Friday 27 May 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும். 

எந்த இடர் வந்தாலும் குழந்தையை காப்பாற்றுவேன் என்று உறுதிபூண்டிருக்கிறார். தன்னுயிருக்கு ஆபத்து வந்தாலும் கூட அதைச் செய்வேன் என்கிறார். அதற்காக உலகப்புகழ்; பெற்ற மிக அற்புதமான நாடகத்தில் வரும்; வேலைகாரிப்பாத்திரத்தில் தன்னை நிறுத்துகிறார். அந்தப்பாத்திரம் போன்று பாவளை செயய முயற்சிக்கிறார். 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ரணில்  குறிப்பிடும் ‘குழந்தை’ எது? அதன் உண்மையான தாய் தந்தையர் யார்? என்பதாகும். ஒரு குழப்பகரமான நாட்டில் ஏற்படுகின்ற புரட்சியில் தாயால் கைவிடப்படும் ‘குழந்தை’ வேலைகாரியால் காப்பாற்றப்படுவது தான் நாடகக்கதை. இங்கு ரணில் சொல்லும் குழந்தை இலங்கை அரசாங்கம் எனலாம்.  அந்த அரசாங்கம் ரணிலினுடையது அல்ல அந்தக் குழந்தை ராஜபக்சர்க்களுடையது. இப்போ, ரணிலுக்கு சொந்தக் குழந்தைகிடையாது.  ஒரு குழப்பமான சூழலில் தம்மைப்பாதுகாக்க ராஜபக்சாக்கள் குழந்தையைக் கைவிட்டு ஓடுகிறார்கள். அவ்வாறு ஒரு புரட்சி நடைபெறும் போது தனியே ஆபத்தில் கிடந்த குழந்தையை ரணில் காப்பாற்றும் நோக்கில் அதனை கையிலெடுக்கிறார். அதனை ஒரு பாதுகாப்பான இடம் நோக்கி கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. அது எவ்வளவு கடினமானது என்பதை அவரே விளக்குவதாக மேலே சொன்ன கதையமைகிறது.


இங்கு நாட்டின் குழப்பமான நிலைமை சீரானதும் குழந்தையின் தாய் அதாவது ராஜபக்சாக்கள் உரிமைகோரி வரலாம் என்பதையும் இங்கு ரணில் இந்தக்கதையூடு புரியவைக்கிறார். என்னதான் குழந்தையை ஆபத்தான சூழலிலிருந்து காப்பாற்றினாலும். அந்தக்குழந்தைக்கு தான் சொந்தத் தாயாக முடியாது என்பதை தன்னிலையறிந்து ரணில் சுட்டிக்காட்டுகிறார போலும்;. ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருக்கும் ரணில் குழந்தைக்கு சேவகம்செய்யும் வேலைக்காரனாக இருக்கலாமே தவிர தாயாகமுடியாது என்பதைமறைமுகமாக சொல்கிறார் போலும்;. இருந்தர்லும் குழந்தையை தான் காப்பாற்றியதால் அந்தக்குழந்தை எதிர்காலத்தில் தனக்கே உரித்தாகும் என்பதையும் ரணில் வெண்கட்டி வட்டத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறார் போலும். அது எவ்வாறு நடக்கும் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள புதிய தேர்தலே ரணிலை இலங்கை அரசாங்கம் என்ற குழந்தையின் தாயாக்க முடியும். நீதியான தீரப்பின் அடிப்படையில் நோக்கினால் இலங்கை அரசாங்கம் தனக்குரியது தான் என்பதை தனது பேச்சில் வலியுறுத்தியிருக்கிறார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது உரையில் சுட்டிக்காட்டிய 'ஹணு வ(ட்)டயே' நாடகம் உண்மையில் என்ன சொல்கிறது?  அதில் வரும் 'க்ருசா' எனும் பாத்திரம் எப்படியானது?  முழுநாடகப் பேசு பொருளும் இலங்கையின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கின்றதா? என்ற விடுபார்வம் பலருக்குண்டு, அதனால் அந்த நாடகத்தின் பேசுபொருள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

"ஜெர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட மார்க்சிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)   எழுதிய ''The Caucasian Chalk Circle'' எனும் நாடகத்தை புகழ்பெற்ற சிங்களக் கலைஞர் ஹென்றி ஜயசேன என்பவர் இலங்கை சூழலுக்கு ஏற்ற விதத்தில் மீளுருவாக்கம் செய்து 'ஹணு வ(ட்)டயே' என்ற பெயரில் வெளியிட்டார். இந்த சிங்கள நாடகம் 1967ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம் தமிழ் மொழிபெயர்ப்பில் 2014 ம்ஆண்டு குழந்தை ம.சண்முகலிங்க்தின் மொழிபெயர்ப்பில் மக்கள் களரியின் பராக்கிரம நீரியல்ல அவர்களால் நெறிப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணத்திலும் மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தின்; பெயர் ‘வெண்கட்டி வட்டம்’. 

இலங்கையின் இன்றைய நெருக்கடி சீனாவின் கடன் பொறியோடு ஆரம்பமாவது போன்று வெண்கட்டி வட்டம் நாடகமும் சீனாவின் புராணக்கதையொன்றுடன் ஆரம்பமாகிறது. 

வெண்கட்டி வட்டம் நாடகம் 1945 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் இரண்டாம் உலகப் போரினால் அழிக்கப்பட்ட ஒரு காகசியன் கிராமத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் ஆரம்பமாகிறது. அதன் கருப்பொருள் நிலவுரிமை தொடர்பான சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்கள் படையெடுத்த வரும்போது கைவிடப்பட்ட ஒரு பள்ளத்தாக்கிற்க்கு நிலத்திற்கு இரண்டு குழுக்களான விவசாயிகள் உரிமை கோருகின்றனர். ஒரு குழு பாரம்பரியமாக அந்த நிலத்தில்; வாழ்ந்து ஆடுகளை மேய்த்து வந்தது. மற்றைய குழு அருகில் இருந்த இடமொன்றிலிருந்து பழ மரங்களை பயிர்செய்தது. இரு பகுதியினரும் யுத்தம் முடிந்த பின்னர் ஒரு குறித்த நிலத்துக்காக உரிமைகோருகிறார்கள். இந்தப்பிரச்னை தீர்க்கும் போது ‘வெண்கட்டி வட்டம்’ என்ற கதை இரண்டு பகுதியினருக்கும் சொல்லப்படுவது தான் நாடகம். இது மிகப் பழமையான சீனப் புராணத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக நிகழ்த்தப்படுகிறது.














No comments:

Post a Comment