Showing posts with label வெண்கட்டி வட்டம். Show all posts
Showing posts with label வெண்கட்டி வட்டம். Show all posts

Sunday, 6 October 2024

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும்.