Sunday, 1 April 2012

நந்தி என்றொரு மானிடன்

Prof  Nanthi
நந்தி என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
நாம் அவருடன்கூடி மகிழ்ந்ததும்

சிந்தனைத் தெளிவோடு சிறுகதை
சிறந்த நாவல் எனப்பல செய்ததும்

முந்தி வந்தவர் போற்றிப் புகழவும்
பிந்தி வந்தவர் வாழ்த்தி வணங்கவும்

எந்தநாளுமே புன்னைகையோடு அவர்
இன்முகத்துடன் வாழ்ந்து மறைந்ததும்

கலாநிதி எஸ். சிவலிங்கராஐர(பேராசிரியர் நந்தி 2005 யூன் மறைந்தபோது எழுதியது)

(மார்ச் 30,2012 பேராசிரியர் நந்தியின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.)

No comments:

Post a Comment