Saturday 27 January 2018

சிறுவர் நாடகக் கொண்டாட்டம் ஆரம்பம்.


 சிறுவர் நாடகக்  கொண்டாட்டம் 26.01.2018 அன்று  ஆரம்பமானது. சிறுவர் குதூகலிப்பதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ள இன்றய எமது பரபரப்பான வாழ்க்கைச் சூழழலில் வாய்விட்டுச் சிரித்து மகிழ சிறுவர்களுக்கான களங்களை நிறையவே உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகள் பெருமெடுப்பில் நடைபபெற வேண்டும். இந்த முயற்சியை சிறிதளவில் செயல் திறன் அரங்க இயக்கம் கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.

‘வளரும் பயிருக்கு முளையில் உதவும் சிறுவர் அரங்கு’ என்ற தொனிப் பொருளில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கின்றன. ‘குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது’ என்ற நம்பிக்கையிலுள்ள சமூகத்தில் குழந்தைப் பிள்ளைக்கு இடம் கொடுப்பதென்பது சற்றுக் கடினமானது தான். பெரியவர்களும் குழந்தைகளும் இதனைப் புரிந்து கொள்வது கடினமானது தான். நாம் அடிக்கடி கேட்கின்ற வார்த்தை ‘நாடகக்காரர் பிள்ளைகளை குழப்படிக்காரராக்கிப் போடுவாங்கள்.’ 
ஆனால் நாடகம் நடித்த பிள்ளையாகட்டும் நாடகம் பார்த்த பிள்ளையாகட்டும் நாடகத்தில் சேர்ந்து ஆடிப்பாடிய சிறுவர் ஆகட்டும் அனைவரும் தமது ஆளுமை நாடகத்தால் செழித்தது என்று எப்போதும் சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். அது தான் இத்னைகாலம் சிறுவர் நாடகங்களோடு நேரம் செலவிட உத்துகிறது எனலாம்.

இன்று தமது பிள்ளைகளைப்பராமரிக்கின்ற பொறுப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் ஒப்படைத்த பெற்றோர்கள் பலர் பதறுவதைக்காணமுடியும். தனது பிள்ளை தங்களோடு உறவாடவில்லை அது தனக்கெனவொரு உலகத்தை தொலைக்காட்சியோடு சேர்ந்து சிருஷ்டிக்கிறது. அந்த உலகு தனிமையை அடிப்படையாகக் கொண்டது. அசைவற்ற உடலோடு சஞ்சரிப்பது. ஆதனால் வரும் உபாதைளையும் தரவல்லது என்தை உணரத் தொடங்கிவிட்டோம். சமூகமயமாதலுக்கும் ஆரோக்கியமான உடல் உள வளர்ச்சிக்கும் பிள்ளையைப்பராமரிக்கும்தொலைக்காட்சிப் பெட்டி ஆபத்தானதென்;று புரிய ஆரம்பித்திருக்கிறோம். புpள்ளைககளுக்கு நாமே வலிந்துதிணித்த தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து பிள்ளைகளை மீட்க வேண்டிய நிலைக்கு வெகுசீக்கிரமே வந்து விட்Nடுhம். ஆதற்கு என்ன செய்யலாமென்று துடிக்கிறோம். வழிதெரியவில்லை. ஒரு வேளை வழி தெரிந்தாலும் அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் எமது சமூகச் சூழலில் இல்லை என்பதும் உணரப்படுகிறது. உடனடியாக கடைத்த ஒரு தீர்வு சிறுவர் பூங்காங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வது. அதுவும் பிள்ளையின் கற்பனா சக்;திக்கு ஈடுகொடுக்கவில்லை. இதனால் வேறு வழிகளை தேடுகின்ற பல பெற்றோரைக்காண முடிந்தது. அவ்வாறானவர்கள் அரங்கவெளியை நல்லதொருகளமாகக் கண்டு கொண்டார்கள். அரங்கு மனதை விடுவி;க்கிறது. சுதந்திரத்தைத் தரிசிக்கச் செய்கிறது.அரங்கில் உடலும் உளமும் விட்டு விடுதலையாகிற போது ஆரோக்கியம் பிறக்கிறது. இதனை முதலில் உணர்ந்து தமது பிள்ளைகளை அரங்க வெளிக்கு கொண்டு வருபவர்கள் உயர் பதவியிலிருக்கும் பெற்றோர்கள். குறிப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கின்ற வாய்ப்புக்களை தமது குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறுவதில்லை. 
இந்த வாய்ப்பை பலருக்கும் வழங்கும் நோக்கோடு யாழ் பொது நூலகமும் செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து ஆரம்பித்த சிறுவர் நாடகக் கொண்டாட்டம் 2018 ஆரம்பமாகியுள்ளது. அதில் 26.01.2018 அன்று குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘பஞ்சவர்ண நரியார்’ நாடகம் மேடையேற்றப்பட்டது. அதில் நாடகங்களைப்பார்த்த சிறுவர்கள் மேடையில் ஏறி ஆடிப்பாடியப் பாடினார்கள்.ஆர்வமேலீட்டோடு பங்கு கொண்டார்கள். குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சி பிரவாகித்தது. இதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்த சிறுவர் நாடகக் கொண்டாட்டம் பெப்ரவரி மாதம் 23ம திகதி இரண்டு சிறுவர் நாடகங்களுடன் சிறப்புறும்










No comments:

Post a Comment