Monday, 9 January 2017

‘ஜே‘ : 43 வழக்குகளோடு அரசியல் அரங்கில் வெற்றிகளைக் குவித்தவர் -04


தென்னாசியாவில்எந்தவொரு அரசியல் பினபுலமும் இல்லாது பெண்ணொருவர் அரசியலுக்கு வருவதென்பது இமாலயச்சாதனை எனலாம். அதுவும் திருமணமாகாத தனியொருவராக அரசியலில் நிலைப்பபென்பது மிக கடினமான பயணமாகும். சினிமாவிலிருந்து குறிப்பாக வெகுசன ஊடகங்களில் இருந்து ஆண் ஒருவர் அரசியல் தலைமைக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஏம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் திரையில் தோன்றும் தங்கள் பரட்சிகரப்பாத்திரங்களின் பிம்பங்களுடனேயே நிஜவாழ்வில் தோன்றி வெற்றி பெற முடியும்.



ஆனால் பெண்னொருவர் திரைப்பிம்பத்துடன் அப்படியே நிஜவாழ்விற்கு வந்துவிட முடியாது. அதிலும் தமிழ் சினிமா திரையில் படைக்கிற பெண்பிம்பம் என்பது ஆண்சார்ந்தாகவும் அதிலும் ஆணின் போகப் பொருளாகவுமே சிருஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில் பெண் சினிமா நடிகையொருவர் சினிமா பிம்பத்ததை மட்டுமே நம்பி அரசியலில் வெற்றி பெற்று விட முடியாது. ஏவ்வாறு திரையில் பெண் கதாபாத்திரங்களுக்கெதிராக சதாகாலமும் வில்லன்கள் நிறுத்தப்படுகிறார்களோ அதே போன்று தான் வாழ்க்கையிலும் நிறுத்தப்படுகிறார்கள். வெள்ளித்திரை நாயகியொருவர் அரசியலுக்கு வந்தால் அந்த வில்லன்கள் அதிகமாகவே காணப்படுவார்கள். ஜெயலலிதா வெள்ளித்திரையிலிருந்து அரசியலுக்கு வந்தபோது முக்கியமான வில்லனாக கருணாநிதி சதாகாலமும் காணப்பட்டார். ஏம்.ஜி.ஆர் என்ற மனிதன் கருணாநிதியின் அரசியல் வில்லனாக உதித்து அவரது அரசியல் கனவுகளை தகர்த்து வந்தார். அவரது இறப்பின் பின்னர் தான் தமிழ்நாட்டின் அரசியலில் ஏகத்தலைவராக இருக்கமுடியும் கருணாநிதி  நம்பினார். ஆனால் திடீரென ஜெயலலிதா என்ற பெண் தன்முன்னால் தனக்கு சவால் விடுவதை அவர் எதிர்பார்க்க வில்லை. இதனால் ஜெயலலிதாவை நோக்கி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டார். இது  அவ்வப்போது வெளிப்டையயாகவும் நடந்தேறியது.
இதில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாமீது தி.மு.க வினர் நடத்திய தாக்குதல் முக்கிமானது. ஜேயலலிதாவின் சேலையைப் பற்றியிழுத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது வெறுமனே அரசியல் எதிர்ப்புணர்வு சார்ந்த தாக்குதல் அல்ல. அல்லது அதை அவ்வாறு மட்டுமே பார்த்துவிட முடியாது.ஒரு ஆணாதிக்கம் புரையோடிக்கடக்கின்ற சமூகத்தின் பெண்மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட வேண்டியது. ஜேயலலிதா மீதான இந்த நாகரிகமற்ற தாக்குதல் கருணாநிதிக்கும்,தி.மு.க இனருக்கும் மக்கள் மத்தியில் எதிர்பலையை உருவாக்கிது.
1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் ஜெயலலிதா. 1989ம் ஆண்டு மார்ச் 25ம் திகதிஇ தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த அமளியில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டது உடல் ரீதியாகத் தாக்கப்பட்டhர்.
தலைவிரி கோலமாகஇ கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த அந்தச் சம்பவத்தின் காட்சிகள் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குத் தமிழக முதல்வராகும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த காரணங்களில் இந்தச் சம்பவமும் முக்கிய இடம் வகித்தது.
தென்னாசிய அரசியல் பண்பாட்டில் தமது அரசியல் எதிரியை வெல்வதற்காக அவர்களை வழக்குகள் போட்டு மடக்குவதான வழக்கம் காணப்படுகின்றது. இது தென்னாசிய நாடுகள் எல்லாவற்றிலும் நடைபெற்றிருக்கிறது. ஜெயலலிதாவிற்கும் அது நடந்திருக்கிறது. அவருக்கு எதிராக சுமார் 43 வழக்குகள் போடப்பட்டன.
1996ஆம் ஆண்டு தேர்தலில் மோசமான தோல்வியடைந்தார் ஜெயலலிதா. 1996ல் டிசம்பர் 7ம் திகதி ஊழல் வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டhர்.இ தொடர்ந்து சில வாரங்கள் அவர் சிறைவாசத்தை அனுபவித்தhர். இதனால் மக்களிடம் அனுதாபத்தை பெற்றுக் கொண்டார்
இதற்கு பழிதீர்ப்பதற்காக 2001ம் ஆண்டு ஜெயலலிதா வெற்றி பெற்று முதலமைச்சரான போது 2001 யூன் 30 திகதி அதிகாலையில் கருணாநதியைக் கைதுசெய்ய பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பினார்.
மேம்பால ஊழல் வழக்கிற்காக கருணாநிதியை காலையில் கைது செய்யச் சென்ற பொலிசார் அவரை நள்ளிரவில் கைது செய்தனர் அது காட்சி ஊடகங்களில் மாறி மாறி காண்பிக்கப்பட்டதும் தேசம் முழுவதும் உற்று நோக்கப்பட்டதும் அதன் பின்னர் கருணாநிதி மீது மக்கள் அனுதாபம் கூடியதும் தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
இதன் பின்னர் ஜெயலலிதா ஒரு மோசமானவர் பழிதீர்க்கும் எண்ணம் கொண்டவர் என்ற எண்ணம் ஊடகங்களால் பரப்பட்டன. குறிப்பாக ஆண்கள் இவரைப்பார்த்து பயப்படுகின்ற நிலை உருவானது.ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா? என்று ஒரு பேட்டியில் ஊடகவியலாளர்கள் ஜெயலலிதாவை பார்த்து கேட்ட போது “இப்போதெல்லாம் என்னை பார்த்தாலேஇ ஆண்கள் பீதியாகுகிறார்கள் ஏன்?ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜைஇ என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லஇ மற்றவர்களின் அபத்தங்களைஇ முட்டாள் தனங் களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக் கொள்வதில்லை.” ஏன்று பதிலளிததிருந்தார். தனித்த ஒருவராக  தி.முக என்ற பெரும் பலத்தை எதிர்த்து நின்றதென்பது ஜெயலலிதாவின் சாதனை. ஒரு முறை அவரைப்பார்த்துக் கேட்கிறார்கள் குடும்பமென்ற ஒன்று இல்லையென்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஏன்று
“இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழு மையாக அனுபவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவு களை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக் கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காதஇ மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழதேவை யில்லாத இந்த சுதந்திரத்தைஇ நான் விரும்பவே செய்கிறேன்.” ஏன்றார். ஆவர் சொன்னது போல் வாரிசுகள் இன்றி தனக்கு பின்னர் யார் கட்சியைக் கொண்டு நடத்துவார்கள் என்ற கோடிகாட்டல்கள் இன்றி அவர் இறந்து போனார்.
இப்போது தமிழ்நாட்டின் அரரசியல் தரைதட்டி நிக்கிறது. அது எவ்வழி செல்லுமென்று எதிர்வு கூறமுடியாத நிலையில் உள்ளது. கருணாநதி தனது 92 வது வயதில் தன் குடும்பப் பிணக்குகளோடு யாரிடம் கட்சியைக் கொடுப்பது. என்ன ஏற்பாட்டில் கொடுப்பது என்று திணறுகிறார். கருணாநிதியின் மகன் ஸ்ராலின் கட்சியை வழிநடத்தத் தொடங்கினாலும். அதற்குள்ளும் பிச்சல் பிடுங்கல்கள் தொடர்கின்றன. நீண்ட காலம் வாழ்ந்ததன் மூலம் அரசியல் சாணக்கியம் தெரிந்த கலைஞர் தனது கட்சியை தெளிவான எதிர்காலத்தை நோக்கி நகர்த்தவில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. அவரது பெரித்த நீண்ட குடும்பம் தி.மு.க விற்கான சவாலாக இருக்கிறது. அ.திமு க்கு ஜெயலலிதாவிற்கு குடும்பமில்லாதது பெரும் சவாலாகவுள்ளது. பழுத்த முதிர்ந்த அரசியல் சாணக்கியரான கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஏழு பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது ஒரு சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது.

1972-ஆம் ஆண்டு தமது 94-வது காலமான அப்போதைய முதல்வர் இராஜாஜிக்கும்  கருணாநிதிக்கு  68 வயதில் இறுதி அஞ்சலி செலுத்தpனார். தற்போது தனது 91வது வயதில் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனைவிட 1969 இல் 59 வயதில் காலமான பேரறிஞர் அண்ணாத்துரை, 1975 ஆண்டு தனது 72வது வயதில் காலமான காமராஜர்,8 நாட்கள் பொறுப்பு முதலமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன்,1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி தனது 70வது வயதில் எம்ஜிஆர் ,23 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த ஜானகி எம்ஜிஆர். ஆகியோருக்கும் தனதுஇறுதி அஞ்சலிகளைத்; தெரிவித்திருக்கிறார்.
இப்போது திராவிட இயக்க ஆட்சி 50 ஆண்டுகாலம் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு தெளிவான அரசியல் செல்வழி தெரியாமல் தத்தளிக்கிறது.
இந்த 50 வருட கால திராவிட ஆட்சியில் அதிக வழக்ககளைச் சந்தித்த முதலமைச்சராக ஜெயலலிதாவே காணப்டுகிறார்.
பெண் தலைவர் களில் ஜெயலலிதா மட்டுமே யாரும் எதிர்கொள்ளாத வகையில் 43 வழக்குகளை சந்தித்தார். அந்த வழக்கு களில் சொத்து குவிப்பு வழக்கு தவிர மற்ற அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா நிரபராதி என் றும் குற்றமற்றவர் என்றும் விடுவிக்கப்பட்டார்.

உலக பெண் தலைவர் களில் இந்திராகாந்திஇ ஸ்ரீமாவோ பண்டார நாயகாஇ பெனாசிர்இ கலிதா ஜியா என்று எத்தனையோ பேர் தங்கள் அரசியல் எதிர்ப் பாளர்களால்இ வழக்குகள் போடப்பட்டு நிலை குலைந்தனர். அதன் பிறகு அந்த தலைவர்களுக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க ஏற்றம் கிடைக்கவில்லை.
நேரு குடும்பத்து அரசி யல் வாரிசான ராஜீவ் காந்தி போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக வும் 2ஜி ஊழல் குற்றச் சாட்டு காரணமாக சோனியா- ராகுல் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆனால் 43 வழக்குகள் தொடரப்பட்ட பிறகும் ஜெயலலிதாவால்  மட்டுமே அரசியல் அரங்கில் வெற்றிகளை குவிக்க முடிந்தது. இதனைச் சாதித்த நடிகையின் ஆளுமையை அடுத்த தொடரில் பார்ப்போம்.   (தொடரும்);

No comments:

Post a Comment