணத்தால்இ இரும்புக்கரம் கொண்டு ஆட்சியையும்இ கட்சியையும் நடத்திய போக்கு ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும்இ எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த எண்ணற்ற சிக்கல்களையம் ஏமாற்றங்களையும் சமாளிக்க அவருக்கு அந்த இரும்புக்கரம் தேவைப்பட்டது எனலாம்
அரசியல்வாதிகளுக்கு திருப்பம் தரும் இடம் மதுரை. இதே மதுரை தான் ஜெயலலிதா வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1981ல் மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதற்கான பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார்.
அந்த மாநாட்டில் 'காவிரி தந்த கலைசெல்வி' என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார்
அந்த வகையில் ஜெ.அரசியல்பிரவேசத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன்.
1982இ ஜூனில்இ அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக ஜெ.இ சேர்ந்தார். தான் கொண்டுவந்தசத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 'மக்களை வசீகரிக்கும் முகம்' எம்.ஜி.இ ஆருக்கு தேவைப்பட்டது. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் உத்தரவுப்படி மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பற்றி பேசினார்.
இத்திட்டத்திற்கு சொந்த பணத்தில் இருந்துஇ 40 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்; தன்னிடம் கொடுத்த பொறுப்பை மிகச் சிறப்பாக செய்தார். இந்த திறமையை பார்த்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவில் ஜெ.இயை நியமித்தார். 1983-ல் கழக கொள்கை பரப்பு செயலராக நியமித்தார்
''மக்களால் நான்இ மக்களுக்காக நான்'' - இது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அடிக்கடி முழங்கிய வாசகம் . இது குறித்து சில எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்த போதிலும்இ மக்களின் குறிப்பாக அதிமுக தொண்டர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற வாசகம் இது.
ஜெ. தனது அனல் பறக்கும் பேச்சாலும்இ புன்னகை முகத்தாலும் மக்களை வசீகரிக்க தொடங்கினார். ஜெ.இவிடம் இருந்த பேச்சுத்திறமை மற்றும் ஆங்கிலஇஇந்தி புலமையையும் கவனித்தஇ எம்.ஜி.ஆர். இவர்தான் டில்லி அரசியலுக்கு சரியான நபர் என்று தீர்மானித்துஇ 1983மார்ச் 4இல் ராஜ்யசாபா எம்.பி.இஆக்கினார். ராஜ்யசபா அ.தி.மு.க.இ துணைத்தலைவராகவும் நியமித்தார். ராஜ்யசபாவில் ஜெ. பேசிய கன்னி பேச்சு அங்கு பிரதமர் இந்திரா உள்பட அனைவரையும் கவர்ந்தது. அதே நேரத்தில் ஜெ.இக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்.இ என மூத்த கட்சிக்காரர் மத்தியில் ஆதங்கப்பட்டனர். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெ மீது வைத்த அபரிமிதமான நம்பிக்கை அவரை அசுர வேகத்தில் வளர்ச்சி பெற வைத்தது.
எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவின் போது ஜெ மூத்த தலைவர்களால் புறக்கணிக்கபட்டார் .அப்போது நடந்த தேர்தலில் தனது பிரச்சாரத்தால் அ.திமு.க வெற்றி பெறச் செய்தார். 1984ல் நடந்த தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார். ஜெ.இ வுக்கு மூத்த தலைவர்களிடம் தான் அதிருப்தி இருந்ததே தவிர தொண்டர்களிடமும்இ மக்களிடமும் இல்லை என்பதைஇ அவர் சென்ற இடமெல்லாம் கூடிய மக்கள் கூட்டம் நிரூபித்தது.
அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.இ 152 இடங்களில் போட்டியிட்டுஇ 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணிகட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன.எம்.ஜி.ஆர்.இ அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.லோக்சபா தேர்தலில் காங். 25 அ.தி.மு.க.இ -12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெ. புகழ் உயரத் தொடங்கியது. அவருக்கென அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலர்கள் என ஆதரவாளர்கள் உருவாகினர். சிகிச்சை முடித்துஅமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றார்.
1987 டிச. 24ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். இறுதிவரை அவரது உடலருகே இருந்த ஜெ. அனைவராலும் கவனிக்கப்பட்டார்.எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு அனுதாபம் ஏற்பட்டது.எம்.ஜி.ஆர்.இ மறைவை தொடர்ந்து நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார் அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதல்வராக்கப் போவதாக அவர் அறிவித்தார். இதனால்இ அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெ.இ வுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன் திருநாவுக்கரசர் பண்ருட்டி ராமச்சந்திரன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அரங்கநாயகம் போன்றஜெ. வின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெ.இவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகிஇ ஆர்.எம்.வீ.இ போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில்இ அ.தி.மு.க.எம்.எல்.ஏ.இக்களில்இ 98 பேர் ஜானகிக்கும்இ 29 பேர் ஜெ.வுக்கும் ஆதரவளித்தனர்.
1988 ஜன. 7ல் ஜானகி முதல்வராக பதவியேற்றார். மேலும் 3 வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் குரானா அறிவித்தார். 62 இடங்கள் வைத்துள்ள காங். ஆதரித்தால் ஆட்சி நீடிக்கும் என முடிவு செய்த ஆர்.எம்.வி. நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவுக்கு துாது விட்டார். ஆனால்இ பிளவு பட்ட அ.தி.மு.க.இவை ஆதரிக்கப்போவதில்லை என ராஜிவ் கூறிவிட்டார் ஜெ.இ அணிக்கும் அதே பதிலை சொன்னார். ஜன. 28ல் சட்டசபை கூடியதும் ஜானகி- ஜெ. அணிகளுக்கிடையே அமளி ஏற்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டது. பின் ஓராண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின் 1989ல் சட்டசபை தேர்தல் வந்தது.அ.தி.மு.க.இ இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம; முடக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும்இ ஜெயலலிதாவிற்கு சேவல்
சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜெ.இ அணிஇ 27 இடங்களில் வென்றது.ஜானகி அணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. போடி தொகுதியில் வெற்றி ஜெ. முதன்முறையாக எம்.எல்.ஏ.இ ஆனார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகிஇ தனது பிரிவை ஜெ. அணியுடன் இணைத்தார். பின் ஒன்றுபட்ட அ.தி.மு.க.இவின் பொதுச்செயலர் ஆனார் ஜெ. இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அப்போது தலைமையேற்ற ஜெ.இ எம்.ஜி.ஆரின் புகழுக்கு சிறிதும் குறை ஏற்படாமல் 27 ஆண்டுகள் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்திஇ மூன்று முறை ஆட்சியிலும் அமர வைத்தார். எம்.ஜி.ஆரை போலவே மக்களிடமும் தொண்டர்களிடமும் அழியாப் புகழ் பெற்றார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் நிலை என்னவாகும்?
முன்னாள் முதல்வரும்இ அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி. ஆர்இ தனக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவ்வாறே தான். அவருக்குப் பிறகு கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை யாரும் நிரப்புவது சுலபமல்ல. அதிமுகவின் எதிர்காலம் குறித்து குழப்பமான சூழல் காணப்படுகிறது .அதிமுக என்ற இயக்கம் உடைவதற்கு கூட வாய்ப்புண்டு
No comments:
Post a Comment