Tuesday 17 May 2022

இணையவழி கருத்தாடல் களம் : ‘ரணில் விக்கிரமசிங்க இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பாரா?’


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலையை தோற்றுவித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.   மக்கள் தமது விரக்தியை வன்முறையாகவும் வெளிப்படுத்தத் தலைப்படுகிறார்கள் போலும். ஒரு ஸ்திரமான அரசாங்த்தை கொண்டிருந்த கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறுமளவிற்கு பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக வலுப்பெற்று நீண்டு செல்கிறது. இந்தச்சூழலில் தனியொருவராக தனது கட்சியைப்பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விங்கிரமசிங்க நாட்டைமீட்டெடுக்க துணிந்து பிரதமர்பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறார்.

 பாராளுமன்ற அரசியல், மக்கள் கொந்தளிப்பு, பொருளாதார மீட்டெடுப்பு என்ற பல விடயங்கள் தனிமனிதனை மையப்படுத்தியே நகர்வது போன்றதான நிலைப்பாடு காணப்படுவதான சு}ழலில் மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தச்சூழலில் விழிப்பூட்டும் நோக்கம் கொண்டு இந்த கருத்தாடல் களம் இணையவழி ஒழுங்குபடுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண விஞ:ஞர்னச் சங்கம் (பிரிவு டி) இணைந்து இந்தக்கருத்தாடல் களத்தை ஒழுங்குசெய்துள்ளனர்.

‘ரணில் விக்கிரமசிங்க இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பாரா?’ என்ற தலைப்பில் மூன்றாவது கருத்தாடல் களம் எதிர்வரும் 20.05.2022 மாலை 7.00மணிக்கு இணையவழி நடைபெறவுள்ளது. ஆர்வலர்கள் சூம் செயலி வழியாக இணைந்து கொள்ளலாம் ( ஐ.டி: 69114783312, பாஸ் கோட் : துளய@2022). இந்தக் கருத்தாடல் களத்தில் பேராசிரியர் வி.பி. சிவநாதன் பொருளியல் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க நாட்டைமீட்பாரா? என்ற தலைப்பில் கருத்துரைநிகழ்த்தவுள்ளார் அவரைத் தொடர்ந்து ரணில் விங்கிரமசிங்க இலங்கையை அரசியல் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பாரா? என்ற தலைப்பில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக அரசறிவியல்துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் கருத்துரை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைமுறைச்சாத்தியமான முன்னகர்வகள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்.



No comments:

Post a Comment