Friday, 23 May 2025

தொண்டன் இல்லாத கட்சிகள் போட்டியிடும் உள்ளுராட்சித் தேர்தல்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கின்றன. வடக்கு,கிழக்கு  மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரலாற்று ரீதியாக தமிழ் தேசியம் பேசிய அரசியல் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருகின்றன. ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டக்கட்மைப்புக்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது முக்கியமானதாகிறது. துற்போதைய சூழலில் கட்சிகளிடம் தொண்டர்கள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகின்றது. கட்சிகளின் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் எவையாயினும் பணம்பெற்றுக்கொண்டு திரளும் மக்கள் கூட்டமே காணப்படுகின்றது. இது கட்சி சார்ந்த கட்சிக்கு விசுவாசமான மக்கள் கூட்டமாக இல்லாமல் யாரொருவர் பணம் கொடுத்தாலும் அவர்களுக்காக அணிதிரளும் ஒரு வகை மந்தைக்கூட்டமாகவே காணப்படுகிறது எனலாம். இவர்களை ஒருங்கிணைப்பதற்கு முகவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அணுகினால் இந்தக்கூட்டத்தை திரட்டிவிடலாம் என்ற நிலை தான் காணப்படுகின்றது. இந்த முகவர்களாக உள்ளுர் அமைப்புக்களின் தலைவர்கள் செயற்படுவதும். மறுப்பதற்கில்லை. ஆகவே தான் தேர்தலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பணம் தான் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறது எனலாம். இந்த நிலைமைகளில் அரசியல் கட்சிகள் அடிநிலைத் தொண்டனைத் திரட்டுவதற்கான களமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலைப்பார்க்கலாம். இது கிராமங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. கட்சிக்கான தொண்டன் எப்படி உருவாகுவான் என்பதை கட்சிகள் கற்றறிய வேண்டிய காலமிது. 


2018 உள்ளாட்சித் தேர்தல்களில்,  தமிழ் கட்சிகள் வடக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பேணி, ஏராளமான உள்ளாட்சி சபைகளில் வெற்றி பெற்றிருந்தன. இந்தக் கட்சிகள் பாரம்பரியமாக தமிழர் உரிமைகள், பிராந்திய சுயாட்சி மற்றும் போருக்குப் பிந்தைய அவலங்களை எடுத்தியம்புதல் போன்றவற்றை அவர்களின் மூலதனமாக கொண்டிருந்தன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பின்தள்ளிய மக்களின் வாழ்வியல் மீள்கட்டுமாணம் குறிப்பாக பொருதார மேம்பாடு பற்றிய கரிசனை, ஒருங்கிணைப்பு போன்றன தமிழ்கட்சிகளிடம் இல்லாத காரணங்களால் தென்னிலங்கை கட்சிகள் அல்லது தென்னிலங்கைக்கட்சிகளுக்கு மிண்டுகொடுக்கும் கட்சிகள் தமது பிளைப்புவாதத்தை முன்வைத்து வெற்றிபெற்றிருந்தன. இது இரு பெரும் பிளவுபட்ட அரசியலை முன்னகர்த்தியிருந்தது. இந்தச்சுழலை தற்போதைய ஆளுமு; தரப்பு ஊழல் ஒழிப்பு என்ற கோ~த்துடன் வெற்றி கொள்ள முயற்சிக்கிறது. 

2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன. என். பி. பி  225 இடங்களில் 159 இடங்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதில் குறிப்பாக, தமிழ் பெரும்பான்மையாக வாழும்  வடக்கு மாகாணத்தில் கிடைத்த வெற்றி சிறந்த ஊடுருவலாகப் பார்க்கப்படக்கூடியது. 

ஆக, இப்போது என்.பி.பி. கட்சிக்கும் தமிழ்கட்சிகளுக்குமிடையிலான முக்கியமான பலப்பரீட்சையாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலைப்பார்க்க முடியும்.  உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்;, வடக்கு மாகாணத்தில் அரசியல் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், என்.பி.பி இன் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியில் கவனம் செலுத்துவது சிறுபான்மை சமூகங்கள் உட்பட பரந்த வாக்காளர்களை ஈர்க்கக்கூடும். இது போட்டியை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் உள்ளுர் சபைகளில் பாரம்பரிய தமிழ் தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைக்கக்கூடும்.

தமிழ்கட்சிகள் நீண்ட பிளவைக் கொண்டிருப்பதும். தோல்விகளின் பின்னர் கட்சிகள் தங்களை மீள்கட்டமைத்துக்கொள்ள முயற்சிக்காததன் விளைவையும் இந்தத் தேர்தல் வெளிப்படுத்தலாம். அளுங்கட்சிக்கெதிராக அணிதிரள்வது என்பதற்குப்பதிலாக எதிர்தரப்பினர் தமக்குள் எதிரியைத் தீர்மானிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இது ஆபாத்தானதாக அமையும் தமிழகட்சிகளின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும்.

கட்சி கூட்டணிகள், வாக்காளர் வாக்குப்பதிவு மற்றும் பிரச்சார உத்திகளின் செயல்திறன் போன்ற காரணிகள் வெற்றியாளர்களையும் தோல்வியுற்றவர்களையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். உள்ளூர் மட்டத்தில் என்.பி.பி அதன் வெற்றியை தமிழ் பகுதிகளில் தொடருமா? அதே வேளை பாரம்பரிய தமிழ் கட்சிகள் தங்கள் கோட்டைகளைத் தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதை  ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

இலங்கையின் தமிழ் பகுதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் நீடித்த செல்வாக்கு மற்றும் என்.பி.பி இன் விரிவடையும் ஈர்ப்பு ஆகிய இரண்டிற்கும் இடையிலான சோதனையாக இருக்கும். இந்த முடிவுகள் பிராந்தியத்திலும் நாட்டிலும் வளர்ந்து வரும் அரசியல் இயக்கவியல் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும்.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்  எம்.ஏ. சுமந்திரனின் முழுமையான வழிநடத்தலில் தமிழர் உரிமைகள் மற்றும் பிராந்திய சுயாட்சிக்காக வாதிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது சட்ட நிபுணத்துவமும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான திறனும் தமிழ் வாக்காளர்களிடையே அவரின் மதிப்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆக, தமிழரசின் தலைமையின்மை உள்ளுராட்சிச் சபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சுமந்திரனின் தலைமையும் உள்ளுர் பிரச்சினைகளை கையாளும் முறைமையும் அனுர அரசின்; சமீபத்திய முயற்சிகள் வடக்கு மாகாணத்தில் அரசியல் இயக்கவியலை மறுவடிவமைக்கக்கூடும்.

தையிட்டி விஹாரை பிரச்சினையை முன்நிறுத்தி தமிழ் காங்கிரஸ் தனது அரசியல் வெற்றிகளுக்கு முயற்சிக்கிறது. இதுவே அவர்களின் அரசியலின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது, இது மக்கள் மத்தியில் நில உரிமைகள் மற்றும் கலாச்சார பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் நியாயத்தன்மை உள்ளுர் மக்களிடையே எதிரொலித்துள்ளது, இது அவர்களின் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் அது தவிர்ந்து நீண்ட மக்கள்நலன்சாரந்த அரசியல் தெளிவு வெளிப்பட வேண்டியிருக்கிறது. 

அதாவது, ஜனாதிபதி அனுரவின்; நிர்வாகம் வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ஆளுநர் அவசரஅவசரமாக வீதி அபிவிருத்திகளை ஆரம்ப்பிக்கும் அறிவித்தல்களை விழாக்களாக விளம்பரப்படுத்திவருகிறார்.  இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களின் அபிப்பிராயங்களை பாதிக்கலாம். இதற்கு தமிழ்கட்சிகளிடம் உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது வெளிப்பட வேண்டியுள்ளது. 

அதே வேளை அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய புவிசார் அரசியல் இயக்கவியல், வடக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் உட்பட இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கையுடனான அதன் ஈடுபாட்டை அமெரிக்கா வரலாற்று ரீதியாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிர்வாகம் குறித்த கவலைகளுடன் இணைத்துள்ளது. இந்த அணுகுமுறை சில நேரங்களில் இராஜதந்திர அழுத்தங்களுக்கு வழிவகுத்தது. இலங்கையில் சீனாவின் கணிசமான முதலீடுகள், குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களில், கடன் சார்பு பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளன. இந்தத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவை தேசிய இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் பற்றிய விவாதங்களையும் தூண்டிவிட்டன, அவை உள்ளுர் தேர்தல்களில் வாக்காளர் கருத்துக்களைத் திசைதிருப்பக்கூடிய காரணிகளாக மாற்றமடையக்கூடும்.


No comments:

Post a Comment