Thursday, 26 January 2012

நாம் கைபேசியின் அடிமைகள்!!!


தே.தேவானந்த் M.A &M.Sc.

கைத்தொலைபேசி எப்போதும் எம்மோடு இருக்கின்ற, எமது வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு பொருளாக இன்று மாறிவிட்டது.


வீட்டில் இருந்து வெளியேறும் போது கைத்தொலைபேசி இல்லாமல் புறப்பட முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. வீட்டுச் சாவி மற்றும் பணப்பை என்பவற்றோடு கைத்;தொலைபேசியும் மறக்காமல் எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய பொருளாக மாறிவிட்டது.
மனிதன் இன்று கைத்;தொலைபேசியை நம்பியே வாழப்பழகிவிட்டான் எனலாம். கைத்;தொலைபேசி மூலமாகவே தமது ஞாபகங்களைச் சரிபார்த்துக் கொள்கிறார்கள். முக்கியமான தினங்களையும் நேரத்தையும் நினைவூட்டிக் கொள்கிறான்.முக்கிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள், ஒருவருடனான சந்திப்பையும் செல்பேசியே நினைவூட்டுகிறது. தொடர்பு விவரங்களுக்கும் செல் பேசியை நம்பியே இப்போது மனிதன் வாழ்கிறான்.



மனிதன் மெதுவாக கைத்;தொலைபேசி தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி வருகின்றான் அல்லது அது சார்ந்து வாழப் பழகிக் கொள்கிறான் எனலாம். உணர்வு ரீதியான, தனிப்பட்ட மற்றும் தொழில்சார் தகவல்களை செல்பேசியை நம்பியே பரிமாறிக் கொள்கிறார்கள். பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்கூட கைத்;தொலைபேசியை நம்பியே காணப்படுகின்றன.வங்கி ஏ.டி.எம். அட்டையின் கடவுச்சொல்லை(Pயளள றழசன) கைத்;தொலைபேசியில் பதிவு செய்து வைத்தே நினைவூட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு பல்வேறு விடங்களுக்கும் கைத்;தொலைபேசியை நம்பியே வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இனங்காண முடியும்.
‘நடந்துகொண்டே இன்னொருவருடன் பேசுகின்ற வாய்ப்பை கைத்;தொலைபேசி வழங்குகின்றது, நடந்து கொண்டே பேசுவதென்பது மனிதர்களுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று
இன்று கைத்;தொலைபேசிளுக்கு ‘சிக்னல்’ கிடைக்காத பகுதியை கருப்புப் புள்ளி (டீடயஉம ளிழவள) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது ‘னநயன ணழநௌ’ - இறந்த பகுதியென்று குறிப்பிடுகிறார்கள்.இந்த வகையான இடங்கள் பின்தங்கிய அபிவிருத்தியடையாத இடங்களென்று அர்த்தப்படுத்தப்படுகின்றன.
உலகில் 31மூ மேற்பட்ட மக்கள் தொகையினர் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று கைத்;தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் தொகையினர் உலகளாவிய ரீதியில் கைத்;தொலைபேசிகளைப உபயோகிக்கிறார்கள்.

கைத்தொலைபேசிகள் வெறுமனே அழைப்புக்களுக்கும் உரையாடல்களுக்கும் மட்டுமல்லாமல் குறுந்தகவல்களை(ளுஆளு) தட்டச்சு செய்து பிறிதொரு செல்பேசிக்கு அனுப்புவதற்கும் பயன்படுகின்றன. இதைவிட வானொலி,இணைய இணைப்பு வசதிகளுடன் வீடியோ ரெக்கோடிங் , போட்டோ பதிவுகள்,குரல் ஃஒலி ரெக்கோடிங் வசதிகள் புளுருத்(டீடரநவழழவா)வசதி ஊடாக தரவுகளை கேபிள் இன்றி பரிமாறிக்கொள்ளுதல் போன்ற பல வசதிகளுடன் இன்று மூன்றாவது தலைமுறை(3பு) கைத்;தொலைபேசிகள்; வந்துவிட்டன.


தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக விரைவாக வளர்ந்து வருகின்ற இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. இந்தியாவில் மக்கள் தொகை மிக விரைவாக வளர்கின்றமை,இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன தொலைத்தொடர்பு வலையமைப்பு வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.
கைத்;தொலைபேசி என்ற பெயர் பிராந்திய ரீதியாக வௌ;வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகின்றது. ‘ஊநடட phழநெ’செல்பேசி, ‘ஆழடிடைந phழநெ’மொபைல் போன், ‘ர்யனெ phழநெ’ கைபேசி அல்லது கைத்;தொலைபேசி போன்ற பெயர்கள் பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்காவில் ‘ஊநடட phழநெ’ என்ற பெயர் வழக்கில் இருப்பதையும் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் கைபேசி (ர்யனெ phழநெ),செல் ‘ஊநடட phழநெ’ என்ற பெயர்கள் பொது வழக்கில் இருப்பதையும் காண முடிகிறது.





உயர் தொழில்நுட்ப வசதியுடைய செல்பேசிகள் குரல் ஒலியை மட்டும் பரிமாறிக் கொள்பவை அல்ல. அவை குறுந்தகவல்கள், வீடியோ, இசை, போட்டோ போன்றவற்றையும் பரிமாறிக்கொள்ளும் ஆற்றலுள்ளவையாக உள்ளன. மைக், கேமெரா, இன்டர்நெட்,பு@ருத் வசதிகள் இதற்குத் துணைபுரிகின்றன.



சில நாடுகளில் குறிப்பாகத் தாய்வான், கொரியா போன்ற நாடுகளில் கைத்;தொலைபேசி 100மூ மேல் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கின்றன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசி வைத்திருப்பது அங்கு ஒன்றும் புதிதல்ல.இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது.ஒருவர்ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசிகளை வைத்திருப்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் இணைப்புக்களையும் அதாவது சிம் கார்ட்டுகளையும் கொண்டிருப்பது சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது.



இன்று தொழில்புரிவோரை விட தொழில் இன்றி பெற்றோரில் தங்கி வாழ்வோரே அதாவது இளைஞர்களே அதிகளவில் கைத் தொலைபேசிகளைப் பாவிக்கிறார்கள்.

கைத்தொலைபேசியை உபயோகப்படுத்துவது ஒரு சமூகப் பழக்கவழக்கமாகக் கருதப்படுகின்ற நிலைமை இன்று இளையோர் மத்தியில் அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில், சனக்கூட்டமான இடங்களில், நண்பர்கள் மத்தியில் கைத்;தொலைபேசியைக் காண்பிப்பது ஒரு உயர் சமூக அந்தஸ்து நிலையாக இளையோரால் கருதப்படுகின்றது.விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை கைகளில் வைத்திருப்பது தமது சமூக அந்தஸ்தை அதிகரிப்பதாக இளையோர்கள் கருதுகிறார்கள்.
செல்பேசி உபயோகம் இன்று புதிய பழக்கவழக்கங்களையும் விழுமியங்களையும் உருவாக்கி வளர்த்து வருகின்றது.
சமூக வலையமைப்பில்; தம்மை இணைத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக கைத்;தொலைபேசியை உபயோகிக்கிறார்கள். கைத்;தொலைபேசி இளம் பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



மேலும், செல்பேசி பெற்றோருக்கும் பிள்ளைகளுக் கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிப்பதாக மனோரதியப(சுழஅயவெiஉ) பண்புமிக்க தொடர்பாடல்களை ஊக்குவிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.



காதல் மலர்வதற்கும்.காதலர்கள் தங்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் கைத்;தொலைபேசியை ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உரையாடல்களுக்கு இணையாக குறுந்தகவல்கள(ளுஆளு) இதில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.



செல்பேசி இடவேறுபாடுகளை இல்லாது செய்து, எப்போதும் எவ்வேளையிலும் உரையாடுவதற்கும், குறுந்தகவல்கள் பரிமாற்றத்திற்கும் வழிவிடுகிறது. இதனால் உறவுகளைப் பேணுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் இது உதவுகிறது.



இளைஞர்கள் அதிகளவு பணத்தை செல்பேசிக்குப் பயன்படுத்த நேர்வதால் பண நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள். இதனைவிட மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஓட்டும்போது செல்பேசிகளைப் பயன்படுத்துகின்ற பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றது. இது கைத்;தொலைபேசி பாவனையின் அபாயகரமான எதிர்மறையான விளைவுகளுக்கு
ஆய்வொன்றில் 75 மூ இளம் வயது ஓட்டுநர்கள் தாம் வாகனம் ஓட்டும்போது செல்பேசியை உபயோகிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

தென்னாசிய கலாசாரம் வாய்மொழித் தொடர்பாடலை அதிகளவில் கொண்டுள்ளது. நேருக்கு நேரான உரையாடலை விரும்புகின்ற பழக்கத்தைக் கொண்ட ஒரு தொடர்பாடல் பாரம்பரியத்தைக் கொண்டது. இந்தப் பாரம்பரியம் செல்பேசி வருகையுடன் மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது தற்போது .புதிய தொடர்பாடல் கலாச்சாரம் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.

இந்தியா போன்ற வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் இளையோர் அதிகளவில் கைத்;தொலைபேசி உபயோகிப்பாளர்களாக காணப்படுகிறார்கள். கைத்;தொலைபேசி வைத்திருப்போர் எண்ணிக்கை வியப்பூட்டுமளவுக்கு அதிகரித்து வருகின்றது. தற்போது, தமது தனிமையைப் போக்குவதற்காக பொது இடங்களிலும் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளிலும் பயணிக்கும் போது தமக்கு ஒரு துணையாக கைத்;தொலைபேசியைக் கருதிக் கொள்கிறார்கள். பயணத்தின் போது தனிமையைப் போக்குவதற்கு அருகில் உள்ளவருடன் உரையாடுவது என்ற நிலைமாறி கைத்;தொலைபேசியில் பாடல்கேட்டல், விளையாட்டுக்கள் எதையாவது விளையாடுதல் அல்லது குறுந்தகவல்கைள அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்ற நிலைமை ஆசியக் கலாசாரத்தில் அதிகரித்து வருகின்றது எனலாம்.
இளைஞர்கள் கைத்தொலைபேசியைத் தமது பெற்றோருடன் அல்லது உறவினர்களுடன் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காகவே வாங்குகிறார்கள். ஆனால், உறவினர்களுடன் தொடர்பு கொள்வதைவிட அதிகமாக நண்பர்களுடனேயே தொடர்பு கொள்கிறார்கள். இது அதிகமாக வெட்டிப்பேச்சாகவே அமைகிறது எனலாம்
கைத்தொலைபேசி பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பதற்கு அதன் எளிமை மற்றும் இலகுத் தன்மை,குறைந்த கட்டணம் என்பன காரணமாகின்றன. எப்போதும், எந்த இடத்திலும் பயன்படுத்த முடிவதும் இதற்கு வாய்பளிக்கின்றன.
அதிநவீன கைத்தொலைபேசியைக் கையில் வைத்திருத்தல் ர்நயனிhழநெ அணிந்து இசைப்பாடல் கேட்டல் என்பன சமூகத்தில் நாகரிகமானதொரு செயற்பாடாகவும் பழக்கமாகவும் கருதப்படுகின்றது. இது தமது அந்தஸ்து நிலையை அதிகரிப்பதாகவும் இளைஞர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்.
இளைஞர்கள் மத்தியில் மற்றுமொரு வழக்கமாக் காணப்படுவது ‘அளைளநன உயடட’ இது தனது செல்பேசியில் அழைப்புக்காகப் போதிய பணம் இல்லாத போது நண்பனுக்கு ‘எனக்கு அழைப்பு ஏற்படுத்து’ என்று குறிப்பால் உணர்த்துவதாகும்.
கைபேசி தொடர்பாடலில் ஏற்பட்ட அற்புதமான புரட்சி.மனிதனுக்கு நன்மை தருகின்ற ஒன்றே ,ஆனால் அது எம்மை எவ்வாறு விழுங்கு கின்றது என்பதை புரிந்திருத்தல் அவசியமாகும்.
கைத்தொலைபேசி படிப்படியாக எம்மை ஆட்கொண்டு வருகின்றது.நாம் அதன் அடிமைகளாகின்றோம்.இனி,நாம் விரும்பினாலும் அதிலிருந்து விடுபட முடியாது என்ற யதார்த்த்தையாவது புரிந்து கொண்டு கைபேசிக்கு அடிமையாவோமாக…



No comments:

Post a Comment