Friday 14 September 2018

தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01

கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர்.  அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.



நவீன தமிழ் வரலாறு கருணாநிதி இன்றி எழுதப்பட முடியாது. அதே போல் நவீன இந்திய வரலாற்றையும் கரணாநிதியை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது. இந்தியாவின் நடுவன் அரசியலைத் தீர்மானிப்பதில்; கடந்த ஐந்து தசாப்தங்களாக கருணாநிதியின் பங்கு முக்கியமானது. இந்திராகாந்தி, வி.பி.சிங், தேவகொளடா, வாய்பாஜ், பன்மோகன்சிங் என்று இந்தியப் பிரதமர்களாக இருந்தவர்கள் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தைக் கண்டு வியந்திருக்கிறார்கள், மதிப்பளித்திருக்கிறார்கள்.
‘வுரலாற்று நாயகன்’ என்பது  உண்மையில் எல்லோருக்கும் பொருந்துவதில்லை கருணாநிதிக்கு அது அச்சொட்டாகப் பொருந்துகிறது.
அண்மைய உலகத் தமிழர் வரலாறு தமிழ்த் தலைவர்களை இழந்த வரலாறாகப் பதிவாகிறது. தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் பற்றுக் கொண்டு தமிழர் விடுதலைக்காக குரல்கொடுத்த தலைவர்கள் தமது வாழ்நாளை குறைந்த காலத்தோடு முடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரை சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இவர் திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்து அதுவரை தமிழ்நாட்டில் ஆட்சிசெய்து வந்த தேசியக்கட்சியான காங்கிரஸ்கட்சிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சியை விரட்டினார். ஆதன் பின்னர் காங்கிரஜ் கட்சியால் தமிழ்நாட்டின் ஆட்சியைப்பிடிக்க முடியவில்லை. இந்தியளவில் திராவிட சிந்தாந்தம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அண்ணா  உருவாக்கிய தமிழ்நாடு அரசு ஏனைய மாநிலங்களுக்கு மன்மாதிரியாகத் திகழந்தது. ஆவர் ஆட்சியைப்பிடித்து இரண்டாண்டுகளில் இறந்து போனார். 1969 இல் முகத்தன தலைவனை தமிழ்உலக குறைந்த வயதிலேயேஇழந்தது.
ஈழப்போராட்டம் 2009இல் முடிவுக்கு வந்நத போது உலகத் தமிழ் இனம் தானைத்தலைவனாகப் போற்றிய தேசியத்தலைவரை இழந்து தவித்தது. அதன் பின்னர் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத்தருவேன் என்று முழங்கிய ஜெயலலிதாவின் இறப்பு கோடான கோடி தமிழர்களு பேரதிர்ச்சியாக விழுந்தது. இன்று தமிழர்களின் போர்வாள் என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதியவர்களின் சாவு பேராதிர்ச்சியாக கிடைத்திருக்கிறது.
ஆண்ணாவின் இறப்பின் பின்னர் மூன்றாவது நிலைத் தலைவராக இருந்த கருணாநிதி கட்சிக்குள் தன்கிருந்த செல்வாக்குக் காரணமாக இரண்டாம் நிலைத்தலைவர்களைப் புறந்தள்ளி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரே திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதலாவது தலைவருமாவார். ஆண்ணா திராவிட மன்னேற்றக்கழகத்தின் தலைமைப்பதவியை வெற்றிடமாகவே வைத்திருந்தார். ஆந்தப்பதவி பெரியாருக்குரியதென்றார்.
கருணாநிதி 94 வயது வரை வாழ்ந்து நீண்டவரலாற்றைப்பதிவு செய்த செனறிருக்கிறார். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்தியிரக்கிறார். இந்திய யளவில் வடமாநிலங்கள் பலவற்றோடு ஒப்பிடுகின்றபோது தமிழ்நாட்டை துரித கதியில் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சொன்ற தலைவராகப் போற்றப்படுகின்றார். துமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தை ஆரம்பித்தவர் ஈ.வே.ரா.பெரியார் அவரே திராவிட சிந்தனையை விதைத்தவர். ஆவர் விதை;த விதைகளில் ஒன்று பெருவிருட்சமாகி இன்று வீழ்ந்து கிடக்கிறது.
1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் கருநாநிதி பிறந்தார்.
முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார்.;.
1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார்.
‘துமிழர்களே தமிர்களே என்னை கடலில்தூக்கிப் போட்டாலும் நான்கட்டுமரமாகத் தான் மிதப்பபேன் நீங்கள் அதில் ஏறிப்பயணிக்கலாம்” என்ற குரலை தொலைக்காட்சியில் அடிக்கடி கேட்டிருக்கிறோம். முயக்கும் சிம்மக்குரல் ஓய்ந்திருக்கிறது. துpராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மேடைப்பேச்சுக்கள் முக்கியமானவை.அடுக்கு மொழியல் எள்ளல் சுவையில் சொற்களை சுழற்றுவதில் வல்லவர்களாக திராவிடத் தலைவர்கள் காணப்பட்டார்கள். முணிக்கணக்கில் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காசு கொடுத்து பேச்சுக்களைக் கேட்ட காலமும் உண்டு. திராவிட இயக்கப் பேச்சாளர்களில் கருணாநிதியும் முக்கியமானவர். இறக்கும் வரை பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த ஒரு தலைவனின் குரல் ஓய்ந்திருக்கிறது. நீண்ட துயிலில் ஆழந்து கிடக்கிறான்.
மீளாத்துயிலில் கிடக்கின்ற அந்தத் தலைவனை நிரந்தரமாக எங்கே தூங்க வைப்பது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. புpற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்டு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த தலைவன் தூங்குவதற்கு எங்கே இடம் ஒதுக்குவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசியலுக்கு சொந்தக்காரன். திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று வர்ணிக்கப்பட்டவர். தனது பேச்சாற்றலாலும், அனல்பறக்கும் எழுத்துக்களாலும் தமிழ் உலகைக் கவர்ந்தவர். கோடான கோடித் தொண்டர்களின் இதயத்தில் வாழ்பவன். தன் ஆசான் அண்ணாவின் சமாதியருகில் உறங்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறிருக்கிறது? இதுவே இன்று பல தலைவர்களினதும் தொண்டர்களினதும்; கேள்வியாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசியலில் மருத்தவமனைகளும் ஏதோ ஒரு வகையில் வரலாற்றில் பதிவாகின்றன. ஏம்.ஜி.ஆர் மறைவின் போது அப்பலோ மருத்துவமனை பேசப்பட்டது. அவரது சிகிச்சை விபரங்களை இரகசியமாகப் பேணியது என்பது அந்த மருத்துவமனையின் சாதனையாகக் குறிப்பிடப்படுகின்றது. அதன் பின்னர் அதே மருத்துவமனை ஜெயலலிதாவின் மரணத்தின் போது மேலும் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் சந்தித்து இன்று வரை விசாரணைகளையும் எதிர்கொண்டு வருகின்றது.
இப்போது கருணாநிதி மரணம் காவேரி மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கின்றது. காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாகத் தொண்டர்கள் கூடி ‘தலைவா எழுந்து வா’ என்று கோ~மிட்டவண்ணம் மீருந்தனர். இப்போது அவர்களின் கோ~மெல்லாம். ‘வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்’ என்பதாக இருக்கிறது. கருணாநிதியை மரினாவில் புதைப்பதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இரவு 10.30 மணிக்கு நீதிமன்றம் கூடி வழக்கை விசாரிக்கிறது.
மெரீனா கடற்கரையை இடுகாடாக மாற்றக்கூடாது என்று கோரி வழங்குகள் பல நிலுவையில் உள்ளன. இத்தனையையும் தாண்டி ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். சமாதியருகில் அடக்கம் செய்ப்பட்டது யாவரும் அறிந்தது. மரீனாவின் நினைவிடங்கள் வரலாற்றிடங்ளாகப்பதிவாகி சுற்றுலாத்தளமாகவும் காணப்படுகின்றது. அண்மையில் ஜெயலலிதாவின் சமாதி அரசியலில் முக்கியமானதாக அமைந்தது. ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிமுன்பாக தியானமிருந்து சசிகலாவிற்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
உலகத் தமிழர்களை ஒன்றுபடவைத்து ஒரு தமிழ் எழுச்சிக்கான வாய்ப்பை வழங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் மாணவர்களால் இதே மெரீனா கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டு வெற்றிபெற்றதும் அண்மைய தமழர் வரலாறு. இந்த வரலாற்றில் கருணாநிதியின் உடல் அடக்கத்திற்கான போராட்டமும் பதிவாகின்றது போலும்.
திராவிட இக்கத்தின் போர்வாளளென்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதி திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்ததில் அண்ணாவோடு துணைநின்றவர். திராவிட சித்தாந்தத்தோடு உள்ளவரை அவரது சிந்தாந்தத்திற்கு எதிரான ராஜாஜீ, காமராஜர் போன்றோரை அடக்கம் செய்த பகுதயில் அடக்கம் செய்யுமாறு தற்போது தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக அரசு கூறுகின்றது. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது 21 நாட்களே முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதிக்கவில்லை என்பது அவர்கள் பக்கம் உள்ள நியாயம். துமிழ் தலைவர் பெரியார் மெரீனாவில் அடக்கம் செய்யப்படவில்லை என்பதையும் தமது வாதமாக முன்வைத்தார்கள். இதற்கிடையில் மெரீனாவில் உடல்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது என்று ஏற்கனவெ தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டு அரசு சொல்லிவந்த முக்கியமான காரணம் இல்லாது போய்விட்டது. இதனால் நீதிமன்றம் மெரீனாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
‘என்வாழ்வும் ஆன்மாவும் அண்ணாத்துரை தான்’ என்று வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்த கருணாநிதி அண்ணாவின் அருகில் நிரந்தரமாகத் தூங்குவதே பொருத்தமானது.
‘தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு’ என்று ஹிந்தி எதிர்ப்பில் முழங்கிய தலைவனின் அடக்கமே ஒரு போராட்டம்.
                                                                                               
                                                                         - தேவநாயகம் தேவானந்த் -
                                                                                                                                                                                                                                  (உதயன் பத்திரிகையில் பிரசுரமாகும் தொடர்)

(தொடரும்.)

No comments:

Post a Comment