Dr.தேவநாயகம் தேவானந்த்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.