Monday, 8 November 2010
பத்திரிகையியலுக்கான அடிப்படைப்பயிற்சி
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக பத்திரிகையியலுக்கான அடிப்படைப்பயிற்சி நெறியொன்றை ஆரம்பித்துள்ளது.இதற்கான வளவாளராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியானோ பார்ட்டன் செயற்படுகிறார்.இதன் ஆரம்ப வைபவம் கடந்த நவம்பர் மாதம் ஆறாம்திகதி யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் அமைந்துள்ள பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் ஆரம்பித்து வைத்தார்.பயிற்சி இணைப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் சுவாமிநாதன்விமல்,பயிற்சி வளவாளர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பியானோ பாட்டன் ஆகியோரும் உரையாற்றினர்.இந்த குறுங்காலப் பயிற்சியில் மூத்த பத்திரிகையாளர்கள மற்றும் பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ள 70 பேர் பங்குகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பதினைந்து நாட்கள் தொடரச்;சியாக மாலை 4.00மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை பயிற்சி நடைபெறும்.எதிர் வரும் 25.11.2010 அன்று பயிற்சியை முடித்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment