03 ஜூன் 2011globaltamilnews.net
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் புதிய பணிப்பாளராக தே.தேவானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
2003ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஊடக வளங்கள மற்றும் பயிறசி மையம்.டெனமார்க மற்றும் நோர்வே அரசாங்கங்களின் நிதி அனுசரணையுடன் இயங்கி வருங்கின்றன.நிறுவனத்துக்கான நிபுணத்துவ ஆலோசனையை சுவீடன் நாட்டின் ஃபோயோ (FOJO)நிறுவனம் வழங்கி வருகின்றது.இப்பயிற்சி நிலையம் தமிழ் பத்திரிகைத்துறை வளர்ச்சிக்காக குறுஙகால மற்றும் டிப்ளோமா பயிற்சிகளை வழங்கி வருகின்றது.இங்கு பயிற்சி பெற்று வெளியேறும் மாணவர்கள் அச்சூடகத்துறையிலும் இலத்திரனியல் மற்றும் இணையபதிப்புக்களில் தொழில் சார்ந்த பயிற்சிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் கொழும்பில் உள்ளகப்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
சென்ற ஆண்டு யூன் இந்நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் போ.பாலசுந்தரம் பிள்ளை விலகியதன் பின் வெற்றிடமாக இருந்த இப்பதவிக்கு யூன் மாதத்திலிருந்து தே.தேவானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமும் குழுதுழு நிறுவனமும் இணைந்து வழங்கிய புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியலில் முது அறிவியல் MSc)பட்டம் பெற்றவர்.யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முது மாணி பட்டமும்(M.A) பெற்றுள்ளார்.சென்ற ஆண்டு டென்மார்கிலுள்ள ஒல்போர்க் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் துறையில் குறுங்காலப்பயிற்சிகளைப் பெற்றவர்.2006ம் ஆண்டு ரொட்டரிக்கழகத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசிலி; தெரிவு செய்து தாய்லாந்து சுலாலோங்கோன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று மேலதிக பயிற்சிக்கா அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் பயிற்றுனராகவும் பயிற்சி இணைப்பாளராக கடமையாற்றிய இவர்.தற்போது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இணைப்பாளராக இருந்த போது மாணவர்கள் தமது உள்ளகப்பயிற்சியை சென்னைப்பல்கலைக்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னையில் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
--
Best wishes.....
ReplyDelete