தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர். அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.