Showing posts with label Political & Social Articles. Show all posts
Showing posts with label Political & Social Articles. Show all posts

Friday, 23 May 2025

இலங்கையின் பழைய காவலர் கறைபடிந்த மரபுக்குச் சொந்தக்காரன்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் தொகுத்து வழங்கிய அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" நிகழ்ச்சியில் ஒரு உயர்மட்ட நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி யூடியூப்பில் மார்ச் 6 அன்று முதன்முதலில் ஒளிபரப்பரப்பப்பட்டது. இது ரணிலின் அரசியல் வாழ்வை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அவரது முரண்பட்ட அரசியல் சிந்தாந்த்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 

Saturday, 14 September 2024

தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01

கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர்.  அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.