Thursday, 9 February 2012

விளையாடு நன்றாய் விளையாடு!!!


      -  தே.தேவானந்த்

தனி மனிதன் குழுவில் இணையும் போது விளையாட்டுப் பிறக்கிறது.

மனித சமூகத்தின் மீது சமூகவியல் தன்மை ஆதிக்கம் செலுத்தியதை விட உடலியல் தன்மையின் ஆதிக்கமே அதிகம் இருந்ததாக ஆராய்ச்சிகள் மூலம் குறிப்பிடப்படுகின்றது.  மனிதன் தன் இயல்ப+க்கங்களை ஒடுக்கும் சமூக அமைப்பில் வாழும் பொழுது அவனால் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை.  தன் காலத்தின் சமூக ஒழுக்கங்களுடன் முரண்படுகின்றான்.  அவன் தன் இயல்ப+க்கங்களைக் கட்டவிழ்த்து வெளிப்படுத்துவதே விளையாட்டாகப் பரிணமிக்கிறது எனலாம்.
“விளையாட்டு எல்லா மனித இனங்களிலும் பண்பாட்டிலும் காணப்படும் ஒன்றாகும் கலை, மொழி, சமயம் போன்று விபரிக்க இயலாத சிக்கல் வாய்ந்ததொன்றாகும்” என்று “ரோலாட் எ. ஜார்ஸ்” குறிப்பிடுகிறார்.
வேலைக்கும் விளையாட்டுக்கும் வேறுபாடு உண்டு.  இது செல்பவனின் மனப்போக்கில் உள்ளது எனலாம்.  அதே வேளை வாழ்க்கைக்கு பயிற்சியளிக்கும் களம் விளையாட்டு என்றும் கூறுவர்.

“விளையாட்டு” என்ற சொல் நாளாந்தம் அனைவராலும் பாவிக்கப்படும் ஒரு சொல்லாகும். விளையாடாதை, விளையாட்டுக்குச் சொன்னேன், விளையாட்டுப் பிள்ளை, என்ன விளையாடுகிறாய்? என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நாளில் பல தடவைகள் ‘விளையாட்டு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  இதன் அர்த்தம் பெரும்பாலும் காத்திரமான பெறுமானம் ‘இல்லாதது’ என்ற தன்மையைக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம்.  மகிழ்வுக்குரியது என்ற அர்த்தப்பாடும் மறைபொருளாகக் கிடக்கின்றது.


மனிதனது வாழ்க்கையில் விளையாட்டுப்பருவம் என்ற ஒரு ப+ரண பருவம் உண்டு என்றாலும் உழைக்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் விளையாடும் மனநிலையையே மனிதன் கொன்டுள்ளான்.
குழந்தைகள் விiயாடுவதற்கான காரணத்தை உளவியலாளர்கள் மூன்றாக வரையறுத்துள்ளனர்.




i. குழந்தை தன்னை தன் பிற்கால வாழ்க்கைக்கு தயார் செய்து கொள்ள விளையாடுகிறது.
ii. குழந்தையிடம் அளவுக்கதிகமான சக்தி உண்டாகிறது. அது உடல் வளர்ச்சிக்கு தேவைப்படுவதற்கும் அதிகமானது விளையாடுவதன் மூலம் குழந்தை அதை வெளிவிடுகிறது.
iii. பரிணாம வளர்ச்சியில் பல படிகளைத் தாண்டி மனிதப்பிறவிக்கு வந்துள்ள குழந்தை முந்தைய பிறவிகளில் பழகிய, சமூக விரோதமான வழக்கங்களைக் குழந்தை விளையாட்டின் மூலம் அவற்றை வெளிவிடுகிறது.
விளையாட்டு என்பது செயற்பாட்டைப் பொறுத்தது எனலாம்.  மனநிலையைப் பொறுத்தது, விளையாட்டில் மனம் ஆறுதல் அடைகிறது.  கருத்தைக் கவருவது விளையாட்டு, கருத்தைக் கவராதது வேலை. இரண்டிலும் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் உண்டு.
அதே போல் ஆட்டம் வேறு, விளையாட்டு வேறு என்ற கருத்து நிலையும் ஒன்றானது என்ற கருத்துநிலையும் காணப்படுகின்றது.  ஆட்டத்தில் வெற்றி தோல்வி இல்லை, விளையாட்டில் உண்டு.  விளையாட்டில் சட்டதிட்டங்கள் உண்டு, ஆட்டத்தில் இல்லை.  ஆட்டத்தில் கலையம்சமும் அழகும் இருக்கும், விளையாட்டில் அது இருக்காது.
ஒரு செயலை விளையாட்டாகக் கருத வேண்டுமானால் பிரதானமாக ஐந்து அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று மானிடவியலாளர் “ஒட்டர் பெய்ன்”; குறிப்பிடுகின்றார்.
i. அமைப்புடைய ஆட்டமாக  இருக்க வேன்டும்.
ii. போட்டியை ஏற்படுத்துவதாக  இருக்க வேன்டும்
iii. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ குழுக்களோ  இருக்க வேண்டும்
iஎ. வெற்றியை நிர்னயிக்கும் விதியைக் கொண்டிருக்க வேண்டும் எ. பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விதிகளை  உள்ளடக்கி இருக்க வேண்டும
 விளையாட்டு – வரைவிலக்கணங்கள்
விளையாட்டு என்ற சொல் ஆட்டம் (Pடயல) போட்டி (புயஅந)இ வன்மை, இன்பம், பொழுது போக்கு (சுநஉசநயவழைn) என்ற அர்த்தங்களைச் சுட்டி நிற்கின்றன.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் பேரகராதி விளையாட்டுக்குப் பல பொருள்களைக் குறிப்பிடுகிறது.
i. பொழுது போக்கிற்குரிய மகிழ்ச்சிச் செயல்
ii. சிரமமின்றி இலேசாகச் செய்யும் செயல்
iii. வேடிக்கை
iஎ. காமலீலை
எ. கடவுளின் திருவிளையாடல்
தொல்காப்பியம், ‘இன்பம் தருவதே விளையாட்டின் நோக்கம்’ என்று குறிப்பிடுகிறது.
 “செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே”
குறுந்தொகை, “நகை விளையாட்டு” என்றும்,
அகநானூறு, நயத்து ஆகும் விளையாட்டு என்றும்
சீவகசிந்தாமனி, இன்பம் காரணமாம் விளையாட்டு என்றும் குறிப்பிடுகின்றன.
இன்பம் பெறுதலே சங்க இலக்கியங்களின் விளையாட்டுக் கொள்கையாகக் காணப்பட்டிருக்கிறது.
“விளையாட்டு என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களம்” என இரா. பாலசுப்பிரமனியம் குறிப்பிடுகிறார்.
“சிறுவர்கள் போட்டி விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். சிக்கல் மிகுந்த சமூக வாழ்க்கையின் பின்னர் ஈடுபட வேண்டியிருப்பதற்கு இளம் வயதிலேயே அவற்றை எதிர்நோக்கும் பயிற்சியை விளையாட்டு அளிக்கிறது” என சு. சக்திவேல் குறிப்பிடுகிறார்.
 விளையாட்டுப்பற்றிய கொள்கைகள்
“விளையாட்டு” என்பதற்கு அமைப்புடைய ஆட்டம், போட்டியுடையது, வெற்றியை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டது, பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற அடிப்படை விளக்கத்தின் அடிப்படையில் விளையாட்டுக்களின் இயல்பு, பயன்,  ஏன் விளையாடுகிறோம் என்பதற்கேற்ப கொள்கை ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
i. மிகை ஆற்றல் கொள்கை
ii. ஆயத்தக் கொள்கை
iii. புனராக்கக் கொள்கை
iஎ. பொழுது போக்குக் கொள்கை
எ. காலுதற் கொள்கை 
எi. போட்டி மனப்பான்மை

1. மிகை ஆற்றல் கொள்கை
“உயிர்கள் தம் தேவைக்கு எஞ்சிய ஆற்றலை நோக்கமற்ற விளையாட்டில் செலவிடுகின்றன” என்பார். ஷில்லர்; (ளுஉhடைடநச)
2.ஆயத்தக் கொள்கை
“விளையாட்டு என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களம்”
இரா. பாலசுப்பிரமணியம்
சிக்கல் மிகுந்த சமூக வாழ்க்கையில் பின்னர் ஈடுபட வேண்டியிருப்பதற்கு, இளம் வயதிலேயே அவற்றை எதிர்நோக்கும் பயிற்சியை விளையாட்டு அளிக்கிறது
சு. சக்திவேல் குறிப்பிடுகிறார்.
3. புனராக்கக் கொள்கை
“விலங்குகள் போல் திரிந்த நிலை, வேட்டை ஆடிய நிலை, நாடோடி நிலை, மாடு மேய்த்த நிலை, உழவு நிலை முதலியனவாக மக்களது பண்பாடு படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது.  இவையே விளையாட்டில் மிளிர்கின்றன” என ஸ்டான்லிஹால் (ளுவயடெல ர்யடட) குறிப்பிடுகின்றார்.
4. பொழுது போக்குக் கொள்கை
“களைப்புத் தீர இழைப்பாறுவதற்கு வேண்டுவதே விளையாட்டு”         என்பார் பாட்ரிக் (Pயவசiஉம)
5. காலுதற் கொள்கை
“மனிதச் சமூகம் நிரந்தர நிறைவின்மையிலும் முரண்பாட்டுக்குள்ளும் சிக்கியுள்ளது.  இதன் தீர்வே விளையாட்டாகப் பரிணமிக்கிறது” என்ற பிராய்டின் கருத்து இதில் அடங்கும்.
உள்ளுக்குள்ளே கிடக்கும் கிளர்ச்சிகள் மனம் முறியாதபடி வெளிவர அமைந்த ஒரு வழியே விளையாட்டு என ஆப்பிள்ட்டன் (யுppடநவழn) அம்மையார் குறிப்பிடுகின்றார்.
6. போட்டி மனப்பாங்கு
கூட்டாக வாழும் மனிதன் ஒவ்வொருவரும் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற உந்துதலில் போட்டி மனப்பாங்கை உருவாக்குகிறான். எல்லா விளையாட்டுக்களிலும் போட்டி மனப்பாங்கு காணப்படுகின்றது. இதுவே விளையாட்டுக்களை விளையாட ஊக்கமளிக்கிறது.
 விளையாட்டின் வகைப்பாடுகள்
i. விளையாட்டுக்கள் விளையாடப்படும் இடத்தை அடிப்படையாக் கொண்டு அக விளையாட்டு, புற விளையாட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆக விளையாட்டு வீட்டினுள் விளையாடப்படுவதாகவும் புற விளையாட்டு வீட்டுக்கு வெளியில் விளையாடப்படுவதாகவும் உள்ளன.

அக விளையாட்டு             புற விளையாட்டு

ii. விளையாட்டுக்களை விளையாடப்படும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படும் பொருட்கள் விளையாடுவோரின் வயது மற்றும் போட்டி, செயல்கள் என்பவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.
     
iii. விளையாட்டுக்களை மேலும் அதன் தன்மைக்கேற்பவும் பிரிக்க முடியும்.  வீரம் நிறைந்ததன் அடிப்படையிலும் அறிவாற்றல், வாய்ப்புநிலை, மனமகிழ்வு நிலை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.
உடல்திறன்   அறிவுத்திறன்     வாய்ப்பு நிலை    மனமகிழ்ச்சிநிலை

iஎ. பங்கு பற்றுவோரின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டும் விளையாட்டுக்களை வகைப்படுத்த முடியும்.

  தனிநபர்         இருவர்                  குழு
எ. பால் அடிப்படையிலும் விளையாட்டுக்களை வகைப்படுத்தலாம்
  சிறுவர்     சிறுமியர்     சிறுவரும்     ஆண்கள்     மகளிர்
    சிறுமியரும்

எi. விளையாட்டுக்களை விளையாடும் போது பாடல் பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டும் விளையாட்டுக்களை வகைப்படுத்தலாம்.
 பாடல் உள்ளவை              பாடல் அற்றவை
விளையாட்டுக்களை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.  இவற்றில் விளையாடுவோரை அடிப்படையாகக் கொண்டு மூன்று பெரும் பிரிவுகளாக்கி அவற்றின் பண்புகளை விரிவாக ஆராய முற்படலாம்.
i. சிறுவர் விளையாட்டு
ii. பெண்கள் விளையாட்டு
iii. ஆண்கள் விளையாட்டு
சிறுவர் விளையாட்டுக்கள்
குழந்தையை எப்போதும் துடிப்புடன் வைத்துக் கொள்ள விளையாட்டே ஏற்றதாகக் காணப்படுகிறது.  அழும் குழந்தையை அமைதிப்படுத்த, சிரிப்பு ஏற்படுத்த, சிந்தனையை மாற்ற விளையாட்டுக் காட்டி மகிழ்கிறாள் தாய். இதுவே விளையாட்டின் ஆரம்பம் எனலாம்.  குழந்தை விளையாட்டில் ஈடுபடுவதால் மகிழ்சிசியடைகிறது.  ஒரு முறை அனுபவித்த மகிழ்ச்சி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கிறது.
ஒரு விளையாட்டை குழந்தையோடு செய்ய முற்படும் போது விளையாட முன் ஆயத்தங்கள் நடைபெறுவதும் உண்டு.  இது விளையாட்டுடன் தொடர்புடையதாகவோ, தொடர்பற்றதாகவோ கூட இருக்கலாம்.
உதாரணமாக “நண்டூருது நரிய+ருது” விளையாட்டை குழந்தையுடன் விளையாடத் தொடங்கு முன் குழந்தைகளின் மூடியிருக்கும் விரல்களை நீவி ஒவ்வொரு விரலையும் தனித்தனியாக உருவி பருப்பு, ரசம், கீரை, சோறு, நெய் என்றெல்லாம் கூறி உள்ளங்கையில் முழங்கையைக் கொண்டு கீரை கடைவது போலக் கடைந்து காட்டி மகிழ்ச்சி ஏற்படுத்திய பின்னரே நண்டூருது நரிய+ருது என்று  செய்ய ஆரம்பிப்பர்.
குழந்தைகளுக்கு அறிவுரையாகவோ கட்டுப்பாடாகவோ எதையாவது சொன்னால் குழந்தை ஆர்வமாக இருக்காது.  இதற்காக அறிவுரைகளைக் கூட விளையாட்டாகச் சொல்லப்படுகிறது. குழந்தையின் நல்ல உணவுப்பழக்கம் விளையாட்டு மூலம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
அதனை விட குழந்தைகள் விளையாட்டில், வளர்ச்சியடைந்து வரும் குழந்தைகளின் உடல் திறன் விருத்திக்கான பயிற்சிகளும் காணப்படுகின்றன.
குழந்தைகள் விளையாட்டுக்கள் சொற்பயிற்சியையும் தாள அமைவுக்கு ஏற்ப சீரான முறையில் கோர்வைப்படுத்தி வசனங்களைச் சொல்வதற்கும் பயிற்சியளிக்கிறது.  நாக்கு சரியாக ஒலிப்பதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இதே போன்று கணிதப் பயிற்சியையும் குழந்தைகள் விளையாட்டின் மூலம் பெற்றுக் கொள்கின்றார்கள்.
பாதுகாப்பு நடத்தை முறைகளையும் (னுநகநnஉந ஆநஉhயnளைஅ) விளையாட்டின் மூலம் குழந்தை அறிந்து கொள்கிறது.  தப்பித்துக் கொள்வதற்கான  வழிகளைத் தானே கண்டு கொண்டு விளையாட்டில் செயற்படுகிறது.
சிறுவர்கள் தம் கவனத்தை ஒருமுகப்படுத்தி விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஏற்றதாக கேள்வி பதில் தன்மையுடன் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
சிறுவர் விளையாட்டுக்கள் வீரத்தை ஊட்டுவனவாகவும் மகிழ்ச்சியளிப்பனவாகவும் கூடக் காணப்படுகின்றன.
சிறுவர்கள் விளையாடும் பொழுது தம்மை வேறொன்றாகப் பாவனை செய்து கொள்ளும் வாய்ப்பும் காணப்படுகின்றது.  அதற்கேற்ப தம் இயல்புகளை மாற்றிக் கொண்டு விளையாடுகிறார்கள்.  இது அவன் சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான பயிற்சியாகக் காணப்படுகின்றது.
பெண்கள் விளையாட்டுக்கள்
பெண்களுக்கான விளையாட்டுக்களை அகவிளையாட்டுக்கள் எனலாம்.  உடல் திறனை வெளிப்படுத்துவது தொடர்பான விளையாட்டுக்கள் பெண்களுக்குரியவையாக இல்லையெனலாம். இயல்பாக பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று விளையாடுவதில்லை. எனவே உள்ளிருந்து விளையாடும் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். உள்ளிருந்து விளையாடும் விளையாட்டுக்கள் உடல் திறன் மிக்கவைகளாக இருக்க வாய்ப்பில்லை. இதனால் அறிவுசார்ந்த விளையாட்டுக்களும் வாய்ப்பு நிலை சார்ந்த விளையாட்டுக்களும் பெண்களுக்குரியவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பாண்டிக்குன்டு, தாயம், டக்ரிக் டோஸ், எட்டுக்கோடு போன்ற விளையாட்டுக்கள் பெண்களுக்குரியவையாகக் காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களிலும் பெண்களுக்கான விளையாட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எதிரொலி கேட்டல், கண்புதைத்து ஒளிந்தாடல், கவண், சுழங்கு, குரவை, சிறுசோறு, சிற்றில் செய்தல், செடி கொடி வளர்ப்பு, பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்,  பாவை விளையாட்டு, பிசி நொடி விளையாட்டு, புள் ஓட்டல், மணற்குவியலில் மறைந்தாடல், மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும், வள்ளை போன்ற விளையாட்டுக்கள் பெண்களுக்கானவையாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஆண்களுக்கான விளையாட்டுக்கள்
ஆண்களுக்குரிய விளையாட்டுக்கள் வீரம் செறிந்தவையாகக் காணப்படுகின்றன. உடல் வலிமையை வெளிப்படுத்தும் விளையாட்டுக்கள் இதில் அடங்கும். போர்க்கலையோடு தொடர்புடையதாக இவ்விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. “போர்க்கலைகள்” இன்று விளையாட்டுக்களாக கருதப்படுகின்றன. விற்போர், மற்போர், சிலம்பம், சடுகுடு, சேவல் சண்டை, போர்த்தேங்காய் உடைத்தல், வண்டில் சவாரி போன்றவை வீர விளையாட்டுக்களாகும். ஆண்களில் விளையாட்டுக்கள் உடல் இயக்கத்துக்கு முக்கியம் கொடுக்கின்றன. கடுமையானவையாகவும், வேகம் நிறைந்தவையாகவும் காணப்படுகின்றன.
வேட்டை, போர், தொழில் போலச் செய்தல் போன்ற காரணிகள் விளையாட்டின் தோற்றத்திற்கான அடிப்படைகளாகும். இவை அனைத்தும் ஆண்களுக்குரியவையாகவே பாரம்பரியமாகக் கருதப்பட்டு வருவதால் ஆண்கள் விளையாட்டுக்கள் என்ற வரையறைக்குள் அடங்குகின்றன.
தமிழ், சமூக அமைப்பில் பெண் ப+ போன்றவள், மென்மையானவள் என்ற கருத்து நிலை மேலோங்கியிருப்பதால் மென்போக்குடைய விளையாட்டுக்கள் பெண்களுக்கும் வன் போக்குள்ள விளையாட்டுக்கள் ஆண்களுக்குமாகப் பிரிக்கப்படுகின்றன.
‘பெண் கவருதல்’ ‘பெண் எடுத்தல்’ என்ற கோட்பாடும் ஆண்களின் விளையாட்டுக்களின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. ‘வெல்ல வேண்டும்’ என்பது ஒரு பெண்ணை அடைவதற்கான போட்டியாகவே கருதப்படுகின்றது. தமிழ் நாட்டில் நடைபெறும் ‘சல்லிக்கட்டு’ இதற்கான உதாரணமாகும்.  ‘மாட்டுவண்டிச் சவாரி’ கூட இந்த அடிப்படையைக் கொண்டதே. ‘வீரம்’ நிறைந்த ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் என்ற கருத்து நிலையும் இங்கு செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம்.
வெளியக விளையாட்டுக்கள் ஆண்களுக்குரியவையாகவே குறிப்பிடப்படுகின்றன. கிளித்தட்டு, ஒப்பு, சடுகுடு போன்ற விளையாட்டுக்கள் “கன்னை பிரித்து” இரண்டு குழுக்களுக்கான  போட்டியாக நடைபெறுகின்றது. பலம் பொருந்தியோர் வெல்வர் என்ற அடிப்படைப் பண்பை ஆண்களுக்குரிய விளையாட்டுக்களில் காணமுடியும். அறிவு சார் நிலையில் ஆண்களின் விளையாட்டுக்கள் அதிகம் தங்கியிருப்பதில்லை எனலாம்.
பாரம்பரிய விளையாட்டுக்களில் அரங்கக் கூறுகள்!
‘அரங்கு’ வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு தான் வாழும் உலகினைக் குறுகத்தறித்ததாக வெளிப்படுத்துகிறது.  அரங்கும் விளையாட்டைப் போன்று ‘செயலை’ (யுஉவழைn) அடிப்படையாகக் கொண்டது. விளையாட்டுக்களும் அரங்கும் மனித முரண் நிலைகளின் பயனாக விளைந்தவைகள். விளையாட்டிலும், அரங்கிலும் ஈடுபடுவோர் வாழ்வின் சம்பவிப்புக்களை மீளநிகழ்த்தி தாம் விரும்பும் வாழ்வை சிருஷ்டித்து ஒரு வகையான ‘விடுதலை’ உணர்வை தரிசிக்கிறார்கள்.
அரங்கும் விளையாட்டுக்களும் பண்பாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.  சமூகத்தின் கட்டமைப்பு (ளுழஉயைட ளுவசயவகைiஉயவழைn) உருவம் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கிடையிலான மோதல்கள் பண்பாட்டுக்கமைய வேறுபடுகின்றன.    மனிதவிருப்புக்கள், தேவைகள் காரணமாகவே மோதல்கள் ஏற்படுகின்றன.  இம்மோதலானது பலதரப்பட்டதாகவுள்ளது.
i. மனிதனோடு மனிதன் மோதுதல்
ii. மனிதன் தன்னுடன் மோதுதல்
iii. மனிதன் தன் சுற்றாடலுடன் மோதுதல்
iஎ. மனிதன் சமூகத்துடன் மோதுதல்
எ. மனிதன் இயற்கையுடன் மோதுதல்
மேற்சொல்லப்பட்ட மோதல்கள் மனிதனால் மீளச்செய்யப்;பட்ட போது அவை விளையாட்டாகவும், அரங்காகவும் பரிணமித்தன எனலாம்
இரண்டிலும் நிகழ்த்துபவர்களும் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.  நிகழ்த்துபவனுக்குத் தான் செயற்படுவதால் எழுகின்ற மனக்கிளர்ச்சி நிலை தனக்கு கிடைக்கும்.  பார்ப்போனின் பாராட்டால் அகமகிழ்வாக பரிணமிக்கிறது எனலாம்.  விளையாட்டிலும் அரங்கிலும் பார்ப்போனின் ஈடுபாடும் திருப்தியும் கூட அற்புதமானது.  பார்ப்பவர்களைக் கவரும் தன்மை இரண்டிலும் உண்டு. மனிதனது இயல்பான தன்னார்வ ஈடுபாட்டை உண்டுபண்ணுவதால் இரண்டிலும் மனவெழுச்சிக்கான வடிகால்கள் இருப்பதை இனங்காணலாம்.  இதனால் மனித ஊடாட்டம் இவை இரண்டும் வாழ்வை அவ்வாறே மீள் படைக்காது கற்பனையைச் சேர்த்து புதியதொரு கதையைப் புனைந்து புனைவு மெய்மையான ஒன்றை சிருஷ்டிக்கிறார்கள்.
வெறும் வெளி அசைவால் பல்வகைக் கோலங்களைப் பெற்றுக் கொள்கின்றது.  ஒரு கரு அல்லது செய்தி அழகாக சட்டகமிடப்பட்டு நிபந்தனைகளுடன் கோர்கப்படுகிறது.  இந்தக் கோர்வை ஒரு உச்சத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது. அதுவே வெற்றிக்கனியாகக் கருதப்படுகிறது.  வெற்றிக்கனி கையில் கிடைத்ததும் மனம் துள்ள உடலும் துள்ளிக் குதித்து குதூகளிக்கிறது.
அரங்கு நான்கு பிரதான மூலங்களைக் கொண்டுள்ளது எனலாம்.
i. வெளி (ளுpயஉந)
ii. ஒலி (ளுழரனெ)
iii. அசைவு (யுஉவழைn)
iஎ. மொழி (டுயபெரயபந)
மிக அடிப்படையில் ஒரு சாதாரண செயல் பார்ப்போனுக்காக மீள நிகழ்த்தப்படுகின்ற போது அது ஆற்றுகையாகின்றது.  இதற்குள் மீள நிகழ்த்தப்படுகின்ற ஒரு கதை, அதில் ஊடாடும் பாத்திரங்கள், பாத்திர ஊடாட்டத்திற்கான நிபந்தனைகள், பாடல்கள் உரையாடல்கள், கற்பனைச் சிருஷ்டிப்புக்கள், நிஜமும் புனைவும் கலந்த நிலைகள், வாழ்வோடு மிக நெருங்கி நின்று புரிந்து கொள்ளக் கூடியதாக துலங்குதல் போன்ற பல பண்பு நிலைகளை ஆற்றுகையில் காணமுடியும்.  மேற்சொன்ன அடிப்படைகளைக் கருத்தில் கொண்டு விளையாட்டுக்கள் எவ்வாறு ஒரு ஆற்றுகையாகின்றன, அதற்காக அவை கொண்டுள்ள அரங்கச் கூறுகள் எவை என்பதை இங்கு பார்க்க விளைகின்றேன்.
யாழ் மாவட்டத்தில் கிட்டத்தட்ட எண்பது பாரம்பரிய விளையாட்டுக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  இவற்றை குழந்தைப் பருவ விளையாட்டுக்கள்,  சிறுவர் விளையாட்டுக்கள்,  வளர்ந்தோர் விளையாட்டுக்கள் என்று பிரதானமாக வகைப்படுத்திக் கொள்ள முடியும். இவற்றில் சிறுவர் விளையாட்டுக்களே அதிகமாகக் காணப்படுகின்றன.  இந்த விளையாட்டுக்களை தனித்தனியாக விபரித்து ஆராய வேண்டும்.  விரிவஞ்சி பொதுப்படையாக ஆராய முற்படுகின்றேன்

No comments:

Post a Comment