-ஈழத்து இசை நாடக வரலாற்றில் புதியதொரு முயற்சி-
தே.தேவானந்த்
நீண்ட இடைவேளைக்குப்பின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு நாடகத்துக்காக நிறைந்திருந்தது.உதயன் பத்திரிகை அனுசரணை வழங்கியிருந்தாலும் கூட ஆடம்பரமான விளம்பரங்கள் ஏதுமின்றி நாடகமொன்றை ரிக்கெற் வாங்கி பாரப்பதற்கு மக்கள்கூடினார்கள் என்பது வியப்பான இன்ப அதிர்ச்சியை நாடகக் காரர்களுக்கும் நாடக ஆர்வலர்களுக்கும வழங்கியிருந்தது.மேலிடத்து உத்தரவு என்று பாடசாலை மாணவர்களை ஏற்றி நிகழ்வுகளை நிறைக்கின்ற இன்றைய சூழலில் ஆர்வமிகுதியால் மண்டபம் நிறைந்திருந்ததென்பது உண்மையில் வியப்பான ஒன்று தானே!அதனை பாராட்டி ஊக்கப்படுத்துதல் மிக்க மகிழ்ச்சியன்றோ!
இன்று நாடகத்துறை ஒரு வகையான ‘தறுக்கணிப்பு’ நிலையை அடைந்திருப்பது யாபேரும் அறிந்த ஒன்று.நாடகப்புலமையாளர்களென்று இனங்காண எவரும் இல்லாத சூழ்நிலையில் மெல்ல அதிகரிதத நாடக் கல்வி வழி வந்த ஆசிரியர்களின்’ படைப்பாற்றல் வினைத்திறன’; குறைந்து விட, ‘நாடகம் மெல்லச் சாகுமோ’ என்று எண்ணி ஏங்கிதவிப்போருக்கு நாடக அரங்கக் கல்லூரி தனது முப்பத்திமூன்றாவது ஆண்டு நிறைவில் ஒரு புது விருந்து தந்திருக்கிறது.
ராம நாடகப்பாடல்களைத் தொகுத்து இசை நாடகமொன்றைத்தந்திருக்கிறார்கள்.இந்த புது முயற்சிக்கு மூல கர்த்தர்கள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இசை துறை விரிவுரையாளர் த.றொபேட் மற்றும் ஈழத்தின் நவீன நாடக உலகில் தாய் எனப்போற்றப்படும் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுமாகும்.
'Surpanakai ' photo by Thevananth' |
நாடக அரங்கக் கல்லூரி தனது வரலாற்றில் புத்தாக்கப்படைப்புக்களை ஈழத்து நாடக உலகிற்கு தந்நதிருக்கிறது. மரபு சார்ந்த அல்லது பண்பாட்டு அடியாக புது முற்றிசிகளைமேற்கொண்டு வருகின்றது.ஒருநாடக வடிவம் சார்ந்து மட்டுமல்லாது பல்வேறு வடிவங்கள் சார்ந்து நாடகங்களை படைக்கின்ற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.இதில் ஒரு முயற்சியே ‘கண்டனன் சீதையை’ இசை நாடகம் ‘ஆர்கொலோ சதுரர்’ என்ற நாட்டிய நாடகத்தை 2003ம் ஆண்டு நடன விரிவுரையாளர் சாந்தினி சிவனேசன் அவர்களுடன் சேர்ந்து தயாரித்த முயற்சிக்கு பின்னர் தற்போது இந்த நாடக முயற்சி நடைபெற்றிருக்கிறது.பல்வேறு துறைசார்ந்நதவர்களுடன் இணைந்து தற்புகழச்சியின்றி செய்கின்ற பணிக்கு இந்த கலைமுயற்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்த இசை நாடகத்தை விமர்சித்தல் என்பதற்கு மாறாக இதை புரிந்து கொள்ளல் என்ற தளத்திலேயே பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
பல்வேறு நாடக வகைகள்; சார்ந்த பின்புலத்தையும் ஆர்வத்தையும் கொண்ட பலர் ஒன்றிணைந்து ,இவர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோருக்கு இசைநாடக அனுபவம் இல்லை, வரண்முறையாக இசைபயின்ர அனுபவமும் இல்லை இந்த நிலையில்.வரண்முறையான கர்நாடக சங்கீத அடிபடையில் அமைந்த பயிற்சியைப்பெற்று இந்த கலைஞர்கள் சுருதி பிசகின்றி தாளசுத்தியுடன் பாடி நடித்திருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாக கவனத்pல் கொள்ளப்படவேணடிய வஜடயமாகிறது.
கடந்த ஒரு வருடகாலமாக றொபேட் மிகப்பொறுமையுடன் இசைப்பயிற்சியை வழங்கி நாடகத்தை மேடையேற்றியிருப்பது, இன்றும் அர்பணிப்புடன் கலை படைப்போர் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகக் அமைகிறது எனலாம்.நீண்ட பயிற்சிகளினூடாக பாடல்களையும் மெட்டுக்களையும் தம்முள் ஏற்றி ஊறித்திளைத்து மேடையேற்றுவது தான் ஒரு கலை காலத்துள் நீண்டு நிலைப்பதற்கான வாய்ப்பை கொடுக்கும்.உண்மையான கலைக்கையளிப்பு நடைபெறும்.
பரீட்சைகளுக்கும,; பட்டங்களுக்கும், திட்டங்களுக்கும், புகழுக்கும் செய்கின்ற கலைப்படைப்புக்களில் நிலைத்த தன்மையையோ கலைக்ககையளிப்பையோ எதிர்பார்க்க முடியாது.
இந்த படைப்பு ஏன் முக்கியம் பெறுகின்றது என்பதை பார்க்கலாம்.
இராமாயணம் இசைநாடக வடிவில் ஈழத்தில் இதுவரை ஆடப்படவில்லை.இப்போ புராணகதைகளை பேசி வந்த இசைநாடக மரபில் இதிகாச கதை உள்வாங்கப்பட்டிருக்கிறது.இசைநாடக மரபை அடியொற்றி அதே வேளை நாடகத்தன்மையையும் உள்வாங்கி ‘கண்டனன் சீதையை’ நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது.வழமையில் இசை நாடகம் என்று அறியப்பட்டாலும் இந்த மரபில் நாடகம் மிகக்குறைவாகவும் இசை மேலோங்கியுமே காணப்படுவது வழமை.இங்கு நாடகமென்று குறிப்பிடுவது நடிப்பு ,மேடை அசைவுகள,; மேடைப்பயன்பாடு பாத்திர உருவாகக்கம், காடசிப்புனைவு போன்றவற்றை குறிப்பிடலாம்.வி.வி.வைரமுத்து தன் இயலாற்றலுக்கு ஏற்ப்ப இசைநாடகங்களுக்குள் நாடகப்பாங்கை சேர்த்தார் என்றாலும் குறிப்பாக நடிப்பை சேர்த்தார் என்றாலும் அது பின்னாலில் தேய்வடைந்து வெறும் பாடல்களாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.இதிலும் ‘சாஸ்திரிய சங்கீதம் தொலைந்து போய் மேடையில் சுருதியும்தாளமும் இல்லாமல் பாடுகின்ற நிலை வந்து விட்டது’ என்ற றொபேட்டின் குற்றச்சாட்டு இங்கு நீண்டு நோக்கத்தக்கது.
தான்வைத்த குற்றச்சாட்டை றொபேட் தானே நிவர்த்தி செய்ய முற்பட்டிருப்பதன் விளைவே இந்த இசை நாடகம்.வெறும் விமர்சகர்களாக தாம் விழுக்கிய கோட்பாடுகளின் வில்லங்கங்களுடன் விக்கி தவிக்காது.தான் ஏனையோரின் மீது வைத்த விமர்சனத்தை தீர்க்க முயற்சித்த செயற்பாட்டாளராக றnhபேட் திகழ்ந்நதிருப்பது சிறப்பான விடயம் பராட்டுதலுக்குரியதும் கூட.
ஆண்டாண்டு காலம் நாம் அறிந்த இராமர் கதை மேடையில போடப்பட்ட போது புரிந்து கொள்வதற்கு எந்த சிக்கலும் பார்வையாளருக்கு இருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.பாத்திரங்கள் ஏலவே அறியப்பட்டதன் காரணமாக அவை மேடையில் தாமாகவே வாழ்ந்தன.தசரதன் இறந்த செய்தியறிந்து மேடையில் நின்ற இராமன் அழுவதற்கு முன்பாக மண்டபத்தில் கூடியிருந்த பார்வையாளர் கண்ணீரவிடத்தொடங்கிவிட்டனர்.
பின் நடுமேடையும் முன் இடது மேடையும் பிரதான களங்களாகின அங்கு போடப்பட்டிருந்த இருக்கை பலரது சிம்மாசனமாகவும் காணப்பட்டது சிறப்பானது.ராமன் வில்லை சூர்பனகை தொட்டு தடவி இராமனாக உருவகித்த பாங்கு நன்றாக இருந்தது.ஒரு தளம் பல்வேறு களங்களாக மாறிய விந்தை பார்போரின் இயல்பான புரிதலுக்கு உதவியது என்பது நாடகத்தின் வெற்றியே .ஆடைகளில் காணப்பட்ட எளிமை நாடகத்துக்கு செறிவைக்கொடுத்தது.
'Anuman' Photo by Thevannth |
சில பாத்திரங்கள் மனககண்முன் இன்றும் தோன்றுகின்றன.குறிப்பாக ஆனுமன் பாத்திரத்தின் அசைவுகளும் நடிப்பும் அற்புதமானவை ஒவ்வொரு தசையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து நின்று கதைபேசின உணர்வெளிச்சிகள் ஒத்திசைந்து பாடின எனலாம்.
இத்தனை நல்லவற்றையும் ஒருமுகமாக சுவைப்பதற்கு தடையாக இருந்தவை ஒளியமைப்பும் ஒலியமைப்பும் என்பதையும் சொல்லியாக வேண்டும்.ஒலியமைப்பின் கோளாறுகளால் பாடல்களை அனேக இடத்தில் சீராக கேட்க முடியவில்லை இது எரிச்சலையூட்டியது.அதே போன்று பல நேரங்களில் நடிகர்களில் அற்புமான முகவெளிப்பாடுகளை ஒளியமைப்பின் கோளாறுகளால் சீராகப்பார்க்க முடியவில்லை மேலும் மெருகு பெற வேண்டும்.
இந்த புதிய முயற்சி சிறப்பானது நன்றாக இருந்தது என்பதற்கு மேலாக எமது பாரம்பரிய இசை நாடகங்களில் காணப்படுவதான மனதைத்தொடும் பாடல்களை இந்த நாடகத்தில் காணவில்லையென்பது ஒரு நெருடலாக இருந்தது.சில வேளைகளில் அதற்கு இதில் பரிட்சயப்படவேண்டுமோ தெரியவில்லை.மேலும் காட்சிப்படிமங்களாகப்பார்க்கும் போது மேலும் செழுமைபெற வேண்டுமென்றே தோன்றுகிறது.இன்னும் நாடகமாக வேண்டும்.பாடல்களின் உச்சரிப்பு தெளிவு மேலும் செழுமை பெந வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும்.ஒரு இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களை எந்த சலசலப்புமின்றி பற்றி வைத்திருந்தளவில் இது பெரு வெற்றியான புது முயற்சியென்றே சொல்லலாம்.நீண்ட உழைப்பின் பயனாக வந்த அந்த அறுவடையை ஒரு இரு மேடைகளோடு மட்டும் நிறுத்தி குலைந்து போக விடாமல் பல நூறு இடங்களில் மேடையேற்றி இதன் உச்ச வடிவத்தை அடையவேண்டியது படைப்பாளிகளின் பணியாக நீண்டு கிடக்கிறது.
எங்கள் பார்வைக்கும் நாடகத்தை அரங்கேற்றுவீர்களா?
ReplyDeleteபல நூறு இடங்களில் மேடையேற்றி இதன் உச்ச வடிவத்தை அடையவேண்டியது படைப்பாளிகளின் பணி
ReplyDeletevaazhthukkal
ReplyDeletemullaiamuthan