Monday, 16 September 2013

இளையோர் நாடக விழா -2013


ஈழத்து நாடக வரலாறு புதிய பண்டநுகர்வுக் பண்பாட்டுக்குள் தன்னை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறது போலும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான ஏது நிலை மேலும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் நாடகம் என்ற பலர் இணைந்து பணிசெய்கின்ற கலையைப் பொறுத்தமட்டில் படைப்பு கருக்கொண்டு பிரசவித்தல் வரையில் தடைகள் ஏராளம். இதனால் படைப்பு தறுக்கணித்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இலக்கியப்படைப்பாளி தன் கதையையோ, கட்டுரையையோ, கவிதையையோ தான்விரும்பிய படி எல்லை கடந்து பயணித்து படைக்க முடியும் அவற்றை இன்றைய தகவல் தொழிலநுட்பப் உலகில் பிரசுரிக்கவும் வாய்ப்புக்கள் ஏராளம்.



இன்று நாடகங்களை படைப்பதற்கு ஆளணியைத் திரட்டிக்கொள்வது முதல் நிதிதேடுவது ஈறாக பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் தாண்டி நாடகத்தைத் தயாரித்து விட்டால் அதனை மேடையேற்றுவற்கான இடம்தேடி அலைவதும். நாடக மேடையேற்றத்துக்கு அனுமதிபெறுவதும் முயல்கொம்பாகவே இருக்கிறன.

2013 ஏப்ரல் மாதம் பத்து நாடகங்களைத் தயாரித்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் திறந்த வெளி நாடகத்திருவிழாவை நடத்தினோம்;. அதில் நூறு இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். அந்த நாடகங்கள் இன்று பேசத்தயங்குகின்ற யதார்த்தமான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப்பிரச்சனைகளைப் பேசின. ஆவற்றை பலரது வேண்டுகோளுக்கு அமைவாக மீண்டும் பலவேறு இடங்களிலும் மேடையேற்ற திட்டமிட்டோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம், மற்றும் மட்க்களப்பு என்று திட்டம் நீண்டது. இதற்கு யு.எஸ்.எயிட் நிறுவனம் உதவிவழங்க முன் வந்தது.
முதலில் கிளிநொச்சியில் நாடக மேடையேற்றத்துக்கு முயற்சிகளை மேற்கொண்டோம். அரச அதிபருக்கு கடிதம் மூலம் அனுமதி கேட்டோம். பதிலேதும் இல்லை.

உள்ளுர் அரசியல்வாதியிடம் விண்ணபித்தோம் பதிலில்லை, பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அனைவரையும் அணுகி அனுமதி கேட்டோம். பதில்கள் சாதகமாக இல்லை. உள்ளுர் அரசியல்வாதியின் வலது கரம் போன்ற ஆரியர் தொழில்புரிகின்றவர் மற்றும் மக்கள் கூட்டுறவு அமைப்புப்பில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கின்ற நாடக ஆர்வலர் ஒருவரை  அணுகி நாடகம் போடுவதற்கு இடம்வேண்டும் அனுமதிமதியும் பெற வேண்டும்  என்ன செய்யலாம் என்று கேட்டோம் .இதற்கு அந்த கல்வித்துறை சார்ந்தவர் சொன்னார் ‘ நீங்கள் பொதுவாக நிகழ்ச்சி செய்யிறதென்றால் அதற்கு அனுமதி பெறுவது கடினம். அதையும் மீறி செய்ய வேண்டுமென்றால் உள்ளுர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரை விளக்கேற்ற கூப்பிடவேண்டும். அவர்  உரையாற்ற விடவும் வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் நாடகத்தை மேடையேற்றலாம். இல்லையேல்; நிகழ்ச்சியை ஏதோவொரு காரணம் சொல்லி பொலிஸ் நிறுத்திவிடும்;’ என்று நாச+க்காக மிரட்டினார். இதுவே இன்றுள்ள நிலைமை. நூன் இருபது வருடங்களுக்;கு மோலாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன். புத்து வருடங்களாக நாடக நிறுவனத்தை நடத்திவருகின்றேன். நூடகத்துறை இன்று உள்ளது போல் கடந்த காலங்களில் நெருக்கடிகளைச் சந்தித்ததில்லையென்றே சொல்வேன். இந்த சூழலில் எப்படி நாடகம் படைக்க முடியும் ?
அதிகாரமுள்ளவர்களுக்கு சார்பாக இல்லாத கலைப்படைப்புக்கள் ஏதோவொரு வகையில் தறுக்கணிக்கச் செய்யப்படுவதால் அதிகளவு பாதிக்கப்படுவது நாடகக் கலையே என்பேன். இவையெல்லாம் மீறி கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பேணப்பட வேண்டும்.  நிறைய கலைப்படைப்புக்கள் வெளிவரவேண்டும்.இந்தவகையான தறுக்கணித்த நிலைமைகள் வெல்லப் படவேண்டும். இந்த பெரு முயற்சயில் சிறு பணியை செயல் திறன் அரங்க இயக்கம் செய்கிறது.

அதுவே இந்த இளையோர் நாடக விழா -2013 யாழ்ப்பாணம், சங்கானை, வாழைச்சேனை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இவை ஒழுங்கு செய்து நடத்தப்படுகின்றன.

ஈழத் தமிழ் அரங்க வரலாற்றில் செயல் திறன் அரங்க இயக்கம் தனித்துவமான அரங்கப்பணிகளை கடந்த பத்தாண்டுகளாக ஆற்றிவருகின்றது.
2003ம் ஆண்டு அரம்பிக்கப்பட்டதிலிருந்து  50 மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து, நடமாடும் நாடக்குழுவாக பல்வேறு இடங்களிலும் பல ஆயிரக்கணக்கானோருக்கு நாடகங்களை காண்ப்பித்து தடம் பதித்திருக்கின்றது. தனது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.






இந்த நாடக விழாவில் மூன்று நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. அத்தோடு ஓராள் அரங்காற்றுகைகள் இரண்டும் வேடம் கட்டும் பட்தாரிகள் என்ற குறு நாடகமும் மேடையேற்றப்படுகின்றன.
இளையோருடன் நடத்தப்பட்ட நாடகக் களப்பயிற்சிகள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற கதைகளின் தொகுப்பாக இந்த நாடகங்கள் காணப்படுகின்றன.
வார்த்தைகளை நறுக்காக பேசி பிரமாண்டமான படிமங்களை ஒலி, ஒளி மற்றும் இசைவுளைவுகளுடன் மேடைவெளியை இந்த நாடகங்கள் நிரப்புகின்றன. நாடக மாணவர்களுக்கு இந்த விழா பெருவிருந்தாக அமையும்.
இதில் மேடையேற்றப்படுகின்ற ‘கருப்பைத் தறுக்கணிப்பு’ என்ற நாடகம் தாய் நிலம் மலடாகுதல் பற்றி பேசுகிறது. ‘வெப்பக் குடவை’ தாயைத் தொலைத்து தாயைத் தேடும் பிள்ளைகள் பற்றியும் அவர்களின் துயரம் பற்றியும் பேசுகிறது. இதனை 2000ம் ஆண்டு தயாரித்த ‘அக்கினிப்பெருமூச்சு’ நாடகத்தின் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும். ‘வீடு பேறு’ என்ற நாடகம் வீடுகளைத் தொலைத்து அலையும் மக்கள் தமது நினைவுகளில் சுமக்கின்ற வீடுகள் பற்றிப் பேசுகிறது.
‘நல்லதங்காள’; என்ற ஓராள் அரங்காற்றுகை தனித்திருக்கும் பெண்களின் பஞ்சம் பற்றியும் பட்டினி பற்றியும் பேசுவதோடு பட்டினி போக்க தம்மைத்தொலைப்பது பற்றியும் பேசுகிறது. அதே போன்று ‘கடலில் கிடந்த பெருமூச்சு’ என்ற  ஓராள் அரங்காற்றுகை கடலை நம்பிவாழ்பவர்களின் துயரம் பற்றிப் பேசுகிறது.
‘வேடங்கட்டும் பட்டதாரி’ என்ற குறு நாடகம் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் தமது வேலைவாய்ப்புக்களுக்காக போடுகின்ற வேஷங்கள் பற்றி பேசுகிறது. வேலையற்ற பட்டதாரிகளின் அவலம் இந்த நாடகத்தில் முரண்நகையாக வெளிப்படுகிறது.
செயல் திறன் அரங்க இயக்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திறந்த வெளி வீ வடிவத்தில் அமைந்த மூன்று வட்ட அரங்குகளில் மேடையேற்றப்படுவதற்காகவே இந்த நாடகங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
நலிடைந்திருக்கும் நாடகக் கலையினை உயிர்ப்பிக்க புதிய இரத்தம் பாச்சுவதற்கு ஆட்களோ நிறுவனங்களோ இல்லையென்று வருந்துகின்ற இன்றைய நிலையில் யு.எஸ்.எயிட் நிறுவனம் மனமுவந்து உதவிட முன்வந்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுதலுக்குரியது. அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைப் பதிவாக்க விரும்புகின்றோம். ஒன்று கூடி காரியமாற்றமுடியாததானதொரு இன்றைய சூழலில் செயல் திறன் அரங்க இயக்கத்துடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் அமது நன்றிகள் உரித்தாகும்.

தே.தேவானந்த்,
இயக்குனர்
செயல் திறன் அரங்க இயக்கம்

No comments:

Post a Comment