சிறுவர் நாடகக் கொண்டாட்டம் 26.01.2018 அன்று ஆரம்பமானது. சிறுவர் குதூகலிப்பதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ள இன்றய எமது பரபரப்பான வாழ்க்கைச் சூழழலில் வாய்விட்டுச் சிரித்து மகிழ சிறுவர்களுக்கான களங்களை நிறையவே உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகள் பெருமெடுப்பில் நடைபபெற வேண்டும். இந்த முயற்சியை சிறிதளவில் செயல் திறன் அரங்க இயக்கம் கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.