Tuesday 2 January 2018

‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்



சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது.
அதற்கு அழகு சேர்ப்பது   திராவிடப்பாணியில் அமைந்த அதன் கட்டடங்கள் அதில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம். அது ‘முற்றம்’.
தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை. அதன் வளர்ப்புத் தந்தை பேராசிரியர் கோ.இரவீந்திரன்.
முற்றத்தில் அழகாக கோலமிடமுடியும். ஆனால்  முற்றத்தை உருவாக்குவதென்பது சற்று சிரமமானது. புhரம்பரியமாக பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமானது. அதற்காக பாடாய்ப்பாடுபட வேண்டும். இது ஒரு  பண்பாட்டுப் புரட்சியும் கூட. அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம்.
இந்தப் பண்பாட்டு புரட்சியை ஆரம்பித்து வைத்ததில்; யாழ்ப்பாணப்பல்கைலக்கழகத்திலிருந்து வந்திருந்த நானும் இருந்திருக்கிறேன் என்பதை மீள நினைக்கின்ற போது  பேரானந்தமே!.
பேராசிரியர் கோ. இரவிந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வகுப்புக்கு வெளியே வகுப்பு’ என்ற தத்துவத்தின் செயல் வடிவம் தான் ‘ முற்றம்’.
சில பேராசிரியர் தமது துறைசார்ந்த அற்புதமான தந்துவங்களை மிகவும் சிலாகித்து வகுப்பறைகளில் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அவர்களால் அதனை மாணவர்கள் தொட்டுணரக் கூடியதாக, புரிந்து கொள்ளக் கூடியதாக கொடுக்க முடியாது திணறுவார்கள். அதன் செயல் வடிவத்தை காணமுடியாதவர்களாகவும் இருப்பார்கள். இது ஒரு அபத்தமான  முரண்நிலையாக இருக்கும். ஆனால் பேராசிரியர் கோ.இரவீந்திரன் தான் விரும்பும் தான் நம்பும் தத்துவங்களை மாணவர்கள் தொட்டுணரக்கூடியதாக செயல் வடிவமாகக் கொடுக்கிறார். அதன் ஒரு பேறுதான் முற்றம் கலைக்குழு.

முற்றம் கலைக்குழு 2009ம் ஆண்டு அரங்கப் பயிற்சியுடன் ஆரம்பமானது எனலாம்.
சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல் துறையில் இலத்திரனியல் ஊடகத்தில் முது அறிவியல் மாணி கற்கையில் நான் 2008ம் ஆண்டு; கல்விகற்றுக் கொண்டிருந்தேன்.
அப்போது, எனது நாடகத்துறை சார்ந்த அனுபவத்தையும் புலமையையும் கேள்வியுற்ற துறைத் தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரனவர்கள், ஆய்வு நிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர் அவ்வாறு கேட்டுக் கொண்டது எனக்கு இன்ப அதிர்ச்சி மடடுமல்ல ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனெனில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக்குள் நாடகம் சார்ந்த செயற்பாடுகள் கலந்துவிடக்கூடாது என்பதற்காக பலர் கண்ணுக்குள் எண்ணைவிட்டு பார்த்தபடி இருப்பார்கள். நாடகச்செயற்பாடுகள் எவற்றையும் ஊடகக் கற்கைக்குள் கலந்துவிடவேண்டாமென்று நாளும் பொழுதும் அறிவுறுத்துவார்கள். பேராசிரிர்கள், இதழியலாளர்கள் என்று அனைவரும் இவ்வாறே அடிக்கடி ஆலோசனை வழங்குவார்கள். ஆனால்,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை தலைவர் தனது துறைமாணவர்களுக்கு நாடகப்பயிற்சி வழங்குமாறு கேட்கிறாரே? என்று வியந்து போனேன்.
தொடர்பியலின் அடிப்படையே மனிதத் தொடர்பாடல் தான்;. நேருக்கு நேரான தொடர்பாடலை செவ்வனே செய்கின்ற ஒருவரால் தான் ஊடகம் ஒன்றினூடாக சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். தன் பேச்சுக்கள், உடல் நிலைகள், அசைவுகள் மற்றும் கண்களால் சிறந்த தொடர்பாடலை மேற்கொள்கின்ற ஒருவரால் தான் தனது செய்தியை வேறொருவருக்கு புரியும் படியாக ஊடகம் ஒன்றினூடாகச் சொல்ல முடியும். உணர்வும் தசையுமான மனிதனோடு உணர்வும் தசையுமாக ஊடாடுவதற்கு ஒரு மனிதன் தன் ஐம்புலன்களையும் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக ஐம்புலன்களையும் உணர்திறன்மிக்கதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு, நாடக அரங்கப்பயிற்சிகள் அவசியம். இதனால் ஒருவன் தன்னம்பிக்கைமிக்கவனாகவும் ஆளுமையுடையவனாகவும் உருவாக முடியும். தன்னைச் சுற்றி நடப்பவற்றை தொட்டுணர்ந்து கொள்ள முடியும். எதிரிவினையாற்ற முடியும். இதனை புரிந்து கொண்டதன் பயனாகவே பேராசிரியர் கோ.ரவீந்திரனவர்கள் இதழியல் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி தேவை என்று உணர்ந்தார் போலும்.
ஊடகத்துறை சார்ந்தோருக்கு பல்துறை அறிவு மிக அவசியமாகின்றது. நீர்புகா தெளிவான வேறுபாடுகளோடு ( றயவநச வiபாவ உழஅpயசவஅநவெ ) கூடிய துறைகள் என்று எதுவும் இன்று இல்லை. எல்லாத்துறைகளும் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கி தம்மைச் செழுமைப்படுத்திக் கொள்கின்றன. அதிலும் தொடர்பியல் சார்ந்த துறைகள் தமக்குள் கொடுத்து வாங்குவது மிக அவசியமாகின்றது. இதனை சென்னைப் பல்கலைக்கழத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல் துறை புரிந்து கொண்டு செயலாற்றுகிறது. அந்தளவிற்;கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதைனையான உண்மை.

கிட்டத்தட்ட ஒரு மாதகாலம்; மாலைநேரங்களில்  இரண்டு மணித்தியாலங்கள்  சந்தித்து நாடகப்பயிற்சிகளை ஆரம்பித்Nதூம். கேரளா, ஆந்திரா தமிழ்நாடு ,இலங்கை என்று பல்வேறு இடங்களைச் சார்ந்த பல்வேறு மொழிகள் பேசியவர்கள், பல்வேறு கலாச்சாரப் பின்புலத்தையுடையவர்களும் இதில் பங்குபற்றியிருந்தார்கள். அவர்கள் அனைவரையும்  ஒரு மைய இலக்கு நோக்கி  நாடகப்பயிற்சி நகர்த்தியது. பயிற்சி முடிவில் ‘விட்டில்கள்’ என்ற நாடகத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரித்து மேடையேற்றினோம்.
சென்னையில் இளைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் ஈழத்தில் இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்துடன் ஒப்பிடும் போது முற்று முழுதாக வேறாகவே இருந்தது.
ஈழத்தில் இளைஞர்கள் மத்தியல் சமூகம் சார்ந்த பார்வை அதிகளவில் இருந்தது. சமூகம் சார்ந்த பிரச்னைகளை விமர்சனரீதியாகப்பார்க்கின்ற தன்மை அதிகமாகக் காணப்பட்டது. அவர்களிடம் சினிமாவினதும் ஊடகங்களினதும் தாக்கம் குறைவாகவே இருந்தது. தற்போது அந்த நிலைமைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் நான் சந்தித்த இளைஞர்களுக்கு ஊடகங்கள் சிருஷ்டிக்கின்ற உலகமே வாழ்க்கையாக இருந்தது. குறிப்பாக, சினிமாவின் மாயைக்குள் அகப்பட்டு அதனை நம்புபவர்களாக இருந்தார்கள்.; ஊடகத்தின் மாயச்சிறைக்குள் அகப்பட்டவர்களாக ஊடகம் சிருஷ்டிக்கும் உலகத்தை யதார்த்தமென்று நம்பியவர்களாக இருந்தார்கள். அது நிஜமென்று நம்பினார்கள்.
அதனால், பிரச்னைகள் சார்ந்து அல்லது ஒரு இலட்சியம் சார்ந்து இயங்கக்கூடிய இளைஞர்களோடு பணியாற்றிய ஈழத்து அனுபவம் முற்றாக வேறாக இருந்தது. சென்னையில் நாம் சந்தித்த இளைஞர்கள் பிரச்னைகளை நாளாந்த வாழ்வில் தொட்டுணர்ந்து வளராத ஒரு சுமூகமான சூழலில் வளர்ந்த இளைஞர்கள், அவர் தம் கனவுகள் முற்றாக வேறாகவே இருந்தன. இவர்கள் ஊடகங்கள் சிருஷ்டித்த வாழ்க்கையை தமது கனவுகளாகச் சுமந்து திரிந்தார்கள். முதலில் நாடகப்பயிற்சியின் அடிப்படைகளான மனதை விடுவித்தல், குரலைத் தயார் செய்தல் மற்றும் உடலைத் தயார் செய்தல் போன்ற பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர். இளைஞர்கள் சுமந்த திரிக்கின்ற கனவுலகில் கேள்விகள் எழப்பப்பட்டன. அவர்களின் பார்வைப்புலம் சரியானதா? அதிலிருந்து எவ்வாறு புதியபயணத்தை ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணங்களை நாடகப்பயிற்சி உருவாக்கியது. இதனையே நாடகக்கருப் பொருளாக எடுத்துக் கொளவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம்.
இதன் பின்னர் இந்தக் கருப்பொருளை மனதில் சுமந்தபடி எமது உள்ளகப்பயிற்சிக்காக எல்.வி பிரசாத் ஸ்ரூடியோவுக்கு பயிற்சிக்காகச் சென்றோம். ஒரு நாள் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சென்னையில் தங்கியிருந்த எனது தம்பியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘பிரபாகரன் இறந்து விட்டார். அவரது படத்தை ரி.வியில் காட்டுகிறார்கள்” இதனைக் கேள்வியுற்றதும். நெஞ்சு பதற பயிற்சிக் கூடத்திலிருந்து யாருக்கும் சொல்லாது வெளியேறி சாலிகிராமம் வீதி வழியாக நடந்து வடபழனி வரை வந்துவிட்டேன். புத்திரிகைகள் எல்லாம் இறப்பைப் பற்றி எழுதியிருந்தன. சிலவற்றை வாங்கிப்படித்தபடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு புலனாய்வுப்பத்திரிகை சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருந்தது. அது கடைகளில் தொங்கியது. அதில் ‘ பிரபாகரன் இருக்கிறார்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அவரின் படத்தையும் பிரசுரித்திருந்தார்கள். அதுவொரு வாரப்பத்திரிகை இந்தச் செய்தியால் அன்றே விற்று தீர்ந்து போயிற்று. இதன் பின்னர் தொடர்ச்சியாக ‘பிரபாகரன் இருக்கிறார். இல்லை.; என்பதை தலைப்பு செய்தியாக கொண்டு பத்திரிகைகள் கடைகளில் தொங்கும். ஒரு பரபரப்பை வியாபாரமாக்கினார்கள். இது ஒரு மரணவியாபாரமாகத் தெரிந்தது. இந்த கீழ்தரமான ஊடக வியாபாரத்தின் மீது கோபம் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் நாடகப்பயிற்சியன் போது விவாதித்தோம். ஊடகங்கள் மீதான இந்த ஆத்திரத்தை நாம் தயாரித்த ‘விட்டில்கள்’ நாடகத்தில் இறக்கி வைத்தோம்.
தாம் கற்கின்ற துறை தொடர்பான கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்ற நாடகத்தை தயாரித்தோம். ஆனால் அதற்கு எந்த எதிர்ப்பும் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையிடமிருந்து வரவில்லை. வெளிப்பாட்டு சுதந்திரம் பற்றி பேசுவது மட்டுமல்ல அதை செயலிலும் காட்டுவது என்பது மனமாற்றங்களின் மூலமே நடைபெறும். அது சென்னைப்பல்கலைக்கழகத்தின் இதழியற் துறையில் நடந்தேறியது.
‘மனிதர்களை தலைகீழாகத் தொங்க விட்டு பணத்துக்காக ஏலம் விடும் கேவலமான பணியையே ஊடகங்கள் செய்கின்றன. அதுவல்ல ஊடகங்களின்; பணி’ என்பதை நாடகம் வலியுறுத்தியது.
அரங்கு அசாத்தியமான ஆற்றலைக் கொண்டது என்பதால் அங்கப்பயிற்சிகள் என்னுடைய எதிர்பார்ப்புக்களையும். பட்டாம்பூச்சிகளாக பல வர்ணங்கள் கொண்ட கனவுகளைச் சுமக்கின்ற இளைஞர்களையும் ஒரு மையத்தில் சந்திக்கச் செய்தது. அதன் பேறாகவே ‘விட்டில்கள்’ நாடகம் கிடைத்தது எனலாம். ஊடகம் தொடர்பான ஒரு விமர்சனப்பார்வையை ஊடகம் சிருஷ்டித்த கனவுலகில் சஞ்சரித்தவர்கள் அதில் இருந்து விடுபட்டு முன்வைத்தார்கள். இதனை நாடகப்பயிற்சியின் வெற்றியென்பேன்.
இந்த நாடகத்தின் பாடல்களை மலையாளத்தை தன் தாய்மொழியாக கொண்ட சரண்ஜா தமிழில் அழகாகப்பாடினார். ஈழத்திலிருந்து வந்திருந்த றொபேட் இசையமைத்திருந்தார். மோடிமை வடிவில் அமைந்த இந்த நாடகம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அப்போதைய துணைவேந்தர் கேர்ணல் திருவாசகம் மேலும் பல பேராசிரியர்கள் கல்விமான்கள் அதனைப் பார்த்து பாராட்டிச் சென்றார்.

2009ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி எனக்கு மறக்க முடியாத நாள். ‘முற்றம’; கலைக் குழு அன்று தான் சென்னைப்பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 150 ஆண்டுகள் ஆச்சார விதிமுறைகளுக்கு முதன்மை கொடுத்து வந்த பல்கலைக்கழத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பறையிசை முழங்க ஒரு நாள் முழுவதும் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. சென்னைப்பல்கலைக்கழகத்தில் பறை முழங்கியதென்பது ஒரு பண்பாட்டு அதிர்ச்சி என்றால் மிகையாகாது. அன்றைய தினம் ஆதித்தமிழர் கலைக்குழு தங்கள் பறையிசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள்;. காஞ்சிபுரத்திலிருந்து கூத்தக்கலைஞர் ஒருவர் வந்து கூத்தாடினார். எம்மால் தயாரிக்கப்பட்ட மானுடவியல் சார்ந்த வீடியோ ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன. ஒரு முழுநாள் நிறைந்த அனுபவத்துடன் ‘முற்றம்’ கலைக்குழு தன் பயணத்தை ஆரம்பித்தது.
முற்றம் ஆரம்ப நிகழ்வில் பறையிசை வழங்கிய  ஆதித்தமிழர் கலைக்குழுவைச்சார்ந்த ஆடலரசு வேணு அதற்கு அடுத்த ஆண்டு சென்னைப்பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் இணைந்து கொள்கிறார். அது முற்றம் கலைக்குழுவின் இயங்கு நிலைக்கு உந்து விசையாக அமைந்தது. பாரம்பரிய கலைகளை பறையிசையை இதழியல் மாணவர்கள் கற்பதற்கு வாய்பபாக அமைந்தது. இதனால் பறை பற்றிய தவறான புரிதலுடன் வந்திருந்த பல மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பறையைப்பழகி நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பல்வகை சார்ந்த செயற்பாட்டிற்கு முற்றம் கலைக்குழு முதுகெலும்பானது. தொடர்ச்சியாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.
இதன் பின்னர் நான் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் திரும்பி ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் பணியில் இணைந்து கொண்டேன். இருந்தாலும் தாய், பிள்ளை உறவாக சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் எனக்குமான உறவு தொடர்ந்தது.
இதன் பின்னர் 2011ம் ஆண்டு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களை சென்னைக்கு அழைத்து வரும் பாக்கியம் கிடைத்தது. அப்போது நாங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது எங்களை முற்றம் கலைக்குழு வரவேற்றது. அவர்களும் நாங்களுமாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் பயணித்து பறையிசை நிகழ்ச்சிகளை நடத்தியயதை எண்ணிப்பார்க்கின்றேன். அந்தக் குழுவின் அங்கத்தவர்கள் ஆளுமையை நினைத்து வியந்திருகிறேன். முற்றத்தின் அங்கத்தவர்கள் எமது மாணவர்களோடு மிகச் சிறப்பாக உறவாடினார்கள். சென்னைப்பல்கலைக்கழக மாணவர்களையும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களையும் நானே நீண்ட களப் பயணத்தில் பொறுப்பாக நின்று அழைத்து சென்றேன். அதற்கு எனக்கு ஒத்துழைத்து நீண்ட பயணத்தை வெற்றி பெறச் செய்தவர்கள் முற்றம் கலைக்குழவினர் என்றால் அது மிகையாகாது. அன்று ஏற்பட்ட நட்பு இன்றும் பலருடன் தொடர்கிறது. நாங்கள் வயது வேறுபாடின்றி தலைமுறை இடைவெளியின்றி உறவாடமுடிந்தது என்றால் அது இந்தக் கலைச் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகியது.
கலைச்செயற்பாட்டில் ஈடபடுபர்கள் தம் தொடர்பாடல் திறனை சிறப்பாக வளர்த்திருக்கிறார்கள். இதனால், மனித உறவாடலில் ஒரு உன்னத நிலையை உருவாக்கியிருந்தார்கள்.முற்றம் கலைக்குழவின் தொடர்பாடல் வன்மையைப் பார்த்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழக  மாணவர்கள் வியந்தார்கள். தாமும் அவ்வாறான தொடர்பால் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள்.
இதன் பின்னர் 2012ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது தடவையாக மாணவர்களோடு சென்னைக்குப் பயணமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் முற்றம் கலைக்குழு விமான நிலையத்தில் எம்மை மாலை அணிவித்து வரவேற்றது. நாம் பூரிப்புப் போனோம். நானும் சேர்ந்து உருவாக்கிய கலைக்குழு உயிர்ப்போடு இருக்கிறது. நாங்கள் சென்னை வரும் போதெல்லாம் அன்போடு வரவேற்கிறதென்பது பூரிப்பன்றி வேறென்ன? அந்தப் பயணத்தில் முற்றம் கலைக்குழுவுடன் இணைந்து மைசூர் வரைக்கும் சென்று வந்தோம். பெரியார் பல்கலைக்கழகம்,  பாரதியார் பல்கலைக்ககழம் போன்றவற்றிற்கும் சென்று முற்றம் கலைக்குழு பறையிசை நிகழ்ச்சியையும் நாட்டார் கலை நிகழ்ச்சியையும் நடத்தியது. ஒவ்வொரு இடத்திலும் முற்றம் கலைக்குழுவின் ஆற்றுகைகளைப் பார்த்த அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் பல்கலைக்கழத்திலும் இவ்வாறான கலைக்குழுவை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தளவிற்கு முற்றம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின் முடிவில் யாழ்பாணப்பல்கலைக்கழக ஊடக மாணவர்கள் மத்தியில் கலைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கலைச் செயற்பாட்டில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆளுமையை புரிந்து கொண்டார்கள். தாமும் அதில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள்.
அரங்கைக் குறிக்கின்ற வுhநயவசந என்ற சொல் கிரேக்கச் சொல்லான வாநயவசழn என்ற சொல்லிருந்து பிறந்தது. அதற்கு வுhiபௌ னழநெ என்று அர்த்தம். அதாவது செயல் நடைபெறுகின்ற இடம். இந்த அர்த்தத்திற்கேற்றதாக முற்றம் கலைக்குழு செயற்படுகிறது. தொடர்ச்சியாக இயங்குகின்றது. அதனைத் தொடர்ச்சியாக இயக்க வைக்கின்ற பணியை இதழியல் துறை மேற்கொள்கின்றது. அதுவே அதன் தொடர்ச்சியான இயக்கத்துக்கும் வெற்றிக்கும் காரணமாகும்.
2012ம் ஆண்டு சென்னை வந்திருந்த யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக மாணவர்கள் பறையிசையையும் நாட்டார்கலைகளையும் தாம் பழகிக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதற்காக முற்றம் கலைக்குழுவை சார்ந்த ஒருவரை யாழ்ப்பாணம் அழைத்து பயிற்சிகளை வழங்குவதென்று தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது.
 நாடகம் மற்றும் கலைசார்ந்த செய்றபாடுகள் உணர்ச்சிசார்ந்தவை என்றும் அதில் ஈடுபடுவதால் ஒரு விடயத்தை புறவயமாக நின்று பார்க்கின்ற பண்புஇல்லாது போய்விடும். அதனால் கலைசார்ந்த செயற்பாடுகள் இதழியல் மாணவர்களுக்கு கூடவே கூடாது என்றதான கட்டுப்பெட்டித்தனமான சிந்தனை நிறைந்த ஒரு சூழலில் ஊடக மாணவர்களுக்கு இவ்வாறான பயிற்சிகளை ஒழுங்கு செய்வதென்பது சாத்தியமற்றதாகவே போனது.இதற்கு பரந்த தூரறோக்கம் கொண்ட சிந்தனைப்புலத்தினுடைய விருத்தியின்மையே பிரதான காரணம் என்பேன். இங்கு உணர்வும் தசையுமான மனிதன் அவ்வாறான இன்னொரு உணர்வும் தசையுமான மனிதனோடு உற்வாடுகிறான் என்ற அடிப்படைதான் இதழியல் என்பதை புரிந்து கொண்டால் இந்த குழப்பங்கள் நீங்கிவிடும்.
பேராசிரியர் கோ.ரவீநதிரன் போன்றவர்கள் தமது பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் மற்றும் நீண்ட பட்டறிவு என்பற்றின் அடிப்படையில் கலைசார்ந்த செயற்பாடு இதழியல்மாணவனின் ஆற்றலை மேம்படுத்துகிறது அவனது தொடர்பாடல் திறனை விருத்தியாக்குகின்றது, ஆளுமையை வளர்க்கிறது என்று கண்டுகொண்டுள்ளார்கள். அதற்காக தனது ளலளவநஅ தாண்டி ழரவ ழக வாந டிழஒ ஆக வேலை செய்கிறார். இதனை புலமையாளரின் பட்படறிவில் இருந்து கற்று;க் கொள்ளலாம். முற்றம் கலைக்ககுழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல் துறை வுhநயவசந உழஅஅரniஉயவழைn என்றதொரு பாடத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது. இது பாராட்டுதலுக்குரிய விடயம். எங்கெங்கு நல்ல விடயங்கள், பொருத்தமான விடயங்கள் இருக்கின்றனவோ அவற்றை உள்வாங்கி ஒரு துறை தன்னை செழிமைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு சென்னைப்பல்கலைக்கழகத்தின் இதழியல்துறை சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் அது தன்னை எனைய துறைகளுக்கு முன்மாதிரியாக நிலைநிறுத்திக கொள்கின்றது.


பின்னர், 2013ம் ஆண்டு முற்றம் கலைக்குழுவைச்சார்ந்த ஆடலரசு வேணு அவர்களை வேறொரு வழியில் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டு ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. ஆதில் பல இதழியல் மாணவர்களும் பங்கு கொண்டு பயன் பெற்றார்கள்.அதற்கான முழு ஏற்பாடுகளையும் ஈழத்தின் முன்னணி தமிழ் நாடக நிறுவனமான  செயல் திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவசந ஆழஎநஅநவெ) செய்திருந்தது. பறையிசையைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்த 35 பேர் இந்தப்பயிற்சியில் இணைந்து கொண்டார்கள்.  முற்றம் கலைக்குழுவின் நாடுகடந்த முதல் செயற்பாடு என்று இதனைக் குறிப்பிடலாம்.
பத்து நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. குச்சியாட்டம் ஒயிலாட்டம் கும்மியாட்டம் ஆதிவாசி நடனம், பறையாட்டம் என்று பலவற்றையும் யாழ்ப்பாண இளைஞர்கள் கற்றுக் கெண்டார்கள். தாம் கற்றுக் கொண்டவற்றை பல்கலைக்கழம், ஆசிரியர்கலாசாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் மேடையேற்றி பெரும்வரவெற்பை;பபெற்றார்கள். இதனால் அதில் பங்கு கொண்ட மாணவர்களின் ஆளுமை விருத்தியாகியிருந்தது. இன்று அதில் பங்கு பற்றிய  ஊடக மாணவர்கள் பலர் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகிறார்கள். ஏனையோர் வெவ்வேறு பணிகளில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமது செலாற்றலால் மேன்நிலை பெறுகிறார்கள். அதற்கு காரணம் தாம் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டது தான் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள்.
சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட முற்றம் தன்பணியை யாழ்ப்பாணத்திலும் விரிவாக்கியிருக்கிறது. முற்றத்தில் இணைந்து பணியாற்றிய பலர் தன்னால் பலர்முன் நின்று பேசவே முடியாது என்று தயங்கியவர்கள்; இன்று தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். தாழ்வுச்சிக்கலில் சக மாணவனுடனேயே பேசுவதற்குத் தயங்கியவன் நல்ல பேச்சாளனாக பலரின் முன் நிற்கிறான்.  பிற்போக்குத்தனமான எண்ணங்களில் சிக்கித் தவித்தவர்கள் பலர் கலைச்செயற்பாட்டில் ஈடுபட்டதால் அதிலிருந்து விடுபட்டு சிறகடிக்கும் பறவைகளாக உலகை வலம் வருகிறார்கள். அந்த பறவைகளோடு சேர்ந்து நானும் ஒருவனாய் சிறகடித்துத்திரி;கிறேன். அவ்வப்போது முற்றத்தில் தரையிறங்கி கால்பதித்து உறவாடி புத்துயிர் பெற்று மகிழ்கிறேன். இது வகுப்புக்கு வெளியே நடைபெற்ற வகுப்பறையின் வெற்றி. முறைசார்ந்த கல்விக்குள் நிகழ்ந்த முறைசாராக்கல்வியின் வெற்றி.

No comments:

Post a Comment