![]() |
Thevanayagam Thevananth |
சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு அழகு சேர்ப்பது திராவிடப்பாணியில் அமைந்த அதன் கட்டடங்கள் அதில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம். அது ‘முற்றம்’.
தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை. அதன் வளர்ப்புத் தந்தை பேராசிரியர் கோ.இரவீந்திரன்.
முற்றத்தில் அழகாக கோலமிடமுடியும். ஆனால் முற்றத்தை உருவாக்குவதென்பது சற்று சிரமமானது. புhரம்பரியமாக பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமானது. அதற்காக பாடாய்ப்பாடுபட வேண்டும். இது ஒரு பண்பாட்டுப் புரட்சியும் கூட. அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம்.
இந்தப் பண்பாட்டு புரட்சியை ஆரம்பித்து வைத்ததில்; யாழ்ப்பாணப்பல்கைலக்கழகத்திலிரு ந்து வந்திருந்த நானும் இருந்திருக்கிறேன் என்பதை மீள நினைக்கின்ற போது பேரானந்தமே!.
பேராசிரியர் கோ. இரவிந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வகுப்புக்கு வெளியே வகுப்பு’ என்ற தத்துவத்தின் செயல் வடிவம் தான் ‘ முற்றம்’.