Tuesday, 2 January 2024

இலங்கையில் ஊடக சுதந்திரம்’


- ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை தினத்தை அடியொற்றிய கருத்துநிலை
(ஈழத்தின் மிகப்பெரிய ஊடகப்படுகொலை தினமாக வர்ணிக்கப்படுகின்ற மே 02 இன் பத்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக 02.05.2016 அன்று யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை)




டீஜிற்றல் உலகில் ஊடக சுதந்திரம் மனித உரிமைகள் சார்ந்தும் கலாச்சார வெளிப்பாடு, தகவல் அறியும் உரிமை மற்றும் நிலைத்த அபிவிருத்தி என்ற அடிப்படைகளோடு நோக்கப்படுகின்றது. அதே வேளை இவற்றை  நிலைநிறுத்துவதற்கான ஊடகத்தின் வகிபாகம் மற்றும் இந்த சேவைகளை வழங்குகின்ற ஊடகவியலாளர்களை பாதுகாத்தல் என்ற அடிப்படைகளையும் உள்ளடக்கியதே ஊடக சுதந்திரம் நோக்கப்படுகின்றது எனலாம்.

சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகளில் உலகின் முதலாவது  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அறிமுகமாகி 250 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

ஊடக சுதந்திரம் தகவல் அறியும் உரிமை ஊடக சுதந்திரத்தின் அடிப்படையாகின்றது. கட்டுப்பாடுகளில் இருந்து ஊடக சுதந்திரத்தைப் பேணுதல் மற்றும் பணியில் உள்ள போதும் இல்லாத போதுமான ஊடகவியலாளனின் பாதுகாப்பு ( ழடெiநெ யனெ ழகக டiநெ) போன்ற விடயங்களையும்  உள்ளடக்கியதாகும்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இன்னமும் சட்டமாக்கப்படவில்லை. ஆனால் 250 ஆண்டுகளிற்க்கு முன்னர் புpன்லாந்து அந்தச்சட்டத்தை உருவாக்கியிருக்கிறது. ஆதனால் தான் இன்று உலகில் பின்லாந்து   ஊடக சுதந்திரத்தில் முதலாவதாகத் திகழ்கிறது. அதே வேளை இலங்கை 141 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு 165 வது நிலையிலிருந்து தற்போது 24 இடங்கள் முன்னேறியுள்ளது. 180 நாடகள் இந்த மதிப்பீட்;டில் உள்ளடங்கியிருக்கின்றன.
இலங்கை தென்னாசிய நாடுகளில் நீண்ட ஊடகப்பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றது. மூன்று மொழிகளில் ஊடகங்களை கொண்ட இலங்கையின் ஊடக பரப்பில் ஒரு டிசின் செய்தி இதழ்களும் மூன்று டசின் ரி.வி நிலையங்களும் 40 மேற்பட்ட றோடியோ நிலையங்களும் உள்ளன. இந்த நீண்ட வரலாற்றில் அரச ஊடகங்களே முக்கியமான வகிபாகத்தை வகித்திருக்கின்றன
1925ஆம் ஆண்டு இலங்கை வானொலி 1932இல் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பத்திரிகையான கொழும்பு ஜேர்னல். அதன் பின்னர் ஒரு தசாப்த காலங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதாவது 1941ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை பத்திரிகை. இலங்கை சுதந்திரமடைந்த போது ஆரம்பிக்கப்பட்ட அசோசியேட் நியூஸ் பேப்பர் ஒவ் சிலோன் லிமிட்டட். இது பின்னர் லேக் கவுஸ் பப்பிளிகேசன் என்று அறியப்படுகிறது. இதன் பின்னர் 1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேவை இவையெல்லாம் அரச ஊடகங்களாகும். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களுக்கு சார்பாக அறிக்கையிடுவது இவற்றின் பொது நியதியாகவிருந்தது.
இதே வேளை 1992ம் ஆண்டு தனியார் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதுவொரு புதிய மலர்ச்சியாகும். அதே வேளை இதே காலப்பகுதியில் உருவான அரசுக்கு எதிராகப்  போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் றோடியோ மற்றும் தொலைக்காட்சிகளும் இங்கு குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியவையாகும்.

இந்த நீண்ட ஊடக வரலாற்றிக்கு சமாந்தரமாக இலங்கை ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப்பயன்படுத்துவதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
1990ம் ஆண்டு இன்ர பிறஸ் சேர்வீஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளன் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதோடு இந்த நீண்ட கறைபடைந்த வரலாறு ஆரம்பமாகின்றது எனலாம்.

28 ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு நிச்சட் டி சொய்சாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது உடலை அடையாளங்கண்டு கொண்டவர் தராகி என்ற தர்மரட்ணம் சிவராம் தமிழ் நெற் இணையத்தினுடய ஆசிரியரான இருந்தவர். பின்னர்  28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு; கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலைப்பட்டியல் பின்னர் அதிகரித்து வந்துள்ளது. இந்தப்பட்டியல் நீண்டு சென்றிருக்கிறது. துமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மைத்தகவல்களை வெளிக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை மாணவர்களின் கொலையை வெளிப்படுத்தியதற்காக உதயன் சுடர் ஒளி ரிப்போட்டர் சுப்பிரணியம் சுஜிதராஜ் கொல்லப்பட்டார்.
2006ம் ஆண்டு ஈழத்தின் மகிப்பெரும் ஊடகப்படுகொலையென வர்ணிக்கப்படுகின்ற உதயன் பத்திரிpகைக்குள் புகுந்த ஆயததாரிகள் அங்கு பணியில் இருந்த இருவரை சுட்டக் கொன்றார்கள். இது ஊடக நிறுவனத்தக்குள் புகுந்து நடத்தப்பட்ட மிகப்பெரியதும் முக்கியமானதுமான தாக்குதலாகும். இதில் தாக்குதலை நடத்தியவர்கள் இலகுவாக கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருந்த போதும் அது தொடர்பாக எவரொருவரும் கைது செய்யப்பட்வில்லை விசாரிக்கப்படவில்லை. இந்தக்காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. விரிவஞ்சி அவற்றை இங்கு விரிவாக தரமுடியவில்லை.

 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்திருந்தாலும். காட்டூன் கலைஞன் மற்றும் ஊடகவியலாளன்  பிரகீத் எக்கினியாக் கொட காணாமற் போன சம்பவம் முக்கியமான சம்பவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இது விடயமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் அறிக்கையும்.சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மெகாகான் பீரிஸ் தெரவித்த கருத்துக்களும் ஊடகசுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியது. எக்கனியாக் கொட தானாகவே தலைமறைவாகிவட்டார் என்று பாதுகாப்பு செயலாளரும் அவர் உயிரோடு உள்ளார் வெளிநாடொன்றில் வசிக்கிறார் என்று பிரதம நீதியரசரும் குறிப்பிட்டிருந்தனர். இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்ற விசாரணையின் போது பிரதம நீதியரசர் தனக்கு அது பற்றி எதும் தெரியாது என்று குறிப்பிட்டதும். இலங்கையில் சட்ட ஒழுங்கு நீதி தொடர்பான பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருந்தன.இந்த நிலைமை இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை தெளிவாக்கியிருந்தன.

இதனைத் தொடர்ந்து தினமின பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பொட்டல ஜெயந்தா கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வீசப்பட்டதான சம்பவம் நடைபெற்றது. அதன் காரணமாக தனக்கு உயிராபத்து என்று கருதி அவர் நாட்டை விட்டு; வெளியேறியிருந்தார். இதே போன்று தமிழ் ஊடகப்பரப்பில் தமக்கு உயிராபத்து என்று கருதிய பலர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.

யுத்தம் நிறைவடைந்து பதின்னான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையியில் சிங்கள தொலைககாட்சி மற்றும் றோடியோ நிலையமான சியந்தா குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ஜனவரி 2011 இல் டயமெயநெநெறள.உழஅ அலுவலகம் தீயிட்டு கொழுத்தப்பட்டது. நவம்பர் 2011 அதே இணையத்தளம் அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டது.

யுத்தம் நடைபெற்ற போது ஊடகவியலாளர்கள் யுத்தப்பகுதிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்டவில்லை. இதே போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கிற்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. புயம் நிறைந்த சூழல் சிரு~;டிக்கப்பட்டது. ஊடகவிலாளர்கள் தமக்குத்தாமே சுயகட்டுப்பாடுகளை விதித்து அறிக்கையிட நிர்ப்பந்திக்கப்பட்டார ;கள். இனம்தெரியாதோரின் அச்சுறுத்தல்கள் பின்தொடரல்கள்   தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுதல் பொன்ற நிலைமைகளால் ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாடுகளை தக்குத் தாமே விதித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இலங்கையில் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான கட்டுப்பாட்டுகள் அச்சுறுத்தல்களால் நிலைநாட்ட முயற்சித்திருந்த அதே வேளை இலங்கை மக்கள் அரசுக்கு எதிரான தகவல்களை அறியாதபடியும் தடுக்கப்பட்டார்கள். புp.பிசி தனது உலக சேவையை இலங்கை வானொலி ஊடாக  மீள் ஒலிபரப்புவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது.   27 நவம்பர் 2008 தொடக்கம் ஜெனவரி 2009 வரையான காலப்பகுதியில் இந்த ஒலிபரப்பு 17 தடவைகள் தடைப்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்சேவையில் இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பதான செய்திகள் வருகின்ற போது அது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக இசை ஒலிபரப்பப்பட்டது. அதே நேரம் பி.பி.சி சிங்கள சேவை எட்டுத்தடவைகள் தடைப்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஒப்பந்தம் பின்னர் ரத்துச் செய்யப்பட்டது.

இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு தடையாக காணப்படும் முக்கிய விடயமாக இருதுருவ அறிக்கையிடல் காணப்படுகிறது. சுpங்கள ஊடகவியலளர்கள் அரசுக்கு சார்பான நிலையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

தவறான அறிக்கையிடல்கள் நடைபெற்றன. உதாரணமாக திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட போது அதனை நியாயப்படுத்தவதாக  சில சிங்கள பத்திரிகைகள் அந்த மாணவர்களை புலி ஆதரவாளர்கள் என்று அறிக்கையிட்டார்கள்.
இரு அந்தலைகளிலிருந்து அறிக்கையிடும் போக்கு இரண்டு இனக்குழும ஊடகங்களுக்குள்ளும் காணப்படுகின்றது. சிங்கள ஊடகங்கள் சில  அரசாங்கத்தின் நிலைப்பாட்டடைத் தொடர்கின்ற அதே வேளை வேறு சில எதிரான நிலைப்பாட்டில் அறிக்கையிடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இதே நிலைமை தமிழ் ஊடகப்பரப்பிலும் காணப்படுகின்றது. புலிகள் விமர்சிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. 1.05.2012 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை உணர்த்திப்பிடித்தது பற்றிய செய்திகள் தமிழ் ஊடகப்பரப்பில் எதிரும் புதிருமான நிலையில் உண்மையான தரவுகள் மிகைப்படுத்தப்பட்டு அறிக்கையிடப்படதான் சூழல் காணப்பட்டிருக்கின்றது.

மேலும் இராணுவ மயமாக்கப்பட்ட நிலைமையால் ஏற்பட்ட சூழல் சிவில் சமூக கட்டமைப்பில் தாக்கத்தைச் செலுத்தியது. இரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக ஆங்காங்கே தகவல் வழங்குனர்கள் நியமிக்கப்ட்டார்கள். இதனால் அச்சமான நிலைமை எங்கும் வியாபித்தது. ஒயில் வீசுதல் கிறீஸ் பூதம்அச்சம் தரும் நிலைமை திட்டமிடப்பட்டது. இவை ஊடக சுதந்திரத்துக்கு அச்சசுறுத்தலாகவே காணப்பட்டது.

இதே வேளை ஏல்.எல்.ஆர்.சி முன்மொழிந்த விடயங்களில் மிள்நல்லிணக்கத்துக்கு வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றன முக்கியமான வகிபங்கை வகிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றுதல் மற்றும் ஊடக சுதந்திரத்தை அபிவிருத்தி செய்தல் அதாவது ஊடகவியலாளர்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக நடமாடுதல் என்பன பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை நடைமுறைப்படுததுவதில் இலங்கையரசு கவனம் செலுத்தவில்லை. இந்த நிலைமைகளில் ஊடக சுதந்திரம் இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதென்பது இன்னமும் கடுமையானவொன்றாகவே காணப்படுகின்றது.

வடக்கில் நடைபெற்ற எந்தவொரு ஊடகத் தாக்குதல்களுக்கு எதிராகவும் விசாரணைகள் கடந்த காலங்களிலும் தற்போதய நல்லாட்சி அரசினாலும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது ஊடக சுதந்திரத்தின் மீதான தொடர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல்களுக்கான கொலையாளிகளை தேடிக்கண்டு கொள்வது என்பது கடினமான காரியமல்ல என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.

இந்த வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு சாதகமாக இருந்த ஒரேயொரு விடயம் ஊடகவியலாளர் ஜெயப்பரகா~; திசநாயகம் 2010 ஆண்டு ஊடக சுதந்திர தினமான மே 3 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ அவர்களால் விடிவிக்கப்பட்டதாகும். துpசநாயகம் 2008 ஆம் ஆண்டு மாரச் மாதம் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 20 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தார். இதற்கு அமெரிக் அதிபர் இலங்கையில் ஊடக ஒடுக்கு மறைதொடர்பாக குறிப்பிடுகின்ற போது திசநாயகத்தை அதற்கான உதாரணமாகக் குறிப்பிட்டதாகும். இருந்தாலும் இலங்கையின் கறைபடிந்த ஊடக அடக்கு முறை வரலாற்றில் ஊடகவியலாளருக்கு சாதகமாக இருந்த சம்பவமாக இதனைக் குறிப்பிடலாம்
இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளானதன் பயனாக
1. நாடுகடந்த ஊடகச் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. நாட்டின் கடந்த காலநிலைமைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் தாம் தஞ்சமடைந்த நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லது சொந்தமாக இணையத்தளங்களை நடத்துகின்றார்கள். இதனால் இலங்கை பற்றி பல தகவல்கள் அச்சமின்றி வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த ஊடகவியலாளர்களும்இலங்கையில் வாழ்கின்ற தங்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

2. புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படுகின்ற புலம்பெயர் ஊடகம். இது ஒரு வகையில்; நன்மையானதாகப்பார்க்கப்படுகின்ற அதே நேரம் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் காணப்படுகின்றன. சரியான நேர்த்தியான தகவல்கள் வழங்கப்படாமை காரணமாக தனிநபர்களை, சமூகத்தைப் பாதிப்பதாகவுள்ளன. யுத்தகாலத்தில் ஊடகங்கள் செயற்பட்டது போன்று தற்போது யத்தம் முடிவற்ற காலத்திலும் பணியாற்றுகின்றன.

இலங்கையின் ஊடகப்புலம் யுத்த நிலைமைகளிலிருந்து விடுபட்டு குறிப்பாக யுத்த இதழியல் எனபதிலிருந்து மிள்நல்லிணக்கத்துக்கான இதழியலை நோக்கி செல்லுதல் வேண்டும். யுத்த இதழியலில் வெற்றியும் வெற்றிக்களிப்பு மற்றும் நாயகர்களை புகழ்தல் என்பனவே முக்கியம் பெற்றிருக்கும்.
இது எதிரியை உளவியல் போரில் தோற்கடிப்பதற்கான உத்தியாகும். இதனையே தற்போதும் பயன்படுத்திவருவது வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான ஒன்றாகும். நாயகர்களை புகழ்தல் என்ற யுத்த இதழியலின் பண்பை அடியொற்றி பிரமுகர்களை அறிக்கையிடுகின்ற வி.ஐ.பி; இதழியல் தற்போது மேலெழுகின்றது. இதுவும் கூட வெளிப்பாட்டு சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு தடையான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரமுகர்களில் அவர்களின் உலாக்களிலும் உரைகளிலும் அதிக கவனம் செலுத்தாது குரலற்றவர்களின் குரலான ஊடகங்கள் ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கதைகளும் தரவுகளும் விருப்பங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்;. முக்களின் குரல்கள் ஒலிப்பதற்கு ஏற்றதாக மக்கள் இதழியல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச ஊடகங்களின் ஊடாட்டம் மற்றும் மக்கள் இதழியலை வளர்த்தெடுத்தல் என்பன ஊடக சுதந்திரத்தை நிலை நாட்ட உதவியாக அமையும்.

வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் புரிற்து கொள்ளுதல், அதற்காகக் குரல் கொடுத்தல், உரிமைகளைப் போராடிப் பெற்றுக் கொள்ளுதல், அந்த சுதந்திரத்தை உணர்தல் அதன்படி நடத்தல் மற்றும் அதனைப் பேணுதல் என்பன கடினமான பணிகள் அதற்காக ஊடகவியலாளர்களும் சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் தம்மை அர்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இறுதியாக, 08.01.2009 அன்று இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா அவர்கள் தான் கொலைசெய்யப்டலாம் என்பதை எதிர்வு கூறி எழுதிய குறிப்புடன் நிறைவு செய்யலாமென்று நினைக்கிறேன்.
 “When finally I am killed, it will be the government that kills me.” - Lasantha Wickrematunge, Editor of the Sunday Leader.
ஆகவே, எது எவ்வாறாயினும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதில் அரசாங்கமே அதிகளவு கவனத்துடனும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை சிவில் சமூக அமைப்பினரும் ஊடகங்களும் தொடர்ச்சியாகக் கொடுத்தல் வேண்டும்.

தே.தேவானந்த்
இயக்குனர்
ஊடக வளங்கள் பயிற்சி மையம்
யாழ் பல்கலைக்கழம்

No comments:

Post a Comment