கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்புக்காக 1913ல் இவருக்கு இலக்கியத்துக்கான நொபெல் பரிசு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் பிரிட்டிஷ் காலனீய ஆட்சியாளர்கள் இவருக்கு வழங்கியிருந்த ‘சர்’ பட்டத்தை, 1919ல் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அவர் திருப்பித் கொடுத்துவிட்டிருந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு தனது படைப்புகள் மூலம் உணர்வு ரீதியான ஊக்கம் அளித்தவர் தாகூர், மஹாத்மா காந்திக்கு மிக நெருக்கமானவராக தாகூர் விளங்கினார். ஆனால் தன்னை நேரடியாக அரசியலில் ஈடுபடுத்திக்கொள்வதை தாகூர் தவிர்த்திருந்தார்.
கவிதைகள் அல்லாது, ஏராளமான கதைகள், புதினங்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் தாகூர் எழுதியுள்ளார். தனது வாழ்நாளின் பிற்பகுதியில் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டு மாஸ்கோ, பெர்லின், பாரிஸ், லண்டன், நியூயார்க் போன்ற மேற்குலக ஸ்தலங்களில் ஓவியக் கண்காட்கிகளை இவர் நடத்தினார்.
தான் ஆஷ்ரமம் அமைத்திருந்த சாந்தினிகேதன் என்ற இடத்தில் விஸ்வ பாரதி என்ற ஒரு பல்கலைக்கழகத்தையும் தாகூர் நிறுவினார்.
Thanks to BBC
No comments:
Post a Comment