Saturday 18 June 2022

பாடசாலைகளுக்கிடையிலான யோகாப் போட்டியில் மன்னார் வட்டக்கண்டல் மகாவித்தியாலம், யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டன.



சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண விஞ்ஞர்னச்சங்கம் நடத்திய குழுநிலை யோகாப் போட்டியில் மன்னார் வட்டக்கண்டல் ஜி.ரி.எம்.எஸ் பிரிவு 2 இல் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொணடுள்ளது. இதே பிரிவில் யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை இரண்டதமிடத்தையும் மூன்றாமிடத்தை யா.இடைக்காடு மகாவித்தியாலயமும் பெற்றுக்கொண்டன. இதே போன்று பிரிவு 1 ற்;கான போட்டியில் யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தை கொக்குவில் இந்துக்கல்லூரியும் மூன்றாம் இடத்தை திருக்குடும்ப கன்னியர் மடம் தேசியபாடசாலையும் பெற்றுக்கொண்டன. இந்தப்போட்டிகள் கடந்த 15.06.2022 அன்று யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியல் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற குழுக்களின் ஆற்றுகைகளும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் 21.06.2022 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் வழங்கப்படும். இந்த நிகழ்வில் யாழப்பாணப்பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா பிரதமவிருந்தினராகவும். இந்தியத் துணைத்தூதுவர் சிறிமான். ராகேஸ் நடராஜ் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்கள்.




தற்போதைய நாட்டின் நெருக்கடியான சூழலில் சிறுவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு, உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள், அவர்களின் உடல் உள ஆரோக்கியம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது. சிறுவர்களின் உடல் உள ஆரொக்கியத்திற்கு யோகாப் பயிற்சிகள் துணைபுரியும். யோகாப் பயிற்சிகளில்  ஈடுபடுவது இலகுவானதும் செயல்படுத்தக்கூடியதுமான செயற்பாடாகும். வீடுகளிலும் பாடசாலைகளிலும் யோகா பயிற்சியில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதனூடாக ஆரோக்கியமான இளம் தலைமுறை உருவாக்கத்திற்கு வித்திடலாம். இதனைக் கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் யோக தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதனை பயிற்சி செய்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களிற்கு யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மருத்துவ விஞ்ஞானப்பிரிவு மற்றும் சமூக விஞ்ஞானப்பிரிவு இணைந்து யோகாப்போட்டியை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தன. இது வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்த செயற்பாடாக நடைபெறுகின்றது.
இதில் குழுப்போட்டியாக யோகா ஆசனங்களை அடிப்படையாகக் கொண்ட தாள அமைவிற்கு ஏற்ற குழுநிலை மேடை ஆற்றுகையாக நடைபெற்றது. இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. பிரிவு 1 – ஆண்டு 06 – 09 வரையான மாணவர்கள் பங்கு பற்றினார்கள்.; பிரிவு 2 - ஆண்டு 10 - 13 வரையான மாணவர்கள் பங்கு பற்றினார்கள். 


--

No comments:

Post a Comment