---------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதை முதலில் வரையறை செய்தல் வேண்டும். இதன் போது யுத்த கால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் இலங்கையரசு விடுதலைப்புலிகளை முற்றுமுழதாக இராணுவரீதியாக தோற்கடித்ததாக மார்தட்டிக் கொண்டதான 2009 ஆண்டுக்குப்பின்னரான சூழலை இங்கு நாம் யுத்தததின் பின்னரான சூழல் என்று வரையறுக்க முற்படுகின்றோம். கடந்த ஏட்டுவருடகாலங்கள் இதற்குள் அடங்கும் எனலாம்.
யுத்தத்தின் பின்னரான சூழல் என்பது மகிந்தராஜபக்ச ஆட்சிக்காலம் மற்றும் நல்லாட்சியரசு என்ற கோஷத்தோடு ஆடச்pயைக்கைப்பற்றிய மைத்திரி மற்றும் ரணிலின் மூன்றாண்டகால ஆட்சிக் காலமும் இதற்குள் அடங்கும்;.
யுத்தகால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு பற்றி தனியான ஆய்வுகள் அவசியமாகின்றன. அவற்றின் தொடர்ச்சியே யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதையும்மனங்கொள்ள வேண்டும்.
‘யுத்தகாலம் என்பது அரங்கப்படைப்பாக்கத்திற்கு உகந்த சுழலைக் கொண்டிருந்தது’ என்றதான கலைஞர்கள் பலரின் கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதில் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் அவை தொடர்ச்சியாக பல நூறு இடங்களில் மேடையேற்றப்பட்டிருந்தன. அவை யுத்தச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தன. இவற்றை வெறுமனே ‘பிரச்சார நாடகங்கள’; என்று புறமொதுக்கிவிட முடியாது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும். இவை தவிர்ந்து யுத்தகாலத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்ட நாடகங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகின்றன.
யுத்த காலத்தில் வளங்களும் வசதிகளும் குறைவாகக் காணப்பட்ட ஒரு சூழலில் நாடகங்கள் படைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகின்றது. விடுதலைப்புலிகள் காலத்தில் நாடகங்களைப் படைப்பதற்கான ஏது நிலை காணப்பட்டது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்தாக வேண்டும். இதற்கு விடுதலைப்போராட்ட காலத்தில் பொது எதிரி ஒருவர் இருந்ததும்;; அந்த பொது எதிரியை இலக்கு வைத்து ஒரு மையநிலைப்பட்டு படைப்பாளிகள்; செயற்பட்டதும் முக்கிய காரணமெனலாம்.’ யுத்தகாலத்தில் காலைஞன் பிற ஈன நிலை கண்டு துள்ளினான் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இந்தக் காலத்தில் வெளிவந்த நாடகங்கள் இராணுவ அட்டூழியங்கள் மற்றும் யுத்தப்பாதிப்புக்க்ள் அதிலிருந்து மீள்வதற்கான எழுச்சி போன்ற பல விடயங்களை தமது பேசுபொருளாகக் கொண்டிருந்தன.’
யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலைமைகள் தலைகீழாக மாறின. விடுதலைக்கான எந்தவொரு நம்பிக்கைக் கீற்றும் இல்லாது போனது. விரக்தி, தோல்வி மனப்பாங்கு, இனி என்னவென்ற நம்பிக்கையற்ற நிலை, சாதாரண வாழ்வுக்கான பெரும் போராட்டம். வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான திண்டாட்டம் ,சொந்த இடத்தில் குடிNயுறுதல் பற்றிய பிரச்னைகள்,யுத்த இழப்புக்கான நிவாரணம் பெறுதல் அதற்கான அலைச்சல், தங்கிவாழுதல் கையேந்துதல், மௌனமாகக் குமுறுதல் என்று பல வேறு சுமைகளைச் சுமக்க வேண்டியதான சூழலாக அது காணப்பட்டது. இதே வேளை வெளிப்பாட்டுச் சுதநதிரத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதன் விளைவாக தேர்ந்த கலைஞன் தனது கலைப்பயணத்தை கைவிட்டு தனக்கு முன் இருந்த புதிய சவாலை எதிர் கொள்ளதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தான். பல கலைக்குழுக்கள் கலைந்து சென்றன. தொடர்ந்து இயங்க முடியாமல் திணறினார்கள்.
‘படைப்பாக்க சூழலில் ஒரு வகையான தறுக்கணிப்பு நிலைமை உருவானது. தொடர்ச்சி அறுபட்டது. படைப்புக்கள் கருக்கொள்வதற்கோ பிரசவிப்பதற்கோ வாய்ப்பின்றிப் போனது எனலாம்.’
பிறர் ஈனநிலை கண்டு துள்ள வேண்டிய கலைஞன் தன் ஈனநிலையைப் போக்குவதற்காகத் திண்டாடினான். ‘துள்ளுதல’; துன்பம் தரும் ஒன்றாகவே இந்தக் காலகட்டத்தில் காணப்பட்டது. துயர் படிந்த முகங்களோடு தங்கள் முகங்களையும் புதைத்தவர்களாக கலைஞர்கள்; காணப்படார்கள்.அதே வேளை ஆடம்பரநிகழ்வுகளை இது யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வுகளை அலங்கரிக்கின்ற காட்சி நிகழ்வுகளாக சில கலைப்படைப்புக்களின் மேடையேற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. இதில் சில கலைஞர்கள் ‘வெறும் சப்பிகளாக’ தங்கள் படைப்புக்களைத் பிரசவித்தார்கள். ஊட்டமான வீரியமான படைப்புக்களைக் காணமுடியவில்லை. இவ்வாறான படைப்புக்களை உயிர் தொலைந்த வியாபாரப் படைப்புக்கள் எனலாம். இதுவே ஒரு செல்நெறியாக உருவாகும் அபாயமும் தொடர்கிறது.
மட்டுப்பாடுகள், வரையறைகள,; கட்டிறுக்கங்கள் மத்தியில் கலைஞன் பிரசவிக்க முடியாது. அந்த சூழல் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன. அந்த எண்ணத்தின் அடிப்படையிலான சில முயற்சிகள்; குறைப்பிரசவங்களாகவே நிகழ்ந்தன. ‘கருப்பை தறுக்கணித்திருப்பது உணரப்பட்டது.’
தேவநாயகம் தேவானந்த்
பணிப்பாளர், செயல் திறன் அரங்க இயக்கம்
Active Theatre Movement
யாழ்ப்பாணம், இலங்கை
தோ.பே.இல : 0094773112692 மின்னஞ்சல் :jaffnatheatre@gmail.com
No comments:
Post a Comment