Sunday 6 November 2016

காலைக்கதிர் பத்திரிகை இதழியல் பரப்பிற்கு புதிய வீச்சைக் கொடுக்கட்டும்.


இலங்கைத் தமிழ் இதழியல் வரலாறு தேசியப்பத்திரிகைகளில் மையம் கொண்டிருந்த காலம் மாற்றமடைந்து பிராந்தியப்பத்திரிகைகளில் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அதில் யாழ்ப்பாணம்  மையப்புள்ளி எனலாம். இந்த மைய நீரோட்டத்தில் ‘காலைக்கதிர்’ என்ற புதிய தினப்பத்திரிகையும் வந்து கலப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். 




யுhழ்ப்பாணப்பல்கலைக்ககழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இதழியல் துறையில் பயிற்சியளிக்கின்ற நிறுவனம் என்ற வகையில் புதிய பத்திரிகைகளின் வரவை எப்போதும் வரவேற்றிருக்கின்றோம். அதனடிப்படையில்; தினக்கதிரின் வரவையும் வரவேற்கின்றோம். இது இளம் ஊடகவியலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று நம்பலாம். 

ஊடகங்களின் மலர்ச்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அதன் வழி  வெளிப்பாட்டுச சுதந்திரம்  நிலைநிறுத்தப்படும், சிவில் சமூக அமைப்புக்கள் பாதுகாக்கப்படும். தமிழ் ஊடகப்பரப்பில் இன்று விவாத பொருளாக உள்ள ‘நடுநிலைமை’   என்ற எண்ணக்கரு புதிய பத்திரிகையின் வரவால் மேலும் ஆழமும் அகலும் பெறும்.

இலங்கைத் தமிழ் ஊடகப்பரப்பில்  புதிய போக்குகளுக்கு  வித்திட்ட மூத்த ஊடகவியலாளர்களால் ஆரம்பி;க்கப்படுகின்ற  ‘காலைக்கதிர்’ பத்திரிகை தமிழ் இதழியல் பரப்பிற்கு  புதிய வீச்சை கொடுக்குமென்று நம்பலாம். ஊடகத்துறை தொழில்வான்மையுடன்; மேலும் வலுப்பெறவும் செழிமைபெறவும்  வாய்ப்பு ஏற்படட்டும்.

தேவாநாயகம் தேவானந்த்
இயக்குனர்
ஊடக வளங்கள் பயிற்சி மையம்
யாழ்ப்பாணப் புல்கலைக்கழகம்

 (காலைக்கதிர் பத்திரிகையின் முதலாவது இதழுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி)

No comments:

Post a Comment