Sunday, 31 December 2017

இணையத்தைப் பலப்படுத்துவோம்


அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது 27 ஆண்டை நிறைவு செய்து தனது பயணத்தை  தொடர்கிறது.பலர் இணைந்து கால் நூறாண்டு மேலாக பயணிப்பதென்பது மிகக்கடினமான பணி;. இது இன்று வரை சாத்தியப்பட்டிருப்பது தான் இந்த அமைப்பின் பலம். இந்தப்பலத்திலிருந்து எமது பயணத்தை நாம் மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
மக்களுக்கான சேவையை வழங்குவற்கு நிறுவனங்களை பலப்படுத்துவதோடு ஒன்றிணைந்து செயற்படுவதென்பது மிகக்கடினமான செயல். இது சாத்தியமாகியிருப்பது சாதனையன்றி வேறென்ன!.



சென்ற அரசாங்கம் அரசசார்பற்ற நிறுவனங்களை திட்டமிட்டு அழிப்பதற்காக மேற்கொண்ட பல நடவடிக்கைகளின் பயனாக பல நிறுவனங்கள் மீண்டெழுந்து செயற்படுவதற்கு சிரமப்படுகின்றன. இருப்ப்pனும் இந்த ஒருங்கிணைப்பு தொடர்வது வியப்பானது.
ஆரசசார்பற்ற நிறுவனங்கள் யுத்தம் முடிந்ததான சூழலில் தமக்கான பணிகளை மீள்வரையறை செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்தியிருக்கின்றன. புதிய சூழலில் புதுவிதமான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் உருவாகிவருகின்றன.அவற்றை எதிர் கொள்வதற்கான தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்தச் சூழலில் இணையத்தின் பணி எவ்வாறு அமையவேண்டும் என்ற நீண்டு செல்லும் விதாம் நடைபெறும் சூழலில் சூழலில் நடப்பாண்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருந்தோம்.
இந்த நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மக்கள் சார்ந்தும் அங்கத்துவ நிறுவனங்கள் சார்ந்தும எடுத்திருக்கிறது. குறிப்பாக இணையத்தின் பணியை மீள்வரையறுத்து எதிர்காலப்பயணத்திற்கான பாதையை தீர்மானித்தல் அந்தப்பாதையில் பயணிப்பதற்கான தந்திரோபாயங்களை  வகுத்தல் போன்ற பணிகள் சிரமமானதும் கடினமானதுமான பணி எமது நிர்வாகத்தின் முன்னால் இருந்தது.

இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான விவாதங்கள் இந்தாண்டின் ஆரம்பபம் தொடக்கம் இ;ன்று வரை நீடிக்கிறது. இருந்தாலும் மக்களின் பிரச்னைகளை இனங்காணலும் அதற்கான தீர்வுகள் பற்றி விவாதங்களைத்தூண்டுதலும் தீர்வுகளுக்கான முன்மொழிவுகளை முன்வைத்தலும் அது தொடர்பான கொள்கை வகுப்புக்கான உள்ளீடுகளை வழங்குவதும் எமது பணியாக இருக்கமுடியும் என்ற தீர்மானத்துக்கு எமது நிர்வாகக்குழு வந்திருந்தது.

அதன்பிரகாரம் “யுத்தத்தின் பின்னரான சூழலில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள”; என்ற தேசிய மாகாநாட்டை மாவட்டச் செயலகத்தில் ஒழுங்கு செய்து 18 மேற்பட்ட வளவாளர்களை ஒன்று திரட்டி நடத்தியிருந்தோம். இது தொடர்பாக மேறகொண்ட  பணிகளும் அதன்தொடர்ச்சியாக 06 சிறு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்ததும் எமது நிர்வாகத்தின் முக்கியமான அடைவாக நோக்கப்படலாம். இந்தச்  செயற்பாடு பல வேறுசெயற்திட்டங்களை எமக்கு அடையாளப்படுத்தியது. இதிலிருந்து அங்கத்துவ நிறுவனங்கள் பல தமக்கான திட்டங்களுக்கான விடயங்களைப் பெற்றுக் கொண்டு திட்டங்களைத் தீட்டினார்கள்.

இதே வேளை இணையம் தனக்கான சமூகக்கடமையையும் கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களுக்கான எமது ஆதரவு. சிவில் சமூகஅமைப்புக்களைப் பாதுகாப்பதற்கான பல அறிக்கைகள் வெளியிட்டதை குறிப்பிடலாம். எமது அறிக்கைகளுக்கு  ஊடகங்களில் கிடைந்த வரவேற்ப்பு என்று இணைத்தின் நன்மதிப்பு இந்தக்காலகட்டத்தில் அதிகரித்தமையை முக்கியமான  அடைவாகக் குறிப்பிடலாம்.

நுடப்பாண்டின் செயற்திட்டங்களின் வெற்றிகரமான அடைவுகளுக்கு ஒத்துழைத்த நிர்வாகக்குழ உறுப்பினர்கள்,அங்கத்தவ நிறுவனப்பிரதிநிதிகள் அலுவலக ஊத்தியோகத்தர்கள்நலன் விரும்பிகள் என்று அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளை இந்த வேளையில் தெரிவித்தக் கொள்கொன்றோம்.

நடுநிலைமையான சிவில் அமைப்பின் தேவை இன்று நன்கு உணரப்படுவதான சூழலில் தொடர்ந்து இணைத்தைப்பலப்படுத்தும் முயற்சியில்நாம் எல்லோரும் ஈடுபடுவோமாக.

தேவாநாயகம் தேவானந்த்
 தலைவர்
21.12.2017

No comments:

Post a Comment