தமிழ் தேசியம்
தமிழ் தேசியம் வியாபாரி கையில்
வேசிவீட்டு வெத்திலத்தட்டமாய் வீதியில் கிடக்கிறது
வருவோன் போவோனெல்லாம் பாக்கு, சுண்ணாம்பு தடவி
வெற்றிலை மடித்து வாயில் போட்டு மென்று துப்பினர்
சொலக்கென வீதியில் எச்சிலை
துப்பியது எச்சில் தான் ஆனால் ரெத்த நிறத்தில் கிடந்தது
மீடியாவொன்று தலைப்பிட்டது
வேசி பெற்ற பிள்ளையொன்று பற்றைக்குள் கிடந்ததென்று
சொல்லியழ கண்ணீரும் இல்லை, போத்தலில் அடைத்து கூவி விக்கிறார்
‘ஆண்ட பரம்பரை அடிமையாய் கிடப்பதா’!!
தலைக்கு மேலே காற்றாடி
அதன் அடிமையாய்
சியஸ்ரா மெத்தையில் என் சரீரம்
இப்போதெல்லாம் சாமத்தில் கண்முழிப்பேன்
வேர்வை சகதியில்
காற்றாடி நின்றிருக்கும்
பக்கத்தில் கிடந்த குழந்தையும்
எரிச்சலில் முணு முணுக்கும்
யன்னலைத் திறந்தால் காற்று வரும்
நித்திரை வராது
நாய் அடிக்கடி குரைக்கும்
என்னடா இது என்றாள் மனைவி
எல்லாம் ‘கரண்ட’; பிரச்னை
தீர்ப்பார் ராஐபக்சே? என்றேன்.
காப்பற் றோட்டு
வீடு இடிச்சு வளவு பறிச்சு
இடுப்பெலும்பை விலத்தி
வயித்துப்பிழைப்பை கெடுத்து
வீதி அகலிப்பு
மெகா அபிவிருத்தி
என்ர சைக்கிள் தடியை ஓட முடியாதாம்
காபற் போட்டதாம்
காசும் கேட்கிறார்
தே.தேவானந்த்
11.04.2012
No comments:
Post a Comment