திரு.பொ.பாலகிருஷ்ணன் பற்றிய பதிவு
யுhழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 1990 ஆண்டு உருவாக்கப்பட்டடு இன்று வரை தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்த 27 வருடங்களும் மக்களோடு மக்களாக நாம் நின்றிருக்கிறோம் என்பதை நினைக்கின்ற போது பிரமிப்பாக இருக்கிறது.
யுத்தத்தின் விளைவான இடம்பெயர்வு, சாவுகள், ஊனமடைதல், கைதுகள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பேரிடர்களின் போதும் சுனாமி , வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்களின் போதும். மக்கள் தேவைகளை இனங்காண்பவர்களாகவும் அதற்கான தீர்வுகளைக் கண்டு கொள்பவர்களாகவும் மக்கள் நலன்சார்நத திட்டங்களை ஒருங்கிணைப்பவர்களாகவும் செய்றபடுத்த ஊக்குவிப்பவர்களாகவும் அதற்காக குரல் கொடுப்பவர்களாகவும் பணியாற்றியிருக்கிறோம். இது ஒரு நீண்ட கடினமான பயணம் இந்தப் பயணத்தில் பலர் எங்களோடு பயணித்திருக்கிறார்கள். அந்தப்பயணத்தில் இணையத்தின் பணியாளராக 1991 – 1994 வரையான காலகட்டத்தில் எம்மோடு பணியாற்றியவர் பொ. பாலகிருஷ்ணன். இவரை நாங்கள் அன்பாக பாலா அண்ணை என்று அழைப்பதுண்டு.
இணையத்தில் பணியாற்றிய பின்னர் ரெட்பானா என்ற நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டுப்பணியாளராகப் பணியாற்றியவர். சுறுசுறுப்பும் தான் நினைத்ததை சாதிக்கும் தற்துணிவும் உடையவர்.
இணையத்திலிருந்து விலகிய பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்தானியராலயத்தில் பொறுப்பான பதவியை யாழ்மாவட்டத்தில் நீண்ட காலம் வகித்தவர்.அதன் வழி இடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருந்தார். யுhழ் மாவட்டத்தில் புhதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா உதவிகளைக் கொண்டு வந்து சேர்ப்பதில் தீவிரம் காட்டியவர். தானே களத்தில் நின்று காரியங்களைச் சாதிக்கும் ஆற்றல் கொண்;டவராக இருந்தார்.
1995 யாழ்ப்பாண மாவட்டம் முழுமையும் இடப்பெயர்ந்து வன்னி பெரு நிலபரப்பை நோக்கிச் சென்றதன் பின் இராணுவக் கெடுபிடி காரணமாக ஐ.நா அமைப்புக்களும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இணையத்திலிருந்து விலகிச் சென்றார்கள். அப்போது ஒரு ஐ.நா பணியாளராக இருந்தும் கூட உள்ளுர் நிறுவனங்களோடு தொடர்பைப் பேணியவர் பாலா அண்ணை. தன்னால் முடிந்தளவு உள்ளுர் நிறுவனங்களுக்கு உதவ முயற்சித்தவர். இடம் பெயர்ந்த மக்கள் பலரின் மனங்களில் பாலா அண்ணையின் முகம் இன்றும் நின்றாடும் என்று நினைக்கிறேன். அவர் பணி போற்றத் தக்கது.
தேவநாயகம் தேவானந்த்
கௌரவ தலைவர்
அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம்
No comments:
Post a Comment