தமிழ் தலைவன் மு.கருணாநிதி -04
கருணாநிதியின் அரியல் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியதில் சிவாஜி கணேசன் முதல் முதல் நடித்;து வெளிவந்த பராசக்திப் படம் முக்கியமானது. ஆதற்கு கருணாநிதியே வசனம் எழுதியிருந்தார். ஆதில் வரும் நீதிமன்றக்காட்சியினல் சிவாஜி கணேசன் மிக அற்புதமாக சமூகநீதிக்கருத்துக்களை கருணாநிதியின் வசனத்தில் அசத்துவார். அதில் ஒரு வசனம் தான் ‘தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.’ என்பது.
கருணாநிதியின் வாழ்வில் தென்றல் வீசுகிறது. அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று அவரது தோழனும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அப்போதைய பொருளாளருமான எம்.ஜி.ஆர் போர்கொடி தூக்கினார். ஏம்.ஜி.ஆர் என்ற அந்த நெருப்பைத் தாண்டுவதற்கு கருணாநிதி படாதபாடுபட்டார். இருந்தாலும் கட்சியைக் காத்து தீயைத் தாண்டி வந்திருக்கிறார்.
1962 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தஞ்சை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வென்றார். தேர்தலில் திமுக 50 இடங்களில் வென்றது. துp.மு.க கொறடாவாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் களமிறங்கியது. கருணாநிதி அதில் தீவிரமாக ஈடுபட்டார். மீண்டும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை தனிமை சிறையில் தள்ளப்பட்டார்.
1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்று திமுக ஆட்சியில் ஏறியது. அண்ணா முதலமைச்சராக, கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். புpன்னர் அண்ணா திடீரென சுகவீனமுற்று இறந்து போனார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆர் போன்றோரின் துணையோடு கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக 1969 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதே ஆண்டில் ஜூலை 27-ஆம் தேதி தி.மு.க தலைவரானார் கருணாநிதி. ஏம்.ஜி.ஆர் பொருளாளரானார். அடுத்து வந்த 1971-ஆம் ஆண்டில் தேர்தலில் கருணாநிதியின் தலைமையில் தி.மு.க மகத்தான வெற்றியை கண்டது. 203 இடங்களில் போட்டி இட்டு 184 இடங்களை கைப்பற்றியது. இரண்டாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார் கருணாநிதி.
1972-ல் திமுகவில் பிரிவு ஏற்பட்டது. ஏம்.ஜி.ஆர் கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டார். இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
“அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறிஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைமாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும். கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப்பணியாய் இருக்கும். அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கருணாநிதியை அதிர்ச்சியடையச் செய்தது
உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கருணாநிதிக்குக் கட்டுபட்டவர்கள். இலட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரனைப் போன்றவர்கள் எம்.ஜி.ஆரை விலக்குவதை எதிர்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலானவர்கள்; ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி.ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.
தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார்.
”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.
”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.
கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் தீயைத் தொட்டு சுடுவாங்கிக் கொண்டார். தன்னையுறியாமல் ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்தார். அதனால் ஆட்சியைப் பிடிக்க தவித்தார்.
புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.
அடுத்த நாள் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அப்போது தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.அதே நேரம்தோழர்கள் வாகனங்களில் சென்னையை நோக்கிப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.
ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டனர். எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். சென்னை அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது.
‘மக்கள் யார் பக்கம்’ என்பதை அந்தச் சம்பவம் சுட்டிக் காட்டியது. தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து எம்.ஜி.ஆர். ஆனந்தக் கண்ணீர் உகுந்தார். அப்போது அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.
தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி தான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக விலக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் தி.மு.க செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து தி.மு.க பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த தி.மு.கவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது. ஆண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது.
கருணாநிதி போட்ட கணக்கு தவறியது. தீயை மிதித்தது போலானது.
ஏம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட போது எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே தி.மு.க சோர்ந்த அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் . முன்னர் இந்திராகாந்தி காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டது, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலித்தது. கிளர்ச்சி ஏற்பட்டது.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தத்தை கருணாநிதியே உருவாக்கினார் எனலாம். அது துவங்கியவுடனேயே தமிழக அளவில் பெரிதாக வளர்ந்தது, மிகச் சுலபமாக நடந்தது. இங்கு, வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது தான் பொருந்தும். அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் கலைஞர்; கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. அந்தத் தருணம், கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை தொலைத்தார்.
இவ்வாறான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி திராவிட முன்னேற்றக்கழத்தை கருணாநிதி என்ற ஆளுமை கட்டிக்காத்து அறுபது ஆண்டுகளாக வளர்த்தெடுத்திருக்கிறது. ஆட்சியின் நீட்சியில் அண்ணாவை கடந்தும், ஆயுள் நீட்சியில் பெரியாரை தாண்டி 94 வயது வரை வாழ்ந்து தமிழகத்தின் சரித்திரத்தில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்த கருணாநிதி இப்போது சரித்திரமாகியிருக்கிறார்.
(தொடரும்)
No comments:
Post a Comment